என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும்.
    கூந்தலின் தோற்றப்பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்துவிடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம்.

    * தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ கூந்தல் உலர்ந்துவிடக்கூடும். முடி வறட்சி, பொலிவின்றி மெலிந்து காணப்படுவது போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

    * வறண்ட சருமம், தோல் அழற்சி, தலையில் அரிப்பு போன்றவை காரணமாக பொடுகு தொல்லை தோன்றும். மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படும்.

    * தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும்.

    * சரும அழற்சி ஏற்பட்டிருந்தால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது, திட்டுக்கள் தோன்றுவது, மஞ்சள் நிறத்தில் செதில்கள் தென்படுவது போன்றவை தோன்றும்.

    * தலைமுடி நரைப்பதற்கு மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. இருப்பினும் மன அழுத்தம், எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் சிலருக்கு தலைமுடி நரைக்கும். மன அழுத்தத்தால் நிறமிகளை உருவாக்கும் செல்கள் பாதிப்படையும். அதனால் விரைவாகவே தலைமுடி நரைக்க தொடங்கிவிடும்.

    * கூந்தலுக்கு ரசாயன சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
    வீட்டைச் சுற்றி நிழல் கொடுக்கக்கூடிய மரங்கள் இருப்பது ஆரோக்கியமான பிராணவாயுவை அளிப்பதோடு குளிர்ச்சியையும் கொண்டு வரும். வெப்பத்தைக் குறைக்கும்.
    புதிய வீடுகள் கட்டும் பொழுது கூடுமானவரை நல்ல காற்றோட்டமும் அதிகமான வெப்பத்தைஉண்டாக்காமல் வீடு எப்போதும் குளிர்ச்சியாகஇருக்கும்படியும் கட்டுமானம் அமைய வேண்டும். அப்போதுதான் ஏசி உபகரணங்களின் வேலை மிக குறைவாக இருக்கும். இதனால் மின்சாரமும் மிச்சமாகும். நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எனவே வீட்டைக் கட்டும்போதுசின்ன சின்னவிஷயங்களில் கவனமாக இருந்தாலே போதும்.

    நீர் சேமிப்பு திட்டமானது நீரை மிச்சப்படுத்துவதோடு சூழலையும்குளிர்ச்சியாக வைத்திருக்கும். பெரும்பான்மையான இல்லங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி அதனை பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் சுத்திகரித்துக்பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பின் வெளியேறும்போது ஒரு தொட்டியில் சேகரித்து பின் அதனை செடிகளுக்குஊற்றபயன்படுத்தலாம். இதேபோல் துணி துவைக்கும் நீர் மற்றும் குளிக்கும் தண்ணீர் சுத்திகரித்து ஒரு தொட்டியில் சேரும்படிஅமைத்துவிட்டால் அந்த நீரை செடிகளுக்கு பயன்படுத்த முடியும்.

    மழைநீர் சேகரிப்பு தொட்டியைநிலத்தடியில் அமைத்து மொட்டை மாடியில் விழும் மழை நீர் அனைத்தையும் கழிவு நீர் கால்வாயில்விட்டுவிடாமல்நிலத்தடிக்குசெல்லுமாறு செய்வோம் என்றால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். மற்றபடி தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வெளியேறும் அளவை குறைப்பது, நீர் பாய்ச்சும்குழாய்களில்வெளியேறும் தண்ணீர் அளவை குறைப்பது,சமயலறைசிங்கில் தண்ணீர் குழாயை திறந்து கழுவாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் பிடித்து கழுவுவதோ அல்லது தண்ணீர் மெல்லிய துவாரத்தின் வழியாக பீய்ச்சி அடிப்பது போன்ற குழாய்கள்வைத்தும் தண்ணீரை சேமிக்கலாம்.

    வீட்டிற்கு வெப்பம் அதிகமாகாமல் எவ்வாறு தடுக்கலாம் என்றால் மிகப்பெரிய சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் பேனல்களை மொட்டை மாடியில் வைக்கும்போது அவை சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவதோடு வெப்பம் கட்டிடத்தை தாக்காமலும் பாதுகாக்கின்றது. வீட்டைச் சுற்றி நிழல் கொடுக்கக்கூடிய மரங்கள் இருப்பது ஆரோக்கியமான பிராணவாயுவை அளிப்பதோடு குளிர்ச்சியையும் கொண்டு வரும். வெப்பத்தைக் குறைக்கும். வீட்டுக்கு ஜன்னல் அமைப்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் காற்று ஒருபுறம் வீட்டிற்குள் நுழைந்து மறுபுறம் வெளியே செல்லும்படி ஜன்னல், வீட்டு வாயிற்படி போன்றவற்றை அமைத்திருக்க வேண்டும். இது வீட்டின் வெப்பநிலையை சமமாக வைத்திருப்பதோடுபிராணவாயுவின்அளவையும் சிறப்பாக வைத்திருக்கும்.

    அடுத்தபடியாக வீட்டை அழகுபடுத்த என்று நாம் பூசுகின்றவண்ணங்கள் தரமான வகைகளாக நச்சுத்தன்மை அற்றதாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் உபயோகப்படுத்தும் கம்பளங்கள் திரைச்சீலைகள் போன்றவை பெட்ரோலியம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை டெரகோட்டாடைல்ஸ் கல் பதித்ததரையும்குளிர்ச்சியைகொடுக்கக் கூடிய சிமெண்ட்தரைகளும் எப்போதும் நல்லவையே..
    அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஏனெனில் நம்முடைய தென்னிந்திய உணவு வகைகளில் சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகளுமே அரிசியால் செய்யப்படுவதாகும்.
    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அரிசி அல்லது கோதுமை இவை இரண்டில் எந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது குறித்து கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

    அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஏனெனில் நம்முடைய தென்னிந்திய உணவு வகைகளில் சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகளுமே அரிசியால் செய்யப்படுவதாகும். அதனால் அரிசியை முழுவதுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

    நந்திதா அருண்

    அரிசியையும், கோதுமையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டிலுமே கார்போஹைட்ரேட் தான் உள்ளது. ஆனால் அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடும் அளவு சற்று குறைவாக இருக்குமே தவிர (சர்க்கரையை பொறுத்தவரை) அதிகளவு வித்தியாசம் இருக்காது. ஆனால் இது இரண்டிலும் ஊட்டச்சத்துக்களில் வித்தியாசம் உள்ளது.

    அதாவது கோதுமையில் புரோட்டீன் சற்று அதிகமாக உள்ளது. மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அரிசியோ கோதுமையோ எதுவாக இருந்தாலும் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதற்கு பதிலாக உணவில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்து கொண்டு புரோட்டீன் அளவை அதிகப்படுத்துவது நல்லது என்று கூறினார்.
    சம்பளத்தை போலவே பதவி உயர்வு, ஊக்கத்தொகை பற்றிய விவரங்களையும் மனைவியிடம் பகிர்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒருசிலர் மட்டும்தான் அதுபற்றி வெளிப்படையாக சொல்வார்கள்.
    பெண்களை ஒப்பிடும்போது பெரும்பாலான ஆண்கள் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதில்லை. பல விஷயங்களை மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். தக்க சமயத்தில் அதனை வெளிப்படுத்தும் சூழல் அமைந்தாலும் கூட மனம் விட்டு பேச தயங்குவார்கள். திருமணத்திற்கு முன்பும், பின்பும் தனது சுபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே தொடர்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடந்த கால வாழ்க்கையை பற்றி மனைவியிடம் கூட பெரிய அளவில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஒருசில உண்மைகளையும், ரகசியங்களையும் மனைவியிடம் கூறாமல் மறைத்துவிடுவார்கள். அவை பற்றி மனைவி அறிய முற்பட்டால் பேச்சை திசை திருப்பி விடுவார்கள். ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் பொய் கூறி தப்பித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். மனைவியிடம் என்னென்ன விஷயங்களையெல்லாம் வெளிப்படையாக பேச தயங்குகிறார்கள், அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

    * வெளி இடங்களுக்கோ, சுப நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது மனைவி ஆடை தேர்வில் தீவிரம் காட்டுவார். அதுபோலவே மனைவி எந்த மாதிரியான ஆடை அலங்காரம் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கணவருக்கு இருக்கும். செல்லும் இடத்திற்கு ஏற்ப ஆடை தேர்வு அமைந்திருக்க வேண்டும் என்றும் விரும்புவார். ஆனால் மனைவியின் ஆடைத்தேர்வு வேறு விதமாக அமையும் பட்சத்தில் கணவருக்கு பிடிக்காமல் போகலாம். அதனை ஒரு சில ஆண்கள்தான் மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். ஒருவேளை மனைவி திட்டிவிட்டாலோ, மன வருத்தம் கொண்டாலோ என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே நிறைய பேர், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

    * திருமணத்திற்கு முன்பு கணவர் வேறு ஏதாவதொரு பெண்ணை காதலித்திருக்கலாம் அல்லது ஒருதலை காதல் வயப்பட்டிருக்கலாம். அதனை தப்பித்தவறி கூட மனைவி யிடம் சொல்ல விரும்பமாட்டார்கள். மனைவிக்கு தெரிந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ, தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயத்திலேயே உண்மையை மறைத்துவிடுவார்கள்.

    * தங்கள் காதல் விவகாரத்தை மறைக்கும் ஆண்கள், மனைவி திருமணத்திற்கு முன்பு காதல் வயப்பட்டிருப்பாரோ? என்ற சந்தேகத்தை மனதுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். ஆனால் வெளிப்படையாக மனைவியிடம் கேட்க மாட்டார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமையும்போது சந்தேக எண்ணத்துடனேயே மனைவியை கேள்விகளால் துளைத் தெடுப்பார்கள். ஒருவேளை மனைவி காதல்வசப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பாலான ஆண்களுக்கு இருப்பதில்லை. திருமணத்திற்கு முன்பே அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். அதுபற்றிய எண்ணமே மனைவியிடம் இருக்காது. முற்றிலும் மறந்துபோயிருப்பார். ஆனால் கணவரோ அதனையே நினைவில் வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் அமையும்போது அதனை கிளறி மனைவியை காயப்படுத்த வாய்ப்புண்டு. அதனால் கடந்த கால காதல் விவகாரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

    * ஆண்கள் தங்கள் வருமானத்தை யாரிடமும் வெளிப்படையாக சொல்வதில்லை. மனைவியிடம் கூட சிலர் மாத வருமானத்தை பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். மனைவி வற்புறுத்தி கேட்டாலும் கூட உண்மையான வருவாயை சொல்ல தயங்குவார்கள். அலுவலக பணி புரிபவர்கள் பெரும்பாலும் சம்பளம் உயர்த்தப்படும் விஷயத்தை மனைவியிடம் மறைப்பதுண்டு. வேலைக்கு செல்லும் மனைவியின் சம்பளம் தன் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால் சம்பள பேச்சை எடுக்கமாட்டார்கள்.

    * சம்பளத்தை போலவே பதவி உயர்வு, ஊக்கத்தொகை பற்றிய விவரங்களையும் மனைவியிடம் பகிர்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒருசிலர் மட்டும்தான் அதுபற்றி வெளிப்படையாக சொல்வார்கள்.

    * ஆண்கள் படித்ததில் பிடித்தமான விஷயங்களை கூட மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக காதல் கதைகள், பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி மனைவியிடம் கூறத் தயங்குவார்கள்.
    செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது.
    முடியின் வளர்ச்சியை அதிகரிக்க குழந்தைகள் வளரும் போதே கூந்தலுக்கு சரியான எண்ணெயை ஒரே எண்ணெய்யை பயன்படுத்துவது அவசியம். இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். முடி அடர்த்தியாக, பொலிவாக, நரையில்லாமல் வைத்திருக்கலாம்.

    கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் கொடுக்கும். அந்த வகையில் செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    செம்பருத்தி பூக்கள் – 30
    ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்
    தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்
    வெந்தயம் – 5 டீஸ்பூன் அளவு

    முதலில் இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். அடுப்பு மிதமாக கொதிக்கட்டும். செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து நறுக்கவும்.

    கால் கைப்பிடி அளவு இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்க்கவும். மற்ற இதழ்களை அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    எண்ணெய் குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயை காய்ச்சலாம். தொடர்ந்து இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் விரல்களில் தொட்டு மயிர்க்கால்களில் தடவி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து வந்தால் போதும்.

    கூந்தலில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடும். மேலும், குழந்தைக்கு எண்ணெய் குளியலின் போது இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்க கூடியது.

    வேறு எண்ணெய் எதையும் பயன்படுத்தாமல் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியமாக செழித்து வளரும். வயதானவர்களும் இதை பயன்படுத்தலாம். தினசரி தலைக்கு, ஆயில் மசாஜ் செய்வதற்கு, ஆயில் பாத் எடுப்பதற்கு என எல்லாவற்றுக்கும் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தலாம்.

    சிறந்த பலன் கிடைக்கும். பின்னர், செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது.

    இளநரையை வராமல் தடுக்க செய்கிறது. நரை பிரச்சனை தவிர்க்க உதவுகிறது. முடிக்கு அடர்த்தி கொடுக்கிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பொடுகு பிரச்சனை அதிகரிக்காமல் செய்கிறது.

    ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இன்று ஆப்பிள் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2,
    எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    நாட்டு சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பால் - ஒரு டம்ளர்.

    செய்முறை:

    ஆப்பிளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருக்கியதும், பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

    ஆப்பிள் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

    பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

    சத்தான சுவையான ஆப்பிள் சூப் ரெடி.

    பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
    இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும்.
    மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகமாக தாக்கும் நோய் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இடம் பிடித்துள்ளது. வாழ்நாளில் 53 பேரில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பப்பையில் உள்ள செல்கள் அபரிமிதமாக வளர ஆரம்பிப்பது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது.

    இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.

    இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.

    இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
    போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
    அது என்ன மூளை வாதம்? பிறந்த குழந்தைக்கு எப்படி மூளையில் கோளாறு உண்டாகும்? தீர்வு இல்லையெனில் மேற்படி என்ன செய்ய வேண்டும்?
    இதனால் குழந்தையின் வாழ்க்கை தரம் எவ்வாறு அமையும்? என அனைத்து கேள்விகளுக்குமான விடையை பற்றி இங்கே தெளிவாக தெரிந்துகொள்வோம்.

    மூளை வாதம்...

    *செரிபரல் பால்சி (cerebral palsy) என்று மருத்துவ உலகம் அழைக்கும் இந்த மூளை வாதமானது குழந்தையின் வளரும் மூளைக்கு வரக்கூடிய மூளை சேதம் ஆகும்.

    *மேலும் இது ஒரு குழுவாக உடலியல் கோளாறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக உடல் அசைவுகள், அறிவுத் திறன், விழித்திறன், பேச்சுத்திறன் சார்ந்த குறைபாடுகள் என பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது.

    காரணங்கள்...

    * சிசு பிறக்கும் முன், பிறக்கும் போது, பிறந்த பின் என மூன்று கட்டங்களிலும் சி.பி. என சொல்லக்கூடிய செரிபரல் பால்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.

    * பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் குழந்தையின் மூளையையும், மூளையை போர்த்தியுள்ள திசுவையும் பாதிக்கும்போது ஏற்படலாம்.

    * கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்களாலும் குழந்தைக்கு சி.பி. வரக்கூடும்.

    * முன்கூட்டியே பிறக்கும் (pre mature) குழந்தைகளுக்கு எளிதில் மூளை செல்களில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

    * நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்ட சிசுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளை செல்கள் சேதம் அடையும்.

    * குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கும்போது மூளை சேதம் உண்டாகலாம். சாதாரண முறை சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது கருவிகள் கொண்டு குழந்தையை வெளியே கொண்டுவரும் பிரசவமாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

    * மஞ்சள் காமாலை இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் வரும் மூளை சேதம்.

    குறிப்பு: எனவே, கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை மேல் சொன்ன சிக்கல்கள் ஏற்பட்டால் சி.பி. வரலாம்.

    அறிகுறிகள்...

    * அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் வெளிப்படும்.

    * தாமதமான மைல் கற்கள்தான் பிரதான அறிகுறி. அதாவது தாமதமாக கழுத்து நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் படிகள்.

    * உடல் அசைவுகள்தான் பெரிதும் பாதிக்கும். இதனால் ஸ்திரத் தன்மை (balance), பாதிப்படையும். இதன் வெளிப்பாடாய் நடப்பதற்கு, உட்காருவதற்கு குழந்தை சிரமப்படும்.

    * தோற்றப்பாங்கு (posture) உடல் முழுவதும் மாறக்கூடும். தசைகள் பாதிப்பதால் சரியான தோற்றப்பாங்கு இல்லாமல் இருப்பார்கள்.

    * அறிவுத் திறன் சார்ந்த குறைபாடுகள்.

    * சில குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வலிப்பில் பல வகைகள் உண்டு என்பதால் அதுவும் வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் இருக்கும்.

    * பார்வைத் திறன் குறைபாடு.

    * கேட்கும் திறன் குறைபாடு.

    * பேச்சுத் திறன் குறைபாடு.

    * வளைந்த முதுகுத்தண்டு.

    * தசையையும் எலும்பையும் இணைக்கும் ‘தசை நாண் இறுக்கம்’. இது பொதுவாக கால் தசைகளில் ஏற்படும்.

    * நடக்க முடியாமல் இருப்பது, நடக்க சிரமப்படுவது, கோணலாக நடப்பது.

    சிகிச்சை முறை...

    சி.பி.யை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    கீழே கூறப்பட்டுள்ள 5 முக்கியமான விஷயங்களை பின்பற்றினால் பணி இடங்களில் பெண்களால் சிறப்பாக செயலாற்றிட முடியும். முயற்சி செய்யுங்கள், வெல்லுங்கள்.
    அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர். ஆனால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி செய்தல் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் தேக்கங்கள் பெண்களுக்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து மீண்டு பணியிடத்தில் வெற்றிகரமான பெண்ணாக வருவதற்கு முதலில் கவனிக்க வேண்டிய ஐந்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    பயத்தில் கவனம் செலுத்திட கூடாது
     
    என்னதான் பெண்கள் தங்களை தைரியமானவர்களாக காட்டிக்கொண்டாலும் அவர்களுக்குள் நிச்சயமாக பய உணர்வு என்பது இருக்கவே செய்யும். பொதுவாக பணியிடங்களில், பயந்த எதிர்ப்பு தெரிவிக்காத பெண்களிடத்தில் தான் ஆதிக்கத்தை அனைவரும் காட்டிட முயல்கிறார்கள். தைரியமான பெண்களிடத்தில் அவர்கள் அடக்கியே வாசிப்பார்கள். இதற்க்காகத்தான் பல பெண்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் .
     
    பெண்களில் பலர் தங்களுக்கிருக்கின்ற பயத்தினை போக்கவோ அல்லது மறைக்கவோ அதிக நேரங்களையும் சக்திகளையும் வீணாக்குவதாக கூறுகிறார்கள். வேலைபார்க்கும் பெண்கள் செய்யவேண்டியது இதுதான், பயம் ஆண் பெண் இருவருக்குமே இருக்ககூடியது. அதனை போக்கியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. தங்களுடைய பணியில் பயம் தொந்தரவு செய்திடாமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது. இதனை புரிந்துகொண்டால் வெற்றிதான்.
     
    விமர்சனங்களை கடந்திடுதல் அவசியம்
     
    ஒரு பெண் ஆணிடம் சிரித்துப்பேசினாலே தவறாக அர்த்தம் கொள்ளும் உலகமிது என்பதனை முதலில் உணரவேண்டியது பெண்கள். அதிக ஆண்கள் வேலைபார்க்கும் பணியிடங்களில் யாருடனும் பேசாமலும் சிரிக்காமலும் இருக்கவே முடியாது .

    ஒரு பெண் தங்களைவிட உயருகிறார் என தெரிந்தால் மற்றவர்களின் முதல் தாக்குதல் பெண்ணிண் நடத்தை குறித்துதான். வேலைபார்க்கும் இடங்களில் இவையெல்லாம் நடக்கக்கூடியவையே என்பதனை உணர்ந்துகொண்டு இதுபோன்ற குப்பைகளை கடந்து போக கற்றுக்கொள்ள வேண்டும் .
     
    துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்
     
    படிக்கும்போது முழுத்திறனையும் கொடுத்து படிக்கின்ற பெண்கள் வேலையில் சேர்ந்துவிட்டபிறகு பல காரணங்களால் முழுத்திறனையும் வெளிப்படுத்துவது இல்லை. பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் தங்களுடைய வேலை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள புதிதாக படிக்கிறார்கள், பயிற்சிக்கு செல்கிறார்கள் .
    பெண்களும் துறைசார்ந்த அறிவினை மேம்படுத்திக்கொள்ள முயலுவது அவசியம்.
     
    முடியாது என சொல்வதை விட்டுவிடுங்கள்

    வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை, உண்மைதான். அதற்கான காரணம் பெண்களால் இரவுப்பணி போன்றவற்றையும் கடினமான வேலைகளையும் செய்ய முடியாது அல்லது கடினம் என நம்புவதால் தான். இந்த எண்ணங்களை உடைத்தெறிய தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்போது அதனை முடியாதென சொல்வதை விட்டுவிடுங்கள். அவ்வாறு சொல்லிடும்போது உங்களின் திறமையையும் ஆர்வத்தையும் நிறுவனத்தார் உணர்ந்து அங்கீகரிப்பார்கள் .
     
    உங்களை பற்றிய எண்ணங்களை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்
     
    பிறர் என்னை பற்றி என்ன நினைத்தால் என்ன என கேட்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் அவ்வாறு நினைத்துக்கொள்ளலாம். ஆனால் பணியிடங்களில் நாம் ஒரு குழுவாகவே செயலாற்றுகிறோம். பிறரிடமிருந்து தான் நமக்கான பணியும் பதவி உயர்வும் கிடைக்கவேண்டி இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரின் மனதில் நம்மை பற்றிய எண்ணங்களை உயர்வானதாக வைத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம். அதற்கான முயற்சிகளில் பணி இடங்களில் நாம் செயலாற்றிட வேண்டும் .
     
    மேற்கூறிய 5 முக்கியமான விசயங்களை பின்பற்றினால் பணி இடங்களில் பெண்களால் சிறப்பாக செயலாற்றிட முடியும். முயற்சி செய்யுங்கள், வெல்லுங்கள்.
    அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
    திருமணத்திற்கு..

    லெகங்கா :

    திருமண நிகழ்ச்சியில் அணிவதற்கு பொருத்தமான ஆடைகளுள் ஒன்றாக லெகங்கா அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட லெகங்காவை தேர்ந்தெடுத்து அணிவது, திருமண வைபவத்தில் தனித்துவமான நபராக காட்சிப்படுத்தும்.

    புடவை :

    புடவையை போல் பெண்களை அழகாக காண்பிக்கும் உடை வேறு எதுவும் இல்லை. திருமணம் மற்றும் பாரம்பரிய விழாக்களின் போது புடவையை அணிவது அந்த நிகழ்வுக்கு அழகு சேர்க்கும். அணிபவரையும் அழகுடன் மிளிரவைக்கும்.

    விருந்து நிகழ்ச்சிகளுக்கு..

    சாதாரண அனார்கலி :

    அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

    பேண்ட் ஸ்டைல் சல்வார் :

    இன்று உலகம் முழுவதும் பேண்ட் ஸ்டைல் சல்வார் அணிவது பேஷனாக இருக்கிறது. இது ஸ்டைலான தோற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளிக்கிறது. இது விருந்து நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்கு ஏற்றது.

    அலுவலகத்துக்கு

    பஞ்சாபி சல்வார் :

    சல்வார், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருசேர கலந்து பிரதிபலிக்கும் ஆடைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்சாப் சல்வாரை எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் அணியலாம். அலுவலகத்திற்கும் உடுத்தி செல்லலாம். அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சிறந்ததாக இது அமைந்திருக்கிறது.

    சுடிதார் :

    இது அழகான, அசத்தலான தோற்றத்தை அளிக்கக்கூடியது. அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சுடிதாரும் ஒன்று. நவநாகரிக தோற்றத்தை கொடுக்கும் ஆடை ரகமாக கருதப்படுகிறது.

    புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு என்னென்ன தொற்று நோய்கள் பரவுகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது.

    சளி, இருமல்

    வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல். காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.

    காய்ச்சல்

    இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.

    வயிற்றுப் போக்கு

    பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்ட் வரலாம். அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

    சின்னம்மை

    கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.

    மணல் வாரி அம்மை

    இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும். மூக்கில் நீர் வடியும். தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும். வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர வைட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.

    மஞ்சள் காமாலை

    பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும். எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக ஏற்படுவது மஞ்சள் காமாலை. சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாகக் குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.

    சிறுநீரகப் பிரச்சினை

    குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

    தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    பிரிஞ்சி இலை - 1,
    பச்சைமிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சிறிது,
    பால் - 1/2 கப்.

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிய பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்பு பச்சைப் பட்டாணியை வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.

    பச்சை பட்டாணி வெந்ததும் ஆறவைத்து அதில் இருந்து பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    சத்தான பச்சை பட்டாணி சூப் ரெடி.
    ×