என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சில்லி சோயாவை புலாவ், தயிர், சம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 30,
தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
சோள மாவு - 3 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தக்காளி, குடைமிளகாய் - தலா ஒன்று,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

செய்முறை :
தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி தண்ணீரை வடித்து விட்டு உருண்டைகளை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
இந்த சோயா உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தக்காளி விழுது, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சோள மாவு, உப்பு சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும, பிசிறி வைத்த சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சூப்பரான சில்லி சோயா ரெடி.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வாணி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது ஷெர்வாணி என்பது பெண்கள் அணிகின்ற பிரம்மாண்ட ஆடைகளுக்கு ஏற்ற நிகரான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகிறது. ஆண்கள் அணிகின்ற ஷெர்வாணி வடிவமைப்பு என்பது ஒன்பது வகையிலான பிரிவுகளில் அடங்கி விடுகிறது. அதாவது சிப்கான் ஷெர்வாணி, இன்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி, அச்கன் ஷெர்வாணி, ஜோத்பூரி ஷெர்வாணி, ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி, அனார்கலி ஸ்டைல் ஷெர்வாணி, பிரிண்டட் ஷெர்வாணி, பாகிஸ்தானி ஷெர்வாணி உள்பட ஒன்பது பிரிவுகளை அடிப்படையாக கொண்ட ஷெர்வாணி உருவாக்கம் செய்யப்படுகிறது.
சிறப்பு மிகு சிப்கான் ஷெர்வாணி
பழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வாணி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாக காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வாணி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.
நவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி
தற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வாணி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

பிரிண்டட் ஷெர்வாணி
நவீன மாடல் என்பதில் பிரிண்டட் ஷெர்வாணியும் இடம் பிடித்துள்ளது. பலதரப்பட்ட உருவ அமைப்பு, வடிவம் மற்றும் வரைவோவிய வேலைப்பாடுகள் போன்றவை பிரிண்ட் செய்யப்பட்டவாறு மேம்பட்ட வண்ண கலவையுடன் உள்ளன. கண்டவுடன் மயங்கும் அமைப்பில் மேற்சட்டை அமைப்பு முழுவதும் பிரிண்ட் வேலைப்பாடு செய்யப்பட்டவாறு கிடைக்கின்றன. இரட்டை வண்ண சாயலில் கீழ்பகுதி பேண்ட்-க்கு இணையான வண்ண அமைப்பு மேல்சட்டையில் வெளிப்படும் வகையில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.
ஜோத்பூரி ஷெர்வாணி
அதிகபட்ச ராயல் தோற்றத்தை வழங்கிடும் கச்சிதமான ஷெர்வாணி. இதன் உருவாக்கம் கவுரவ தோற்றத்தை அளிக்கும் வகையிலேயே இருக்கும். ஒற்றை வண்ணத்தில் அழகிய வெட்டுகள் மற்றும் பட்டன் அமைப்புகள் மட்டும் செய்யப்பட்டு இருக்கும். இதில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் ஏதும் பதியப்படாமல் அதிகபட்ச வேலைப்பாடு ஏதுமின்றி அதேசமயம் வியக்கும் வடிவமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணிகள் உள்ளன. மேம்பட்ட துணிகள் கொண்ட சற்று சுகமான அமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணி உருவாக்கப்படுகிறது.
ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி
உயர் தரமான துணி வகைகளை உஸ்ஸர், ராசில்க், பனாரஸி மற்றும் ஜாம்வார் கற்கள் கொண்டு அதிகபட்ச கவர்ச்சியுடன் இந்த ஷெர்வாணி உருவாக்கம் திகழ்கிறது. மேல்சட்டை அமைப்பு என்பது இரு அடுக்கு பிரிவுகளாக வேறு வண்ணப்பகுதிகளாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜாக்கெட் அமைப்பில் அதிகபட்ச வேலைப்பாடும் அதற்கு அடுத்த பகுதியில் பிளைன் துணி அமைப்பும் உள்ளவாறு உள்ளது. தங்க சரிகை மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் ஷெர்வாணி தங்கமயமாய் ஜொலிக்கும் அமைப்பில் உள்ளன.
அனார்கலி ஷெர்வாணி
மார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வாணியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வாணி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது.
வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது. சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள்.
இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம் மாறி வேலையில் சேரமாட்டார்கள்.
இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும். ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.
அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும்.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

பார்லி, பாலக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - அரை கப்,
பாலக்கீரை (நறுக்கியது) - ஒரு கப்,
பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 4,
கிராம்பு - 2,
பட்டை - சிறு துண்டு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும்.
வேக வைத்த பார்லியில் ஒரு ஸ்பூன் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய கீரையை கொதிக்கும் நீரில் போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் நீரை வடித்து, கீரையை அரைத்து கொள்ளவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை ஒன்றிரண்டாக சிதைக்கவும் (அல்லது மிகப் பொடியாக நறுக்கலாம்).
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு சூடானதும் சின்ன வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த கீரை விழுது, கொத்தமல்லித்தழை, பார்லி தண்ணீர் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்), உப்பு, மிளகுத்தூள், அரைத்த பார்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, பரிமாறவும்.
பார்லி - அரை கப்,
பாலக்கீரை (நறுக்கியது) - ஒரு கப்,
பூண்டு, சின்ன வெங்காயம் - தலா 4,
கிராம்பு - 2,
பட்டை - சிறு துண்டு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேகவைத்து வடித்து ஒரு கப் நீர் எடுத்துக்கொள்ளவும்.
வேக வைத்த பார்லியில் ஒரு ஸ்பூன் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய கீரையை கொதிக்கும் நீரில் போட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் நீரை வடித்து, கீரையை அரைத்து கொள்ளவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றை ஒன்றிரண்டாக சிதைக்கவும் (அல்லது மிகப் பொடியாக நறுக்கலாம்).
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை போட்டு சூடானதும் சின்ன வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த கீரை விழுது, கொத்தமல்லித்தழை, பார்லி தண்ணீர் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்), உப்பு, மிளகுத்தூள், அரைத்த பார்லி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, பரிமாறவும்.
சூப்பரான சத்தான பார்லி - பாலக் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
யோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.
செய்முறை :
1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.
2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.
3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.
கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
குறிப்பு
இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பலன்கள்
1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.

திருமணத்திற்கு முன்பு பருக்களை நீக்க கிரீம்களை பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
இதயம் பாதிக்கப்படுவதை தடுக்க புகைபிடித்தலை தவிர்க்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு.
எனவே பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தை காத்தல் அவசியம். பொதுவாக திருமணமான உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். இப்போது பெரும்பாலான பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
பருவ வயதில் ஏற்படும் பருக்களை நீக்க இளம்பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது, ஒருவித அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. அது கருவில் சிசுவின் இதயத்தை பாதிக்கின்றது. திருமணத்திற்கு முன்பு இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இந்த கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களை தவிர்த்தல், சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
தற்போது ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளை தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும்.
கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இந்த பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு பெண் தாய்மையை உணர்வதற்கு முன்பே கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும்.
கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த காலக்கட்டத்தில் மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.

சித்தா, ஆயுர்வேதம் என்று நம் பண்டைய மருத்துவ முறைகள் பெருமையை பறை சாற்றினாலும், எலும்பு முறிவுக்காக தமிழர் மேற்கொண்ட பாரம்பரிய சிகிச்சை உலக அளவில் புகழ்பெற்றது.
மருத்துவம் என்பது நோயை குணப்படுத்தவும், அந்த நோய் மீண்டும் தாக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கலை ஆகும். தற்கால மருத்துவம் காயங்களை கண்டறிந்து உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அமைகிறது. மருத்துவ தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை தான், எனினும் மருத்துவத்தின் எல்லா தடங்களிலும் இதன் நீட்சி வேண்டுமா? என்பதே கேள்வி.
சித்தா, ஆயுர்வேதம் என்று நம் பண்டைய மருத்துவ முறைகள் பெருமையை பறை சாற்றினாலும், எலும்பு முறிவுக்காக தமிழர் மேற்கொண்ட பாரம்பரிய சிகிச்சை உலக அளவில் புகழ்பெற்றது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எலும்புகள் மீது ஏற்படும் மோதலே எலும்பு முறிவு. மூடிய முறிவு, திறந்த முறிவு, நோய்நிலை முறிவு, அழுத்த முறிவு, பிறப்பு முறிவு என்று எலும்பு முறிவு பலவகைப்படும். இந்த பிரச்சினைக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறை மிகவும் அறிவியல் பூர்வமானது.
தற்காலத்தில் எலும்பு முறிவு பிரச்சினை ஏற்பட்டால், அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் 5 முதல் 10 துளைகள் போட்டு, எலும்பின் மீது பிளேட் வைத்து, துளைகளில் திருகு கோர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நவீன சிகிச்சை மேற் கொள்வதற்கு தோலை அறுத்து, ரத்த நாளங்களை துண்டித்து தசைகளை சேதப்படுத்த வேண்டியதுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எலும்பில் உள்ள பிளேட்டை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
ஆனால் நம் முன்னோரின் சிகிச்சை முறையே அற்புதமானது. சேதமடைந்த தசையை நேராக்கி, முறிந்த எலும்பின் இரு முனைகளும் துல்லியமாக ஒன்று சேர்த்து கட்டு கட்டப்படுகிறது. இதன்மூலம் இரு முனை பகுதிகளுக்கிடையே எலும்பின் திசு மற்றும் ரத்த அணுக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடி இணைப்பு பாலம் உருவாகிறது. அதன்மீது கால்சியம் படிவங்கள் தானாகவே படிந்து எலும்புகள் மீண்டும் உறுதி பெறுகின்றன.
சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோரை கடினமான வேலைகளை செய்யவைத்தும், மெது மெதுவாக நடக்க வைத்தும் பயிற்சி தரப்படுகிறது. இதுவே நமது பாரம்பரிய சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையில் பக்க விளைவுகளும் கிடையாது. துளியும் ரத்தம் வீணாகாது. தற்கால நவீன சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் இந்த சிகிச்சை முறையில் பலன் கிடைக்க கூடுதல் நாட்களாகும்.

ஆனால் பலன் பெறும்போது எலும்பு முறிவு ஏற்பட்ட அறிகுறியே இருக்காது. அறிவியல் பூர்வமான இச்சிகிச்சை முறையை பல நாட்டவரும் நம்மை பார்த்து மேற்கொண்டு வருகின்றனர். 30 நாள் கரு தரித்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு போக முடியாது. ஏனென்றால் மயக்க மருந்து கொடுத்தாலோ, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டாலோ அந்தப்பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும்.
அதே போல சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த முறையே சாலச்சிறந்தது. ஆனால் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு இன்று வரை மருத்துவ அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை. கலைகள், விளையாட்டுகள், நடன நாட்டியங்கள் என பாரம்பரியத்தை மீட்டெடுத்து வரும் இச்சூழ்நிலையில் நமது பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதும் அவசியமானதாகும்.
எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை பெற விரும்பாதவர்கள் விருப்பப்படி எலும்பு முறிவுக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறையை அரசு மருத்துவ மனைகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தை உதாசீனப்படுத்தாமல் சித்த மருத்துவத்தை தனிப்பிரிவாக செயல்படுத்தியது போல எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டு கட்டும் சிகிச்சை முறையை தனிப்பிரிவாக அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகளில் பயிற்றுவித்து மக்கள் பயன் பெற செய்ய வேண்டும். நவீன மருத்துவத்துக்கு நாம் எதிரி அல்ல.
அதேவேளையில் பாரம்பரியத்தை இழக்கவிட கூடாது என்பதே திண்ணம். “எலும்பு கடித்து வாழ்ந்தான் எம் பாட்டன் நூறாண்டு”, என்பது தமிழ் மக்களின் முதுமொழி. பாரம்பரியமும், நவீனமும் கலந்தால் இம்முதுமொழியும் சாத்தியம் தான். காலமே அதற்கு சாட்சியம் கூறட்டுமே.
ஆர்.எஸ்.வேலுமணி,
பாரம்பரிய எலும்பு முறிவு வைத்தியர்

தோசை, இட்லி, நாண், புலாவ், சாம்பார் சாதத்திற்கு அருமையான மட்டன் ஈரல் வறுவலை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் ஈரல் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
சோம்பு - அரை தேக்கரண்டி,
பட்டை - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
கொத்தமல்லி, உப்பு - சிறிது.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மட்டன் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

தண்ணீர் எல்லாம் வற்று ஈரல் வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
தந்தை குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?
* குழந்தையை குளிப்பாட்டுவது
* தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
* பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
* நாப்கின் மாற்றுவது.
* குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
* குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

தந்தை செய்ய வேண்டியவை
* குழந்தையுடன் விளையாடுதல்
* நல்லது சொல்லிக் கொடுத்தல்
* குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
* குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
* மரியாதை சொல்லி தருவது
* குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
* மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
* குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
* குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
* குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
* நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை
இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும்.
தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது.
கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது.
குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.

தந்தை செய்ய வேண்டியவை
* குழந்தையுடன் விளையாடுதல்
* நல்லது சொல்லிக் கொடுத்தல்
* குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
* குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
* மரியாதை சொல்லி தருவது
* குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
* மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
* குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
* குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
* குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
* நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை
இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும்.
தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது.
கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது.
குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.
பச்சை நிற அரிசியாக உள்ள மூங்கில் அரிசி மூங்கிலில் உள்ள சத்துகளை கொண்ட சிறிய அளவிலான அரிசியாக திகழ்கிறது. இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும்.
மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற மூங்கிலின் பூபகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதையாகும். மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது நாம் உண்ணும் அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ண ஏற்றதாக உள்ளது. அதிக நெருக்கமான காடுகளில் வளரும் மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி என்பது மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றது. இதனை காடுகளில் வாழும் பழங்குடியினர் சேகரித்து நகரப்பகுதிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும்.
பச்சை நிற அரிசியாக உள்ள மூங்கில் அரிசி மூங்கிலில் உள்ள சத்துகளை உட்கிரகித்து கொண்ட சிறிய அளவிலான அரிசியாக திகழ்கிறது. இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது.
மூங்கில் அரிசியில் உள்ள கலோரி
மூங்கில் அரிசி அதிகபட்ச கலோரி அளவு கொண்டது. ஒரு கப் அளவு அரிசியில் மட்டும் 160 கலோரி அளவு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான தினசரி கலோரி அளவான 2000 எனும்போது இது அதில் 8 சதவீத கலோரி அளவை பூர்த்தி செய்கிறது. அதுபோல் மூங்கில் அரிசி உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக செரிமானம் அடைந்து அதில் உள்ள கலோரி சத்து உடனடியாக உடலுக்கு சென்றுவிடும். அதனால் உடனடியாக உடல் சக்தி அதிகரித்துவிடும்.
கார்போஹைட்ரேட்ஸ்
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. அதாவது ஒரு கப் மூங்கில் அரிசியில் மட்டுமே 34 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றது. விளையாட்டு செயல்பாடுகள் கொண்ட நபருக்கு தேவையான அதிகபட்ச கார்போஹைட்ரேட்ஸ் வழங்குகிறது.
புரத சத்து அளவு
ஒரு கப் மூங்கில் அரிசியில் சுமார் 3 கிராம் அளவு புரதசத்து உள்ளது. இந்த புரோட்டீன் சத்து மூலம் உடல் செல்கள் மற்றும் தசை கட்டமைப்புகளை சரிசெய்ய முடியும்.
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.
மூங்கில் அரிசியின் முக்கியமான பணிகள்
மூங்கில் அரிசியை உட்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சினை தீர்வாகிறது. உடலில் உள்ள மூட்டுவலி, வாதநோய்கள், முதுகுவலி போன்ற பிரச்சினைகளை தீர்க்கின்றது. குறைந்த கொழுப்பு சத்து என்பதுடன் அபரிமிதமான பீ6 விட்டமின் நிறைந்த வாறும் உள்ளது. எனவே, மூங்கில் அரிசியை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
மூங்கில் அரிசியில் உணவுகள்
மூங்கில் அரிசியை நாம் சாதம் வடித்து வைக்க முடியாது. பெரும்பாலும் கஞ்சி போன்றுதான் செய்து சாப்பிடுவர். அதுபோல் மூங்கில் அரிசியை கொண்டு இட்லி மாவு தயாரித்து இட்லி, தோசை போன்ற உணவுகளை செய்யலாம். குழைய வேகவைத்தே மூங்கில் அரிசியை உணவில் சேர்க்க முடிகிறது என்பதால் விதவிதமான பாயசங்கள் செய்யும்போது மூங்கில் அரிசியை பயன்படுத்திடலாம். மேலும் மூங்கில் அரிசி மாவை கொண்டு அதிரசம், மாவிளக்கு மற்றும் விதவிதமான காரங்கள் செய்து சாப்பிடலாம். மூங்கில் அரிசி உணவை சாப்பிடும்போது உடலுக்கு உறுதி கிடைப்பதுடன் அதிக சுறுசுறுப்புடன் உடல் உறுப்புகள் செயல்படவும் முடிகிறது.
மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கும் தன்மையுள்ளதால் அக்கால கட்டத்தில் பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம். மூங்கில் அரிசி உயரமான மூங்கிலில் இருந்து தானாகவே பூமியில் விழுந்திடும். அதனை சேகரம் செய்வதே விற்பனைக்கு தரப்படுகிறது. இயற்கையின் அருட்கொடையால் பூமிக்கு வரும் மூங்கில் அரிசி உன்னதமானது.

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன், காய்கறி நூடுல்ஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன், வெஜிடபிள் சேர்த்து நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 1/4,
கேரட் - 3,
பீன்ஸ் - 2,
முட்டை - 2,
மட்டன் - 100 கிராம்,
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,

செய்முறை :
வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 1/4,
கேரட் - 3,
பீன்ஸ் - 2,
முட்டை - 2,
மட்டன் - 100 கிராம்,
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,
சோயா சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.

செய்முறை :
வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.