என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
மருத்துவத்தில் பல நோய்களைப் பற்றியும், அவைகளை வருமுன் காப்பது பற்றியும் நாம் நன்கு கேட்டு, படித்து அறிந்து வருகின்றோம். அவற்றினை கடை பிடித்தும் வருகின்றோம். ஆனால் சில பொதுவான அதிகமாக காணப்படும் பாதிப்புகள் நம் கண்களிலும் கவனத்திலும் தவற விட்டு விடுகின்றோம். அதில் ஒன்றுதான் நம் கல்லீரல் பாதுகாப்பு.
மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
சில உடல் சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.
* அடிக்கடி உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றதா?
சில சமயம் முதுகுவலி, வயிற்று வலி, கீழ் காலில் சவுகர்யமின்மை ஏற்படுகின்றதா?
* வயிற்று பிரட்டல், பசியின்மை ஏற்படுகின்றதா?
* உடல் நிறமோ, கண்ணின் வெள்ளைப் பகுதியோ மஞ்சளாக இருக்கின்றதா?
* அதிக எடை இருக்கின்றதா? அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதா?
* கழுத்து, கை உள் மடிப்பு பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் இருக்கின்றதா?
* உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருக்கின்றதா?
* வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றதா?
* தலைவலி, குழப்பம், கவனக்குறைவு ஏற்படுகின்றதா?
* எப்போதும் பசி, அதன் காரணமாக அதிகம் சர்க்கரை, கார்போஹைடிரேட் உணவு உண்ணுதல் போன்ற பாதிப்புகள் உள்ளதா?
* என்னவென்றே தெரியாத உடல்நலமின்மை உள்ளதா?
இவைகளில் அனைத்துமோ, சிலவோ இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. இதற்கு உடனடியாக முறையான கவனம் கொடுக்கவில்லை என்றால் கல்லீரலில் அதிக பாதிப்பு, இருதய பாதிப்பு, பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய் என பல கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
இன்று குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது.
* உடலில் நச்சுக்களை நீக்குகின்றது.
* குளுகோசினை சேமித்து தேவைப்படும் போது சக்தியாக வெளியிடுகிறது.
* ரத்தத்தில் கிருமிகளை நீக்குகின்றது.
* ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றது. இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.
* இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் கொழுப்பு சேர்ந்த கல்லீரலாக மாறும் போது அது வீக்கம் பெறுகின்றது. பெரிதாகின்றது. அதனுடைய வேலைகளை முறையாக செய்ய முடியாமல் போகின்றது.
* அதிக எடை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.
* கல்லீரலில் 10 சதவீதம் சரியாக வேலை செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?
* நோயினை எதிர்ப்பது என்பது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது ஆகும்.
* அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.
* விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
* அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.
* மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.
* உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.
* கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.
* மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
* அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.
* கீரைகள், பச்சை காய்கறிகள் பெரிதும் உதவும்.
* டோஃபு எனப்படும் சோயா பன்னீரினை அளவாய் பயன்படுத்தவும்.
* மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும்.
* ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம்.
* வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக்கொள்ளலாம்.
* கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்கலாம்.
* ஆலிவ் எண்ணெயினை சமையலில் பழக்கிக் கொள்ளுங்கள்.
* பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.
* கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள்.
* பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள். தினமும் 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.
கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள்.
சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள்.
மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.

உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு பலன்களை அள்ளித்தரும் ஜிம் பால் பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.
சைக்ளிங் மெஷின், ட்ரெட்மில்லில் ஓடுவது எனக் கடுமையான பயிற்சிகளால் மட்டுமே உடலை வலுவாக வைத்திருக்க முடியும் என்றில்லை. ஜிம் பால் பயிற்சிகள் மூலமாகவும் உடலை வலுவாக்கலாம். உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு பலன்களை அள்ளித்தரும் ஜிம் பால் பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.
பேக் ஹைப்பர்டென்ஷன் (Back Hypertension)
வயிற்றுப்பகுதி ஜிம் பாலின்மீது இருக்கும்படிக் குப்புறப் படுக்க வேண்டும். காலைச் சற்று அகற்றிய நிலையில் வைப்பதுடன் கைகளைக் கோத்துத் தலையின் பின்புறமாக வைக்க வேண்டும். தலையைக் குனிந்தபடி வயிற்றுப்பகுதியை ஜிம் பாலின்மீது அழுத்தி, மெதுவாக கழுத்து மற்றும் தலைப்பகுதியை உயர்த்த வேண்டும். இதே நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை செய்யலாம்.
பலன்கள்: அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். முதுகு வலியைக் குறைக்கும். உடல் கட்டமைப்பை மேம்படுத்தும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
சைடு க்ரன்ச் (Side Crunch)
முதுகுத்தண்டு ஜிம் பாலின்மீது இருக்கும்படிப் படுத்த நிலையில், தலையைச் சற்று தூக்கியபடி இருக்க வேண்டும். நிலையாக இருக்கக் கால்களை விரித்து வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை மார்புப்பகுதிக்கு நேராக மடித்துக்கொள்ள வேண்டும். இப்போது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சிறிது அழுத்தம் கொடுத்து, உடலை மெதுவாக உயர்த்தி, முடிந்தவரை வலது புறமாகத் திரும்ப வேண்டும். இதே நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் இடது புறமும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை செய்யலாம்.
பலன்கள்: முதுகுத்தண்டு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். தோள்பட்டை, இடுப்பு மற்றும் முதுகுப்பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகளைச் சரிசெய்யும்.

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பசலைக்கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 1 கப்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
ப.மிளகாய் - 1
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெண், உப்பு - தேவையான அளவு

செய்முறை
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும்.
ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும். மரபுரீதியாக மனக்கோளாறு உள்ளதென்றால் அதையும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.
முந்தைய கர்ப்பத்தின்போதும், பிரசவத்துக்குப் பிறகும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விவரத்தையும் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் தற்போதைய பிரசவத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக, ஏற்கெனவே சாப்பிட்டு வரும் மனநல மாத்திரைகளைத் தொடரலாமா அல்லது புதிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து பின்பற்ற வேண்டும்.
கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அடுத்து வளைகாப்பு என்று ஒரு சடங்கு நடத்தப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ‘எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்? நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!’ என்று கர்ப்பிணிக்கு மனதளவில் உறுதியை அதிகப்படுத்தவும், பிரசவ பயத்தைப் போக்கவும் இது உதவுகிறது.
இப்போதைய சூழலில் இம்மாதிரியாக கர்ப்பிணியை மனதளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.
50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஒருசிலர் சரும அழகை மேம்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுப்பார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.
* 50 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்களின் செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படும். மேலும் சரும வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்கள் சீராக செயல்படுவதற்கு வழிவகை செய்யலாம். பெர்ரி வகை பழங்கள், வால்நெட், அவகோடா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும்.
* ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து பெண்கள் சாப்பிட்டு வரலாம். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் ஈரப்பதத்தை சம நிலையில் தக்கவைத்து வயதான தோற்றத்துக்கான அறிகுறிகளை தாமதப் படுத்தும். தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
* உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதும் சரும சுருக்கத்திற்கு வழிவகுக்கும். பேக்கரி வகை பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். 50 வயதை கடந்தவர்கள் இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பங்கம் விளைவிக்கும்.
* உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதும் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தும். வீட்டில் உள் அலங்கார தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனை சுவாசிப்பதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள்தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும். படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.
அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உரிய நேரத்தில் தூங்கச்செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்திக்கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும். எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அவனை வெற்றியாளனாக உயர்த்தும்.

முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும்.
இன்றைய எந்திர யுகத்தில் மனிதனுக்கு உதவி புரியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப, நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. புற்றீசல்போல் பெருகி வரும் நோய்களை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகள் கண்டுபிடித்தபோதிலும் மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.
முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடன் சுறுசுறுப்புடன் இயங்கினார். ஆனால் இன்றோ ஒருவர் 65 வயதை நெருங்கி விட்டாலே, ஏன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை உள்ளது.
எங்கும், எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கைக்கு வந்துவிட்டபோதிலும், எந்த ஒரு நோய்களையும் தீர்க்கும் வகையில் மருத்துவ உலகம் வளர்ந்த போதிலும் மனிதனின் ஆயுட்காலம் ஏன் குறைந்து வருகிறது?
தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மட்டுமே மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயித்து விட முடியாது. அந்த காலத்தில் இதுபோன்ற மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பமுமா இருந்தது? ஆனால் அப்போது நமது முன்னோர்கள் 90 வயது வரை திடகாத்திரத்துடன் வாழ்ந்தார்களே? அது எப்படி?
இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் உள்ளது? என கேட்டால் அது உணவுதான். ஏனெனில் நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவுதான் அவர்களை நீண்ட காலம் வாழ வைத்தது. எல்லாமே ஆரோக்கியம் மிகுந்த, உடலுக்கு சத்துகளை புகுத்தக்கூடிய உணவுகள்.
இப்போது கிராமங்களில் திடகாத்திரமாக வாழும் 90 வயது முதியவர்களிடம், உங்களது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று கேளுங்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுதான் என்ற பதில் கிடைக்கும்.
முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும்.
முதல் நாள் இரவில் சமைத்த சாதத்தை ஒரு பிடி குவளையில் போட்டு வேண்டிய அளவு தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் காலையில் அதனால் உருவான பழைய சோற்றுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் அதனால் கிடைக்கும் சுவையே தனி. ருசித்து பார்த்தவர்கள்தான் இதனை உணர முடியும்.
நீராகாரத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. பழைய சாதத்தை சாப்பிடுவதால், நீராகாரத்தை அருந்துவதால் கைகால், இடுப்பு, மூட்டு வலிகள் போன்ற வாத நோய்கள் நம்மை நெருங்குவதற்கே அஞ்சும்.
மேலும், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம், வாயில் ருசி தெரியாமை, பசி எடுக்காமை, மயக்கம் போன்ற நோய்களிடம் இருந்தும் விலகி இருக்க முடியும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.
இதுமட்டுமின்றி நுங்கு, பதநீர், கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற பாரம்பரிய உணவுகளையும் இன்று நாகரிகம் என்ற பெயரில் பெரும்பாலானோர் தொடுவதே இல்லை.
இத்தகைய நன்மைகள் நிறைந்த மகத்துவம் மிகுந்த இந்த உணவை பெரும்பாலும் நாம் மறந்து விட்டோம் என்பதுதான் வேதனை. தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த இந்த உணவுக்கு வேட்டு வைத்தது வெள்ளையர்கள் என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
இன்று நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட தேநீரை கட்டாயப்படுத்தி நம்மிடையே திணித்தது ஆங்கிலேயர்கள்தான். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக கூறி ஒரு நாளில் கணக்கில்லாமல் தேநீரை அருந்துகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும்போது பசி எடுப்பதே தெரியாமல் போகிறது.
தேநீர் குடிப்பதால் அதிக உடல் எடை, சொத்தை பற்களில் ஏற்படும் தொந்தரவுகள் என சில தொந்தரவுகள் குறையும் என கூறப்பட்டாலும், வாயுத்தொல்லைகள், பித்த மயக்கம், இதயக்கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், தூக்க கெடுதல் போன்றவை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தேநீரில் பால் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கின்றனர். இதில் எது சரியான முறை என்கிற ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை.
தேநீர் மட்டுமில்லாது இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும் அது எந்தவித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் அருந்தி வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்தவுடன் எளிதில் கிடைக்கும் துரித உணவுகளும், குளிர்பானங்களும் உடலுக்கு எவ்வித நன்மையும் கொண்டு வரப்போவதில்லை. எனவே நமக்கு அதிக செலவு ஏற்படுத்தாமல், உடலுக்கு வலுவூட்டக்கூடிய பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் திரும்புவோம்.
- செந்தமிழ்க்கூத்தன், மரபு வழி சித்த மருத்துவர்.

உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
கடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.
மாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.
பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.
சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.
இந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.
அமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.
இலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

நமக்கு ஏன் மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது, மக்னீசியம் குறைபாட்டினை தவிர்க்க இயற்கை முறைகளை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
மக்னீசியம்: உயர் ரத்த அழுத்தம், சிறு ரத்த கட்டிகள், சதைகளின் சோர்வு இவையெல்லாம் மக்னீசியம் குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம்.
கால்சியம், வைட்டமின் சி, புரதம் இவையெல்லாம் ஆரோக்கிய உடலுக்கு அவசியம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சில பாதிப்புகள் நமக்கு ஏற்படவே செய்கின்றன. அதில் மக்னீசியம் எனும் தாது உப்பினை பற்றி மேலும் பார்ப்போம். மக்னீசியம் 200 வகையான ரசாயன செயல்களுக்கு தேவைப்படுகின்றது. அதில்...
• கால்சியம், வைட்டமின் டி, கே. மற்றும் மக்னீசியம் இவை உடல் ரத்த ஓட்டத்தில் சீராக செல்ல உதவுகின்றது.
• நரம்பு, தசைகள் சீராக இயங்க உதவுகின்றது.
• உடலில் சக்தி உருவாக உதவுகின்றது.
• உடலில் நச்சினை நீக்குகின்றது.
• புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு இவற்றின் ஜீரணத்திற்கு உதவுகின்றது. இப்படி நிறைய கூறலாம். நம் உடலில் மக்னீசியம் குறைபாடு கீழ்கண்ட அறிகுறிகளாககூட வெளிப்படலாம்.
• பசியின்மை
• வயிற்றுப் பிரட்டல்
• வாந்தி
• சோர்வு
• பலமின்மை
• மரத்து போகுதல்
• தசைபிடிப்பு •
வலிப்பு
• இருதய துடிப்பில் மாற்றம்
• உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஆகும்.
நமக்கு ஏன் மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது.
• இன்றைய உணவுகளில் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்து கலப்படம் இருக்கின்றது. இதனால் பூமிதன் தாது உப்புகளை இழக்கின்றது.
• ஸ்டிரெஸ் அதிகம் இருக்கும் பொழுது அவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது. அதே போல் மக்னீசியம் அளவு குறையும் பொழுது ஸ்டிரெஸ் பாதிப்பு ஏற்படுகின்றது.
• சிறுநீரக பாதிப்பு
• ஜீரண கோளாறு
• பாரா தைராய்டு பிரச்சினை
• அதிக ஆன்டிபயாடிக் மற்றும் சர்க்கரை நோய், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்
• அதிக ஆல்கஹால் போன்றவை மக்னீசியம் குறைபாட்டினை ஏற்படுத்தும்.
மக்னீசியம் குறைபாட்டினை தவிர்க்க இயற்கை முறைகள்.
• முந்திரி - ஒரு அவுன்ஸ் அளவு. இது உங்கள் அன்றாட தேவையில் 20 சதவீதத்தினை அளித்துவிடும்.
• பாதாம் - 1 அவுன்ஸ் அளவு நமது அன்றாட மக்னிசியம் தேவையில் 19 சதவீதத்தினை நிறைவு செய்யும்.
• பருப்பு வகைகள்
• பசலை கீரை
• அத்திப்பழம்
• வாழைப்பழம்
• வெண்டைக்காய்
• பூசணி விதை
• சுரைக்காய்
• பிரவுன் அரிசி
போன்றவை இயற்கை வழியில் மக்னீசியம் கிடைக்கும் வழிகள்.மேலும் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
உப்பு - 1/4 டீஸ்பூன்,
கோதுமை மாவு - 150 கிராம்,
நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.
பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

முட்டை: 1 (பெரியது) .

பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது. உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் பாலைத் தவிர மற்ற கால்சியம் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது.
உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் பாலைத் தவிர மற்ற கால்சியம் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உதவும். பாலைத் தவிர வேற எந்த பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
சோயா பால்

கேழ்வரகு
மற்ற தானியங்களை ஒப்பிடும் போது கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. அரிசியில் இருக்கும் கால்சிய அளவை விட 30 மடங்கு அதிகமாகவும், 10 மடங்கு நார்ச்சத்து அதிகமாகவும் கொண்டுள்ளது. மேலும் இதில் நிறைய நுண்ணிய ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இது பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் உணவாக இருந்து வருகிறது. ராகி மாவு, ராகி தோசை, ராகி ரொட்டி போன்ற வகையில் இதை உணவில் சேர்க்கலாம். நீங்கள் எடையை குறைக்க நினைத்தாலும் அதற்கும் இது ஒரு சிறந்த உணவாக அமையும்.
தட்டாண் பயிறு
தட்டாண் பயிற்றில் நிறைய கால்சியம் சத்து உள்ளது. இதில் சூப் செய்தோ, வேக வைத்து சாலட் உடன் சேர்த்தோ சாப்பிடலாம். தட்டாண் பயிறு குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் காணாமல் போகும்.
அத்தி பழம்
அத்தி பழத்தை நீங்கள் உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகவோ சாப்பிடலாம். இதில் நிறைய கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துகள் நமது சீரண சக்திக்கு உதவுகிறது.
ஆரஞ்சு ஜூஸ்
காலையில் கண்டிப்பாக ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் கால்சியம் சேர உதவும். எனவே கால்சியம் உணவுகளும் ஆரஞ்சு ஜூஸூம் அவசியமாகிறது.

உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் அதற்கு பதிலாக நீங்கள் சோயா பால் அருந்தலாம். பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. 100 மில்லி லிட்டர் சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இதில் பாலில் உள்ள அளவிற்கு சமமான அளவாகும்.