என் மலர்
ஆரோக்கியம்
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
முதலில் பெண்கள் மார்பக சுய பரிசோதனையை அடிக்கடி செய்து வர வேண்டும். அப்படி செய்வதாலேயே மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். மாதந்தோறும் மாதவிடாய் நாட்கள் முடிந்த பிறகு பரிசோதனை செய்வது தான் சரியானது. ஒருசிலருக்கு மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு மார்பகங்களில் வலி ஏற்படலாம். அப்போது சுய பரிசோதனை செய்வது தவறு. கண்ணாடி முன்பு நின்று மார்பகங்களை பார்க்க வேண்டும். ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின்னர் புண், அரிப்பு, நிற மாற்றம் உள்ளதா என்று கவனியுங்கள். இடது கையால் வலது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும்.
அதேபோல வலது கையால் இடது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது ஏதாவது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். சில சமயங்களில் சாதாரண கட்டிகள் கூட மார்பகங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிக்கும் போது தினமும் மார்பகங்களை தொட்டு மாற்றம் உள்ளதா என்பது கவனித்து வருவது மிகவும் சிறந்தது. மார்பகங்கள் பற்றி எப்படி மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது என்று தயக்கம் காட்டினால், பின்விளைவுகள் மோசமாக அமையலாம். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தல், குழந்தைக்கு தாய்ப்பால் வழங்காமல் தவிர்த்தல், குழந்தைப்பேறு தள்ளிப்போடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதோடு அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கூட புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
40 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். ஆனால் இப்போது 25 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வயது முதலே ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவரை சந்தித்து மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் உடனே அறிவுரை பெறவேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எதற்காக இப்படி அழுத்தமாக பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறோம் என்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம். நோயின் தீவிரம் அதிகமாகிவிட்டால் குணப்படுத்துவது சிரமமாகிவிடும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் பாதிப்பை வைத்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி வழங்கப்படும். வலி இல்லாமல் மார்பகத்தில் கட்டி இருந்தால், அது புற்றுநோய் கட்டியாகவும் இருக்கலாம். அந்த சூழலில் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டால், சுலபமாக ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்திவிட முடியும்.
அதுவே கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வலி அதிகமாகும் போது சிகிச்சைக்கு வந்தால் அப்போது சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழப்பு ஏற்படலாம். மூன்றாம், நான்காம் கட்ட புற்றுநோய் என்றால் உயிருக்கு ஆபத்து தான். முதல் இரண்டு கட்டங்கள் பிரச்சனை இல்லை. மருத்துவரிடம் சென்று தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆரம்பத்தில் வீட்டில் பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்பிறகு கட்டி இருப்பது போல உணர்ந்தால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்ல வேண்டும்.

தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும்.
பிரச்சினைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு போராட்டங்களை கடந்துதான் வெற்றி என்பது கிடைக்கும். எனவே பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழக்கக்கூடாது. மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைகுலைய செய்து விடக்கூடாது. இதை மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.
நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிட வேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும்போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட வேண்டும். மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதுதொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.
பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப் பழகவேண்டும். கோபம், விரோதம் போன்ற வற்றுக்கு இடம் அளித்து விடக்கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்லமுறையில் விவாதித்து தீர்வு காணவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு.
தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். எப்போது விமர்சனம் எழத்தொடங்குகிறதோ, அபபோது தான் ஒருவருக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும் எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் கூறும் கருத்துகளை காதுகொடுத்து கேட்கவேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளையதலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்தநிலையிலும் மனஉறுதியை இழந்து விடக்கூடாது.
அதுதான் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கவேண்டும். அப்போதுதான் வெற்றியாளராக அல்லது சராசரி மனிதனாக நடமாட முடியும். அந்த அளவிற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அழிவது இல்லை. பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அழிந்துவிடுகிறான் என்று கூறுவார்கள். எனவே எதையும் தைரியத்தோடும், நேர்மையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த காலக்கட்டத்திலும் மீண்டுவர முடியும். இதை ஒவ்வொரு மாணவ- மாணவியரும் உணர வேண்டும்.

பல காரணங்களால் உங்களின் புருவங்களின் அடர்த்தி குறைகிறது. இதனை சரி செய்ய இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் புருவங்களின் அடர்த்தியை சரிசெய்யலாம்.
புருவங்கள் பெரும்பாலும் முகத்திற்கு அழகு தருகிறது. பல காரணங்களால் உங்களின் புருவங்களின் அடர்த்தி குறைகிறது. இதனை சரி செய்ய இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் புருவங்களின் அடர்த்தியை சரிசெய்யலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது 50 மில்லி ஆமணக்கு எண்ணெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில் ஆலிவ் எண்ணெய். இப்போது இந்த மூன்று எண்ணெயையும் கலந்து ஒரு கண்ணாடி பாட்டில் சேமிக்கவும். ஒவ்வொரு இரவும் இந்த எண்ணெய் கலவையின் சில துளிகளால் உங்கள் புருவங்களை மசாஜ் செய்யுங்கள். சில நாட்களுக்குப் பிறகு முடிவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆமணக்கு எண்ணெயில் புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடி இழைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் புருவங்களைச் சுற்றியுள்ள சருமத்தை சீராக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே ஆகியவற்றுடன் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மயிர்க்கால்களை சரிசெய்யவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. எனவே இந்த எண்ணெயை முயற்சி செய்து பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியமானது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது
கொரோனா வைரஸை வீட்டு வைத்தியம் கட்டுப்படுத்துமா?
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி இருக்கும் நிலையில் சுய பாதுகாப்பை பின்பற்றுவதில் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்டுகிறார்கள். பாரம்பரிய உணவு பழக்கம், பாட்டி வைத்தியம் மீதான மோகமும் அதிகரித்திருக்கிறது. சமூகவலைத்தளங்களிலும் பாரம்பரிய உணவு பழக்கம் பற்றிய தகவல்கள் பரவலாகி இருக்கின்றன. அவற்றுள் ஒருசில தகவல்கள் கொரோனா வைரஸை முழுவதுமாக கட்டுப்படுத்திவிடும் என்ற ரீதியிலும் பரப்பப்படுகின்றன. ஆனால் அவற்றை மருத்துவ ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் கட்டுக்கதைகளாக இருக்கவும் செய்கின்றன.
அந்த வகையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில், ‘‘தினமும் 30 மி.மி. துத்தநாகம் எடுத்துக்கொள்ளுங்கள். உணவோடு 60 கிராம் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுங்கள். வைரஸ் நுரையீரலுக்குள் நுழைவதற்கு முன்பு 4 நாட்கள் நாசிப்பாதையில் தங்கி இருக்கும். வெங்காயத்தில் இருக்கும் சல்பூரிக் அமிலம் நாசிப்பாதையில் இருக்கும் வைரஸை அழிக்க உதவும். வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே வைரஸை தடுத்து தற்காத்துக்கொள்ளலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு சூடான நீரில் ஆவி பிடியுங்கள். மூக்கு வழியாக 10 முறை உள்ளிழுத்து வாய் வழியாக சுவாசியுங்கள். பின்பு வாய் வழியாக நீராவியை உள் இழுத்து மூக்கு வழியாக சுவாசியுங்கள். பகல் வேளையில் வைரஸ் உள் நுழைந்திருந்தாலும் அது நீராவியால் கொல்லப்பட்டுவிடும். அதனால் ஒருநாளைக்கு மூன்று முறை இவ்வாறு செய்து வாருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அறிமுகமானவர்களுக்கு பகிருங்கள்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் விகாஸ் மவுரியா விளக்கம் அளித்துள்ளார். ‘‘பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே துத்தநாகம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மற்றபடி அதனை உட்கொள்ள வேண்டியதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வதே போதுமானது.
வெங்காயம் சாப்பிடுவது கொரோனா வைரஸை அழித்துவிடும் என்பதில் உண்மை இல்லை. அது முழுமையான கட்டுக்கதை. அதுபோல் நீராவியை மூக்கு வழியாக உள்ளிழுப்பதன் மூலம் வைரஸை கொல்ல முடியாது. மூக்கடைப்பு, சளி போன்ற அறிகுறி கொண்டவர்கள் நீராவியை நுகர்வது இதமளிக்கும். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியமானது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது’’ என்கிறார்.

நமக்கு ஏற்படும் ஒருசில நோய்கள் பாலினத்தை பொறுத்து தீவிரமாகவும், மிதமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத்தலைவலி
தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில் உணவு உண்ணாத காரணத்தாலும் இந்த தலைவலி உண்டாகும்.
உணவு ஒவ்வாமையால் கூட ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
டென்ஷன் தலைவலி
டென்ஷன் தலைவலி மனஅழுத்தம், சோர்வு காரணமாக ஏற்படுகிறது. 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த தலைவலி அதிகம் வருகிறது.
அதிக வேலை, மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. தொடர்ந்து திரையை பார்ப்பது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சோர்வு, மது அருந்துவது, சைனஸ், சளித்தொல்லை போதுமான அளவு தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுகிறது.
டென்ஷன் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவு ஓய்வுதான் அருமருந்து. டென்ஷன் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
வலிப்பு நோய்
தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது வலிப்பு நோய். இது மூளையில் ஏற்படும் அளவுக்கு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் தாக்கமாகும். தற்போது வலிப்பு நோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்வர்கள், மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்த பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு நோயின் காரணத்தை அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
பக்கவாதம்
மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. முன் அறிகுறிகள் எதுமின்றி திடீரென ஏற்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என குறிப்பிடுகிறார்கள். ரத்த ஓட்டத்தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக்காரணம் கொழுப்பு படிவுகள் தான். ரத்தச் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக்காரணமாகும்.
மூளைக்கட்டி
மூளைக்கட்டி எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். இது ஏற்படுவதற்கான சரியான காரணத்தை மருத்துவர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. தலை வலி, வலிப்பு, பார்வை குறைபாடு, வாந்தி, நடத்தை மற்றும் ஆளுமையில் ஏற்படும் திடீர் வித்தியாசங்கள், நடப்பதிலும், உடலை சமப்படுத்துவதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பேச்சில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மூளைக்கட்டியின் அறிகுறிகளாகும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மற்றும் சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
ஆரோக்கியம் நிறைந்த மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பதை இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.
அனைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலைநிறுத்தி, பொருளாதார ரீதியில் நிலையாக தங்களை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பதை இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.
* நீங்கள் சவாலுக்கு தயாரா?
உங்களுக்குத் தரப்பட்டுள்ள வேலையில் 60-75 சதவிகிதம் முழுமையான ஈடுபாடுடன் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், உங்கள் வேலையில் இன்னும் சவாலை அதிகரிக்க நீங்கள் தயாரா என்பது தான் முதல் கேள்வி. அதுமட்டுமின்றி இந்தச் சவாலில் உங்களை சிரமப்படுத்தி கொள்ளாமல் எப்படி எதிர் கொண்டு இலக்கை அதிகரிக்கிறீர்கள் என்பது தான் மிகப்பெரிய சவால். உங்களால் இதனைச் செய்ய முடியும் என்றால் சரி, இல்லை என்றால் வேறு வேலை உங்களைத் தேடுகிறது என்று அர்த்தம்.
* நீங்கள் முழுமையாக உணர்கிறீர்களா?
உங்கள் வேலை உங்களை உற்சாகப்படுத்துகிறதா? நீங்களாகவே உங்கள் வேலையால் புத்துணர்ச்சியடைகிறீர்களா? இதற்கெல்லாம் ‘இல்லை’ என்ற பதில் இருந்தால், ‘ஆம்’ என்ற பதில் தரும் வேலையைத் தேடலாம். ‘ஆம்’ என்றால் உங்களை வெற்றி மட்டுமே நெருங்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடருங்கள்.
* உங்கள் சூழல் எப்படி இருக்கிறது?
நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களது சூழல் சரியான ஒத்துழைப்பை தருகிறதா? நீங்கள் செய்யும் வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, நீங்கள் பட்டியலில் முந்துகிறீர்களா? நீங்கள் செய்யும் வேலைகளால் உங்கள் பணி பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் நீங்கள் தகுதியாக இருக்கிறீர்கள் என்று உணருங்கள்.
இந்த மூன்று கேள்விகளின் பதிலுக்கும் உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் உங்கள் வேலையில் நீங்கள் பொருந்தி இருக்கிறீர்கள், பொருத்தமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் உங்கள் வேலை இதுவல்ல, உங்களை ‘ஆம்’ என்று கூற வைக்கும் வேலை உங்களுக்காக எங்கேயோ காத்துக்கொண்டிருக்கிறது.

சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’
என்ற பாரதியின் உணர்வை இந்திய திருநாட்டில் வளர்கின்ற ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும். இந்த நாட்டில் மதத்தால், மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எண்ணம், சொல், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் எப்போது ஒன்றுபட்ட இந்தியாவை காணமுடியும். இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள். எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.
உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டு வருகின்றது. உலக நாடுகள் தமக்குள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இமயம் முதல் குமரி வரையுள்ள அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என்ற உணர்வு மாணவ பருவத்திலே ஏற்படவேண்டும்.
நம்நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வியத்தகு முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனை காணும் அந்நிய சக்திகள் நம் ஒற்றுமையை உருக்குலைக்க சூழ்ச்சி வலை விரிக்கின்றன. நம் இளைஞர்களில் சிலர் அதில் சிக்கிக்கொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சிலர் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் மக்களிடையே நச்சு விதைகளை தூவி நல்ல உள்ளங்களை கெடுத்து வருகின்றனர். மாணவர்கள் அவற்றில் அகப்படாமல் அவர்களது தீய எண்ணங்களை அழித்து ஒற்றுமை காக்க முன்வரவேண்டும்.
பொதுவாக அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெருமையுடையது. இதனால் மொழிகளுக்குள் வேறுபாடு காட்டாது அனைத்து மொழிகளையும் சமமாக மதித்து போற்றுவதில் மாணவர் கடமை மகத்தானது. தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்று பயனடையவேண்டும்.
‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று- இதில்
பற்பல சண்டைகள் வேண்டா’
என்ற பாரதியின் உணர்வை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து செயல்படவேண்டும். மதங்களின் பெயரால் மாறுபட்டுள்ள மனித உள்ளங்களை திருத்த முயலவேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், எவ்வுயிரும், தம்முயிர்போல் எண்ண வேண்டும் என்ற முன்னோர்களின் கருத்தை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். பிறப்பினால் மனித இனத்தினிடையே எவ்வித வேறுபாடு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், தேசிய நல இயக்கங்கள் போன்ற இயக்கங்களில் ஆர்வத்துடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். மேலும் இயக்கங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு ஒருமைப் பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டலாம். ஆண்டுக்கொரு முறையாவது பிற மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவதன் மூலமும், தேசிய விழாக்களை நாட்டுப்பற்றுடன் நடத்துவதன் மூலமும், பிற மாநில மக்களின் கலை, நாகரிகம், பண்பாட்டை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர வழி ஏற்படும்.

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது.
ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்து பாதுகாக்க வேண்டும். கண் தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண் தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண் தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கண் தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும் வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின் விசிறியை அணைத்துவிட வேண்டும். கண் தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண் தானம் செய்யலாம். புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சு கிருமி தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியாது.
இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களை கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்கு பார்வை கொடுக்க முடியும்.
இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது. நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள்.
தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?
உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ யாராவது இறக்க நேரிட்டால், கண் தானம் செய்வதன் அவசியம் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மாண்டு போனவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?

அசையா சொத்துக்களை வாங்கும் முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம் என்று சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அவை...
அசையா சொத்துக்களை வாங்கும் முன்னர் கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சம்பந்தப்பட்ட சொத்து குறித்து பல்வேறு உறுதி மொழிகள் அளிக்க வேண்டும். அவற்றுடன் கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றியும் கவனத்தில் கொள்வது அவசியம் என்று சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அவை...
1. தானம், அடமானம்,
2. முன் கிரயம், முன் அக்ரிமெண்டு,
3. உயில், செட்டில்மெண்டு,
4. கோர்ட் சம்பந்தம் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி, சிவில், கிரிமினல் வழக்குகள்,
5. ரெவின்யூ அட்டாச்மெண்டு,
6. வாரிசு பின் தொடர்ச்சி, சொத்து சம்பந்தமான வாரிசு உரிமை, மைனர் சொத்து,
7. சொத்து ஜாமீன், வங்கி கடன்கள் மற்றும். தனியார் கடன்கள்,
8. சர்க்கார் நில ஆர்ஜிதம், நில கட்டுப்பாடு,
9. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ், நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
10. பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இடம் பெறவில்லை.

சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நமது சருமம் உடல் இயக்க செயல்பாடுகள் சீராக நடைபெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் மாசு, புற ஊதா கதிர்வீச்சு போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதுதான் சருமத்தின் முதன்மை பணியாக இருக்கிறது.
நோய் கிருமிகளை உருவாக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும் சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. அழுக்கு, எண்ணெய் பசை தன்மை போன்றவற்றை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. சருமத்தின் வெளிப்புற அடுக்கு எண்ணெய் பொருட்களை எளிதில் செல்களுக்கு இடையே ஊடுருவச்செய்யும் தன்மை கொண்டது.
ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கூடுமானவரை இயற்கையான மூலிகை அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
சருமத்தின் வெளிப்பகுதி நீர் புகா தன்மையை கொண்டிருந்தாலும் சரும செல்களுக்கு ஈரப்பதம் தேவையானதாக இருக்கிறது. ஈரப்பதம் இல்லாவி வருவது நல்லது.
சேதமடைந்த செல்களை சரி செய்வது, இறந்த செல்களை அப்புறப்படுத்துவது, புதிய செல்களை உற்பத்தி செய்வது, சூரிய ஒளியை வைட்டமின் டி ஆக மாற்றுவது போன்ற பணிகளையும் செய்கிறது. சருமம் உடலுக்கு கவசமாகவும் விளங்குகிறது. ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அவற்றுக்கு பாதிப்பு தருவதாக அமைந்து விடக்கூடாது.

மழை காலத்தில் மற்றவர்களை விட நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு சிரமப்படுவார்கள். சாப்பிடும் உணவுகள் கடினமாக இருக்கும்.
பருவ நிலை மாறும்போது அதற்கேற்ப உணவு பழக்கத்திலும் மாற்றத்தை பின்பற்ற வேண்டும். மழைக்காலம், மற்ற பருவ காலங்களை விட எளிதில் நோய் பாதிப்புக்கு வித்திடக்கூடியது. அந்த சமயத்தில் பழங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவற்றில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.
மழை காலத்தில் மற்றவர்களை விட நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிடுவதற்கு சிரமப்படுவார்கள். சாப்பிடும் உணவுகள் கடினமாக இருக்கும். அதனால் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். மேலும் உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் பழங்களை சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகளை பாதிக்காது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் சில பழங்களும் உள்ளன. அவை குறித்து அறிந்து கொள்வோம். வாருங்கள்...
நாவல் பழம்:
இது நீரிழிவு நோயாளிகளுக்கு அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கக்கூடியது. ஜர்னல் ஆப் புட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாவல் பழத்தில் ஆண்டி டயோபெட்டிக் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டு பண்புகள் உள்ளன. இவை ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையை மெதுவாக்குவதற்கு உதவியாக இருக்கும். மேலும் ரத்தத்தில் திடீரென சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
ஆப்பிள்:
அதிக சத்துக்கள் கொண்ட இந்த பழத்தை எந்த பருவத்திலும் சாப்பிடலாம். இது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் குறைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல தேர்வாகவும் அமைகிறது. இதன் கிளைசெமிக் குறியீடு 39 . அதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆப்பிளை ருசித்து சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் நீரிழிவு உணவின் ஒரு பகுதியாக இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
சாத்துக்குடி:
நீரிழிவு நோயாளிகள் மழைக்காலங்களில் சாத்துக்குடி சாப்பிடலாம். அவை நார்ச்சத்து நிறைந்தவை. அவற்றின் கிளைசெமிக் குறியீடு 40 முதல் 50-க்குள் உள்ளடங்கி இருக்கும். மேலும் இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் இயற்கையான சர்க்கரை, மழைக்காலங்களில் ஆரோக்கியமாக இருப்பதற்கு துணைபுரியும். அதேவேளையில் சாத்துக் குடியை ஜூஸ் தயாரித்து பருகுவதை தவிர்க்க வேண்டும். அதில் செயற்கை சர்க்கரை சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்காது.
இந்த பழம் குறைந்த கலோரிகளை கொண்டது. இதன் கிளை செமிக் குறியீடு சுமார் 42. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைந்திருக்கிறது
செர்ரி:
பெரும்பாலான பழங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். ஆனால் புளிப்பு தன்மை கொண்ட செர்ரி பழங்கள் குறைந்த அளவே (20) கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செர்ரி பழம் உதவும். இதில் கலோரிகளும் குறைவாகவே உள்ளது. நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, பாலிபினால்கள், செரோடோனின் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. அவை நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்த உதவுகின்றன.
பிளம்ஸ்:
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழத்தை மழைக்காலங்களில் எந்த கவலையும் இல்லாமல் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. இதன் கிளைசெமிக் குறியீட்டு சுமார் 40 என்ற அளவில்தான் இருக்கும். மேலும் பிளம்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தக்கூடியது.
பேரிக்காய்:
நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றொரு சிறந்த பருவமழை கால பழம், பேரிக்காய். நீரிழிவு நோய்க்கு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மிதமான கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை சாப்பிடவே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பேரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவக்கூடியது. இதன் கிளை செமிக் குறியீடு 40-க்கும் கீழாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக விளங்குகிறது.