என் மலர்
ஆரோக்கியம்
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
தாய்மை என்பது ஒரு குழந்தையை கருவில் சுமப்பது மட்டுமல்ல. இந்த கால கட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட சொல்லி அறிவுறுத்துவார்கள். அவர்கள் சொல்வது வெறுமனே மூட நம்பிக்கை என எடுத்து கொள்ளாமல், அதன் பின் இருக்கும் காரண அறிவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பேறு காலத்தில் நாம் செய்கிற செயல்கள் அனைத்தும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
உங்கள் உணவு முறை, உணர்வு, அல்லது மற்றவர்களுடன் என்ன உரையாடுகிறீர்கள், உங்கள் கருவுடனான உங்கள் உறவு என அனைத்தும் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
உங்களுக்கும் குழந்தைக்குமான இடையே இருக்கும் கோடு மிக மென்மையானது. அந்த குழந்தைக்கு வெளிப்புறத்தில் இருந்து கிடைக்க கூடியது தாயின் தொடர்ச்சியான ஸ்பரிசம். உங்கள் தொடுகையை குழந்தையால் மிக விரைவாக உணர முடியும். இந்த தொடுகை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக வைத்திருக்க உதவும். எனவே அவ்வப்போது கருவில் இருக்கும் குழந்தையை, வயிற்றின் மேலிருந்து கீழாக மிக மென்மையாக வருடிக்கொடுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பாடலை மட்டும் கேட்கும் மனநிலையை உடைத்து நல்ல இசையை கேட்க பழகி கொள்ளுங்கள். நல்ல இசை, மனதை இதமாக வைத்திருக்கும் இசை, உங்கள் அழுத்தத்தை உடைத்து உங்களை புத்துணர்வாக வைத்திருக்கும் இசை குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும். நல்லவற்றை பார்ப்பது, படிப்பது மற்றும் கேட்பது போன்றவை குழந்தைக்கான ஞானமாக அமையும். நாம் முக்கியமாக நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு விட்டமின் டி மிக அதிகளவில் தேவைப்படும். எனவெ மென்மையான சூரியஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்தினால் அது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.எந்தெந்த காரணங்களால் தனக்கு ஆஸ்துமா தூண்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு நோயாளி அவற்றைத் தவிர்க்க முடியும்.
நுரையீரலுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம், இழுப்பு, மூச்சுத்தடை, மார்பு இறுக்கம், இருமல்
போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும். மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது. ஒருவருக்கு இந்த நோய்
வந்தால், மூச்சு செல்லும் பாதையானது வீக்கம் அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் அங்கு பிராணவாயு செல்வது குறைகிறது.
ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.
வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் முடி, தூசி, துகள்கள், வலி நிவாரண மாத்திரைகள், குளிர்ந்த காற்று, உணவு, உடற்பயிற்சி,
பூ மகரந்தம், சளி, மன அழுத்தம், புகையிலையை பயன்படுத்துதல் போன்றவை இதற்கு காரணங்கள். ஒரு சிலருக்கு பரம்பரையாகவே ஒவ்வாமை இருக்கும்.
ஒவ்வாமையும், தோல் நோயும் சேர்ந்தும் வரலாம். சிலருக்கு நோயின் வேகம் அதிகரிக்கும். சிறிது காலம் நோய் இல்லாமல் இருக்கும். இருமல் வரும்போது
சளி வரலாம், வராமலும் இருக்கலாம். மூச்சுத்தடை வரலாம். உடற்பயிற்சி செய்தால், மூச்சுத்தடை அதிகரிக்கலாம். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு முகம், உதடுகள்
நீலமானாலோ, உணர்ச்சித்திறன் குறைந்தாலோ, மயக்கம் வந்தாலோ, நாடித் துடிப்பு மிக அதிகமாக இருந்தாலோ, மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாலோ, உடல்
அதிகமாக வியர்த்தாலோ, மூச்சு மாறுபட்டாலோ, மூச்சு இடையில் நின்றாலோ உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.
எந்தெந்த காரணங்களால் தனக்கு ஆஸ்துமா தூண்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு நோயாளி அவற்றைத் தவிர்க்க முடியும். பீக் புளோ மீட்டர் எனும்
கருவி உள்ளது. இதன் மூலம் நாம் எவ்வளவு மூச்சுக் காற்றை வெளியிட முடியும் என்பது தெரியும். இதில் 50 முதல் 80 வரை நம்மால் செய்ய முடிந்தால் ஒரு
மத்தியமான நிலையில் ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம். 50-க்கு கீழ் இருந்தால் அதிகம் என்று அர்த்தம். இது ஒரு நாள்பட்ட நோய்.
உடற்பயிற்சி செய்ய இயலாமை, இரவில் தூங்க முடியாமல் போவது, நுரையீரல் பாதிக்கப்படுவது, தினமும் இருமிக்கொண்டே இருப்பது, நெஞ்சு வலி
போன்றவை இருக்கும்.
மனச்சோகம், மனக்குழப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பது இன்றியமையாததாக கருதப்படுகிறது. தூதுவளை கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி
ஆகியவற்றை சேர்த்து கசாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும் என சித்த
மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது என்றால், 3 மணியில் இருந்து 4½ மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும்.
மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது. விபத்து, காயம், மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்’ என்கிற பக்கவாதம்.
உலகில் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். உலகெங்கும் ஓராண்டில் 1½ கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 60 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். 50 லட்சம் பேர் உடல் உறுப்பு செயலிழப்புடன் வாழ்கிறார்கள். இந்தியாவில் லட்சம் பேரில் 200 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நம் நாட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளில் 2 சதவீதம் பேர் பக்கவாத நோயாளிகளே. மூளை நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்படுவர்களில் 20 சதவீதம் பேர் பக்கவாத நோய் காரணமாக சேர்க்கப்படுகிறார்கள்.
பக்கவாதம் பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பெருகிவரும் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, இளைஞர்களும் தற்போது பாதிக்கப்படுகிறார்கள். ரத்தஅழுத்தம், நீரிழிவு நோயாளிகள், புகைப்பழக்கம், புகையிலை பயன்படுத்துபவர்கள், அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு பக்கவாதம் ஏற்படலாம். உடலில் ஒரு பகுதி திடீரென்று செயல் இழப்பது, கை, கால், முகம் செயலிழந்துபோவது, பேச முடியாமல் போவது, திடீர் குழப்பநிலை ஏற்படுவது போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள்.
ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது என்றால், 3 மணியில் இருந்து 4½ மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். அப்படிச்செய்தால் பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் இயக்க பாதிப்பை தடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் பக்கவாதத்தை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் சிறப்பான வசதிகள் உள்ளன.
அதிக ரத்தஅழுத்தமே மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவுக்கு காரணம். எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புகை, புகையிலை பழக்கம் உள்ளவர்கள், அந்தப்பழக்கங்களை கைவிட வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவர வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு, உப்பை குறைக்க வேண்டும். கோபம், மனஅழுத்தம் கூடாது. பல்லில் கறை, ஈறுகளில் சீழ்பிடிப்பது, வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் வரலாம். எனவே, பல் சுத்தம் மிக முக்கியம்.

இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
ஒரு பெண் என்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்றுதான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. ஆனால் மகாத்மா கூறிய சுதந்திரம் மலருமா? என்ற கேள்விக்கணைகள் நம் மார்பை துளைத்தெடுக்கிறது. இந்த கேள்விக்கு பதில் உரைக்கும் வகையிலே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால், ஆட்டோ, கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.
பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ, பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.
யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூ வாக இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாறவேண்டிய சந்தர்ப்பத்தில் புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.
கயவர்களின் கழுகுப்பார்வையை மாற்றிட முடியாது. ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம்தான் நமது குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும்.
-கவிப்பிரியா, திருவிடைமருதூர்

பி.சி.ஓ.டி. பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.
சினைப்பை நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையின் இருபுறம் உள்ள சினைப்பையில் நிறைய கருமுட்டைகள் இருக்கும். இந்த சினைப்பையில் கருமுட்டைகள் மாதந்தோறும் முதிர்ச்சி அடையும். இந்த சினைப்பை கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் போகும் பொழுது சின்ன சின்ன நீர்க்கட்டிகள் உருவாகி பின்பு நாளடைவில் பெரிய நீர்க்கட்டிகளாக வளர்ச்சியடைகின்றன.
சினைப்பை நீர்க்கட்டி
இதனால் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு வராமல் போவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நிலையில் உள்ள சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை ஆங்கில மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ். அல்லது பி.சி.ஓ.டி. என்று அழைக்கிறார்கள். இந்த பி.சி.ஓ.எஸ். நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்பவர்கள் 40% மேலும் கிட்டதட்ட 60% பேர் இந்த அறிகுறிகளை உணர்ந்தும் சிகிச்சை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுபடுத்தி விட்டால் சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கலாம்.இன்றைய சூழலில் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இந்த பி.சி.ஓ.எஸ். நோய் ஆட்டுவிக்கிறது.
மாதவிடாய் கோளாறுகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி,
அதிகரித்த மாதவிடாய் ரத்தப்போக்கு அல்லது மிகவும் குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு.
மாதவிடாய் ஏற்படாமல் நின்றுபோதல்.
சிலருக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும் ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அவர்களது சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படாமல் இருக்கும்.முடி அதிகமாக உதிர்தல் அல்லது முகம், மார்பு, முதுகு, வயிறு போன்ற தேவையற்ற இடங்களில் பெண்களுக்கு முடிவளர்ச்சி காணல், சிலருக்கு முடியில்லாமல் வழுக்கை உண்டாகும்.
உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் எடை மிகவும் அதிகரித்து காணும், முகப்பருக்கள் உண்டாதல். கருச்சிதைவு உண்டாதல் - உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது.
கழுத்து, மார்பு, தொடை, அக்குள் பகுதியில் கருமை நிறப்படைகள் உண்டாதல். தலைவலி, ஒற்றைத்தலைவலி உண்டாதல். உடல் பருமன் காரணமாக இரவில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உண்டாகும்.
60 சதவீத பெண்கள் பாதிப்பு
இன்றைய சூழ்நிலையில் பல பெண்களின் முக்கியமான மன அழுத்தத்திற்கு காரணம் சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவு ஆகும். இந்த சினைப்பை நீர்க்கட்டி முக்கியமாக இளம் வயதிலேயே (9-12 வயது) பூப்படையும் பெண்களுக்கு உண்டாகிறது. சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவினால் பெரும்பான்மையான பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைகளினால் அவதியுறுகின்றனர்.
60% பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இயற்கை முறையிலேயே சித்த மருத்துவம் மேற்கொண்டு நம் உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ளலாம். இதை கண்டறியவில்லையென்றால் பின்பு முற்றிய நிலையில் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் ஹார்மோன் அதிகரித்து சர்க்கரை நோய் உண்டாகும். மேலும் இதயகோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.
காரணங்கள்
இன்றைய சூழ்நிலையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. வெளி உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதாலும், காரமான உணவுகளை உண்பதாலும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் உருவாகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
செய்யக்கூடாதவை
அதிகளவு கார்போஹைட்ரேட் சத்து உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். சர்க்கரை சார்ந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
செய்யவேண்டியவை
பெண்கள் உணவில் பப்பாளிபழம், அன்னாச்சிபழம், மாதுளம்பழம் போன்ற பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
விட்டமின் டி மற்றும் ஒமேகா - 3 பேட்டி ஆசிட் சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களான கேரட், மணத்தக்காளிக்கீரை, மீன், முட்டை, பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நார்ச்சத்து உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவது நல்லது.
தினமும் ஆரோக்கியமாக உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
உடல் எடையை பெண்கள் இயல்பான எடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாதம் இருமுறை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
பெண்களின் ஆரோக்கியம் வருங்கால சந்ததினருக்கு மிகவும் முக்கியம். மேற்கண்ட எளிய மருத்துவத்தில் ஏதாவது 2 குறிப்புகளை தவறாமல் கடைப்பிடித்தாலே சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி, குழந்தையின்மை பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாகும்.
க.சக்தி சுப்பிரமணியன்
(சித்த மருத்துவர்)
செல்: 9042411002,
9042215986

கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
கேரட் துருவல் - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
நறுக்கிய இஞ்சி - சிறிது.
செய்முறை
கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
சத்தான கேரட் துவையல் ரெடி.

முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.
நமது உடல் சரியாக இயங்குவதற்கு தைராய்டு ஹார்மோன் சீராக சுரந்துகொண்டிருக்கவேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை ஏற்பட்டால் அது உடலில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகி விடும். அதோடு பெண்களுக்கு பல்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் உருவாக்கும். உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைவதை ஹைப்போதைராடிஸம் என்றும், அதிகரிப்பதை ஹைப்பர்தைராடிஸம் என்றும் அழைக்கிறோம்.
ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமம் விளறிய நிலையில் காட்சியளிக்கும். சுருக்கங்களும் அதிகம் தென்படும். இது ‘மிக்ஸெடிமா’ என்று அழைக்கப்படுகிறது.
சருமத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். அதை தொடர்ந்து சருமம் குளிர்ச்சித்தன்மையை அடையும்.
கை, கால் சருமம் மிருதுத்தன்மையை இழந்து கெட்டியாகி, வறண்டு காணப்படும். இந்த பாதிப்பை ‘கெராட்டோடெர்மா’ என்று அழைப்பார்கள்.
கை, கால்களின் உள்பகுதி மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த பாதிப்பிற்கு ‘கரோட்டெநிமீயா’ என்று பெயர்.
முடி வளர்ச்சி குறைவதோடு, கூந்தலும் பலமிழந்து காணப்படும். புருவத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, புருவம் அடர்த்தியின்றி சிறிதாகிவிடும்.
நகங்கள் வளர்ச்சி குறைவதோடு பலமிழந்தும் காணப்படும். தைராய்டு ஹார்மோனின் அளவு வெகுவாக குறைந்து போகும்போது உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கும் நாளாகும். உடல் உற்பத்தி செய்யும் வியர்வையின் அளவும் குறைந்துகொண்டிருக்கும். சருமம் பொலிவிழந்து வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ஹைப்பர்தைராய்டிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்:
சருமத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் சரும சீதோஷ்ண நிலை சூடாக காணப்படும். முகம், கை கால்களின் உள்பகுதி சிவந்து கெட்டியாக தோன்றும்.
கூந்தல் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தோன்றினாலும், கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகும் நிலையை அடையும்.
நகம் வளைந்து வித்தியாசமான வடிவத்தில் வளரும். நகம் முழுவதும் ஒரே நிறத்தில் தோன்றாமல் முரண்பாடான நிறங்களுடன் காட்சியளிக்கும்.
உடலில் அதிகமாக வியர்வை தோன்றும். குறிப்பாக உள்ளங்கை, பாதத்தின் உள்பகுதிகளில் வியர்வையின் அளவு அதிகமாக இருக்கும்.
சருமத்தில் மொத்தமாகவோ, ஆங்காங்கோ நிறமாற்றம் காணப்படும்.
கணுக்கால் மற்றும் பாதங்களில் இளம் சிவப்பு அல்லது தவிட்டு நிறத்தில் பருக்கள் தோன்றுதல், இளநரை உருவாகுதல், முடியின் நிறம் மங்குதல் போன்றவைகளும் ஹைப்பர்தைராடிஸத்தின் அறிகுறிகளாகும். முறையான சிகிச்சையால் இந்த பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கமாக மாறி எளிதாக திறப்பது அல்லது மூடுவது ஆகியவை சிரமமாக இருக்கும். அதற்கு தகுந்த எண்ணெய் விட்டால் இறுக்கம் தளர்ந்து தாமாக சரியாகிவிடும்.
வெப்ப காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, வீடுகளில் தகுந்த பராமரிப்புகள் செய்யப்படாவிட்டால், மரப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிலும் பூஞ்சை காளான்கள் படர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படும்.
வீட்டின் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்தால், மழைக்காலத்தில் கூரையின் மேற்புறத்தில், தேவைக்கேற்ப பெரிய சைஸ் ‘பிளாஸ்டிக் ஷீட் விரித்து பாதுகாக்கலாம். மேற்கூரை கான்கிரீட் தளமாக இருக்கும் பட்சத்தில் ‘வெதரிங் கோர்ஸ்’ நிலை பற்றி கவனித்து, தண்ணீர் கசிவுகளை தடுக்க வேண்டும். அதன் மூலம் சுவர்களில் ஏற்படும் ஓதங்கள் தவிர்க்கப்படும்.
கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அதன் பராமரிப்புகளை சரியாக செய்யவேண்டும். மழைக்காலங்களில் அவற்றை உலர்ந்த துணி கொண்டு அவ்வப்போது துடைக்கலாம். நாற்காலிகள், டிவி போன்ற பொருட்களை அடிக்கடி துடைப்பதோடு, கார்பெட்டுகளை மழைக்காலத்தில் பயன்படுத்தாமல் சுருட்டி வைப்பதும் சரியான முடிவாக இருக்கும். ‘போம்’ வகை சோபாக்களை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி வைப்பது, சோபாக்கள் மற்றும் கட்டில் கால்களுக்கு சரியான ‘புஷ்கள்’ பொருத்துவது ஆகியவை அவசியம்.
பாத்ரூம் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், அதன் கீழ்ப்புறம் அலுமினிய தகடு பொருத்திவிட்டால் ஈரப்பதம் அவற்றை பாதிக்காது. மேலும், குளியலறையின் வாசற்படி உயரம் குறைவாக இருந்து, வீட்டின் தரை உயரமாக இருந்தால் தண்ணீர் வெளியே வரக்கூடும். அதை தடுக்க சிறிய அளவில் கிரானைட் அல்லது டைல்ஸ் பதித்து, வாசற்படியை உயரமாக்கலாம்.
மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கமாக மாறி எளிதாக திறப்பது அல்லது மூடுவது ஆகியவை சிரமமாக இருக்கும். அதற்கு தகுந்த எண்ணெய் விட்டால் இறுக்கம் தளர்ந்து தாமாக சரியாகிவிடும். அலமாரிகளை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, நன்கு உலர்ந்த பிறகு பொருட்களை அதில் அடுக்கலாம். மழை பெய்யும் சமயத்தில் பால்கனி வழியாக வீட்டுக்குள் சாரல் வராமல் இருக்க கெட்டியான ‘பிளாஸ்டிக் ஷீட்’ ஒன்றை திரைபோல அமைத்துக்கொள்ளலாம்.
தரையடி தண்ணீர் தொட்டிகள் இருக்கும் வீடுகளில் அவற்றின் சுவர்களை உயரப்படுத்த வேண்டும். அதன் மூலம் கழிவு நீர் கலக்காமல் தடுக்க இயலும். கசிவுகள் இருப்பது அறியப்படும்போது, ‘லீக்கேஜ் புரூப்’ கலந்த ஒயிட் சிமெண்டு மூலம் அந்த இடத்தை அடைத்துவிட வேண்டும். பொதுவாக, மழைக்காலங்களில் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு தொடராமல் நிறுத்தி விடுவது வழக்கம். மழைக்காலத்தில் பணிகளை தொடர வேண்டிய அவசியம் இருப்பினும், கான்கிரீட் தளம் அமைப்பதை தவிர்ப்பது அவசியம்.
கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் மழை கோட்டுகள் அணிவதாலும், காலுக்கு ரப்பர் ஷூ வகைகளை அணிவதாலும் ஈரம் அல்லது இதர பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். கட்டுமான பணி நடக்கும் இடங்களில் மழைக்காலங்களில் தரைப்பரப்புகள் வழுக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் தகுந்த காலணிகளை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உயரமான தளங்களில் பணி புரிபவர்கள் கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம். ஈரப்பதம் காரணமாக மின்சார பாதிப்புகள் எளிதாக ஏற்படும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
உயரமான கட்டிடங்களில் பணி புரிபவர்கள் இடியும், மின்னலும் ஏற்படும் சமயங்களில் உலோக பொருட்களை கைகளில் வைத்திருப்பது அல்லது உலோக பொருட்கள் மீது நிற்பது ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம். குறிப்பாக, டவர் கிரேன்களை இயக்குபவர்கள் மழை நின்ற பிறகு பணிகளை தொடர்வதுதான் பாதுகாப்பானது.

இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* லிப்ஸ்டிக்கில் ஒருசில நச்சுப்பொருட்கள் உள்ளன. இந்த நச்சுத்தன்மையை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயம் தெரியாமல் நிறைய பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அது ஒவ்வாமை பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயனம் உள்ளது. இந்த மூலப்பொருள் புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவை நாளமில்லா சுரப்பி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
* தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் இது ஏற்படுகிறது. வயிற்று கட்டிகளும் இந்த நச்சு ரசாயனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையாகும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கிக்கொண்டேதான் இருக்கும். அதை பார்த்து துவண்டு போய்விடக்கூடாது.
வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம். மிகப் பெரிய வெற்றிகளை சாதித்தவர்கள் தொடக்கத்தில் தோல்விகளை சந்தித்தவர்கள்தான். அவர்கள் தோல்வியால் துவளாமல் அதையே வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டது தான் அவர்களின் வெற்றிக்கு காரணம். உளவியல் நிபுணர்களும் அறிஞர்களும் கூட தோல்விகள் என்பது மிகப்பெரிய பாடங்களை கற்றுக் கொடுக்கும் நிகழ்வாகவே இருப்பதாக கூறுகிறார்கள்.
எனவே தோல்வியை எப்படி சமாளிப்பது என்பதையும் அதை எப்படி வெற்றியின் படிக்கட்டாக மாற்றிக் கொள்வது என்பதை பற்றியும் ஆராய வேண்டும். இதற்கு முதலில் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்கும் மனோபாவம் வேண்டும். வெற்றி நாளை தோல்வியையும், தோல்வி நாளைய வெற்றியையும் அழைத்து வரலாம். அது அவரவர் செயல்படும் விதத்தை பொறுத்தது.
தோல்வி அடைந்தவர்கள் முதலில், தாங்கள் அடைந்த தோல்வியால் அன்றாட செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிரமமானதுதான். நாம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ந்து விட்டால், அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும். நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பழைய நிலைக்கு திரும்புவதற்கு பலவகையான காரணங்கள் முட்டுக்கட்டையாக நிற்கும். இதை தகர்ப்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே அமைந்திருக்கிறது. சில மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிக்கு மேல் வெற்றி பெறுவதும், சிலர் நன்கு உழைத்தும் தோல்வியின் பிடியிலேயே நிரந்தரமாய் குடியிருப்பதும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்களின் வாழ்க்கைமுறையை கூர்ந்து பார்த்தால் காரணம் புரிந்துவிடும். தவறைத் திருத்திக்கொள்ளாதது, திரும்பத்திரும்ப தவறு செய்துகொண்டே இருப்பது, சரியாக திட்டமிடாமல் செயல்பட தொடங்குவது போன்றவை வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்.
சில கெட்ட பழக்கங்கள் புத்திசாலி மனிதர்களைக்கூட தோல்வியிலேயே வீழ வைத்திருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ‘நல்ல திறமைசாலி தன்னிடம் உள்ள முழு திறமையையும் உணர முடியாமல் போவதற்கும், சில வல்லுனர்களின் திட்டங்கள் சிதைந்து போவதற்கும் அவர்களிடமுள்ள சில கெட்டபழக்கங்களே காரணம்’ என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கிக்கொண்டேதான் இருக்கும். அதை பார்த்து துவண்டு போய்விடக்கூடாது. வேறு எந்தவிதமான கவன சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அதை நோக்கி உங்களின் பயணம் அமைய வேண்டும்.
இடையில் எதிர்கொள்ளும் தடங்கல்களை தவிடு பொடியாக்கும் போராட்ட குணம் கொண்டவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். சூழல்களுக்கு ஏற்றபடி நம் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். ஏனெனில் தொடர் வெற்றியை தன்வசமாக்குபவர்கள் பெரும்பாலும் தங்களின் செயல்பாடுகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பார்கள். அதற்கேற்றபடி மாற்று திட்டங்களை கைவசம் வைத்திருப்பார்கள்.
தோல்வியை துரத்துவதற்கு சில பழக்கங்களை கண்டிப்பாக பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஏற்கனவே எதிர்கொண்ட தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை புறந்தள்ளுவதில்தான் வெற்றியே அமைந்திருக்கிறது. எதைப்பற்றியும் நல்ல அபிப்பிராயம் இல்லாதிருப்பது, எதிர்ப்புகளை கண்டு துவண்டு போவது, அளவுக்கு அதிகமாக தம்மையே வருத்திக்கொள்வது, எப்போதும் ஒருவித பயத்தில் இருப்பது, வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாமல் இருப்பது, உணர்ச்சி வசப்பட்டு பிரச்சினைகளை சிக்கலானதாக மாற்றி விடுவது இவற்றுள் ஏதேனும் ஒன்று, இரண்டு விஷயங்களை எதிர்கொள்வது பலரின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றன. இத்தகைய பாதிப்புகளை அனுபவித்தால் அதில் இருந்து உடனே மீண்டு வெளியே வாருங்கள். திட்டமிட்ட கடின உழைப்பே வெற்றி மகுடம் சூட்டும். அதனை நினைவில் கொண்டு செயல்பட்டாலே போதும். தோல்வியை தவிர்த்துவிடலாம்.

டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த ஆபத்துக்களை குறைக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும்.
தரமான சாக்லேட்டை அளவோடு சாப்பிட்டால் நான்கு விதமான நன்மைகள் கிடைக்கும். அதன் விவரம்:
1. மனநிலை மேம்படும்: சாக்லேட்டுகளில் பினைல் லேத்லமைன் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது அன்பை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. அதுபோல் ஆனந்தமைடு எனும் பொருள் மகிழ்ச்சியை தூண்டக்கூடியது. சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கொக்கோவில் உள்ள பாலிபினால்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன. மேலும் மற்ற சாக்லேட்களை விட டார்க் சாக்லேட்களில் பிளவனாய்டுகள் அதிகம் உள்ளன. அவையும் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டவை.
2. மூளைக்கு நன்மை: சாக்லேட்டில் இருக்கும் பிளவனாய்டு மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. மூளையில் உள்ள நியூரான்களை பாதுகாக்கவும், நினைவகம் மற்றும் கற்றல் தொடர்பான அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கவும் துணைபுரிகின்றன. முதியவர்கள் சாக்லேட் சாப்பிட்டால் அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
3. இதயம்: டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த ஆபத்துக்களை குறைக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும். டார்க் சாக்லேட் ரத்த நாளங்கள் விரிவடையவும் துணைபுரியும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
4. சிறுநீரகம்: டார்க் சாக்லேட் சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடியது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்:
பேரிச்சம்பழம் - ஒன்றரை கப்
பாதாம் - அரை கப்
முந்திரி - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஜாரில், கொட்டை எடுத்த பேரிச்சம் பழம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில், தேங்காய்த் துருவல் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில், கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து பேரிச்சம்பழத்துடன் சேர்க்கவும்.
பிறகு, வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
இறுதியாக, பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று பிடித்துக் கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. சத்தான பேரிச்சம் பழம் லட்டு ரெடி..!.