என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. குறைப் பிரசவம் / எடை குறைந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. இந்த மாதிரியான குழந்தைகளைச் சிறப்புப் பிரிவினரில் வைத்துள்ளது மருத்துவம்.

    குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது எனில், பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.

    ஹெபடைட்டிஸ் – பி மஞ்சள் காமாலை உள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் அந்தக் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி மற்றும் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து இந்தத் தடுப்பூசியை முறையே ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என மூன்று தவணைகள் குழந்தைக்குப் போட வேண்டும்.

    இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.
    மார்பக புற்றுநோய் போல பெண்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் இந்த கருப்பை புற்றுநோய். மார்பக புற்றுநோயை அடுத்து கருப்பை புற்றுநோயும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கருப்பை புற்றுநோய் பாதிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று விதமான புற்றுநோய் கருப்பையை பாதிக்க வாய்ப்புள்ளது.

    இதில் கருப்பை வாய் புற்றுநோய் நகர்புற பெண்களை விட, கிராமப்புற பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அது புற்றுநோயாக மாறுகிறது.

    இந்த கருப்பை
    புற்றுநோய் பெரிய அறிகுறிகளை காட்டாது. அதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிறது. மார்பக புற்றுநோய் போல தான் கருப்பை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிடலாம். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்காமல் இருந்தாலும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல மாதவிடாய் காலத்திலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்னை மாற்ற வேண்டும். துணி பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் தொடங்கியது முதலே பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து தாய்மார்கள் கற்றுத்தர வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் கூச்சப்பட்டு பேசாமல் தவிர்க்கக் கூடாது. சிறுநீர் கழித்ததும் உடனே பிறப்புறுப்பை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்திலும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆரம்ப கட்ட பாதுகாப்பு வழிகளை பின்பற்றினால் ஓரளவுக்கு புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    இரவில் சருமத்திற்கு நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி ஏராளமான சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவும்.
    பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் போனாலும் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். அது சருமத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி ஏராளமான சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவும். இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.

    அது பகல் பொழுதில் சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு வழிவகை செய்யும். சரும துளைகளை திறந்து அவை சுவாசிப்பதற்கும் உதவும். எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து முழங்கால்கள், முழங்கைகள், மூட்டு பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்துவிடலாம். அது சரும நலனை மேம்படுத்தும்.

    இரவில் தயிருடன் சிறிதளவு ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் தடவலாம். கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடலாம். அது சருமத்தை சுத்திகரிக்க வைத்து விடும். அதன்பிறகு மென்மையான டவலால் துடைத்துவிட்டு ஈரப்பதமான மாய்ஸ்சரைசரை உபயோகிக்கலாம். இதன் மூலம் முகம் பிரகாசிக்க தொடங்கும். கணினி, மொபைல், லேப்டாப் அதிக நேரம் பயன்படுத்துபவர்களின் கண்கள் சோர்வுக்குள்ளாகும்.

    கருவளையங்களும் உண்டாகும். அதற்கு வெள்ளரிக்காய் இயற்கையான தீர்வை வழங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் கால் மணி நேரம் வைத்திருந்தால் போதும். மனதும், கண்களும் புத்துணர்ச்சி பெறும். பின்னர் ஈரப்பதமான மாய்ஸ்சரைசர் கொண்டு கண்கள், மூக்கு பகுதியை சுற்றி மெதுவாக தடவி மசாஜ் செய்யலாம்.

    தூங்குவதற்கு முன்பு தினமும் இவ்வாறு செய்துவந்தால் காலையில் சோர்வு நீங்கி உற்சாகமாக எழலாம். நல்ல மாற்றங்களையும் உணரலாம்.

    அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படும். வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்த அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம்.
    தற்போதைய சூழ்நிலையில் கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள், நோய் தொற்றுகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. அதனால் பலரும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பொருட்களை தேடிப்பிடித்து உபயோகப்படுத்த தொடங்கிவிட்டார்கள். அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படும் தன்மை கொண்டது. அஸ்வகந்தா செடி முழுவதுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வேர் மற்றும் தூள் வடிவில் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்தவும் அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ரத்தசோகை பிரச்சினையில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். பெண்களின் கருத்தரிப்புக்கும் நன்மை பயக்கும்.

    அஸ்வகந்தா தேநீரை எளிதாக தயாரித்து பருகலாம்.

    அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.

    கொதிக்க தொடங்கியதும் ஒன்று அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

    அல்லது ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை போட்டு கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்ததும் கீழே இறக்கவும்.

    அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து வடிகட்டி பருகலாம்.

    இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

    அஸ்வகந்தா:இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

    எலுமிச்சை:இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    தேன்:இதிலும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

    இதையும் படிங்க.. ஓணம் சத்யா: எரிசேரி
    நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.
    கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த சிவப்பு அணுக்கள் உடைந்துபோகும்போது மஞ்சள் நிறமியான ‘பிலிரூபின்’ வெளியாகுவது மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாகும். இது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறியாகவும் அமையும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் மருந்து மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் மஞ்சள் காமாலையை குணப்படுத்திவிடலாம். வேறு சில நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.

    கொழுப்பு: மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணெய் சேர்க்கப்படாத உணவை உட்கொள்வது நல்லது. ஏனெனில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச்செய்துவிடும். குறிப்பாக வெண்ணெய், பால் பொருட்கள், இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு கலந்த உணவுகள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானவை. அதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் மஞ்சள் காமாலை இருக்கும்போது குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.

    சர்க்கரை: இனிப்பு பிரியர்களுக்கு மஞ்சள் காமாலை கடினமான காலகட்டமாகவே அமையும். ஏனெனில் அந்த சமயத்தில் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்யும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும். ஆதலால் எந்தவகையிலும் சர்க்கரை கலக்கப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.

    உப்பு: உணவில் அதிகம் உப்பு சேர்த்தால் அது உடலில் உள்ள நீரில் படிந்துவிடும். கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதில் இருக்கும் சோடியம்தான் அதற்கு காரணம். ஆதலால் கல்லீரலை பாதுகாக்க உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக வெங்காய தூள், பூண்டு தூள் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.

    இரும்பு: மஞ்சள் காமாலை இருக்கும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரிப்பது கல்லீரலுக்கு மோசமானது. இரும்புச்சத்து முக்கியமானது என்றாலும் இந்த காலகட்டத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதத்தில் இரும்புச்சத்து கலந்திருக்கும். ஆதலால் புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

    காய்கறிகள்: கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலி பிளவர், பிராக்கோலி, எலுமிச்சை, கீரை, பீன்ஸ், பூண்டு, மஞ்சள், அவகொடோ, ஆப்பிள், வால்நெட் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    உலக சராசரி அளவுக்கு நிகராக இந்தியாவிலும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    பெண்களில் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளோடு அலுவலக வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு முழுமூச்சாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய பேர் தொழில் முனைவோர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் உலக நாடுகளுடன் போட்டி போட்டு முன்னணியில் இருக்கும் அளவுக்கு தொழில்துறையில் பின்தங்கி இருப்பதற்கு பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு 27 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் உலக அளவில் பெண்களின் சராசரி பங்களிப்பு 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 75 மில்லியன் பெண்கள் தொழில்துறையில் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம். உலக சராசரி அளவுக்கு நிகராக இந்தியாவிலும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அபிதாப் காந்த் குறிப்பிடுகையில், ‘‘மக்கள் தொகையில் பாதி பேர் தொழிலாளர் தொகுப்பில் இல்லாவிட்டால் 9 முதல் 10 சதவித வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லாதது. பெண்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யும் பொறுப்பு ஆண்களிடம்தான் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படும்போதெல்லாம் அவர்கள் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் தொழில்துறைக்கு வர வேண்டியது அவசியமானது’’ என்கிறார்.
    கொரோனா பரவல் காரணமாக நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவு பொருட்களை தேடிப்பிடித்து சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த 10 சூப்பர் உணவுகளை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, வேறொரு விதத்தில் இது உடல்நலத்திற்கு நன்மை சேர்த்துள்ளது. காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் முக கவசம் அணிவதன் மூலம் நுரையீரல் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    ஏனெனில் மற்ற உள்ளுறுப்புகளை போல் அல்லாமல் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும் சில உறுப்புகளில் நுரையீரல் முதன்மையானது. காற்றில் கலந்திருக்கும் தூசுக்கள் நுரையீரல் அறைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான செல்களை சேதப்படுத்தக்கூடும். அதன் விளைவாக நோய்த்தொற்று, ஒவ்வாமை பாதிப்புக்கு ஆளாக நேரிடும். கொரோனா பரவல் காரணமாக நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவு பொருட்களை தேடிப் பிடித்து சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த 10 சூப்பர் உணவுகளை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

    1. தக்காளி:

    தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், காற்றுப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடியது. மற்றும் ஆஸ்துமாவை தடுக்கவும் உதவும். தினமும் ஏதாவதொரு வகையில் சமையலில் தக்காளியை சேர்த்துக்கொள்வது நல்லது.

    2. கிரீன் டீ:

    கிரீன் டீ நுரையீரலின் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

    3. அக்ரூட் பருப்புகள்:

    அக்ரூட் பருப்புகள் நுரையீரலில் இருக்கும் காற்று பைகள் சுருங்காமல் இயல்பான அளவை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவக்கூடியது. மேலும் இதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தசைகளுக்கு வலிமை அளிக்கக்கூடியது. பொதுவாக முதியவர்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அளவு அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

    4. ஆப்ரிகாட்:

    ஆப்ரிகாட் பழத்தில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாச குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதனை பராமரிக்கவும் துணைபுரியும். நோய்த்தொற்று அபாயத்தையும் குறைக்கும். இந்த பழத்தை அப்படியே மென்று ருசிக்கலாம். உலர் பழங்களாகவும் சாப்பிடலாம்.

    5. பூண்டு:

    தினமும் பூண்டு சாப்பிடுவது நல்லது. அதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக்கொன்று நோய்த்தொற்றுகளை குறைக்கும். பூண்டுவை அப்படியே சாப்பிடலாம். உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். ஆனால் அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    6. ப்ரோக்கோலி:

    அதிக நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. இதிலிருக்கும் அதிக அளவிலான சல்போராபேன் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

    7. இஞ்சி:

    நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருப்பதற்கு இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும். இது நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும். காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் உதவும். கிரீன் டீயுடன் இஞ்சியையும் சேர்த்து ருசிக்கலாம். இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.

    8. முழு தானியங்கள்:

    ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. இவற்றிலிருக்கும் வைட்டமின் ஏ, செலினியம் போன்றவை நுரையீரலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை. மாசுபட்ட காற்றை உள்ளிழுப்பதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும்.

    9. பச்சை இலை காய்கறிகள்:

    பச்சை இலை காய்கறிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்துவிடலாம்.

    10. சிட்ரஸ் பழங்கள்:

    ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை. இவற்றை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து சுவைக்கலாம்.

    உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்களுக்கு ஆப்ரிகாட், தக்காளி, ஆரஞ்சு, அக்ரூட் பருப்புகள் போன்றவை பரிந்துரைக்கப்படவில்லை. அதனால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுவிட்டு சாப்பிடுவது நல்லது.

    உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா பழமோ, கொய்யா ஜூஸோ பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    ரத்த அழுத்த பாதிப்பு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருந்தால் தமனி பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சராசரியாக ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். அது 180/90 என்ற நிலைக்கு மேலே சென்றால் உயர் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு கடும் பாதிப்புகளை சந்திக்க நேரும். உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வருவது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும், இதயநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

    பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள் உருவாகுவதற்கான அபாயத்தை அதிகரிக்க கூடும். மற்ற உணவு வகைகளை விட கொய்யா பழத்தில் பொட்டாசியத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. அமெரிக்க வேளாண் துறையின் கருத்துப்படி 100 கிராம் கொய்யா பழத்தில் 417 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கரோடினாய்டுகள், பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை இதயத்தை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும்.

    சுகாதார வல்லுனர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு கொய்யாவை பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட வைட்டமின் சி சத்து நான்கு மடங்கு அதிகம் இருக்கிறது. அது இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும். பக்கவாதம், மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கு வைட்டமின் சி பக்கபலமாக இருப்பதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி ரத்த நாள சுவர்களின் உள்புற ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா பழமோ, கொய்யா ஜூஸோ பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது.
    தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் தான். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

    நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு  வருவதை தடுக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

    எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது.

    நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து, சருமத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம்  மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

    நல்லெண்ணெயில் லெசித்தின் எனும் பொருளும், லினோலிக் எனும் அமிலமும் இருப்பதால் அவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

    உடல் சூட்டால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

    நல்லெண்ணெய் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறச் செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தினமும் நல்லெண்ணெயில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

    நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டை குத்தல் போன்றவை நீங்கும். கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், கண்களின் ஆரோக்கியம் மேம்படும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகு தொல்லை காணாமல் போய்விடும். ஆயுளும், இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அருமருந்து.

    குடும்பப் பின்னணியில் ஆஸ்துமா பாதிப்பிருக்கும் குழந்தைகள், அதிக ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
    குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் சவாலானது. குழந்தைகளைப் பொறுத்தவரை அறிகுறிகள் மூலமாகத்தான் பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும். அதனால் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.

    முக்கியமான அறிகுறிகள்

    இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக இருமல், அடிக்கடி சளித்தொந்தரவு, நெஞ்சுப்பகுதியில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடுவதில் சிரமம், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவது, விளையாடி முடித்த பிறகோ, ஓடி வந்த பிறகோ அதிகம் மூச்சுவாங்குதல்.

    குறிப்பிட்ட ஏதோவொரு நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் தீவிரமாகத் தெரியலாம். ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்தவரை குழந்தையை அதிக மாசு மற்றும் புகை நிறைந்த சூழலில் விடாமல் இருப்பது நல்லது. சில குழந்தைகளுக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்தகைய ஒவ்வாமைப் பிரச்னைகள் பெரும்பாலும் குழந்தையின் வளரிளம் பருவத்தில் சரியாகிவிடக்கூடும். ஒவ்வாமை தீவிரமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    குழந்தைகளுக்கென பிரத்யேகமாக திறன் வாய்ந்த இன்ஹேலர் வகைகள் இருக்கின்றன. எனவே, பயமின்றி இன்ஹேலர் பயன்படுத்தலாம். குடும்பப் பின்னணியில் ஆஸ்துமா பாதிப்பிருக்கும் குழந்தைகள், சுற்றுச்சூழல் கேடு அதிகம் உள்ள பகுதியில் வளரும் குழந்தைகள், அதிக ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இதையும் படிங்க..ஓணம் சத்யா: எரிசேரி
    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். செரிமானப் பிரச்சனையை நீக்கும்.
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2 துருவியது
    தேங்காய் துருவல் - அரை கப்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    தயிர் - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு வாணலியில் துருவிய பீட்ரூட், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    துருவிய தேங்காய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அதை பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும்.

    இந்த கலவையை 7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். கலவை கொதிப்பதற்கு முன்பு அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும்.

    சுவையான பீட்ரூட் பச்சடி ரெடி.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.
    தாய்ப்பால் கொடுத்தால் அழகு பாழ்பட்டுவிடும் என்ற மனநிலை கொண்டிருந்த தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். அதே நேரத்தில் ‘தனது குழந்தையின் பசியைப் போக்க தங்களால் போதுமான அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியவில்லையே’ என்று வருந்துபவர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.

    குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைந்து போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடுகிறது. தாய்ப்பால் சுரப்பு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பிறப்பின்போது 500 மில்லி லிட்டருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது தாய்ப்பால் சுரப்பை தாமதப்படுத்தும்.

    கருப்பை பாதிப்பு, நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை தாய்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மார்பகத்துக்குள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பி திசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தாய்ப்பால் அளவு குறைவதற்கு காரணமாகிவிடும். மார்பக அறுவை சிகிச்சை, மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் அளவு குறைய தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

    பிறந்த குழந்தைக்கு தினமும் 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருசில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

    ×