என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தற்பொழுது தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை.

    முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

    இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

    முகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகளை ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

    பருத் தழும்பு:

    பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

    தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
    மைக்ரோவேவ் ஓவன்கள் தற்போது ஸ்டீல் மூலம் உணவு தயாரிப்பு முறையை கையாளத் தொடங்கியுள்ளன. நீராவி மூலம் வேக வைத்த உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து, விட்டமின் மற்றும் மினரல்கள் எந்தவித இழப்புமின்றி நன்கு கிடைக்கின்றது.
    மைக்ரோவேவ் ஓவன்கள் தற்போது ஸ்டீல் மூலம் உணவு தயாரிப்பு முறையை கையாளத் தொடங்கியுள்ளன. நீராவி மூலம் வேக வைத்த உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து, விட்டமின் மற்றும் மினரல்கள் எந்தவித இழப்புமின்றி நன்கு கிடைக்கின்றது. கன்வென்ஷன் ஓவன் என்பது ஸ்டீம் ஓவன் இணைந்தவரே வருகின்றது. அதாவது அதில் கன்வென்ஷன் தனியாகவும், ஸ்டீம் பகுதியாகவும் பணி புரியும் அமைப்புடன் உள்ளது.

    ஸ்டீம் ஓவன் என்பதில் தனிப்பட்ட தண்ணீர் நிரப்பும் பகுதி உள்ளது. அதனை முன்பே நிரப்பிட வேண்டும். சிலர் அந்த தண்ணீர் பிரிவுக்கு தண்ணீர் செல்வதற்கு ஏற்ற தனிப்பட்ட பைப் அமைப்பை ஏற்படுத்தியும் விடுகின்றனர். இதன் மூலம் தண்ணீர் குறையும்போது அவ்வவ்போது தண்ணீர் நிரம்பிவிடும். ஸ்டீம் மூலம் இயக்கம் ஆரம்பித்தவுடன் தண்ணீர் ஆவியாகி அதிலிருந்து நிராவி ஓவன் உட்புறம் பகுதியில் பரவி உணை வேகவைக்கும்.

    இதில் சில சூடான தகடு மூலம் வெப்பம் பரவும் வகை 50 சதவீதமும், நீராவி மூலம் வெப்பம் பரவுதல் 50 சதவீதமும் உள்ள வகையில் செயல்பாடு உள்ளது. இதன் மூலம் உணவு மேற்புறம் நல்ல கிரிஸ்பியாகவும், உட்புறம் ஈரத்தன்மையுடன் இருக்கும். மேலும் 20 சதவீத அளவிற்கு விரைவாக உணவு தயார் செய்திடவும் ஸ்டீம் ஓவன் உதவி செய்கிறது. ஒரு சில மாடல்களில் உள்ள சென்சார் அமைப்பு எந்தவிதமான உணவிற்கு எவ்வளவு கன்வென்ஷன் பிரிவை உட்செலுத்துவது, எவ்வளவு நீராவி வெப்பத்தை உட்செலுத்துவது என்பதை கண்டறிந்து தேவையான அளவில் இரு வகை பிரிவுகளை சீரான உட்செலுத்தும் வகையில் சிறப்புடன் இயங்குகிறது.

    ஸ்டீம் ஓவனில் ஏற்படும் நன்மைகள்

    முன்பு கூறியபடி உணவின் தன்மை மாறாதப்படி ஸ்டீம் ஓவன் செயல்பாடு உள்ளது. ஆயினும், தனிப்பட்ட ஸ்டீம் ஓவன் என்பது 100 டிகிரி வெப்பத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. ஆகவே இரு பிரிவு கொண்ட ஓவன் எனில் கூடுதலாக பேக்கிங் மற்றும் ரோஸ்டிங் உணவுகளை தயார் செய்திடவும் ஏதுவாக இருக்கும். அதுமட்டுமின்றி நமக்கு தேவயைான உணவிற்கு ஏற்ப ஸ்டீம் வசதியும், கன்வென்ஷன் வசதியும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். சில சமயம் இரண்டும் கலந்த வகையிலும் உள்ளவாறு இயக்கிட வசதி உண்டு. ஸ்டீம் பிரிவின் மூலம் தானியங்கள், அரிசி, பிரட் மற்றும் கஸ்ட்ரட் போன்ற உணவுகளை வேக வைத்து கொள்ள முடியும்.



    சைக்லோனிக் தொழில்நுட்ப டிரை ஸ்டீம்

    ஸ்டீம் ஓவன்கள் என்பதில் நீராவி மூலம் சமையல் செய்யப்படும்போது உட்புறம் தண்ணீர் வடிவது மற்றும் கீழ்புறத் தட்டுகளில் தண்ணீர் கொட்டுவது போன்ற பிரச்சினை ஏற்படாது இருக்க வேண்டி புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சைக்லோனிக் தொழில்நுட்பத்தின் மூலம் பனிமூட்டம் போன்ற டிரை ஸ்டீம் ஒரே சீராக ஓவன் உட்பகுதி முழுவதும் பரவ விடப்பட்டு உணவு வேகவைக்கப்படுகிறது. இதன் மூலம் நீராவியில் உள்ள நீர் கீழ்படியாது உடனடியாக மறைந்து விடுகிறது. ஸ்டீம் குக்கிங் செயல்பாடு மூலம் உட்புற பகுதி எந்தவித தண்ணீர் வடியாதவாறும், திரவ திட்டுக்கள் ஏதும் காணப்படாதவாறும் நவீன தொழில்நுட்ப வசதி மூலம் சீரிய முறையில் செயல்பட வைக்கப்படுகிறது.

    சீரான அளவில் மல்டி ஸ்டீம் வெளிப்பாடு

    மல்டி ஸ்டீம் என்ற அமைப்பில் ஒரே சீரான அமைப்புடன் 360 டிகிரி அளவில் வெளிப்படுத்துகின்றது. இதன் மூலம் மிக வேகமான உணவு வேக வைத்தல் நிகழ்கிறது. சிறப்பு மிகு 3டி டிசைன் அமைப்பு பின்புற சுவர் என்பது சீரான ஆவியை வெளிப்படுத்தும் வகையிலான துளைகள் கொண்டவாறு உள்ளன.

    தண்ணீர் டேங்க் அமைப்பு

    புதிய டேங்க் அமைப்பு என்பது ஒருங்கிணைந்த கண்ட்ரோல் பேனல் வகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்டீம் ஓவனுக்கு ஏற்றவாறு நீராவி பாய்ச்சலை தரும்போது தண்ணீர் சிந்தாமல் இருக்க வேண்டீ உட்பொருத்தப்பட்ட அலை அமைப்பு சிறப்புடன் செயல்படுகிறது. அதுபோல் நீராவி செயல்பாடு முடிந்தவுடன் டேங்க் என்பதை கழற்றி மாட்டி விடும் அமைப்பாக உள்ளது. அதுபோல் இந்த தண்ணீர் டேங்க் என்பது டிஷ்-வாஷர் சேப்-ஆக உள்ளதால் சுலபமாக டிஸ்வாஷரில் சுத்தம் செய்து கொள்ளலாம்.

    தானியங்கி வெண் படிமம் நீக்கும் அமைப்பு

    நீராவி மூலமாக உட்பகுதி செயல்படும்போது அதன் உட்பகுதி வெண் படிமம் படிந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஓவனின் உட்பகுதியை அசுத்தம் செய்ய ஆட்டோ டீகால் அமைப்பை இயக்கிட அது வெண் படிமம் ஏதும் ஏற்படாத வகையில் சுத்தம் செய்யும் பணியை தொடங்கிவிடும். ஸ்டீம் ஓவன் அமைப்பு மூலம் உணவுகள் நல்ல சுவையுடன், ஆரோக்கிய சத்துக்கள் இழப்பின்றி கிடைக்க வழிவகைச் செய்யப்படுகிறது. 
    கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.
    உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ரத்தத்தை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல் போன்ற முக்கியமான பணியை அது செய்கிறது. கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். முரண்பாடான உணவுகளை சாப்பிடுவது, மரபணு ரீதியான பிரச்சினைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது, நீண்டகால நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற காரணங்களால் கல்லீரல் பலவீனமடைகிறது. ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.

    ஒருசிலருக்கு வயிற்றுப்பகுதியில் திடீரென வீக்கம் தோன்றும். உடல் பருமன், தொப்பை பிரச்சினை காரணமாக அப்படி இருக்கிறது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுவார்கள். வயிற்று பகுதியில் சுரக்கும் ஒருவித திரவம் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் கல்லீரலையும் சேதமடைய செய்துவிடும். அதன்மூலம் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். ஒருசிலருக்கு கால் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    மஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்களின் கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் சருமம் மஞ்சள் நிறத்திலும், கண்கள் வெள்ளை நிறத்திலும் காட்சியளித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம். அடி வயிற்றுக்கு சற்று மேல், வலது பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் அதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகும்.

    தொடர்ந்து வயிற்று பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதும், நாளடைவில் அடர் மஞ்சள் நிறமாக தோன்றுவதும், மலச்சிக்கல் பிரச்சினையும் கல்லீரலை பாதிக்கும் விஷயங்களாகும். தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சோர்வும், மன குழப்பமும் உண்டாகும்.
    ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 1 கப்
    எலுமிச்சை சாறு - 1/2 கப்
    சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 1/4 கப்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

    சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.

    பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

    அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.

    இப்போது பூண்டு ஊறுகாய் தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும்.
    கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும். தாய், சேய் என இரண்டு உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையைப் பாதிக்கும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பும், சரியான ரத்த சர்க்கரையும் இருக்க வேண்டியது அவசியம்.

    யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

    * நடுத்தர வயதில் குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள், இவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சர்க்கரை நோய் தாக்கத்தால் பாதிக்கலாம்.

    * தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல், இன்சுலின் செல்களால் நஞ்சுப்பையை தாண்டி செல்ல இயலாததால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்திலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

    * இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்பக் காலத்திலே அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.

    * இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்பு செல்களாக குழந்தையில் தோலுக்கு அடியிலும், கல்லீரலும் சேமிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழு கொழுவென்று மாற ஆரம்பிக்கிறது.

    * இவ்வாறு கொழு கொழு குழந்தை பிரசவத்துக்குப் பின் வெளியே வந்ததும், திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கோ அல்லது குறை ரத்த சர்க்கரை நோயுக்கோ ஆளாகிறது.

    * இதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாயுக்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்.

    எதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் தாய்க்கு வருகிறது?


    * பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருப்பது.
    * தாமதமாகக் கருத்தரிப்பது
    * உடற்பருமன்
    * முந்தைய கருத்தருப்பின் போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருத்தால்…



    கர்ப்பக்காலத்தில் தாய்க்கு தேவையானவை…

    * சரிவிகித உணவு.
    * மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மருந்துகள் சாப்பிடுதல்.
    * இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்.
    * முறையான ரத்த சர்க்கரை பரிசோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    * குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.
    * உணவில் அடிக்கடி சீரகம், கருஞ்சீரகம், எள் சேர்ப்பது நல்லது.

    உணவில் சேர்த்து சாப்பிட வேண்டியவை


    * சுரைக்காய்
    * பாகற்காய்
    * வாழைத்தண்டு
    * வெள்ளை முள்ளங்கி
    * அவரைக்காய்
    * முருங்கைக்காய்
    * கீரைகள்
    * சின்ன வெங்காயம்
    * வாழைப்பூ
    * வெண்டைக்காய்
    * நூல்கோல்
    * காராமணி
    * பூசணிக்காய்
    * பிஞ்சு கத்திரிக்காய்
    * முட்டைக்கோஸ் ஆகியவை நல்லது. இவை சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
    பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன.
    இளம் பெண்கள் தங்களின் ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு விதவிதமான புதிய ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர். பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன. பட்டு நூல் லேசானது. எடை குறைவானது. மேலும் பளபளப்பும் வழவழப்பும் தன்மை கொண்டது.

    அதன் மூலம் உருவாகும் ஆபரணங்கள் நாளடைவில் மங்காத தன்மையுடன் உள்ளது. அத்துடன் எந்த வண்ண ஆடை அணிகின்றோமோ அந்த வண்ணத்திலான நூல்களை கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடை நெய்த நூல் அமைப்பிலேயே ஆபரணமும் அணியும்போது கூடுதல் அழகும், பொலிவும் ஏற்படும்.

    பட்டு நூல் ஆபரணங்கள்

    பட்டு நூல் கொண்டு தற்போது காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவை உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆபரண வகையும் அதற்கென உள்ள பிரத்யேக கம்பி வடிவங்கள், கொக்கி அமைப்புகள் கொண்டு அழகுற பின்னப்படுகிறது. பட்டு நூல் இறுக்கமான அமைப்புடன் ஆபரணமாக செய்யப்படும்போது அதன் உறுதி தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதன் மேம்பட்ட பொலிவு தன்மை எந்த புறம் திரும்பினாலும் அழகிய வண்ண சாயலுடன் பிரதிபலிக்கின்றன. விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் ஆர்வமாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

    சிறு மணி கொத்துகளுடன் கூடிய நெக்லஸ்கள்

    முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சீரான இடைவெளியில் அழகிய சிறு சிறு முத்து மணிகள் கொத்துகளை உள்ளதுடன் அதன் இணைப்பாக வண்ண பட்டு நூல் இணைந்தபடி உள்ளது. அதுபோல் அதன் நடுப்பகுதி பதக்கங்கள் பட்டு நூல் சேர்ந்தபடியும், கற்கள் பதித்த பதக்கங்கள் என்றவாறும் இணைக்கப்பட்டுள்ளன.

    சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.



    உலோக மணிகளுடன் கூடிய மாலைகள்

    இரட்டை வண்ண கலவையுடன் நடுநடுவே உலோக மணிகள் இணைப்புடன் கூடிய மாலைகள் பட்டு நூலில் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நீளமான மாலைகள் பந்து வடிவ உருளைகள் மற்றும் நீள் வடிவ உருளைகள் என்றவாறு பல வண்ண கலப்பு நூல்களுடன் மாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளில் நடுநடுவே உலோக மணிகள் இணைப்பும், நடுவே பெரியஉலோக பதக்கங்களுடன் காட்சி தருகிறது. பித்தளை உலோக மணிகள் என்பதுடன் வெள்ளி உலோக மணிகள் என்றவாறும் இம்மாலைகளில் இடம் பெறுகின்றன.

    பிரகாசமான வண்ணங்களை பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் இளஞ்சிகப்பு நூல்கள் கொண்ட மாலைகளில் சில ஒற்றை வண்ண நூல்களுடன் உருவாக்கி தரப்படுகிறது. பார்க்க பரவசமான உருவ அமைப்புடன் பட்டு நூல் மாலைகள் உருவாகின்றன.

    அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள்

    காதணிகளில் அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள் பாந்தமான வடிவமைப்புடன் காட்சி தருகின்றது. பட்டு நூல் ஜிமிக்கிகளின் நடுப்பகுதி மற்றும் ஓரப்பகுதிகள் கற்கள் மற்றும் மணிகள் தொங்கும் அமைப்பில் உருவாகியுள்ளன. இதிலும் ஒற்றை நிற ஜிமிக்கி மற்றும் பல நிறத்திலான ஜிமிக்கிகள் கிடைக்கின்றன. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜிமிக்கி காதணிகள் விதவிதமான அளவில் கிடைக்கின்றன.

    வண்ண பிரகாசத்துடன் வளையல்கள்


    வளையல்கள் என்பதில் பட்டு நூல் இடைவெளியுடன் உலோக உருவங்கள் இணைப்புடன் கூடிய அகலமான பெரிய வளையல்கள் வருகின்றன. அதுபோல் மெல்லிய கம்பி அளவு பட்டு நூல் வளையல்கள் என்பது பல இணைந்தவாறு ஓரப்பகுதி வளையல்கள் கற்கள் வைக்கப்பட்டவாறு பல வளையல் அமைப்புடன் உள்ளன. ஒரே வளையலில் பல வண்ண நூல்கள் சாய்வான அமைப்புடன் உருவான வளையல்கள் ஒளிவெள்ளத்தில் பார்க்கும்போது அழகிய வானவில் போன்று காட்சி அளிக்கிறது.

    பட்டு நூல் வளையல்களில் சிறு சிறு மணிகள் தொங்கியபடி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான ஆடை அலங்காரத்திற்கும் ஏற்ற பட்டு நூல் ஆபரணங்கள் பாரம்பரிய பட்டாடைகளுக்கு அணியும்போது தனிப்பட்ட கூடுதல் அழகை தருகின்றது. இளம்பெண்கள் குர்தி போன்ற வண்ண பருத்தி ஆடைகளுக்கும் பட்டு நூல் ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர்.
    அலுவலகத்தில் ஒரு மாடி கூட ஏறி இறங்காமல் லிப்ட் உபயோகிப்பவர்கள் இனியாவது இந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலின் ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
    அலுவலகத்தில் ஒரு மாடி கூட ஏறி இறங்காமல் லிப்ட் உபயோகிப்பவர்கள் இனியாவது இந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலின் ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். உடலின் சக்தியினை கூட்டிக் கொள்ள வேண்டும். இது வைரஸ், மற்றும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உடற்பயிற்சியே இல்லை என்று பொருள்.

    * நல்ல தூக்கம், நல்ல உணவு, நோய் எதுவுமின்றி எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றீர்களா? கண்டிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கையினை சுறுசுறுப்பாக ஆக்கி விடுங்கள். அன்றாடம் 30 நிமிடம் நடை பயிற்சியும் செய்யுங்கள்.

    * தூங்கி எழும் பொழுதே கீழ் முதுகு வலி, முட்டி வலி, தோள் பட்டை வலி என இருக்கும். இவர்களுக்கு முறையான உடற்பயிற்சியே தீர்வாக அமையும். ஜலதோஷமும் பிடிக்காது.

    * ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கின்றதா. நீச்சல், சைக்கிள், நடை என ஏதாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதிக ஸ்ட்ரெஸ் உடல் பாதிப்பினை ஏற்படுத்தும்.

    * ஜீரண சக்தியினை கூட்டவும், உடற்பயிற்சி அவசியம்.

    * முறையான தூக்கம் இல்லையா? நீங்கள் தேவையான உடற்பயிற்சி செய்கின்றீர்களா? என்று கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்.

    * மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வதனைத் தவிருங்கள்.

    * யோகா பழகுங்கள்.

    * மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். 
    வடமாநிலங்களில் டோக்ளா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.

    ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.

    இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.

    அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

    பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.

    கோதுமை ரவை டோக்ளா தயார்.

    இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘நான் பாதிக்கப்பட்டேன்’ என்று கூறுபவர்களே சமூக வலைத்தளத்தோடு தங்கள் பதிவை நிறுத்திவிடாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்களிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்து அதை நிரூபிக்கவேண்டும். அதுதான் சரியான நியதியாகும்.
    சமீபகாலமாக ‘வாட்ஸ்-அப்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களைப் போல, ஸ்மார்ட் போன்களில் ‘மீ டூ’ என்ற சமூக வலைதளமும் ஏராளமானவர்களால் பார்க்கப்படுகிறது. இதில் பல பெண்கள் பிரபலமான பலர் மீது பாலியல் புகார்களை கூறிவருகிறார்கள். அனேகமாக எல்லா சம்பவங்களிலுமே எனக்கு பாலியல் துன்புறுத்தல் இன்று நடந்தது, நேற்று நடந்தது என்று கூறுவதில்லை.

    18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கடந்த காலங்களைப்பற்றியே புகார்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த புகார்களெல்லாம் பெரும்பாலும் சினிமா துறையினர், ஊடகத்துறையினர், பத்திரிகை துறையினர் மீதே கூறப்படுகிறது. இதைத்தாண்டி, வேறெந்த பிரிவிலும் இருந்து இதுவரை எந்தவித புகார்களும் வந்ததில்லை.

    மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரியாக இருந்து இந்த பிரச்சினையில் ராஜினாமாவை செய்துள்ள எம்.ஜே.அக்பர் பத்திரிகை உலகில் மிகபிரபலமான ஆசிரியராக இருந்தார். இவர் மீது இந்த ‘மீ டூ’ சமூக வலைத்தளத்தில் பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்தநேரத்தில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக புகார் தெரிவித்திருக்கிறார்.

    இதுபோல, இந்திபட உலகில் பிரபலமான நடிகர் அலோக்நாத் மீது பெண் டைரக்டர் மிண்டா நந்தா பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழித்ததாக புகார் கூறியிருக்கிறார். இதுபோல, தமிழக சினிமா துறையிலும் சில பிரபலங்கள் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளன.

    இப்போது எம்.ஜே.அக்பர் தன்மீது புகார் கூறிய பிரியா ரமணி மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். பெண் டைரக்டர் மிண்டா நந்தா மீது நடிகர் அலோக்நாத் ஒரு ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தநிலையில், ஏற்கனவே தேசிய பெண்கள் ஆணையம், பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளில் ஆட்பட்டதாக இதுபோல புகார் கூறும் பெண்கள், ஆணையத்தில் புகாராக கொடுத்தால், அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.

    ஆனால், இத்தனை நாட்கள் ஆகியும், எந்தப்பெண்ணும் தங்களை அணுகவில்லை என்று தேசிய பெண்கள் ஆணையத்தலைவர் ரேகா சர்மா கூறியிருக்கிறார். எங்களை யாரும் அணுகாவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க அந்த பெண்கள் விரும்புகிறார்களா? என்று எங்களுக்கு தெரியாதநிலை ஏற்பட்டுவிடும். நாங்களாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், நடவடிக்கைகளை எடுக்க பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் கடிதம்வேண்டும் என்று ஆணைய தரப்பில் கூறப்படுகிறது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புகார் கூறும் பெண்கள் பிரபலமானவர்களை பெயரிட்டு அவமானப்படுத்துவதோடு நின்று விடுகிறார்கள். எந்தவொரு புகார் என்றாலும் கண்டிப்பாக நிரூபிக்கப்பட்டே ஆகவேண்டும். காற்றோடு கலந்த கீதமாக மாறிவிட்டால், அதனால் சமுதாயத்தில் அவமானப்படுகிறவர்களுக்கு என்ன பரிகாரம் இருக்கிறது?.

    மத்திய மந்திரியாக இருந்த அக்பர் போல, நடிகர் அலோக்நாத் போல பாதிக்கப்பட்டவர்களே நீதிமன்றத்துக்கு சென்று தங்கள் மீதுள்ள கறையைத் துடைக்க முயற்சி செய்யவேண்டும் என்பது சரியாக இருக்காது. ‘நான் பாதிக்கப்பட்டேன்’ என்று கூறுபவர்களே சமூக வலைத்தளத்தோடு தங்கள் பதிவை நிறுத்திவிடாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்களிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்து அதை நிரூபிக்கவேண்டும். அதுதான் சரியான நியதியாகும்.
    புதிய கட்டிடங்கள் சிலவற்றில் சில அசவுகரியங்களை உணரலாம். என்ன காரணத்தால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியாத நிலையில், இந்த நோய்களை சிக் பில்டிங் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள்.
    புதிய கட்டிடங்கள் சிலவற்றில் சில அசவுகரியங்களை உணரலாம். காரணம் தெரியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடும். என்ன காரணத்தால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியாத நிலையில், இந்த நோய்களை சிக் பில்டிங் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில் கட்டிடங்களின் மாசுபட்ட காற்றால் குறிப்பிட்ட நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிய முடிந்தால் அதை ‘பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ்’ என்கிறார்கள்.

    1984-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில் இண்டோர் ஏர் குவாலிட்டி, அதாவது அறைகளில் உலவும் காற்று தொடர்பான உலக அளவிலான புகார்களில் 30 சதவீத புகார்கள் புதிய கட்டிடங்களையே குற்றஞ்சாட்டி இருந்ததாக, குறிப்பிடப்பட்டிருந்தது.

    பொதுவாக இந்தச் சிக்கல் தற்காலிகமானது என்றாலும் சில கட்டிடங்களில் அது நீடித்த பிரச்சினையாகி விடுகிறது. பெரும்பாலும் கட்டிடத்தை முறைப்படி பராமரிக்காததால் தான் இண்டோர் ஏர் குவாலிட்டி பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்தக் கட்டிடத்தை பயன்படுத்துபவர்களின் தவறான நடவடிக்கைகளாலும், கட்டிடத்தின் வடிவமைப்பு சரியில்லாவிட்டாலும் காற்றின் தரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

    அறைகளில் உலவும் காற்று தரமற்றது என்பதை எப்படி கண்டறிவது?

    குறிப்பிட்ட கட்டிடங்களில் வசிக்கும் போது, தலைவலி, கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் தீவிரமாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி சோர்வு தோன்றும். இந்த அறிகுறிகளுக்கான முறையான காரணங்களை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கும். இத்தகைய கட்டிடங்களிலிருந்து வெளியேறியவுடன் இந்த உபாதைகளும் நீங்கிவிடக்கூடும் என்கிறது ஆய்வு.

    மேலும் பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ் காரணமாக இருமல், மார்பு இறுக்கம், காய்ச்சல், தசைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இதுவும் கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிட்டால் குணமாகிவிடுகிறது என்கின்றனர். இத்தகைய பிரச்சினைகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கட்டிடத்தின் அருகே உள்ள சுகாதாரக் கேடான சூழல் உடல்நிலையைப் பாதிக்கலாம். ஒவ்வாமை காரணமாக நோய்கள் உருவாகலாம். வேலை காரணமான மன அழுத்தம் சிக்கலை உருவாக்கலாம். வேறு உளவியல் பிரச்சினைகளால் உடல் உபாதை உருவாகலாம். இவற்றையும் கட்டிடத்தால் ஏற்படுகிறது என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆனாலும் மேற்கண்ட நோய் அறிகுறிகள் கட்டிடத்தின் காற்றின் தரத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

    சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...
    இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

    மாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் இல்லையா? சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...

    சமூக வலைத்தளம் எதற்காக?

    சமூக வலைத்தளங்களைப் பற்றி போதிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. முக்கியமாக அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை அவர்கள் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

    சமூக வலைத்தளம் சிறந்த தகவல் தொடர்பு சாதனம் என்பதை எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். அதில் உள்ள சாதக - பாதகங்களை அறிந்து பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அது பொழுதுபோக்கு தளம் அல்ல, தகவல் தொடர்பு தளம் என்பதை உணர வேண்டும்.

    மாணவர்கள், நவீன கற்றல் தளமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். கூட்டு திட்டமிடலுக்கும், தகவல் திரட்டுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வலைத்தளங்களை உபயோகிக்கப் பழக வேண்டும். இந்த நியாயமான பழக்கத்தை பள்ளி - கல்லூரியில் பழக்கப்படுத்தினால் அவர்களின் கற்றல் முறையில் மேம்பாடு ஏற்படும். கண்டிப்பதும், தடைபோடுவதும் சமூக வலைத்தளங்கள் தீய பாதை என்பதைப்போல புறக்கணிக்க வலியுறுத்துவதும் அவர்களின் மனதில் எதிர்மறை விளைவை உருவாக்கும் என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர வேண்டும். அதுவே, சமூக வலைத்தளங்களில் ஏதோ இருக்கிறது என்பதை ரகசியமாக தேடத் தூண்டுவதாக அமைந்துவிடும்.

    சமூக வலைத்தளங்களில் மயங்கவும், வெறுக்கவும் ஒன்றுமில்லை. தேவையான விஷயங்களுக்காக சார்ந்திருப்பதும், அதை புரிந்து கொள்வதுமே அவசியம்.

    ஆசிரியரின் பங்களிப்பு என்ன?

    சமூக வலைத்தளங்கள் பற்றி ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அது நமது கற்றல் முறைக்கு அவசியமானது என்பதை புரிய வைக்க வேண்டும். அதன் பயன்களை விளக்க வேண்டும். எந்த வலைத்தளத்தில், எந்த வகையான செய்முறை அல்லது தகவல் தொகுப்பு நமது வகுப்புக்கு ஏற்றது என்பதை விளக்க வேண்டும்.

    அந்த வலைத்தளத்தின் அடிப்படைகளை விளக்குவதுடன், பாடம் சார்ந்து, கற்றல் சார்ந்து அதை திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

    வகுப்பறையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு மற்றும் வழிமுறைகளை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் வகுப்பில் கவனச்சிதறல் ஏற்பட சமூக வலைத்தளம் காரணமாகிவிடக்கூடாது.

    இத்தகைய அம்சங்கள் ஆசிரியரால், பெற்றோரால் வழிகாட்டப்படும்போது, மாணவர்களின் அச்சம் விலகும். ரகசியத்தன்மை குறைந்து, தவறுகளை திருத்திப் பயன்படுத்தப் பழகுவார்கள்.

    சமூக வலைத்தளங்களில் மாணவர் - ஆசிரியர் ஒற்றுமை வளர வேண்டும். மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பாடம் கற்க வேண்டும். மாணவர்களுக்கான பாட பயிற்சித்திட்டங்கள், வழிகாட்டி திட்டங்கள், குழு தகவல் தொடர்பு, முக்கிய விஷயங்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.

    எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

    இன்றைய தேதிகளைப் பற்றிய வரலாறை, முக்கிய நிகழ்வுகளை சமூக வலைத்தளங்கள் வழியே அறியலாம். இதை ஆசிரியர்கள் விளக்கலாம். மாணவர்களும் தேடிப் பிடித்து கற்கலாம். பகிர்ந்து கொள்ளலாம்.

    இன்றைய செய்திகளையும் அறிந்து கொள்ள பயன்படுத்தலாம். இதற்காக வகுப்பில் சில நிமிடங்களை ஒதுக்கலாம்.

    உலக நடப்புகள், கலாச்சாரங்களில் இருந்து அவசியமானவற்றை குறிப்பெடுக்கவும், தனியே சேகரித்து, சேமித்து பயன்படுத்த மாணவர்கள் பழக வேண்டும். ஆசிரியர் வழிநடத்த வேண்டும்.

    பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் மாணவர்களுக்கான குழுக்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகிறது. அதை அறிந்து கொள்ளலாம். ஐயங்களுக்கு, தேவைகளுக்கு தீர்வு தேடலாம்.

    அவசியமான ஹேஸ்டேக் தகவல்களை பகிரலாம். பயனுள்ள ஹேஸ்டேக் உருவாக்கி பரப்பலாம்.

    பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்ய வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பாடத்திட்டங்களைத் தாண்டிய திறமைகளை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால், அது மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்துவதாகவும், ஆசிரியர் மாணவர் உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும். கதை, கட்டுரை, கவிதைகளை, ஓவியங்களை தங்களுக்கான குழுவில் பகிரவும், பாராட்டவும் செய்யலாம்.

    பயணங்களின்போதான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தலாம். அது அனுபவத்தை அதிகரிக்கும். உதவிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும்.

    அறிவை வளர்க்கும் கேள்விகளை கேட்பதற்கான, சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.

    மொழிகளை அறிதல் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம். பயனுள்ள வலைப்பக்கங்களை இணைத்து பயன்படுத்தலாம்.

    தங்கள் பாடத்துறை சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் தகவல் தொடர்பை வளர்க்கலாம். உரையாடல்கள் நிகழ்த்தி நேரில் பயிற்சி பெறும் வாய்ப்பையும், பல்வேறு தகவல்களையும் பரிமாற்றம் செய்யலாம்.

    இதுபோலவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் துறைகளை பின் தொடரலாம். கல்வி சார்ந்த விஷயங்களை அறிந்து பலருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

    சமூகம் பற்றிய உங்கள் பார்வையை, விமர்சனங்களை வெளியிட்டு திறமையை வளர்க்கலாம்.

    வர்த்தகத்துறை, பொருளாதாரத்துறை, தொழில்துறை என ஒவ்வொருதுறை சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து பயன்பெறலாம்.

    படிக்கும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க கூறலாம்.

    உங்கள் குழுவின் இயக்கத்தையும், நல்ல தகவல்களையும் புத்தகமாக, இதழாக வெளியிடலாம்.

    பல்வேறு வகுப்புகளையும் ஒருங்கிணைக்கும் தளமாகவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம்.

    தவறை குறைக்க, பயத்தை போக்க...

    சமூக வலைத்தளங்கள் எல்லோரையும் உலகளாவிய குடிமக்களாக மாற்றியிருக்கிறது. ஆம், நாமெல்லாம் டிஜிட்டல் குடிமக்கள். நாடு கடந்த, ஜாதி மதம் கடந்த மக்களாக நம்மை மாற்றிய பெருமை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. அங்கே சிறுமைத் தனமான பொழுதுபோக்கு அம்சங்கள், வேடிக்கை விஷயங்களை மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கைவிட வேண்டிய ஒன்றாகும்.

    சமூக வலைத்தளத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் - மாணவர்கள் இணைந்த குழுக்கள் உருவாகிவிட்டால் பெற்றோர் உள்ளிட்ட யாருக்குமே வீணான பயம் தேவையில்லை. ஒவ்வொருவரின் தனித்த இயக்கங்களே பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. வலைத்தளம் என்பது குழுக்களுக்கானது, ஒருங்கிணைப்புக்கானது என்பதை உணர்ந்து பயன்படுத்த ஆசிரியரின் வழிகாட்டல் அவசியமாகும். பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் குழு உருவாக்கப்பட்டுவிட்டால் அச்சங்கள் குறைந்து, கற்றல் மேம்பாடு அடையும்!
    வயிற்றுவலி மிக மோசமான வலிகளுள் ஒன்று. வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.
    வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி’ என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார்.

    ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு. முன்பெல்லாம், ‘இது பித்தப்பை வீக்கமாக இருந்தாலும் இருக்கும்’ என சந்தேகப்பட்டால், மருத்துவர் வயிற்றைக் கைகளால் அழுத்திப் பரிசோதனை செய்வார். மூச்சை நன்கு இழுத்துவிடச் சொல்லி, நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக விரல்களால் அழுத்திப் பார்த்து, முடிவு செய்துவிடுவார். இதற்கு `மர்ஃபி சோதனை’ என்று பெயர். இன்றைக்கு அதைப் பலர் ஓரம்கட்டிவிட்டார்கள். நோயாளிகளை ஸ்கேனுக்கு அனுப்புகிறார்கள்.

    ஆனாலும், பித்தப்பைக் கல்லுக்கான காரணம் என்ன என்று மிகத் துல்லியமாக இன்றும் நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. நம் ஜீரண மண்டலத்தின் தன்மையே ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழம்பிப்போய் இருக்கிறது.

    அதோடு, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்து உடல் மெலிவது, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவது... என பித்தப்பை அழற்சிக்கும், கல்லுக்கும் பல காரணங்கள். முதலில் வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.

    வயிற்றுவலிக்கான காரணங்கள் :                                         

    * நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

    * இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம்.

    * நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.



    * விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

    * பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

    இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்’, என்ற அலட்சியமும், ‘ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்.

    ×