search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேரட் துவையல்
    X
    கேரட் துவையல்

    10 நிமிடத்தில் செய்யலாம் கேரட் துவையல்

    கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள்

    கேரட் துருவல் - 1 கப்,
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    நறுக்கிய இஞ்சி - சிறிது.

    செய்முறை

    கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    சத்தான கேரட் துவையல் ரெடி.
    Next Story
    ×