என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    காலையில் குழந்தைகளுக்கு கேரட் - தேங்காய் பானம் கொடுப்பதன் மூலம் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    தேங்காய் - அரை மூடி
    தேன் அல்லது பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    கேரட், தேங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    நறுக்கிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

    தேன் அல்லது பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்களது எதிரி முன்பு துவண்டு போய் அவர் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை நீங்களே ஏற்படுத்திதாராதீர்கள். 'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு போதுமானது..
    சிரிப்பு எவ்வளவு பெரிய அற்புதம் என்று என்றாவது ஒரு நாள் உணர்ந்ததுண்டா. சிரிப்பு வலிமையை வெல்வதற்கான ஆயதம். புன்னகை செய்வது அனைவராலும் முடியும். ஆனால் சிரிப்பது ஒரு சிலரால் மட்டும் தான் முடியும்.

    நம் வாழ்வில் நாம் செய்யும் பெரிய தவறே ஒரு விஷயத்தை பற்றி தீர சிந்தித்து அந்த நேரம் அனைத்தையும் இழப்பதே. அது நம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பாதிப்பையே தரக்கூடியது.

    பிரச்சனை வாழ்வில் வருவதும் போவதுமாகத் தான் இருக்கும். அதற்காக சிரிப்பதை மறந்தால் மன நிம்மதியை இழக்க நேரிடும்.

    வாய்விட்டு சிரிப்பது என்பது ஒரு மிகப்பெரிய மருந்து. எவ்வளவு விலை கொடுத்தாலும் அவை வாங்க இயலாத ஒன்று. நம்மில் தோன்றி நம்மிடமே முடிவது சிரிப்பல்ல. பிறரை துன்பத்தில் இருந்து விளக்கி அவர்கள் கண்ணில் இருந்து நீர் வரும் அளவிற்கு சிரிக்க வையுங்கள். நம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துவதை விட பெரிய சந்தோஷம் ஏதேனும் இருக்குமா?

    எந்த ஒரு உறவாக இருந்தாலும் பிரச்சனை வருவது இயல்பு தான். அதற்காக பிரச்சனை ஏற்படும் போது பலி சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள். தேவையற்ற வாக்குவாதம் வீணான சங்கடத்தை ஏற்படுத்தும். உறவை விட வாக்குவாதம் பெரிதல்ல.



    பலர் வீட்டுக்கு வந்தால் முகத்தில் மகிழ்ச்சி என்பதை தேடினாலும் அவர்களிடமிருந்து கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அவர்கள் நண்பர்கள் சூழ் இடத்தில் மகிழ்ச்சி, சிரிப்பு ததும்பி ஓடும். அதே, சிரிப்பு வீட்டிலும் பூத்தால் உறவின் கெட்டிகாரர் நீங்கள் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை!

    உங்களது எதிரி முன்பு துவண்டு போய் அவர் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை நீங்களே ஏற்படுத்திதாராதீர்கள். 'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் உங்கள் எதிரியை வீழ்த்துவதற்கு போதுமானது..

    தோல்வி அடையும் போது நிதானம் அவசியம். கோபம் சந்தோஷங்களை வீழ்த்தும், உறவை பிறிக்கும், தனிமையை நிலைநாட்டும்.

    'சிரிப்பு' என்ற ஒற்றை ஆயுதம் இவை அனைத்தையும் தகர்த்து எரியும்.
    காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்சனைகளுக்கு முதலுதவி போல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.
    உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும்.

    செய்முறை :

    நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.

    தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம். நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.

    ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

    ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

    பலன்கள் :


    காது, எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை குணப்படுத்துகிறது, அத்தோடு தூக்கமின்மையையும், இதயம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

    பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.

    பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்சனைகளுக்கு முதலுதவி போல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

    வெர்ட்டிகோ, தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

    குழந்தைகள், வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுப்படும்.

    மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.

    அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.
    மூளைக்கு சற்று மாறுதலான நல்ல பழக்கங்களை தரும் பொழுது 80 வயதிலும் மறதி ஏற்படாது மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய வாழ்க்கை என்பது ஒரு பெரிய சவால் ஆகி விட்டது. ஒரே நேரத்தில் அஷ்டாவதானி போல் பல வேலைகளை ஒருவர் செய்ய வேண்டி உள்ளது. இது காலப்போக்கில் அதிக உளைச்சலை மூளைக்கு அளிக்கின்றது. ஆக மூளைக்கு சற்று மாறுதலான நல்ல பழக்கங்களை தரும் பொழுது 80 வயதிலும் மறதி ஏற்படாது மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.

    * அன்றாடம் ஏதாவது படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். மூளைக்கு சவால்களை கொடுங்கள்.

    * உங்களுக்கு காது கேளாமை இருப்பின் உடனடியாக அதனை சரி செய்யுங்கள். சில முதியவர்களுக்கு காது கேளாமையினை சரி செய்தவுடன் அவர்கள் சுறுசுறுப்பாய் நல்ல மூளைத் திறனோடு செயல்படுவார்கள்.

    * 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதும் 6 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தூங்குவதும் மூளை செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும்.

    * இருதயம் சீராய் இருத்தல், முறையான ரத்த அழுத்தம் இரண்டுமே ஆரோக்கியமான மூளைக்கு மிக அவசியம்.

    * அதிக உடல் எடை, சதை கூடியவர்களுக்கு மறதி பாதிப்பு ஏற்படும். சரியான உடல் எடையினை வைத்திருங்கள்.

    * புகை பிடிப்பவர்களின் மூளைத் திறன் மழுங்கி விடுகின்றது என பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    * அதிக சோகம், மனஉளைச்சல் இவை சுறுசுறுப்பான மூளையின் எதிரிகள்.

    * எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். முடங்கி இருக்காதீர்கள்.



    * அக்கம் பக்கத்தினரிடம் நட்போடு பழகுங்கள்.

    * சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.

    * காலையில் காபி, டீ குடியுங்கள். மதியம் 12 மணிக்கு மேல் வேண்டாம்.

    * வானவில் நிறத்தில் காய்கறிகளை உண்ணுங்கள்.

    * ஆயுர்வேத மசாஜ் முறை சிறந்ததே.

    * வாய்விட்டு சிரியுங்கள்.

    * பகலில் 10-20 நிமிட சாய்வு நாற்காலி தூக்கம் நல்லதே.

    * சிறிதளவு பட்டை தூளினை உணவில் தூவிக் கொள்ளுங்கள்.

    * சிறு சிறு தொட்டிகளுடன் தோட்டம் உருவாக்கலாமே.

    இவையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மூளையும் சுறுசுறுப்பாய் இருப்பதனை நீங்களே உணருவீர்கள்.

    யாருக்குத்தான் உடலில் அதிக எடையினை தூக்கிக் கொண்டு வாழ பிடிக்கும். வாழும் முறையில் சில மாற்றங்களே அதிக பலனை உடலுக்கு அளிக்கும்.

    * அதிக நேரம் உட்கார்ந்தே நாளை செலவழிக்காதீர்கள். முடிந்த வரை வீட்டில் கூட நடந்த படியே இருங்கள்.

    * சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம் என இன்றைய காலத்தில் அனைவரும் அறிவர். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் தான் முடியாமை ஏற்படுகின்றது. சிறு சிறு அளவிளான உணவினை அடிக்கடி உண்டு வந்தால் இதற்கு மிக நல்ல தீர்வு கிடைக்கும்.

    * கண்டிப்பாய் 1½-2 லிட்டர் நீரினை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் குடியுங்கள். 
    காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் பக்கோடா செய்யலாம். இந்த பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்
    கடலைமாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி .- 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - 1 கொத்து
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.

    அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

    அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவது போல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    காலை எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு மற்ற வேலையை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏன்? என்ன காரணத்திற்காக இவ்வாறு தண்ணீர் பருகுகின்றார்கள்? இதை பற்றி அறிவியல் என்ன கூறுகிறது பார்ப்போம்:

    இரவு குறைந்தது 7 மணி நேரம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கிறோம். இதன் விளைவாக உடலில் நீரின் அளவு குறைந்து இருக்கும். வறண்ட தொண்டை இதற்கு ஆதாரம். இப்படி இருக்க, எழுந்தது நீர் பருகினால் சில நொடிகளில் இழந்த நீரை உடல் மீட்டுக்கொள்ளும்.

    - ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து வறண்ட உணவு குழாயில் உணவு பண்டங்கள் இறங்குவது சிறிது சிரமம் ஆகிவிடுகிறது. சில முறை குமட்டல், அடைப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதற்கு தீர்வு, தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும். இது நீண்ட இடைவேளிக்குப்பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் போதும் பொருந்தும்.

    - காலையில் எழுந்திரிக்கும் போது உடலில் உஷ்ணம் இருப்பதை பலரும் சந்தித்திருப்பார்கள். உடலை குளிர்விக்க ஒரு டம்ளர் நீர் உதவும்.

    - பெரும்பாலான நேரங்களில் நீரின் தாகத்தை மனித மூளை பசி என்று புரிந்துக்கொள்ளும். இதனால் உடலில் சக்தி குறையாமல், உணவு தேவைப்படாத போது பசி எடுப்பதாக மாற்றாக கூறும் மூளைக்கு தீனி போட்டு போட்டு சில நாட்களில் 2 கிலோ எடையை பரிசாக பெற்றுக்கொள்கிறோம்.

    - உணவை அதிகமாக உட்கொள்ளமாட்டீர்கள், இதனால் அளவான உணவு மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போல் தோன்றும். தானாகவே எடை குறையும்.

    - உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும், வயிற்றை அலசி அழுக்குகளை வெளியேற்றும்.

    - உடலின் செயல்பாட்டை 24% வரை அதிகரிக்க உதவும்.

    - சிறு நீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.

    - முகம் மாசு மரு இன்றி பளபளக்கும்.

    வெறும் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லையென்றால், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

    குழந்தைகள் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து, தனியாக டிவி பார்த்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
    தற்போதைய நாகரிக வளர்ச்சி காலத்தில், பிரைவசி என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தனி அறையையும் அதில் கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பதற்கான வசதியையும் செய்து கொடுக்கிறார்கள்.

    குழந்தைகளும் அதை முதலில் ஒருவித தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டு, பின் அதுதான் நம்முடைய உலகம் என்று முழுமனதாக ஏற்று, அதிலேயே மூழ்கிப் போய்விடுகிறார்கள்.

    அடுத்து பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட்டு வரும்வரை, தங்களுடைய அறைக்கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி குழந்தையாக இருக்கும்போது, தனியாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்பவர்கள் வளர்ந்த பிறகு, அதுவே மிகப்பெரிய அளவில் உடல்நலக் கோளாறுகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன.

    குறிப்பாக, அளவுக்கதிகமாக உடல் எடை கூடிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே வயதில் உள்ள டிவி பார்த்த குழந்தைகளுக்கும் டிவி பார்க்காத குழந்தைகளுக்குமான உடல் எடை சரிபார்க்கப்பட்ட போது, அதில் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

    தனி அறையில் தனிமையில் டிவி பார்க்கும் குழந்தைகளின் உடல் எடை மற்ற குழந்தைகளின் எடையை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.

    அதனால் குழந்தைகளை மனிதர்களோடு அதிக நேரம் பழக விட வேண்டும். அவர்களுடைய வேலையை அவர்களாகவே செய்துகொள்ளப் பழக்க வேண்டும். 
    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    வெங்காயம் - 2,
    மிளகாய் வற்றல் - 2
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா 3.



    செய்முறை:

    அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

    சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    இப்போது பன்னீரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.

    பச்சை வாசனை போனதும், நெயில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
    ‘இருபத்தைந்து வயதில் திருமணமாகி - முப்பது வயதுக்குள் குழந்தை பெற்ற பெண்கள் - நாற்பது வயதுக்குள் இல்லற வாழ்க்கையில் பக்குவமிக்கவர்களாக மணதொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்’ என்ற கணிப்பு சில நேரங்களில் தவறாகிவிடுகிறது. ஏனென்றால் நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

    ‘15 வருட மணவாழ்க்கையில், தான் விரும்பியது கிடைக்கவில்லை’ என்ற எண்ணமோ, ‘தனக்கு சரியான அங்கீகாரத்தை கணவர் தரவில்லை’ என்ற கவலையோ அவர் களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனைவிக்கு ஏற்பட்டால், கணவர் உடனே விழிப்படைந்து, மனைவியை புரிந்துகொண்டு தீர்வு காண முன்வரவேண்டும். தீர்வு காணாவிட்டால் அது சபலமாக மாறி குடும்பத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி விடும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இரண்டு குடும்பங்களின் இல்லற வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட சம்பவங்களை பற்றி சொல்கிறேன்.

    40 வயதுகளில் பெண்களில் சிலருக்கு ஒருவித சலிப்பு ஏற்படுவது ஏன்? அந்த சலிப்பு, சபலமாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு கணவரின் அலட்சிய மனோபாவமே விடையாக அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்னால் ஒவ்வொரு இளைஞரும், பெண்களைப்போல் தங்கள் தோற்றத்திலும், ஸ்டைலிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தங்கள் அழகு சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது.

    முறையற்ற உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் போன்றவைகளால் அவர்கள் உடல் அமைப்பும் மாறுகிறது. ஆனால் மனைவியோ எல்லா காலங்களிலும் தன் அழகுமீது அதிக கவனம் செலுத்துகிறாள். அதனால் 40 வயதுகளிலும் மனைவி அழகாகவே தோன்றுகிறாள். ஆனால் கணவரோ அந்த கால கட்டத்தில் தன் தோற்றத்தில் அலட்சியம் காட்டுவதால், அழகில் கணவன்-மனைவி இடையே தோற்ற பொலிவில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

    திருமணமான புதிதில் கணவர், மனைவி மீது முழு கவனமும், அன்பும் செலுத்துவார். மனைவியும், கணவரிடம் அதுபோல் அன்பு செலுத்துவார். குழந்தை பிறந்த பின்பு அவளது கவனம் குழந்தையை நோக்கி அதிகம் திரும்பும். அந்த காலகட்டத்தில் ஆண்கள் வெளிவட்டார நட்புகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள். பெண்களும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை.



    வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் வளர்ப்பதிலே அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்கு 40 வயதாகும்போது மகனோ, மகளோ 15 வயதை அடைந்து, அவர்களும் தங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். கணவரும், குழந்தைகளும் அவரவர் நட்பு வட்டத்தோடு பொழுதை கழிக்கும் அந்த தருணத்தில் 40 வயது தாய்க்கு தனிமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த தனிமையை இனிமையாக்கும் விதத்தில் ஆண் நட்புகள் தலைதூக்குவதுண்டு.

    பெண்கள் கலை ரசனைமிக்கவர்கள். வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் அழகை ஆராதிப்பவர்கள். அதோடு மாற்றங்களையும், வித்தியாசங்களையும் எல்லாவிதத்திலும் எதிர்பார்ப்பார்கள். பெண்களின் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஆண்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். மனைவியின் அத்தகைய எதிர்பார்ப்புகளை கவனிக்காததுபோல் நடிப்பது, அலட்சியப்படுத்துவது எல்லாமுமே அவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அப்போது தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுபவர்கள் மீது அவர்கள் கவனம் செல்லக்கூடும்.

    25 வயதில் திருமணமாகி, 15 வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து 40 வயதை தொடும்போது ஆண்கள் பொதுவாகவே சலிப்படைந்துவிடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் சலிப்படையாமல் புதிய எழுச்சியுடன் செயல்பட விரும்புகிறார்கள். மனைவி 40 வயதை எட்டும் போது கணவரும் புத்துணர்ச் சியடைய வேண்டும். மனைவி விரும்பும் மாற்றங்களை தங்களிடம் உருவாக்கிக்கொண்டு ஈடுகொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்.

    மனைவியின் திறமைகளை அங்கீகரித்து அவர் களுக்கு வெளி உலக வாய்ப்பு களையும் நல்லமுறையில் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் எல்லா வயதிலும், எல்லா பருவத்திலும் பெண்மையின் புனிதத்தை காக்க தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது கலாசாரத்தின் ஜீவநாடி.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    புத்தாண்டு பிறந்திடும் போது நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.
    புத்தாண்டு பிறந்திடும் போது நம் வாழ்வில் புதிய எண்ணங்கள் உதயமாகும். அந்த வகையில் நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.

    பொதுவான புத்தாண்டு உறுதிமொழிகள்

    உலகளவில் எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகள் என்பது உடல் நலத்தை மேம்படுத்துதல், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்தல், மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை குறைத்தல் போன்றவையாகும். அதுபோல் நேர்மறை எண்ணங்களை வளர்க்க செய்வது, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், அதிக மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமான சூழலை பேணுதல் போன்றவாறு நமது உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன.

    பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல், கடன்களை அடைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள், கடன்கள் பெறாமல் வாழ்க்கையை நடத்துவது போன்றவையும், செய்யும் பணி சார்ந்த உறுதி மொழிகள் எடுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் தான் செய்கின்ற பணியில் முன்னேற்றம் பெறுவது, பதவி உயர்வது, அதிக சம்பளம் பெறுவது போன்ற லட்சியங்களை அடைய ஏற்ற உறுதிமொழிகளை ஆண்டின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.

    தொழில் செய்வோர் தங்கள் தொழிலை இந்தாண்டு கூடுதல் லாபத்துடன் செய்ய முயற்சிப்பது, தொழிலை விரிவு படுத்துவது, புதிய கூடுதல் தொழில்களை உருவாக்குவது, போன்ற புதிய உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு உறுதிமொழிகள் என்பவை நம் வாழ்வை வளப்படுத்துவது, மேம்படுத்துவதுடன் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு உந்துதலாகவும் அமைகின்றன.

    பிரபலமான புத்தாண்டு தீர்மானங்கள்

    தினமும் அதிகாலையில் எழுந்திடுவேன், நேர மேலாண்மையை கடைபிடிப்பேன், புத்தாண்டில் என் உடல் எடையை குறைத்து கொள்வேன். ஆக்கமுடன் படிக்க முயல்வேன், என் அலுவலகம் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பேன். தினசரி நடைபயிற்சி மேற்கொள்வேன், இந்தாண்டில் புதிய வீடு வாங்குவேன், குடும்பத்தினர் உடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வேன், புதிய கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்வது, சமூக நலப்பணிகளை மேற்கொள்வது என்பது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் இருபாலரிடையே சம உரிமை நிலைநாட்டப்படுவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் ஆசியாவில் பாலின சமத்துவத்தை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் அமைந்திருக் கிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண் - பெண் இடையேயான பாலின இடைவெளி 79 சத வீதம் வரை களையப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் கல்வியில் சாதனை படைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் தெற்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் வங்காள தேசம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண்-பெண் இடையேயான பாலின இடைவெளி 72 சதவீதம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாடு பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் உலக அளவில் 108-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற ஆசிய நாடுகளான இலங்கை (100-வது இடம்), நேபாளம் (105), மாலத்தீவு (113), பூட்டான் (122) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 149 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பாகிஸ்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் (148) இருக்கிறது.

    உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் முறையே அடுத் தடுத்த இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து 15-வது இடத்திலும், கனடா 16-வது இடத்திலும், அமெரிக்கா 51-வது இடத்திலும், சீனா 103-வது இடத்திலும், ஜப்பான் 110-வது இடத்திலும், கொரியா 115-வது இடத்திலும், துருக்கி 130-வது இடத்திலும், சவுதி அரேபியா 141-வது இடத்திலும் இருக்கின்றன. ஏமன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    பல நாடுகளில் பெண்கள் தொழில்துறையில் ஆண்களுக்கு இணையாக உயர் பதவியில் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். ஆண் - பெண் தொழிலாளர்களிடையே ஊதியத்தில் இருந்துவந்த முரண்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளக்குருணை - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    தேங்காய்த்துருவல் - 3/4 கப்
    பொடித்த வெல்லம் - 3/4 கப்
    நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்
    நெய் - சிறிது



    செய்முறை :

    முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

    அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

    கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

    சுவையான சோள ரவை புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×