என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
    தேவையான பொருள்கள்

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    உளுந்து (வறுத்தது) - ஒரு ஸ்பூன்
    தக்காளி - 2
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    மிளகு - அரை ஸ்பூன்
    சீரசும் - அரை ஸ்பூன்
    உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பசலைக்கீரை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், மஞ்சள், உளுந்து ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அரைத்த கலவையை தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக, கீரையையும் போட்டு வதக்கி, ஆறு டம்ளர் நீர் சேர்த்து பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவு உப்புச் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான சுவையான பசலைக்கீரைசூப் ரெடி.
    சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
    கணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்… குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை? ஆனால் காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.

    பல இல்லத்தரசிகள் காலை உணவில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள்.

    அறிவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போ ஹைட்ரேட்ஸ் கிடைக்கும். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.

    காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்சை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு. அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்..

    இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை சாப்பிடலாம்.

    `நேரமாச்சு’ என அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

    சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
    சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரி தெரிவித்து உள்ளது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் அனுசரிக்கப்படும், ‘குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்' நிகழ்ச்சியையொட்டி, டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான முதுநிலை கண் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் இணையதளம் வாயிலான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் சென்னையை சேர்ந்த குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் அல்லது ஒன்றரை கண்’ பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5 மடங்குகள் அதிகரித்திருப்பது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100 சதவீதம் உயர்ந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் இது 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கி இருக்கிறது.

    வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதுமே இவற்றிற்கு காரணமாக உள்ளன. மேலும், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், செல்போன், கணினி, டி.வி. ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    சென்னையில், கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் 1 அல்லது 2 பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு 10-க்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர்.

    கணினி திரைக்கு முன்பாக அல்லது செல்போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுவதை, மாற்றி அமைத்து அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொண்டால் இது போன்ற பாதிப்புகள் குறையும். ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதால், செல்போன்களுக்கு பதிலாக, மடிக்கணினி அல்லது கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும்.

    கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் டாக்டர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம்.
    மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு சீராக இருக்கும்போது உடல் இயக்கமும் சீராக இருக்கும். ஹார்மோன்கள் சமநிலை இன்றி காணப்படும்போது பிரச்சினைகள் ஏற்பட தொடங்கும். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பங்களிப்பு முக்கியமானது. அதன் உற்பத்தி சீராக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் உற்பத்தி இயல்பைவிட அதிகரிக்கும்போது பெண்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட தொடங்கும். பொதுவாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலங்களில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

    மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்றவை ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம். உடல் பருமன் அதிகரிப்பதும், குறிப்பாக இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும் ஈஸ்ட்ரோஜன் அளவு கூடியிருப்பதற்கான அறிகுறியாகும்.

    உடற்பயிற்சி செய்தாலும், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும் உடல் எடை குறையாமல் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு சீராக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈஸ்ட்ரோஜனுக்கும் அதில் பங்கு இருக்கிறது.

    மாதவிடாய் திடீரென்று ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தாலோ அதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு காரணமாக இருக்கலாம். நினைவாற்றலுக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் தொடர்பு இருக்கிறது. பெண்களின் உடல் நலனில் ஈஸ்ட்ரோஜனின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், அதன் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    டாக்டர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காதவர்களும், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்கு, போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள்.
    நீரிழிவு நோய் ஆயுளை குறைத்துவிடும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.

    தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை உண்பது, சர்க்கரை சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது என சிலவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும். மேலும் பரிசோதனைகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அவசியம்.

    டாக்டர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காதவர்களும், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்கு, போதிய உழைப்பை அளிக்காதவர்களும் நீரிழிவு நோயை முற்றவைக்கிறார்கள். நீரிழிவு பிரச்சினை அதிகரிக்கும்போது கண்கள், சிறுநீரகங்கள், கால்கள், இதயமும்கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    நீரிழிவை கட்டுப்படுத்த முடியாமல் முற்றவிடுபவர்களுக்கு மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இம்மாதிரியான சூழலில் அதை கட்டுக்குள் கொண்டுவர இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளலாம். இப்போது வலியில்லாத இன்சுலின் ஊசிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. வலியில்லாத அந்த ஊசிகள் ‘இன்சுலின் பம்ப்’ என அழைக்கப்படுகின்றன.
    கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. இந்த தழும்பை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
    இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெரும்பாலான வேலைகள் கணினி சார்ந்த டிஜிட்டல் திரைகளின் வழியாகவே நடக்கின்றன. இது தவிர பெரும்பாலானோர் தங்கள் பொழுதுபோக்குகளுக்கு இணையதளங்களையே சார்ந்திருக்கிறார்கள். அதனால் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. அவைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

    கண்ணாடிகள் அணிவதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அப்படி கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் தழும்புகளும், வடுக்களும் ஏற்படுகின்றன. அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.

    உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கேடகோலேஸ் எனும் நொதி சருமத்தை பிரகாசமாக்கவும், கருமையான புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு நான்கு முறை செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.

    வெள்ளரிக்காயும் தழும்புகள் மறைவதற்கு உதவும். அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

    எலுமிச்சை சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் வடுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அடுத்தமாக தடவ வேண்டும். அப்போது மூக்கு பகுதியில் குளிர்ச்சி தன்மையை உணர முடியும். குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம்.
    நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் சோர்வு அடைந்தவர்கள் தினமும் நார்த்தம் பழச்சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் வலிமை அடையும்.
    தேவையான பொருட்கள்

    நார்த்தங்காய் சாறு - 2 டீஸ்பூன்
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    பெருங்காயம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 கப்
    கடுகு, வெந்தயம் - தாளிப்பதற்கு

    செய்முறை


    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்பு மஞ்சள் பொடி, பொடித்த மிளகு, சீரகப்பொடி, பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும்.

    கலவை கொதித்து வரும் போது கொத்தமல்லி தழை, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

    சுவையான நார்த்தங்காய் ரசம் தயார்.
    நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
    பெரும்பாலான வெற்றியாளர்களிடம் உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்னவென்று கேட்டால் மிக எளிமையாக ‘எனக்கு எது தெரியாது, என எனக்கு தெரியும்’ என்பார்கள்.

    ஆம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் தான். நமக்கு எது தெரியும் என யோசிக்கும் நாம் பல நேரங்களில் நமக்கு எது தெரியாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

    உங்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத அல்லது தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் உயரதிகாரி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலானோர் தனக்கு அந்த விஷயம் பற்றி தெரியாது என தயக்கம் இல்லாமல் தைரியமாக சொல்லிவிடுவதில்லை. காரணம் நமக்கு தெரியாத விஷயங்கள் எவை என்பது நமக்கே தெரிவதில்லை. அதனால் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் குழம்பி இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்கிறோம்.

    இந்த இடத்தில்தான் வெற்றியாளர்களுக்கும் சாதாரணமானவர்களுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பற்றிய புரிதல் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்தி கற்றுக் கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். அதாவது எந்த விஷயத்திலும் சாதாரணமாக பின் வாங்கி விடுவதில்லை. தங்கள் உழைப்பை முழு அர்ப்பணிப்புடன் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள கொடுக்கிறார்கள்.

    நமக்குத் தெரியாத விஷயங்கள் மீது கவனம் செலுத்தும்பொழுது அவற்றை கற்றுக் கொள்ள துவங்குகிறோம். இக்கட்டான தருணத்தில் யாரையாவது அந்த வேலைக்காக தேடுவதைத் தவிர்த்து, நாமே அதை செய்து முடிக்கலாம். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பொறுத்தவரையில் எதையும் கண்டு பின் வாங்கி விடாமல், அதைச் செய்து முடிக்கும் சூப்பர் ஹீரோவாகத் திகழ்வீர்கள்.

    தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பொழுது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களைத் தகுதி படுத்திக்கொள்ளலாம்.

    தெரியாத விஷயங்களைப் பற்றி யோசிக்கும் அதே நேரம் நமக்கு தெரிந்த விஷயங்களையும் அசைபோட்டு பார்ப்போம். இது மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். நேரம் கிடைக்கும்பொழுது ஒரு பேப்பர், பேனா எடுத்துக் கொண்டு உங்களுடைய பலம், பலவீனத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் எழுதிப் பாருங்கள். அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பரிடம் கேளுங்கள்.

    ஆரம்பத்தில் இப்படி நம்முடைய பலத்தையும், பலவீனங்களையும் பற்றிய பட்டியல் தயாரிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
    பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.
    மூன்று ஆண்டுக்குள் (2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை) 24 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    தேர்வுகளில் தோல்வி, திருமண அழுத்தம், வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம், சமூகத்தில் நற்பெயர் வீழ்ச்சி, தேவையற்ற கர்ப்பம் போன்ற காரணங்கள் தற்கொலைக்கான பின்னணியில் உள்ளன. நன்றாக படித்தாக வேண்டும் என்று குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம்தான் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. கல்வி மீதான அழுத்தம் காரணமாக 4,046 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள். குழந்தை பருவ திருமண நிர்பந்தம் காரணமாக 639 பேர் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் உடல்நலக்குறைவு காரணமாக 2,567 பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    காதல் விவகாரம் காரணமாக 3,315 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி 81 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களின் இறப்பு ஏற்படுத்திய துக்கம் காரணமாகவும் சிலர் இறந்திருக்கிறார்கள். தற்கொலை செய்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை 13,325. திருமண நிர்பந்தத்தால் இறந்த 639 பேரில் பெண் குழந்தைகள் 411 பேர்.

    ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2017-ல் 8,029 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது 2018-ல் 8,162 ஆக இருந்தது. 2018-ல் 8,377 ஆக உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இருக்கின்றன.

    பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம் என்பது குழந்தை நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மன அழுத்தம், சுய சந்தேகம், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி, குடும்ப நிதி நிலைமை போன்றவையும் தற்கொலையுடன் தொடர்புடையவை என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
    விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
    விளையாட்டுச் சிகிச்சை என்பது ஒருவிதமான உளவியல் சிகிச்சை. இங்கே குழந்தைகள் தங்களுடைய உணர்வு மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை தாங்களே அலசுகிறார்கள், அதை சிகிச்சையாளர் அல்லது தங்களது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்சனைகளைக் குறைக்கும்.

    வாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போது விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன.

    விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.
    பாதத்தில் சரியான முறையில் மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்படும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டமும் மேம்படும்.
    பண்டைய காலம் முதல் பாதங்களில் செய்யப்படும் மசாஜுக்கு ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பாதத்தில் சரியான முறையில் மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்படும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டமும் மேம்படும். தசைகளும் நெகிழும். பதற்றம் குறையும். உடல் வலியும் நீங்கும். பாதங்களில் சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யும்போது இதயம், நுரையீரல் பலப்படும். கழுத்து வலி, சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    பாத மசாஜ் மூலம் கிடைக்கும் முக்கியமான 6 நன்மைகள்:

    1. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்: பாதங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டிவிடும். குறிப்பாக பாதத்தின் நுனி பகுதியில் மசாஜ் செய்யும்போது உடல் புத்துணர்ச்சியை உணரும். தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரும். பதற்றம், மன அழுத்தம் குறையும்.

    2. மனநலம்: மாதவிடாய் நாட்களில் பெண்கள் பல்வேறு அசவுகரியங்களை எதிர்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால், மனநலனிலும் ஓரளவு நெருக்கடி தோன்றும். பாதத்தின் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்தால் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மனநலம் மேம்படும்.

    3. கர்ப்பகாலம்: பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் வீக்கம், வலி போன்றவை களால் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் பாத மசாஜ் செய்யும்போது வளர்சிதை மாற்ற செயல்பாடு மேம்படும். அதனால் வீக்கம், வலி குறையும்.

    4. உற்சாகம்: சோம்பல், தசை பலவீனம், உற்சாகமின்மையால் அவதிப்படுகிறவர்கள் பாத மசாஜ் செய்தால் உற்சாகத்துடன் செயல்படலாம்.

    5. தலைவலி: கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் வலி, தலையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஏற்படும் வலிகளை போக்கவும் பாத மசாஜ் துணைபுரியும். கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    6. புத்துணர்ச்சி: கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவை முதுகுத்தண்டுவடத்துடன் தொடர்புடையவை. வட்ட இயக்கத்தில் விரல்களை அழுத்தி தேய்த்து 30-45 விநாடிகள் பாதத்தில் மசாஜ் செய்தால், முதுகு தண்டுவடத்தில் புத்துணர்ச்சி பரவும்.
    உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும்.
    கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பம் முடிஉதிர்வு பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

    முடி உதிர்வை இஞ்சி கட்டுப்படுத்தும். இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும்.

    பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி சாறை தலையில் தடவிவிட்டு காலையில் ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிவிடலாம்.

    இஞ்சி சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்யவேண்டும். அது மயிர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் சிறப்பு சேர்மம் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவும். சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.

    உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும். கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும். கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும் செபம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.

    இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும்.
    ×