search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தொழில்துறையில் பெண்கள்
    X
    தொழில்துறையில் பெண்கள்

    தொழில்துறையில் பெண்கள்

    உலக சராசரி அளவுக்கு நிகராக இந்தியாவிலும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    பெண்களில் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளோடு அலுவலக வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு முழுமூச்சாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய பேர் தொழில் முனைவோர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் உலக நாடுகளுடன் போட்டி போட்டு முன்னணியில் இருக்கும் அளவுக்கு தொழில்துறையில் பின்தங்கி இருப்பதற்கு பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு 27 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் உலக அளவில் பெண்களின் சராசரி பங்களிப்பு 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 75 மில்லியன் பெண்கள் தொழில்துறையில் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம். உலக சராசரி அளவுக்கு நிகராக இந்தியாவிலும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அபிதாப் காந்த் குறிப்பிடுகையில், ‘‘மக்கள் தொகையில் பாதி பேர் தொழிலாளர் தொகுப்பில் இல்லாவிட்டால் 9 முதல் 10 சதவித வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லாதது. பெண்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யும் பொறுப்பு ஆண்களிடம்தான் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படும்போதெல்லாம் அவர்கள் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் தொழில்துறைக்கு வர வேண்டியது அவசியமானது’’ என்கிறார்.
    Next Story
    ×