என் மலர்
ஆரோக்கியம்
சம்பா கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சம்பா கோதுமையில் சத்தான சுவையான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா ரவை - 1/2 கப்,
கருப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வெங்காயம் - 1,
ப.மிளகாய் - 2,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சம்பா கோதுமை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

சூப்பரான சத்தான சம்பா கோதுமை பணியாரம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் செல்போன் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் பாடல் கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதற்கடுத்த வயது குழந்தைகள்தான் ஆன்லைனில் சென்று சோஷியல் மீடியாவில் உலாவ சென்றுவிடுகிறார்கள்.
சோஷியல் மீடியா என்பது இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதையெல்லாம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பார்க்கவே முடிவதில்லை.
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் மொபைலைக் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஒன்று: ஆன்லைனைப் பயன்படுத்துவது மற்றும் சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றைப் பற்றிய அடிப்படை செய்திகளை உங்கள் குழந்தையிடம் உரையாடுங்கள். அவற்றில் உள்ள ப்ளஸ் போலவே மைனஸையும் எடுத்துக்கூறுங்கள்.
இரண்டு: மொபைலைக் குழந்தையிடம் கொடுக்கும் முன், உங்களின் சோஷியல் மீடியா கணக்குகளிலிருந்து Logout ஆகிவிட்டு கொடுங்கள். ஏனெனில், உங்களை நம்பி யாரேனும் ரகசியமாகப் பகிர்ந்திருக்கும் செய்திகளை உங்கள் குழந்தை படித்துவிட கூடும். மேலும், சோஷியல் மீடியாவில் உலாவ நீங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததைப் போலாகி விடும்.
மூன்று: வங்கி கணக்குகளை மொபைல் மூலம் பராமரிக்கிறீர்கள் என்றால், பாஸ்வேர்டு மாற்றி விட்டுக் கொடுங்கள். மேலும், வங்கி ஆப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஏதேனும் தவறுதலாக அழுத்திவிட்டால் பணம் போய்விடக்கூடும் என்பதை நன்கு மனதில் பதியும்படி கூற மறந்து விடாதீர்கள்.
நான்கு: உங்கள் மொபைலின் தேவையற்ற ஆப்களை டெலிட் செய்துவிட்டு குழந்தையிடம் மொபைலைக் கொடுங்கள். Parental control எனும் ஆப் மூலம் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைலைப் பயன்படுத்தலாம் என்பதாக செட் பண்ண முடியும். இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.
ஐந்து: உங்கள் குழந்தை சோஷியல் மீடியாவில் உலாவ தொடங்கி விட்டது என்றால், மிகுந்த கவனத்தோடு இருங்கள். அவற்றிற்கான பாஸ்வேர்டுகளை எவ்வளவு கடினமாக அமைப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். மேலும், குடும்ப போட்டோக்களைப் பகிரக்கூடாது என்ற கொள்கையை நீங்களும் குழந்தையும் சேர்ந்தே எடுங்கள்.
ஆறு: ஏதேனும் ஆப் டவுண்லோடு செய்வதென்றால், அதன் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகச் செய்யக் கற்றுக்கொடுங்கள். உங்கள் போனுக்கு வரும் மெசேஜ்ஜை தானாக ஹேண்டில் செய்ய ஓகே வா என்று கேட்பதற்கெல்லாம் ஓகே என்று கொடுக்கக்கூடாது என்று சொல்லுங்கள்.
ஏழு: மிக முக்கியமாக, குழந்தையிடம் மொபைலைக் கொடுப்பதற்கு முன் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நடைமுறையில் உள்ளதா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் மொபைல் உள்ளாகி விடக்கூடும்.
இவையெல்லாம் எச்சரிக்கைதான். உங்கள் குழந்தையை குற்றவாளிபோல கண்காணிக்க வைப்பது அல்ல. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். அதை குழந்தைகள் பழகும்வரை பெரியவர்கள் கண்காணிப்பது தவறல்ல.

உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

* தேன், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முக அழகாக மாசுமறுவற்று இருக்கும்.
* 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.
* உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.
* சோத்துக்கத்தாழை சாறு ஒரு டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு முகத்தை அலம்பினால் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.
* 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து கலக்கி, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகம் மாசு மருவற்று இருக்கும்.
* 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 ஸ்பூன் பாலின கலந்து முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முதத்திலுள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

கிரீன் டீயில் துளசி இலையை சேர்த்து குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். அவை என்ன மாற்றங்கள் என்று அறிந்து கொள்ளலாம்
துளசி மற்றும் கிரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.
சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் கிரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.
துளசி கிரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.
பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருப்பதனால் இதனை கிரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி கிரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.
கிரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்படுத்தும். கிரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து பசியை குறைக்கும். ‘தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தனக்கு விடியலும், உற்சாகமும் அவள்தான். அவளை பார்த்தே ஆகவேண்டும்’ என்று புலம்ப வைக்கும்.
காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
காதலியை பார்த்ததும் பரவசத்துடன் கூடிய பதற்றத்தை உருவாக்குபவை அட்ரினலின், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள். இரவில் காதலியை நினைத்து தூக்கத்தை இழக்கவைப்பது டோபமைன் ஹார்மோன். செரோடோனின் சுரக்கும்போது உடலில் ஏக்கமும், தவிப்பும் தோன்றும். காதலியை பார்க்கும்போது ஈஸ்ட்ரோஜனும், டெஸ்டோஸ்டிரானும் சுரந்து இச்சையை உருவாக்கும். ஆக நீங்கள் காதலில் விழுந்துவிட்டால் இத்தனை ஹார்மோன்களும் அவ்வப்போது சுரந்து உடலுக்குள் ஏகப்பட்ட கலாட்டாக்கள் செய்யும்.
வெளிப்படையாக காதலிக்கு வழங்கும் முத்தம் காதலனின் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும். டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உதடுகள் இணையும்போது சுரக்கின்றன. இதனால் கண்கள் செருக காதலர்கள் தன்னை மறப்பார்கள்.
டோபமைன் அதிகமாக சுரந்தால் புல்லரிக்கும் உணர்வு ஏற்படும். செரோடோனின் அதிக அளவு சுரந்தால் கிறங்கிப்போவார்கள். தழுவலின்போது சுரப்பது ஆக்ஸிடோசின். முத்தம் இன்னும் சூடாக இருந்தால் ஆக்ஸிடோசின் அளவு அதிகரித்து காதலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆக்ஸிடோசின் சிந்திக்கும் ஆற்றலை கட்டுப்படுத்தக் கூடியது.
காதல் ஜெயித்து திருமணத்தில் இணைந்த பின்பு தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது உடலில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதுதான் தம்பதியரின் பிணைப்பை வலுவாக்குகிறது. உறவின்போது ஆண்களின் உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் வாஸோபிரெசின் எனப்படும். இது துணையை பாதுகாப்பது தனது பொறுப்பு என்ற அக் கறையை உருவாக்கும்.
பெண் கருவுற்றிருக்கும்போது அவரிடம் இருந்து பேரோமோன் எனப்படும் தூண்டுபொருள் வெளிப்படும். இது கணவரின் மூளையில் புரோலாக்டினை சுரக்க செய்கிறது. இது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை மீது அதிக பாசம் கொள்ளச்செய்கிறது.

செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் நன்மைகள், தீமைகள் என இரண்டும் கலந்துள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் தான் அதிகம். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பேஷன் உலகில் நாளுக்கு நாள் பல ஸ்டைல்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை அனைத்து நன்மை தருவதில்லை.
செயற்கை கண் இமைகளை பொருத்திக் கொள்பவர்களுக்கு கண் பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பல பேருக்கு நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக வளரும் இமை மயிர் பலமாக சேதமடைந்து உதிர்ந்து விடும். சிலருக்கு நோய் தொற்று ஏற்படாவிட்டாலும் தொடர்ச்சியாக செயற்கை கண்ணிமைகள் பயன்படுத்துவதால் இயற்கையாக வளரும் கண் இமைகள் கொட்டி, அதன்மேல் செயற்கை இமைகள் கூட பொருத்த முடியாமல் போகலாம்.
செயற்கை கண் இமைகள் நமக்கு நாமே பொருத்திக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக சிறப்பு அம்சம் கொண்ட பார்லர்கள் உள்ளன. எல்லா பார்லர்களிலும் இதற்கான சிறப்பு வசதிகள் கிடைப்பதில்லை இல்லை. வெகு சில பார்லர்களில், அதிலும் வெகு சிலபேர் மட்டுமே செயற்கை கண் இமைகள் பொருத்துவதில் கற்றுத் தேர்த்தவர்களாக உள்ளனர் . அவர்களிடம் நேரம் கிடைப்பதும் அரிதினும் அரிதாகவே இருக்கும்.
செயற்கை கண் இமைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கென தனியாக பிரஷ் வைத்து கோதி விட வேண்டும். தண்ணீரில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை செய்யாவிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதனால் உண்டாகும் அழகும் கெட்டுவிடும்.
மஸ்காரா பயன்படுத்துவதே போதுமான அழகை கண்களுக்கு அளிக்கிறது. கண் இமைகள் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் அழகு, வெறும் மஸ்காராவிலேயே கிடைக்கிறது. இன்றைய தேதியில் மஸ்காராவின் ரகங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன.
கண் கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் செயற்கை கண் இமைகள் பொருத்தக்கூடாது. அது பொருத்தமானதாக இருக்காது. ஆரோக்கியமாகவும் இருக்காது. கண் இமைகள் சற்று பெரிதாக இருப்பதால் கண்ணாடியில் பட்டு சுருண்டுவிடுவதும், உருத்தலை ஏற்படுத்துவதும் தொந்தரவாக இருக்கும். செயற்கை கண் இமைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.
கண் இமைகள் நீளமாக இருப்பதால் மற்ற மேக்கம் போடுவதோ, கண் மை வைத்துக்கொள்வதோ கூட முடியாமல் போகும். மேக்கப் போடுவது, பவுண்டேசன் கோட்டிங் கொடுப்பது என எந்த வித அழகுபடுத்தும் வேலைகளையும் நாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடியாது. செயற்கை கண் இமைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நேரிடும்.

துளசியை நாம் தினமும் சாப்பிடுவதின் மூலம் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
தேவையான பொருட்கள்
துளசி - 1 கப்
புதினா - ½ கப்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பாதம் பருப்பு - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் துளசியையும் புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு ,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் பூண்டு, மிளகு, புளி,பாதாம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்கள் சிறிது ஆறியவுடன் அதில் துளசியை சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் தரும் துளசி துவையல் ரெடி.
துளசி - 1 கப்
புதினா - ½ கப்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
பாதம் பருப்பு - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் துளசியையும் புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு ,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் பூண்டு, மிளகு, புளி,பாதாம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்கள் சிறிது ஆறியவுடன் அதில் துளசியை சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் தரும் துளசி துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கணவனை இழந்த எல்லா பெண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது.
கணவனை இழந்துவிட்ட மனைவி அன்றாட வாழ்க்கையில் மிகவும் தடுமாறிப்போகிறார்கள். அதோடு குழந்தையும் இருந்தால், அதனை வளர்க்க அவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோரும் உறவினர்களும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். இந்த மறுமணம் அவர்கள் வாழ்க்கையை நறுமணமாக்கும் விதமாக அமையவேண்டும்.
நன்றாக அறிமுகமான பெண்ணாக இருப்பது நல்லது என்று சொல்லி மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொள்ள முற்படுகிறவர்கள் அதிகம். வீட்டுப் பெரியவர்களும் அதற்கு ஒத்துழைப்பார்கள். அதன் முடிவு, அந்த பெண்ணின் மனதிற்குப் பிடிக்காத ஒரு கட்டாய திருமணம் போல் ஆகிவிடக்கூடாது. அந்தப் பெண் ஏற்கனவே யாரையாவது மனதில் நினைத்திருந்தால் அவனைத் தூக்கி தூரவீசிவிட்டு, இந்த தியாக வாழ்க்கையில் இறங்க வேண்டியிருக்கும். அந்த வாழ்க்கை இருவருக்குமே நறுமணம் தராது.
கணவனை இழந்த எல்லா பெண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அவர்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். சிந்தித்து தனக்கு மறுமணம் அவசியம் என்று உணரும்பட்சத்தில் அவசரப்படாமல் அவருக்கு மணமகனை தேடவேண்டும். அதற்கான திருமண தகவல் மையங்களில் தகவல் பெறுவதாக இருந்தால், அந்த தகவல்கள் உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கூடுமானவரை நன்கு அறிமுகமான ஆணை தேர்வு செய்து அவர்கள் விருப்பத்துடன் மணமுடிப்பது அவசியம்.
மறுமணம் செய்துகொள்ளும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. 'தங்களுக்கு மறுமணத்தில் அவ்வளவு பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்' என்பார்கள். குழந்தைகளுக்காக அம்மா செய்துகொள்ளும் மறுமணம் பெரும்பாலும் வெற்றியடையாது. வளர்ந்த குழந்தைகளால் சுலபமாக புதிய அப்பாவை ஏற்றுக்கொள்ள முடியாது.
குழந்தைகளை மட்டும் மனதில்வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை தேர்வு செய்தால், அவள் வீட்டில் ஆயா வேலை பார்ப்பவள் போல் ஆகிவிடுவாள். தனக்கும் அந்த ஆயா போன்ற பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் மறுமண கணவர் நடந்துகொள்வார். அதனால் அந்த பெண்ணுக்கும் திருப்தியான வாழ்க்கை கிடைக்காது. அவருக்கும் திருப்தி கிடைக்காது. மறுமணத்தில் வாழ வரும் பெண்ணின் மனநிலையும் மிக முக்கியம். மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.

நாய்கள் அன்பானவைதான். இருப்பினும் அவற்றால் ஆபத்து ஏற்படாத வகையில் கவனமாக இருங்கள். எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள்.
பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் அவை, தனிமைக்கு ஏற்ற துணையாக திகழ்கின்றன. தற்போது கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால், பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதை போக்க நாய்கள் துணைபுரிகின்றன. நாய்களோடு பிள்ளைகள் அதிக பாசம் கொண்டு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. பொதுவாக வீட்டில் வளர்க்கும் நாய்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. என்றாலும், திடீரென்று நாய் கடித்துவிடவோ அல்லது வேறுவிதங்களில் காயம் ஏற்படுத்தி விடவோ வாய்ப்பிருக்கிறது.
நாய் கடித்தாலோ, காயம் ஏற்படுத்தினாலோ செய்ய வேண்டிய முதலுதவி மிக முக்கியமானது. ஆழமான காயம் என்றால் சுத்தமான துணியால் லேசாக அழுத்தி, இரத்தம் வெளியேறுவதை தடுக்க வேண்டும். இரத்தப்போக்கு நின்ற பிறகு காயத்தை கழுவி சுத்தப்படுத்தவேண்டும். காயம் அடைபட்ட நிலையில் இருந்தால் அதில் கிருமிகள் பெருகி கிருமித்தொற்று ஏற்பட்டுவிடும். அதனால் காயத்தை துணியால் கட்டக்கூடாது. முதல் உதவி செய்த பின்பு அதற்குரிய டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். சிறிய காயம் என்றாலும் அந்த இடத்தில் நிறைய தண்ணீரைவிட்டு கழுவி ஆன்டிசெப்டிக் கிரீம் பூச வேண்டும்.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர், விஷ முறிவுக்கான ஊசியை போட்டுக்கொள்வது முக்கியம். பாதிக்கப்பட்டது குழந்தை என்றால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, அந்தக் குழந்தைக்கு ஏற்கனவே போடப்பட்டிருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் பற்றிய விவரத்தை எடுத்துச்செல்லவேண்டும். ஐந்து வருடத்திற்குள் டெட்டனஸ் வாக்சின் போடப்பட்டிருந்தால், மீண்டும் போடவேண்டியதில்லை.
எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். நாய் அமைதியானதாக இருந்தாலும் அது தூங்கும்போதோ, உணவருந்தும்போதோ தன்னை தொந்தரவு செய்வதை அவை விரும்புவதில்லை. வளர்ப்பு நாய்களுக்கு எல்லாவிதமான தடுப்பூசிகளையும் அந்தந்த காலகட்டத்தில் போட்டுவிடுங்கள். நாய்கள் அன்பானவைதான். இருப்பினும் அவற்றால் ஆபத்து ஏற்படாத வகையில் கவனமாக இருங்கள்.

காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். எனவே வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். கொசுக்கடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது நல்லது. இதற்கு ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.
கொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு ்தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அந்த பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை 2 நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.
எனவே வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும் சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்திக்கொள்ள ‘ஒரே ஒருவரால்தான்’ முடியும். அந்த ஒரே ஒருவர் யார் தெரியுமா? நீங்கள்தான்! உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சீர்படுத்த முடியும்.
உற்றார் உறவினர்களை வெறுத்தபடி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு முதல் வீதி வரை அவர்களுக்கு உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. திருமணமானவர்கள் என்றால் வீட்டில் மனைவியுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை. ஒருவேளை பேசிவிட்டாலும் அதை சண்டையில் கொண்டுபோய் முடித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் அவர்களை பிடிப்பதில்லை. பிரச்சினைகளை ஒருபோதும் மனந்திறந்து பேசமாட்டார்கள். வேலை செய்யும் அலுவலகத்திலும் ‘ஈகோ’ வால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள். நெருக்கமான நண்பர்கள் போனில் அழைத்தாலும், பேசாமல் அலட்சியப்படுத்தி விடுவார்கள். நண்பர்களை நேரில் சந்திப்பதையும் தவிர்ப்பார்கள்.
இப்படிப்பட்ட உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்திக்கொள்ள ‘ஒரே ஒருவரால்தான்’ முடியும். அந்த ஒரே ஒருவர் யார் தெரியுமா? நீங்கள்தான்! உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சீர்படுத்த முடியும்.
எப்படி?
நீங்கள் அடிக்கடி ‘நான் ரொம்ப ‘பிஸி’ யாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை நெருக்கமானவர்களிடம்கூட பயன்படுத்துகிறவராக இருப்பீர்கள். ‘மீண்டும் உன்னை அழைக்கிறேன்’, ‘உங்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்புகிறேன்’ என்று கூறினாலும் அதை செய்யமாட்டீர்கள். நீங்கள் செய்யும் முதல் தவறு இங்கிருந்துதான் தொடங்குகிறது. ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கும்போது மட்டுமே ‘நான் சிறிதுநேரம் பிஸியாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும். அதே நேரத்தில் நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையில் இருந்தாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் இரண்டு நிமிடத்தை செலவழித்துதான் ஆகவேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களால் உறவுகளை சீர்படுத்த முடியும்.
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பார்த்தபடியே உங்கள் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும்தான் உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடமிருந்தும் கிடைக்கும். அதனால் பெற்றோரிடம் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையாக இருந்து நிதானமாக நேருக்குநேர் பேசுங்கள்.
உங்கள் மனைவியை அலட்சியப்படுத்துவது, தரக்குறைவாக விமர்சிப்பது போன்றவைகளை செய்துகொண்டே, உங்கள் மகனிடம் ‘பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும். பெண்களை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் உபதேசம் செய்து கொண்டிருந்தால் அது உங்களை முரண்பாடான மனிதராக வெளிக்காட்டிவிடும். நீங்கள் கொள்கையற்றவர் என்பது உங்கள் குழந்தைகளுக்கே தெரிந்துவிடும். அதனால் உறவுகளை சீர்படுத்தவேண்டுமானால் அதை வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். கணவர், மனைவிக்கும்-மனைவி, கணவருக்கும் சம உரிமை தரவேண்டும்.
குடும்பத்தினர், நண்பர்களுடனான சுற்றுப்பயணங்கள் இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கானவை மட்டுமல்ல, மனம்விட்டுப் பேசும் நெருக்கத்தையும் உருவாக்குபவை. குடும்பத்தினரோடு வெளி இடங்களுக்கு செல்லும்போது, உற்சாகமான நேரங்களில் குழந்தைகள் மனம்விட்டு பேசும். அதன் மூலம் அவர்களுடனான உறவில் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் அதை சரிசெய்துவிடலாம்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாததை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு தெரியாததை நீங்கள் கற்றுக்கொடுங்கள். உங்களுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும், அதனை மனந்திறந்து பேசி அலுவலக உறவையும் சீர் செய்யுங்கள். உறவுகளை சீர்படுத்துவது மிக எளிது. ஆனாலும் அதை சீர்படுத்த நீங்கள் மனம் வைக்கவேண்டும்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் கண்டிப்பதையும் விட்டு விட்டு இப்படி செய்வதால் நல்ல பலனை காணலாம்.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே.
இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது. நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது. அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.