search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விழாக்களுக்கு அணிவதற்கு ஏற்ற ஆடை ரகங்கள்
    X
    விழாக்களுக்கு அணிவதற்கு ஏற்ற ஆடை ரகங்கள்

    விழாக்களுக்கு அணிவதற்கு ஏற்ற ஆடை ரகங்கள்

    அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
    திருமணத்திற்கு..

    லெகங்கா :

    திருமண நிகழ்ச்சியில் அணிவதற்கு பொருத்தமான ஆடைகளுள் ஒன்றாக லெகங்கா அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட லெகங்காவை தேர்ந்தெடுத்து அணிவது, திருமண வைபவத்தில் தனித்துவமான நபராக காட்சிப்படுத்தும்.

    புடவை :

    புடவையை போல் பெண்களை அழகாக காண்பிக்கும் உடை வேறு எதுவும் இல்லை. திருமணம் மற்றும் பாரம்பரிய விழாக்களின் போது புடவையை அணிவது அந்த நிகழ்வுக்கு அழகு சேர்க்கும். அணிபவரையும் அழகுடன் மிளிரவைக்கும்.

    விருந்து நிகழ்ச்சிகளுக்கு..

    சாதாரண அனார்கலி :

    அதிக வேலைப்பாடுகள் அல்லாத சாதாரண அனார்கலியை அனைத்து வகையான விழாக்களின் போதும் அணிந்து மகிழலாம். இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

    பேண்ட் ஸ்டைல் சல்வார் :

    இன்று உலகம் முழுவதும் பேண்ட் ஸ்டைல் சல்வார் அணிவது பேஷனாக இருக்கிறது. இது ஸ்டைலான தோற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளிக்கிறது. இது விருந்து நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்கு ஏற்றது.

    அலுவலகத்துக்கு

    பஞ்சாபி சல்வார் :

    சல்வார், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருசேர கலந்து பிரதிபலிக்கும் ஆடைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்சாப் சல்வாரை எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் அணியலாம். அலுவலகத்திற்கும் உடுத்தி செல்லலாம். அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற
    ஆடை
    களுள் சிறந்ததாக இது அமைந்திருக்கிறது.

    சுடிதார் :

    இது அழகான, அசத்தலான தோற்றத்தை அளிக்கக்கூடியது. அலுவலக பணிக்கு அணிவதற்கு ஏற்ற ஆடைகளுள் சுடிதாரும் ஒன்று. நவநாகரிக தோற்றத்தை கொடுக்கும் ஆடை ரகமாக கருதப்படுகிறது.

    Next Story
    ×