search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அலுவலகத்தில்...சிறந்த ஊழியராக செயல்பட 7 டிப்ஸ்...
    X
    அலுவலகத்தில்...சிறந்த ஊழியராக செயல்பட 7 டிப்ஸ்...

    அலுவலகத்தில்...சிறந்த ஊழியராக செயல்பட 7 டிப்ஸ்...

    உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததை பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும்.
    உங்கள் அலுவலகத்தில், குழுவில் நீங்கள் சிறப்பானவராக மாற, இந்த தொகுப்பு வழிகாட்டுகிறது.

    1. சிரிப்போடு தொடங்குங்கள்

    முதன் முதலில் ஒருவரோடு பேசத்தொடங்கும்போது உங்களுடைய முகத்தில் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. அதனால் முதலில் பேசத் தொடங்கும்போது உதட்டில் ஒரு சிறு புன்னகையோடு பேசத் தொடங்குங்கள். கூடிய விரைவில் உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும்.

    2. உடல் மொழியை மேம்படுத்துங்கள்

    வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அது தேவையில்லாதது, அலுவலகம் என்று வந்து விட்டால் உங்கள் உடல்மொழி மிகவும் முக்கியம். எல்லோரிடமும் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இறுக்கமாக இருக்காதீர்கள். கை குலுக்கும்போது, உச்சபட்ச அன்பை அவர் உணரும் வண்ணம் கை குலுக்குங்கள். உடன் பணிபுரிபவர் பாராட்டும் படியான செயலைச் செய்யும்போது, இயல்பாக அவர் தோளில் தட்டிக் கொடுத்து நட்பை மேம்படுத்தலாம்!

    3. கவனமாகப் பேசுங்கள்

    நண்பர்களிடம் நீங்கள் பேசுவது வேறு. அவர்களிடம் பேசுவது போல் இல்லாமல் புதிதாக அறிமுகம் ஆனவர்களிடம் வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள். முதலிலேயே தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். முடிந்தவரை அவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள். அதிலேயே அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட முடியும்.

    4. உதவி செய்வதில் தொடங்கட்டும்

    மற்றவர்களோடு உங்களுக்கான தொடர்பு என்பது உதவி செய்வதில் ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய நண்பரைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் மற்றவர்களுக்கு உதவும் பண்பு என்பது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்பதால் கூடுமானவரை உங்கள் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

    5. மற்றவர்களின் நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

    உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் நேரம் என்பது முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததை பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் உரையாடுங்கள்.

    6. அனைவரையும் சமமாகக் கருதுங்கள்

    உங்களை விட வயதில் சிறியவரோ, பெரியவரோ உங்களுக்குக் கீழே வேலை செய்பவரோ அல்லது உயரதிகாரியோ யாராக இருந்தாலும் சரி மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை தரும் விதத்தில்தான் உங்களுக்கு மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு மரியாதை தருவதன் மூலமாகவே, அவர்கள் உங்களிடத்தில் பழகுவதை விரும்புவார்கள்.

    7. தவறுகளை உணருங்கள்

    ஒரு தவறு செய்தால் அதைச் சமாளிக்காதீர்கள். யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான பிணைப்பு மேம்படும்.
    Next Story
    ×