search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தடையில்லாத தாய்ப்பாலுக்கு..
    X
    தடையில்லாத தாய்ப்பாலுக்கு..

    தடையில்லாத தாய்ப்பாலுக்கு..

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.
    தாய்ப்பால் கொடுத்தால் அழகு பாழ்பட்டுவிடும் என்ற மனநிலை கொண்டிருந்த தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். அதே நேரத்தில் ‘தனது குழந்தையின் பசியைப் போக்க தங்களால் போதுமான அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியவில்லையே’ என்று வருந்துபவர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.

    குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைந்து போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடுகிறது. தாய்ப்பால் சுரப்பு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பிறப்பின்போது 500 மில்லி லிட்டருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது
    தாய்ப்பால்
    சுரப்பை தாமதப்படுத்தும்.

    கருப்பை பாதிப்பு, நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை தாய்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மார்பகத்துக்குள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பி திசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தாய்ப்பால் அளவு குறைவதற்கு காரணமாகிவிடும். மார்பக அறுவை சிகிச்சை, மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் அளவு குறைய தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

    பிறந்த குழந்தைக்கு தினமும் 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருசில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

    Next Story
    ×