என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துபோகும் பிரச்சினை ஏற்படும். அவர்கள் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
    நகங்களை சுற்றி இருக்கும் தோல் பகுதி சிலருக்கு உறிந்துகொண்டே இருக்கும். சிலருக்கு நகம் உடைந்துபோகும் பிரச்சினை உண்டு. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

    நகங்களின் பக்கவாட்டில் ஏற்படும் சரும உதிர்தலுக்கு பப்பாளி, அன்னாசி பழங்களை பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் அன்னாசி பழ ஜூஸுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை கலந்து கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரில் கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையுடன் பழ கூழை கலந்து நகங்களின் சுற்றுப்புற பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நகங்களின் சுற்றுப்புற பகுதி மென்மையாக மாறிவிடும். நகமும் பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும். சரும உதிர்வு பிரச்சினையும் ஏற்படாது.

    நகங்கள் உடைந்துபோவதை தடுக்கவும் முட்டையின் மஞ்சள் கருவை உபயோகப்படுத்தலாம். அரை கப் தேனுடன், அரை கப் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள்கரு, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து பாட்டிலில் ஊற்றிவைக்க வேண்டும். அதனை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நகங்களில் தடவி வந்தால் நகம் உடைதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தியும் நகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். எலுமிச்சை பழத்தின் தோல் பகுதியையும் நகங்களில் தடவி வரலாம். அதற்கு நகம் உடைதல், நகவெடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
    மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

    கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு  நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.

    தேவையான பொருட்கள் :

    கருப்புக்கவுனி அரிசி மாவு - 1 கப்.
    உளுந்துமாவு - 1 கப்.
    நெய் - 1 கப்.
    பனைவெல்லம் - 1 கப்.

    செய்முறை:

    கருப்புக்கவுனி அரிசி மாவு, உளுந்துமாவு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பனைவெல்லத்தை 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாகு ஆக்க வேண்டும்.

    பின்பு அதில் மாவு வகைகளை கொட்டி, கெட்டியாகாமல் கிளற வேண்டும். நன்கு வெந்ததும் நெய் விட்டு, கிளறி இறக்க வேண்டும்.

    சத்தான சுவையான கருப்புக்கவுனி களி ரெடி.
    உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததை பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும்.
    உங்கள் அலுவலகத்தில், குழுவில் நீங்கள் சிறப்பானவராக மாற, இந்த தொகுப்பு வழிகாட்டுகிறது.

    1. சிரிப்போடு தொடங்குங்கள்

    முதன் முதலில் ஒருவரோடு பேசத்தொடங்கும்போது உங்களுடைய முகத்தில் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. அதனால் முதலில் பேசத் தொடங்கும்போது உதட்டில் ஒரு சிறு புன்னகையோடு பேசத் தொடங்குங்கள். கூடிய விரைவில் உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும்.

    2. உடல் மொழியை மேம்படுத்துங்கள்

    வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அது தேவையில்லாதது, அலுவலகம் என்று வந்து விட்டால் உங்கள் உடல்மொழி மிகவும் முக்கியம். எல்லோரிடமும் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இறுக்கமாக இருக்காதீர்கள். கை குலுக்கும்போது, உச்சபட்ச அன்பை அவர் உணரும் வண்ணம் கை குலுக்குங்கள். உடன் பணிபுரிபவர் பாராட்டும் படியான செயலைச் செய்யும்போது, இயல்பாக அவர் தோளில் தட்டிக் கொடுத்து நட்பை மேம்படுத்தலாம்!

    3. கவனமாகப் பேசுங்கள்

    நண்பர்களிடம் நீங்கள் பேசுவது வேறு. அவர்களிடம் பேசுவது போல் இல்லாமல் புதிதாக அறிமுகம் ஆனவர்களிடம் வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள். முதலிலேயே தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். முடிந்தவரை அவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள். அதிலேயே அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட முடியும்.

    4. உதவி செய்வதில் தொடங்கட்டும்

    மற்றவர்களோடு உங்களுக்கான தொடர்பு என்பது உதவி செய்வதில் ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய நண்பரைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் மற்றவர்களுக்கு உதவும் பண்பு என்பது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்பதால் கூடுமானவரை உங்கள் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

    5. மற்றவர்களின் நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

    உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் நேரம் என்பது முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததை பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் உரையாடுங்கள்.

    6. அனைவரையும் சமமாகக் கருதுங்கள்

    உங்களை விட வயதில் சிறியவரோ, பெரியவரோ உங்களுக்குக் கீழே வேலை செய்பவரோ அல்லது உயரதிகாரியோ யாராக இருந்தாலும் சரி மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை தரும் விதத்தில்தான் உங்களுக்கு மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு மரியாதை தருவதன் மூலமாகவே, அவர்கள் உங்களிடத்தில் பழகுவதை விரும்புவார்கள்.

    7. தவறுகளை உணருங்கள்

    ஒரு தவறு செய்தால் அதைச் சமாளிக்காதீர்கள். யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான பிணைப்பு மேம்படும்.
    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது.
    பச்சிளம் குழந்தையை குளிக்க வைப்பதற்கு இளம் தாய்மார்கள் தயங்குவார்கள். மென்மையான தசைகள் சூழ்ந்திருப்பதால் குழந்தையை கையாளும்போது ஏதேனும் பாதிப்பு நேர்ந்துவிடுமோ? என்ற கவலை அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். குழந்தையை எப்படி குளிக்க வைப்பது? எந்த நேரத்தில் குளிக்க வைப்பது? என்ற குழப்பமும் உண்டாகும்.

    பருவ கால நிலையை பொறுத்து குழந்தையை குளிக்க வைக்கும் நேரத்தை தீர்மானிக்கலாம். குளிர் காலங்கள், மழை காலங்களில் 8 மணிக்கு முன்பாக குழந்தையை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும். வெயில் பரவ தொடங்கி குளிர் தன்மை குறைந்த பிறகு குளிப்பாட்டுவதே நல்லது. அதுபோல் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களிலும், மிதமான வெப்பம் நிலவும் காலங்களிலும் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.

    குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குளிப்பதற்கு முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கும் இது பொருந்தும். தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.

    குழந்தையின் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு குளிப்பாட்டுவதும் அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு சூடாக்கி, ஓரளவு ஆறவைத்து குழந்தையின் உடலில் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எண்ணெய் மசாஜ் செய்து வரலாம்.

    குழந்தையை தினமும் குளிப்பாட்டுவதுதான் நல்லது. ஏனெனில் குழந்தையின் உடலில் தோல் உரிந்து புதிய தோல் உருவாகிக்கொண்டே இருக்கும். தினமும் குளிக்கவைத்து சருமத்தை தூய்மையாக பராமரித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

    அதேவேளையில் குளிர் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை குழந்தைக்கும் ஏற்படக்கூடும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டலாம். தண்ணீரை சூடாக்கி குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆறவைத்து குளிப்பாட்டி விடலாம்.
    பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி தேய்ப்பது ஈறுகளை காயப்படுத்தக்கூடும்.
    பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய பற்களை கொண்டவர்கள் பெரிய பிரஷை பயன்படுத்தும்போது ஈறுகளை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் போகலாம். பிரஷை அழுத்தி தேய்க்கும்போது ஈறுகளுக்கு காயமும் ஏற்படலாம். பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள், உணவு துகள்களை அப்புறப்படுத்த முடியாமலும் போகலாம். மென்மையான பிரஷ்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.

    பற்களின் தன்மைக்கு ஏற்ப பிரஷ் வளைந்து கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலர் உபயோகிக்கும் பிரஷில் உள்ள தூரிகைகள் சில நாட்களிலேயே உதிர தொடங்கிவிடும். அப்படிப்பட்ட பிரஷை மாற்றிவிடுவதே நல்லது.

    காலையில் தாமதமாக எழுந்திருக்கும்போது அவசர அவசரமாக பல் துலக்கிவிட்டு கிளம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பல் துலக்குவதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் பொறுமையாக பல் துலக்க வேண்டும், காலையும் மாலையும் இரு வேளை பல் துலக்குவதும் அவசியமானது.

    பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி தேய்ப்பது ஈறுகளை காயப்படுத்தக்கூடும். பல் இடுக்குகளும் சுத்தமாகாது. அங்கு பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் பல் வலி போன்ற பல் பிரச்சினைகள் உருவாகும். பிரஷை கொண்டு மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    பல் துலக்கும்போது பற்களின் மேல் பகுதியை சுத்தம் செய்வதற்குத்தான் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஈறுகளுக்கு இடையில் உள்ள பகுதிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஈறுகளில் ரத்தப்போக்கு, பல்வலி போன்ற பிரச்சினைகள் இதனால்தான் உண்டா கின்றன. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வளைத்து பற்களை சுத்தப்படுத்த வேண்டும்.

    சாப்பிட்ட பிறகு பற்களில் தங்கி இருக்கும் உணவு துகள்களை அகற்றுவதற்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலர் சாப்பிட்ட பிறகும் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்ட பிறகு கால் மணி நேரம் கழித்துதான் பல் துலக்க வேண்டும்.
    உடல் சூடு, எரிச்சல், வயிற்றில் அசவுகரியம், தூக்கமின்மை, அல்சர், அசிடிட்டி, வாயு தொல்லை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணரலாம்.
    மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். அதைவிட அதிக வெப்பநிலை தொடர்ந்து நீடித்தாலோ, இயல்பான உடல் வெப்ப நிலையை தக்கவைக்க முடியாமல் போனாலோ அது உடல் வெப்பம் அல்லது வெப்ப அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. உடல் சூடு, எரிச்சல், வயிற்றில் அசவுகரியம், தூக்கமின்மை, அல்சர், அசிடிட்டி, வாயு தொல்லை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணரலாம். சாதாரண உடல் வெப்பநிலை பாரன்ஹீட் அளவின்படி 98.6 டிகிரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட சற்று குறைவாகவோ, சற்று அதிகமாகவோ இருக்கலாம். அது பாதிப்பில்லை.

    அதிக வெப்பநிலை நிலவும் இடங்களில் வாழ்வது, வெப்ப அலைகள் வெளிப்படுவது, வெப்பமான ஆடைகள் அணிவது, உணவு பழக்கவழக்கம் போன்றவையும் உடல் வெப்பத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைப்பதற்கு இயற்கையாகவே சில வழிமுறைகள் இருக்கின்றன.

    இளநீர்: இதில் 94 சதவீதம் நீர் உள்ளது. அது உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து வெப்ப அழுத்ததத்தை குறைக்க உதவும். இளநீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைய உள்ளன. எனவே, இது அடிப்படையில் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட பானமாக விளங்குகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல.

    புதினா: இது அதிக அளவு மென்தால் சக்தியை கொண்டது. குளிர்ச்சித்தன்மையும் நிறைந்தது. தினமும் புதினா இலைகளை கொண்டு டீ தயாரித்து பருகலாம். பற்பசை, தைலம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது. உடல் வெப்பத்தை குறைக்கும் எளிய மூலிகையாகவும் இது திகழ்கிறது.

    கற்றாழை: கற்றாழை ஜெல் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். உடல் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை உடலில் தடவி வரலாம். இதில் பானம் தயாரித்தும் அளவோடு பருகலாம்.

    தண்ணீர்: நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்வது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் எளிமையான வழிமுறையாகும். அதிக உடல் வெப்பநிலை கொண்டவர்கள் வெந்நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிரவைக்கலாம். குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட வாளியில் சில நிமிடங்கள் பாதங்களை முக்கிவைத்தால் உடல் வெப்பம் உயருவதை தடுக்கலாம்.

    நீர்ச்சத்து உணவுகள்: நீர்ச்சத்து கொண்ட உணவுகளும் உடல்வெப்பத்தை குறைக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, பாகற்காய் போன்றவை அத்தகைய உணவுகளாகும்.

    சந்தனம்: சந்தனமும், முல்தானி மெட்டியும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும். இவை சோப்பு, பவுடர் போன்றவைகளில் சேர்க்கப்படுகின்றன. அவைகளை உடலில் தடவி வருவதன் மூலம் குளிர்ச்சியை உணரலாம். ஆயுர்வேதத்தின்படி, சந்தன மரம் உடலை குளிர்விக்கக்கூடியது.

    மோர்: மோர் உடல் வெப்ப நிலையை சீராக்கி வளர்சிதை மாற்றத்தை மேம் படுத்தும். உடல் எடை குறைப்பிற்கும் உதவும். தினமும் மோர் பருகலாம். கோடை காலத்தில் மோரில் மிளகுத்தூள் கலந்து பயன்படுத்தலாம்.

    பால்-தேன்: ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து ஒரு வாரம் தினம் ஒரு முறை பருகி வந்தால் உடல் உஷ்ணம் சீராகும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகளும் கட்டுப்படும். தொண்டைப் புண்ணையும் குணப்படுத்தலாம்.

    ஜூஸ்: மாதுளை ஜூஸ் சருமம், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டது. இதில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். நாள் முழுவதும் உற்சாகத்தை உணரலாம். மாதுளை ஜூஸ், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். அதன் மூலம் சிறுநீரில் உள்ள அமில அளவும் குறையும்.
    நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளை சுட்டிக்காட்டும்போது வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம்.
    நாம் எதிரிகளே இல்லாத வாழ்க்கை வாழ விரும்பு கிறோம். அது தவறு. எதிரிகள் நமக்கு பல விஷயங்களை கற்றுத்தருவார்கள். அவைகளை நாம் கற்றுக்கொண்டால்தான் பலம் பெற முடியும். கபீர்தாஸ் என்ற துறவி, ‘எதிரிகள்தான் எனக்கு ஆசான்கள். என்னை நானே திருத்திக்கொண்டு, நான் முழுமையாக மனித வாழ்க்கை வாழ அவர்கள் என்னை தூண்டு கிறார்கள். அதனால் எதிரிகள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்றார். இந்த கூற்று, மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நமக்கு எதிரிகள் இல்லாவிட்டால் நமது குறைகளே நமக்கு தெரியாது.

    எந்த நேரம் நம்மை பற்றி என்ன விமர்சனம் வருமோ என்று நாம் விழிப்புடன் இருக்க நமது எதிரிகள்தான் உதவுகிறார்கள். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. நம்மையும் சிலர் உற்று நோக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்மை ஒவ்வொன்றிலும் சிறப்பாக செயல்படவைக்கிறது. அந்த வகையில் நம் திறமைகளை பெருக்கிக்கொள்ள எதிரிகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை. நாம் எங்கேயாவது சோர்ந்து உட்கார்்ந்துவிடாமல் இருக்க அந்த தூண்டுகோல்தான் உதவுகிறது.

    எதிரிகளே இல்லாத அரசனுக்கு வெற்றி என்பது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு சரித்திரத்திலும் இடம் கிடையாது. ஒரு அரசனின் அத்தனை புகழுக்கும் காரணம் அவரது எதிரிகள்தான். ஒருவரது வீரமும், விவேகமும் எதிரிகள் முன்னிலையில்தான் பறைசாற்றப்படுகிறது. அப்படியானால் எதிரிகள் மதிப்பிற்குரியவர்கள்தானே!

    நண்பர்களை புகழ்ந்து கொண்டாடும் நேரத்தில் எதிரிகளை பற்றியும் சிந்திக்கவேண்டும். இருவரையும் கவனித்து கணித்துப் பார்க்கவேண்டும். அப்போது நண்பர்கள் மூலம் கிடைத்த பலன்களைவிட எதிரிகள் மூலம் கிடைத்த பலன் அதிகம் என்பது புரியும். எதிரிகளாக யாரையாவது நினைத்து மன அழுத்தம் கொள்ளும்போது, பழைய எதிரி களால் கிடைத்த நன்மைகளை கணக்குப்போட்டு பார்த்தால், அந்த மனஅழுத்தம் நீங்கிவிடும்.

    ‘எந்த ஒரு தொழிலிலும் போட்டி என்ற ஒன்று இல்லாவிட்டால் புதிய சிந்தனைகள் எதுவும் தோன்றாது’ என்று பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா கூறியிருக்கிறார். எதிரிகளை சந்திக்க தயாராக இல்லாதவர்களால் வெற்றியை எட்டவே முடியாது. பெரிய தொழிலதிபர்களிடம் கேட்டால் அவர்கள் எதிரிகளை பற்றிதான் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களை பற்றிதான் நிறைய கதைகளை சொல்வார்கள்.

    தொடக்க காலத்தில் கோத்ரெஜ் நிறுவனத்தினர் தயாரித்த பூட்டுகளை பயனற்றது என்று தூக்கி ஓரம்வைத்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் தொழிலை விட்டுவிடவில்லை. பல நாட்கள் முயன்று, பலவிதமான புதிய யுக்திகளை கையாண்டு புதிய பரிமாணத்துடன், நவீன தொழில்நுட்பத்துடன் பின்பு பூட்டுகளை தயாரித்தார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூட்டுகளை வேறு எந்த சாவியாலும் திறக்க முடியவில்லை. வேறு சாவிகளை பயன்படுத்தி தங்கள் பூட்டுகளை திறந்தால் பரிசு தருவதாக அறிவித்தார்கள். அந்த பரிசை யாராலும் பெற முடியாத அளவுக்கு அந்த பூட்டுகள் இருந்தன. ஒரு செயலை பேருக்காக செய்வதும், பல எதிர்ப்புகளை முறியடித்து முழுவீச்சுடன் செய்வதும் வெவ்வேறு விதமான பலன்களைத் தருகிறது.

    ஆனால் ஒரு உண்மையை எல்லோரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். யாராலும் எதிரிகளை நேசிக்க முடியாது. அவர்களை அழைத்து, உங்களால்தான் நான் உயர்ந்தேன் என்று விருந்துவைக்கவும் முடியாது. அதே நேரத்தில் அவர்களை நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதையாவது தவிர்க்கலாம் அல்லவா!

    எதிரிகளை நினைத்து வேதனைப் படாமல், தற்போது இருப்பதைவிட சிறப்பாக அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி உறுதி எடுத்துக்கொள்ளும்போது பலவிதமான புதிய வழிகள் தோன்றும். முயற்சி நம் முன்னே வந்து நிற்கும். அதுதான் வெற்றிக்கான வழி.

    நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மை சுற்றியிருக்கும் நண்பர்கள் அந்த குறைகளைக்கூற தயங்குவார்கள். ஆனால் எதிரிகள் அந்த குறைகளை தயங்காமல் கூறுவார்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம். யாருடைய குறைகளும் நிரந்தரமானது அல்ல. எதிரிகள் முன்பு நம்மை ஹீரோவாக காண்பிக்க முயற்சி செய்யும்போதுதான் நமது திறமைகள் நமக்குள்ளே இருந்து வெளிவரும்.

    நாடக கொட்டகையில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்தவர் உலகம் போற்றும் நாடக எழுத்தாளரானது அவரது எதிரிகளால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    அவர் ஒரு நாடகத்தை பார்த்துவிட்டு சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார். அதனால் கடுப்பாகிப்போன பிரபல நாடக நடிகர் ‘உனக்கு என்ன தெரியும்? நீ என்ன பெரிய நாடக எழுத்தாளரா?’ என்ற கேள்வியை எழுப்பி, அவரை குறை சொன்னார். அந்த எதிரியால்தான் அவருக்குள்ளே இருந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவர் யார் தெரியுமா? அவர்தான் ஷேக்ஸ்பியர்!
    நம்மில் பலருக்கு காபி குடிக்கும் பழக்கம் உண்டு. இதனை கொண்டாடும் விதமாக சர்வதேச காபி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
    காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள். காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

    காபியின் மருத்துவ நன்மைகள்:-

    ஆற்றல் திறன் : காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும். அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.

    ஈரலை பாதுகாக்கும் : உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.

    மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் : காபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

    வாதத்தை தடுக்கும் : இதய வாதம் போன்ற சில இதய பிரச்சனைகளை தடுக்க காபி உதவுகிறது. காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் கூட ஒன்றாகும்.

    புற்றுநோயைத் தடுக்கும் : புற்றுநோய்க்கான இடர்பாட்டையும் காபி குறைக்கும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

    காபிக்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. காபி இன்று பலவகையான மாற்றங்களுக்குட்பட்டு இருக்கிறது. ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி என்று பல அவதாரங்களை காபி எடுத்திருக்கிறது.

    உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.
    போஸ்ட்-கோவிட் நோய் மீட்டெழுதல் சிலருக்கு சில நாட்களும் மற்றவர்ளுக்கு சில மாதங்களும் ஆகலாம். தொண்டை புண், இருமல், மூச்சு திணறல், தசை வலி, மூட்டு வலி, மன குழப்பம், தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவை கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு பல பேர் எதிர்கொள்ளும் சிக்கல்கள். சோர்வு என்பது கோவிட் உட்பட வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகும்.

    உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.

    உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கு முன், கோவிட் மற்றும் பிந்தைய காலத்தில் நீரேற்றம் மிக  அவசியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நோய்த்தொற்றின் போது மற்றும் அதற்குப் பிறகு திரவ இழப்பு பல வழிகளில் ஏற்படுவதால் நீரிழப்பு பொதுவானது.



    நம் உடலில் உள்ள அனைத்து செல்கள், திசுக்கள் மற்றும் தசைகளுக்கு தண்ணீர் தேவை, இது நச்சுகளை வெளியேற்றி, வீக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைக்க உதவுகிறது. நாள் முழுவதும் உங்கள்  உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கிரீன் டீ, எலுமிச்சை சாறு, மோர் போன்ற திரவங்கள் மற்றும் நீர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

    நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு உங்கள் எல்லா உணவிலும் புரதம் மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

    புரதம் உடலின் தசைகளை நிரப்புகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அமினோ அமிலங்கள் புரதத்தை உருவாக்கும் கரிம சேர்மங்கள் மற்றும் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நம் உணவில் இருந்து மட்டுமே கிடைக்கும். நல்ல தரம் மற்றும் புரதத்தின் அளவை கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.

    அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, முட்டை, கோழி, இறைச்சி, மீன் போன்றவை சில புரத ஆதாரங்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு, பன்னீர், பருப்பு, கடலை, மற்றும் தானிய வகைகள் நல்ல புரத ஆதாரமாக இருக்கும்.

    வைட்டமின் சி, டி, மற்றும் மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற தாதுக்கள் கோவிட் நோய் மீட்பு காலத்திற்குப் பிறகு மிகவும் முக்கியம்.



    1. எலுமிச்சை நீரில் உப்பு சேர்த்தால் வைட்டமின் சி மற்றும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். நெல்லிக்காய்  வைட்டமின் சி -யின் நல்ல ஆதாரமாக இருக்கிறது.



    2. வைட்டமின் டி உடலில் ஹார்மோனாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.



    3. வைட்டமின் டி யின் சில உணவு ஆதாரங்களில் காட் லிவர் ஆயில், சால்மன், காளான், முழு முட்டை போன்றவை அடங்கும். ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, சூரிய ஒளிதான் வைட்டமின் டி.யின் சிறந்த ஆதாரம்.



    4. மெக்னீசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், இது உடலில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நரம்புகள் மற்றும் தசை செயல்பாடுகளுக்கு இது அவசியம். மெக்னீசியம் இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.



    5. மெக்னீசியம் நிறைந்த உணவுகள் கோவிட்டின் சில பக்க விளைவுகளான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவும்.



    6. துத்தநாகம்(zinc) ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது மற்றும் நிமோனியா அபாயத்தைக் குறைக்கிறது. நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த கனிமங்களின்(minerals) சரியான சமநிலை எடுக்கப்பட வேண்டும்.



    7. செலினியம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் இது உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். செலினியம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.



    இந்த கனிம உட்கொள்ளலை மேம்படுத்த நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில உணவுகளில் கீரை, முட்டை, வெண்ணெய், தானிய வகைகள், டார்க் சாக்லேட் (70% அல்லது அதற்கு மேற்பட்டவை), கடல் உணவு, பீன்ஸ், பருப்பு வகைகள் அடங்கும்.

    சர்க்கரை உணவுகள் குடலில் இருந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.

    தயிர், மோர், புளிப்பு ஊறுகாய் போன்ற புரோபயாடிக் உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு, தேங்காய், தக்காளி போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

    அனைத்து சர்க்கரை உணவுகள் மற்றும் கார்போனேட்டட்(carbonated)  பானங்களை தவிர்க்கவும். உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தும் மைதா மற்றும் துரித உணவை உட்கொள்ள வேண்டாம். ஹோட்டல்/வெளிப்புற உணவைத் தவிர்க்கவும்.  உங்கள் உணவு  கீரைகள், பருப்பு, பனீர், முட்டை, இறைச்சி, மீன் போன்ற புரதங்கள், முழு தானியங்கள், சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒரு கப் தயிர் உள்ளிட்ட அதிக காய்கறிகள் இருக்க வேண்டும்.



    உடலுக்கு வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை திரும்பப் பெற ஆரோக்கியமான உணவு முறை, சீரான ஓய்வும் பின்பற்ற வேண்டும். இரவு 7-8 மணிநேரம் தூக்கம்  உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

    நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த தொற்றுநோய்களின் போது உணவின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உங்கள் உணவு மற்றும் செயல்பாடுகள் குறித்து உங்கள் நாளைத் திட்டமிடுங்கள்.

    நல்ல உணவு, சரியான தூக்கம் மற்றும் எளிமையான உடல் செயல்பாடுகள் அனைத்தும் இணைந்து கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு உங்கள் வலிமையை மீண்டும் பெற உதவும்.

    குறிப்பு:
    அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற வண்ணம் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உணவு உட்கொள்வது சிறந்தது.



    பி. சந்தான பிரியதர்ஷ்னி,

    ஊட்டச்சத்து நிபுணர்,
    மெடால் ப்ளூம்

    விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
    ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

    ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர்.

    பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன.

    கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை.

    பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
    காலையில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கீரை, கேழ்வரகு சேர்த்து ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்
    ராகி மாவு - கால் கப்
    கீரை - அரை கட்டு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை

    கீரை, வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைமாவு, ராகி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்குங்கள்.

    நறுக்கியவற்றை மாவில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு ஆம்லெட்டாக ஊற்றி சிறு தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்து சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.
    சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
    சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி ( PCOS ) இருக்கும் போது கருவுறுவது இல்லை. இன்றைய இளம் தம்பதியரிடையே குழந்தையின்மை அதிகமாக இருப்பதற்கு ( PCOS ) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கழற்சிக்காய்த்தூள் 1 கிராம் உடன் 5 மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர கருப்பையில் உண்டாகும் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.

    கருஞ்சீரகம் 1 கிராம் , சோம்பும் 1 கிராம் அளவிற்கு சம அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2கிராம் அளவு தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி கரையும். மேலும் கருப்பையின் குற்றம் அகலும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் சூதகவலி குற்றங்கள் குறையும்.

    சோற்றுக்கற்றாழையை மேல்தோல் நீக்கிவிட்டு அதில் உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக 7 முறை கழுவிட்டு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு 1 டம்ளர் மோரில் கலக்கி வாரம் இருமுறை குடித்துவர சினைப்பை நீர்க்கட்டி குறையும். நம் உடலில் உள்ள ஹார்மோனை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

    எள் - 1 கிராம், வெந்தயம் - 1 கிராம் சமஅளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு காலை மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சினைப்பை நீர்க்கட்டி கரையும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் எனும் ஹார்மோனை ஒழுங்குப்படுத்தும்.

    கொள்ளு 1 கிராம், மஞ்சள் கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன் இந்த அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் கசாயம் செய்து குடித்துவர நீர்க்கட்டி குறையும்.

    வெட்சி பூ - 1 கொத்து, மிளகு - 5 (தூள் செய்து) இதனை குடிநீரிட்டு 60 மில்லி காலை மட்டும் 3 மாதம் தொடர்ந்து குடித்துவர கருப்பை குற்றம் குறையும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் வராமல் தடுக்கும். கர்ப்பபைபுற்றுநோய் வராமல் தடுக்கும்.

    இலவங்கப்பட்டை 2 கிராம், அதிமதுரம் - 1 கிராம் இந்த அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மட்டும் 1 கிராம் அளவு எடுத்து வைத்துக்கொண்டு கசாயமிட்டு 60 மில்லி குடித்து வர கருப்பை குற்றம் நீங்கி சினைப்பை கட்டி அகலும்.

    சுக்கு - 1 கிராம், பெருங்காயம் - 1 கிராம் அதாவது சுக்கை தோல் நீக்கி இளவறுப்பாக எடுத்துக்கொண்டு அதனுடன் பொரித்த பெருங்காயம் சமஅளவு சேர்த்து வைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை 1 கிராம் அளவு தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி அகலும்.

    மலைவேப்பிலைச்சாறு 60 மில்லி புதிதாக சாறு எடுத்து மாதவிடாயின்போது 3 நாளும் தினம் காலை 60 மில்லி உணவிற்குப் முன் அருந்திவர கருப்பையில் உண்டாகும் கட்டி சினைப்பை நீர்க்கட்டி நீங்கும். குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்களும் இதை அருந்திவருவது நல்லது. இது கருப்பையில் உண்டாகும் மலட்டு புழுவை அகற்றும்.

    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இவைகளை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு 1 கிராம் அளவு எடுத்து வெல்லம் சேர்த்து கசாயம் செய்து காலை மாலை இருவேளை 60 மில்லி அருந்திவர பெண்களுக்கு கருப்பைக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம். நம் உடலில் இன்சுலின் ஹார்மோனை சரியான அளவில் வைத்துக்கொள்ளும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இயல்பான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
    ×