என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பல்வேறு வகையான பொங்கலை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் புளிப்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 மில்லி

செய்முறை :
அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.
ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும்.
புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
விசில் போனவுடன் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான புளிப்பொங்கல் ரெடி.

உப்பு - தேவையான அளவு

குறிப்பு: வடகம் வற்றல் இதற்கு சிறந்த காம்பினேஷன்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன.
இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத் தெளிவு வேண்டும்.
குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’
நேர வரையறை குழந்தைகளின் வயதைப் பொறுத்து சற்று மாறும். 3 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்க்காமல் இருப்பது சிறந்தது. 3 முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை 20 நிமிடங்களும், 5-லிருந்து 8 வயது வரையுள்ள குழந்தைகளை 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரையும், 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியரை 45 நிமிடங்கள் வரையிலும் அனுமதிக்கலாம்.
அதேபோல், இரவு நேரத்தில் தூங்கப் போகும் வரை கார்ட்டூன் பார்க்கவும் விடக்கூடாது. ஏனென்றால், கார்ட்டூன்களின் எதிரொலியாக உறக்கத்தில் கனவு ஏற்பட்டு அலறலாம். பயப்படலாம். தூக்கம் கெடவும் வாய்ப்பு உண்டு.
‘‘கார்ட்டூன்கள் நிச்சயமாக குழந்தைகளிடம் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால், நல்லது, கெட்டது என இரண்டுமே இதில் உள்ளது. நேர்மறையான சூப்பர் மேன் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது பிறருக்கு உதவ வேண்டும், ஆபத்தில் உள்ளவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும், சாகசங்கள் நிகழ்த்த முற்பட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்றும்.
சூன்யக்காரி, மந்திரவாதி போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களைத் துன்புறுத்தவும் செய்வார்கள். அதனால்தான் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்கள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். கார்ட்டூன்களில் நடப்பவையெல்லாம்
நிஜமல்ல; நிஜ வாழ்க்கை வேறு. அவற்றில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரியவைத்தால் கார்ட்டூனால் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சி ஆரோக்கியமாகவும் மாறும்!

ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது.
ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது. அதனால் உள்ளுறுப்புகளை மது வெகு வேகமாக தாக்கும். மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகள் உடனடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.
உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள். போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
நேரடியாக இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது. குறைப்பிரசவம் ஆகவும், கருக்கலைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.
உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள். போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று கோளாறுகளை குணமாக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,

செய்முறை:
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...
அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

உப்பு - தேவையான அளவு.

இப்போது சூப்பரான சத்தான இஞ்சி துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாற்காலியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடலுக்கு எப்பொழுதும் ஏதாவது சிறு சிறு பயிற்சிகள் அவசியம். கீழ்கண்ட பயிற்சிகள் மிக எளிதானவை, சிறியவை, பெரிதும் உதவுபவை முயற்சிப்போமே.
நாற்காலியை விட்டு நகரவே முடியலை. அத்தனை வேலை கம்ப்யூட்டரில் எனக்கு என்று சொல்பவர்கள் அதிகம். நாற்காலியில் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிற வேலை அதிகம் என்று சொல்பவர்களும் அதிகம். வீட்டில் காலையில் இருந்து இரவு வரை நாற்காலியை விட்டு சோபாவை விட்டு நகராதவர்களும் ஏராளம்.
நான் காலை 20 நிமிடங்கள் நடந்துவிட்டேன் இன்றைக்கு இது போதும் என்று இருப்பவர்களும் ஏராளம். உடலுக்கு எப்பொழுதும் ஏதாவது சிறு சிறு பயிற்சிகள் அவசியம். கீழ்கண்ட பயிற்சிகள் மிக எளிதானவை, சிறியவை, பெரிதும் உதவுபவை முயற்சிப்போமே.
முதல்பயிற்சி: படம் (1)
படத்தில் உள்ளது போன்ற சமமான நாற்காலியினையே பயன்படுத்துங்கள். முழங்காலினை மடக்கி நீட்டும் பயிற்சி. நாற்காலியின் நுனியில் நிமிர்ந்து அமருங்கள், நுனி என்றவுடன் கீழே விழுவது போல் அமரக்கூடாது. நாற்காலியில் சாய்ந்து அமராமல் முன்வந்து நிமிர்ந்து அமர வேண்டும் என்பதே இதன் கூற்று. இரண்டு கால்களும் பூமியில் பதிய இருக்க வேண்டும்.
* வயிற்றினை லேசாக உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்.
* வலது முழங்காலினை தூக்கி படத்தில் காட்டியுள்ளதைப் போல் பிடியுங்கள். 20 நொடிகள் வைத்திருந்து காலின் கீழே வையுங்கள். இதுபோல் இடது முழங்காலினை மடக்கி செய்யுங்கள்.
* இதுபோல் நாள் ஒன்றுக்கு 20-30 முறை இரண்டு கால் களிலும் செய்யுங்கள்.
பயிற்சி 2 (படம் 2)
* உங்கள் நாற்காலி நல்ல உறுதியானதாக இருக்க வேண்டும்.
* கால்களை தரையில் படுவது போல் அமருங்கள்

பயிற்சி 3:
முன்பு கூறியதுபோல் நாற்காலியில் தரையில் கால்கள் படும்படி அமருங்கள். கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக்கொள்ளுங்கள். கால்களை மடக்கி நாற்காலியில் குதிங்கால்கள் படும்படி செய்யுங்கள்.
* மெதுவாக உங்கள் இடதுபுறம் லேசாக திருப்புங்கள். 10-20 விநாடி இருங்கள்.
* பின்பு நேர்நிலைக்கு வந்து காலை இயல்புநிலையாக பாதம் தரையை தொடும்படி அமருங்கள். மீண்டும் பயிற்சியினை இயன்ற வரை செய்யுங்கள்.
பயிற்சி 4 : (படம் 4)
பாதங்கள் தரையினை நன்கு தொடுமாறு நாற்காலியில் சற்று முன்வந்து அமருங்கள்.
* படத்தில் காட்டியுள்ளது போல் வலது கையை மேலே தூக்கி இடதுகையால் வலது காலை தொடுங்கள்.
* பின்னர் இடது கையினை மேலே தூக்கி வலது கையினால் இடது காலை தொடுங்கள்.
* பிறகு இயல்பு நிலையில் அமருங்கள்
* முடிந்தவரை செய்யுங்கள்
பயிற்சி 5: (படம் 5)
* கால்கள் தரையில் படும்படி நாற்காலியில் அமருங்கள்
* கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக் கொள்ளுங்கள்.
* கால்களை பிடித்து நாற்காலியின் மீது வைத்து கைகளை அழுத்தி நாற்காலியில் லேசாக எழுங்கள். படத்தினைப் பாருங்கள். சிலநொடிகள் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
இப்பயிற்சியினை செய்ய வயதில் இளையவர்களாக இருப்பது நல்லது. உறுதியான அகலமான மர நாற்காலி சிறந்தது. மெலிதான நாற்காலிகளில் இப்பயிற்சியினை செய்யாதீர்கள். உணவு உண்டவுடன் செய்யாதீர்கள்.

* கைகளால் நாற்காலியின் கைகளை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் படத்தில் காட்டியுள்ளது போல் மடக்கினால் போல் தூக்கி 20-30 விநாடி நிறுத்துங்கள். பிறகு கால்களை தொங்கவிடுங்கள். இதுபோல் 10 முறையாவது செய்யுங்கள்.

பயிற்சி 3:
முன்பு கூறியதுபோல் நாற்காலியில் தரையில் கால்கள் படும்படி அமருங்கள். கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக்கொள்ளுங்கள். கால்களை மடக்கி நாற்காலியில் குதிங்கால்கள் படும்படி செய்யுங்கள்.
* மெதுவாக உங்கள் இடதுபுறம் லேசாக திருப்புங்கள். 10-20 விநாடி இருங்கள்.
* பின்பு நேர்நிலைக்கு வந்து காலை இயல்புநிலையாக பாதம் தரையை தொடும்படி அமருங்கள். மீண்டும் பயிற்சியினை இயன்ற வரை செய்யுங்கள்.
பயிற்சி 4 : (படம் 4)
பாதங்கள் தரையினை நன்கு தொடுமாறு நாற்காலியில் சற்று முன்வந்து அமருங்கள்.
* படத்தில் காட்டியுள்ளது போல் வலது கையை மேலே தூக்கி இடதுகையால் வலது காலை தொடுங்கள்.
* பின்னர் இடது கையினை மேலே தூக்கி வலது கையினால் இடது காலை தொடுங்கள்.
* பிறகு இயல்பு நிலையில் அமருங்கள்
* முடிந்தவரை செய்யுங்கள்
பயிற்சி 5: (படம் 5)
* கால்கள் தரையில் படும்படி நாற்காலியில் அமருங்கள்
* கைகளால் நாற்காலியினை நன்கு பிடித்துக் கொள்ளுங்கள்.
* கால்களை பிடித்து நாற்காலியின் மீது வைத்து கைகளை அழுத்தி நாற்காலியில் லேசாக எழுங்கள். படத்தினைப் பாருங்கள். சிலநொடிகள் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
இப்பயிற்சியினை செய்ய வயதில் இளையவர்களாக இருப்பது நல்லது. உறுதியான அகலமான மர நாற்காலி சிறந்தது. மெலிதான நாற்காலிகளில் இப்பயிற்சியினை செய்யாதீர்கள். உணவு உண்டவுடன் செய்யாதீர்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது, ஒரு புள்ளிவிவரம்.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படி கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பெண்ணை கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்துவைத்து அடித்து காயப்படுத்துகிறார்கள்.
கடுமையாக தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள்.

பல சம்பவங்கள் வெளிவராததற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களே.
கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை. ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும்.
கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்.
காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

பல சம்பவங்கள் வெளிவராததற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களே.
கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை. ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும்.
கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்.
காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்.
பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மீண்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்... ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான சிகிச்சைகள் குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மருதுபாண்டியன் நம்மிடம் விளக்கம் அளித்தார். அதுபற்றிய தகவல்களை இனி விரிவாக காணலாம்.
‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
பன்றிக்காய்ச்சல் தொற்றினால் மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய காய்ச்சலுக்குரிய அறிகுறிகள்தான் இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். பன்றி காய்ச்சலை பரப்பும் வைரசுக்கு ஒரு வினோத சக்தியும் இருக்கிறது. அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மூன்றாவதாக புதிய வைரசாகவும் உருமாறிவிடக்கூடும். எனவே அலட்சியம் காட்டினால், நோய் தீவிரம் அடைந்து உடல் உறுப்புகள், செயல் இழந்து உயிரிழப்பும் வரலாம்.
பன்றிக்காய்ச்சலை எவ்வாறு கட்டுப் படுத்துவது, அதனை தடுக்க என்ன செய்யலாம், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி இளநிலை, முதுநிலை டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு டீன் டாக்டர் மருதுபாண்டியன் கூறினார்.
தடுக்க முடியுமா? :
பன்றிக்காய்ச்சலை தடுக்க முடியுமா? என்பது குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் பாலாஜிநாதன் கூறியதாவது:-
பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இருந்தால் அதனை 80 சதவீதம் தடுத்து விடலாம். பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட ஒருவரை குணப்படுத்த முடியும். ஆனால், அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவரை குணப்படுத்துவது சற்று கடினமானதாகிவிடும்.
எடுத்துக்காட்டாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினை இருந்தால் அவருக்கு தகுந்த சிகிச்சை மிக அவசியமானது. பொதுவாக குழந்தைகளையும், பெரியவர்களையும் இந்த வைரஸ் எளிதாக தாக்குகிறது.
தினமும் உணவு உண்ணும் முன்பும், பின்பும் சோப்பு போட்டு முறையாக கையை கழுவ வேண்டும். சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும்.
வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். இதுபோன்ற வழிகளை பின்பற்றி பன்றிக்காய்ச்சலை எளிதில் பரவாமல் தடுக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை தங்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கிறது. அதுபோல் பன்றி காய்ச்சலை கண்டறிவதற்காக பிரத்யோக ஆய்வகமும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ளது. தென் மாவட்டங்களில் இதுவே அங்கீகாரம் பெற்ற மிகப்பெரிய ஆய்வகமாகும்.
பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா என்று கேட்டால், ‘உண்டு’ என்பதுதான் பதில். பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் ‘ஒசல்டாமிவிர்‘ என்ற மாத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கான அறிகுறிகள் தென் பட்டால் டாக்டரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படும். இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் மாறி மாறி உருவெடுப்பதால், ஆண்டுதோறும் புது தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.
வைரஸ்களில் பலவகை
பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்தில் எச்1என்1 என்ற வைரஸ்தான் பரப்பியது. தற்போது அதில் படிப்படியாக பல மாற்றங்கள் உருவாகி, எச்3என்2, எச்2என்1, எச்2என்3, எச்1என்2, எச்3என்1 என்ற பல்வேறு வைரஸ் வகை வந்து விட்டன. பொதுவாக இந்த காய்ச்சல் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்துதான் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகம் பரவுகிறது. பொதுவாக மற்ற மாதங்களில் இது அதிக பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை.
பன்றிக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை பொறுத்து, அவருக்குரிய பாதிப்பை கூறுகிறார்கள். அதாவது, ஏ, பி, சி என்ற 3 நிலைகள் இதில் உள்ளன.
நிலை-‘ஏ’ பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நோயாளிக்கு ஏற்படும் ‘ஏ‘ நிலைக்கான அறிகுறி என்பது மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு ஆகியவை.
நிலை-‘பி’ கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி.
நிலை-‘சி’ மேற்கண்ட ‘ஏ‘ மற்றும் ‘பி‘ நிலைகளில் காணப்படும் அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக நிச்சயம் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
என்னென்ன பரிசோதனை?
தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்து எந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ‘சி‘ நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு அவசியம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் தற்போது அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் - 6,
வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
பட்டை - ஒரு சிறிய துண்டு,
கீறிய பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.
மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோர்வு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
சோர்வு எனும் உணர்வானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரணமான உணர்வாகும்; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் அவர்களால் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது; குழந்தைகள் சோர்வாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொண்டு வருவது தான். ஆகையால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டியது அவசியம்..!
சரியான உறக்கம் கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழாமல் இருப்பதும் உடலில் சோர்வை ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன. எனவே குழந்தைகள் நேரத்திற்கு உறங்கி எழுவதை கவனித்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு அளித்து, அவர்களை உறங்க செய்து, சுறுசுறுப்புடனும் இருக்கும் வண்ணம் அன்றாட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பிறந்த பின் தங்களது வளர்ச்சி காலகட்டத்தில் சரியாக வளர புரதச்சத்து அவசியம்; ஒரு நாளைக்கு குறைந்தது 800 - 1000 கலோரிகளையாவது குழந்தைகள் உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் உடலில் சோர்வு ஏற்படாமல் காத்து, அவர்களை உற்சாகமாக இருக்க உதவும்.
குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்டிப்பாக அவர்களால் சரியாக செயலாற்ற முடியாது; எப்பொழுதும் சோர்ந்து போய் தான் காட்சி அளிப்பர். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே! நம் உடல் சீராக, சரிவர இயங்க அதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம்; ஆகவே இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச்சத்தினை உங்கள் குழந்தைகள் சரியாக பெறுகிறார்களா என்று பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்னைகளில் மூலமும் ஒன்று. இந்த பிரச்சனையை கட்டுப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்னைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.
இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மலம் மிகவும் கெட்டியாக வெளிவரும்போது மூலத்தில் வெடிப்பு ஏற்படும். அதுதான் Fissure என்று சொல்லக்கூடிய வெடிப்பு மூலம். piles எனப்படும் மூல நோயை விட வெடிப்பு மூலத்தினால் அதிக அளவில் வலி ஏற்படும். மலம் கழித்த பிறகும் கூட வலி இருக்கும். வெடிப்பு மூலத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. முதலாவது தற்காலிக வெடிப்பு மூலம். இரண்டாவது வகை நிரந்தர வெடிப்பு மூலம்.
ஆசனவாயில் வெடிப்பு இருக்கும். அதை விரல்களில் தொடும்போது உணர முடியும். ஆனால் வெளியே தெரியாமல் இருப்பது தற்காலிக வெடிப்பு மூலம் ஆகும். இது கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இதனை குணப்படுத்தி விட முடியும்.
ஆசனவாயில் விரல்களால் தொடும்போது தடித்துக் காணப்பட்டால் அது நிரந்தர வெடிப்பு மூலம் ஆகும். இதற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக அமையும். இச்சிகிச்சை மூலம் கெட்டியான தசைகளை விடுவிக்கும்போது அது குணமடைந்து விடும். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அக்காலத்தில் அனஸ்தீசியா கொடுப்பது உகந்ததல்ல.
எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும்.

ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மலம் மிகவும் கெட்டியாக வெளிவரும்போது மூலத்தில் வெடிப்பு ஏற்படும். அதுதான் Fissure என்று சொல்லக்கூடிய வெடிப்பு மூலம். piles எனப்படும் மூல நோயை விட வெடிப்பு மூலத்தினால் அதிக அளவில் வலி ஏற்படும். மலம் கழித்த பிறகும் கூட வலி இருக்கும். வெடிப்பு மூலத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. முதலாவது தற்காலிக வெடிப்பு மூலம். இரண்டாவது வகை நிரந்தர வெடிப்பு மூலம்.
ஆசனவாயில் வெடிப்பு இருக்கும். அதை விரல்களில் தொடும்போது உணர முடியும். ஆனால் வெளியே தெரியாமல் இருப்பது தற்காலிக வெடிப்பு மூலம் ஆகும். இது கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இதனை குணப்படுத்தி விட முடியும்.
ஆசனவாயில் விரல்களால் தொடும்போது தடித்துக் காணப்பட்டால் அது நிரந்தர வெடிப்பு மூலம் ஆகும். இதற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக அமையும். இச்சிகிச்சை மூலம் கெட்டியான தசைகளை விடுவிக்கும்போது அது குணமடைந்து விடும். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அக்காலத்தில் அனஸ்தீசியா கொடுப்பது உகந்ததல்ல.
எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும்.
உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு இந்த முத்திரையை செய்யலாம்.
செய்முறை : விரிப்பில் அமர்ந்து பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள். சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
அமரும் முறை: பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
எவ்வளவு நேரம் : குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.
பலன்கள் :
1. உடற்சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. வியர்வையால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4.சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
5. தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
6. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
7. இளமையான தோற்றம் உருவாகும்.
8. தாகம் தணியும்.
9. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.

மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மூங்கில் அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
கேரட் - ஒன்று ,
வேக வைத்த பட்டாணி - ஒரு கப்,
பீன்ஸ் - 5,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,

செய்முறை :
பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,

சத்தான மூங்கில் ரைஸ் வெஜிடபிள் சூப் ரெடி.