என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வாழைப்பூவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இன்று நாம் வாழைப்பூவில் சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ - 1
    உளுத்தம் பருப்பு - 100 கிராம்
    பச்சை பயறு - 100 கிராம்
    புழுங்கல் அரிசி - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3
    உப்பு - தேவைக்கு
    பெருங்காய பொடி - 1/2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பு, பச்சைபயறு, அரிசி போன்றவைகளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள்.

    பின்பு அத்துடன் காய்ந்த மிளகாயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

    நறுக்கிய வாழைப்பூவை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்திடுங்கள்.

    அத்துடன் உப்பு, பெருங்காய பொடி கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வாழைப்பூ அடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.
    கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.

    * பத்தாம் மாதத்தில் முழு வளர்ச்சியடைந்த குழந்தையை தாய் சுமப்பதால் அவரை நிறைமாத கர்ப்பிணி என்று அழைக்கிறோம்.

    * பிறப்பு உறுப்பு பகுதியில் பிரசவத்திற்குரிய இயல்பான மாற்றங்கள் உருவாகும்.

    * சிறுநீர் பையை கர்ப்பப்பை முழுமையாக அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியதிருக்கும். அதற்காக தண்ணீர் அருந்துவதை குறைத்துவிடக்கூடாது. சவுகரியமான முறையில், பாதுகாப்பான முறையில் கழிப்பறைக்கு சென்று வரவேண்டும்.

    * அடிக்கடி தொடைப்பகுதியிலோ, கால்களில் வேறு பகுதிகளிலோ தசைப்பிடித்தம் தோன்றும். இது இயல்பானதுதான். பயப்படவேண்டியதில்லை.

    * போலியான பிரசவ வலி தோன்றலாம். அதனால் இயற்கையான பிரசவ வலி எப்படி இருக்கும் என்பதை பற்றி டாக்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

    * 37 முதல் 40 வாரத்தில் குழந்தை முழுவளர்ச்சியடைந்துவிடுகிறது.

    * குழந்தை முதல் முறையாக கழிவை வெளியேற்ற தயாராகியிருக்கும். பச்சை கலந்த கறுப்பு நிறத்திலான பொருளை குழந்தை கர்ப்பப்பையின் உள்ளேயோ, பிறந்த உடனேயோ வெளியேற்றும். இதற்கு மெக்கோனியம் என்று பெயர்.

    * குழந்தை மூன்று கிலோ வரை எடை கொண்டிருக்கும். பொதுவாக 40-வது வாரத்தில் குழந்தை வெளியே வரும்.

    * எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத கர்ப்பிணியாக இருந்தால், பிரசவ வலி தோன்றும்போதோ- அதற்குரிய சூழ்நிலைகள் உருவாகும்போதோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் போதுமானது.

    * பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? விட்டுவிட்டு வயிற்று வலியும், முதுகு வலியும், வயிறு முறுக்கிக்கொள்ளும் அவஸ்தையும் தோன்றும். நேரம் செல்லச்செல்ல இந்த நிலை அதிகரிக்கும். அதே நேரம் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறும். கர்ப்பப்பை சுருங்கியும், விரிந்தும் குழந்தையை வெளியே தள்ள வழி செய்யும்.

    * சிலருக்கு பனிக்குட நீரான அம்னியோட்டிக் திரவம் வீட்டில் இருக்கும்போதே வெளியேறத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திடவேண்டும். முதல் பிரசவம் 10 முதல் 12 மணி நேரம் வரை நீளும்.

    * பத்தாம் மாதத்தில் வாரந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குழந்தையின் இருப்பு நிலை, கர்ப்பப்பை நிலை, பிறப்பு உறுப்பு நிலை போன்றவைகளை மருத்துவர் பரிசோதிப்பார். பத்தாம் மாதத்தில் ஸ்கேன் செய்தால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை துல்லியமாக அறியலாம்.
    முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் எப்படி பலன் அளிக்கும் என்று பார்க்கலாம்.
    முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் இதமளிக்கும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும்.

    * எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழ், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் ஆக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவலாம்.

    * வறண்ட சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் பால் பவுடருடன், 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை சேர்த்து குழைத்து சருமத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஏதாவதொரு மாஸ்சரைசரை லேசாக தடவிக்கொள்ளலாம்.

    * 1 டீஸ்பூன் ஓட்ஸ் கூழுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.

    * முலாம் பழ கூழையும், ரோஸ் வாட்டரையும் சம அளவு கலந்து ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கூந்தலை அலசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கூந்தல் பளிச்சென்று ஜொலிக்கும்.

    * முலாம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நச்சுகள் உள்ளிட்ட நோய் கிருமிகளை அழித்து வெளியேற்றவும் செய்யும்.

    * கண்களின் ஆரோக்கியம் காக்கவும் முலாம் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட் பீட்டா கரோட்டின், ஜியாசாந்தைன் போன்றவை கண் பார்வை திறனை மேம்படுத்த உதவும்.
    கொரோனா பற்றிய பயம் காரணமாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், சென்றுவந்த பின்பும் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.
    ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை ஓரளவுக்கு திரும்பத் தொடங்கி விட்டது. கொரோனா பீதியால் நீரிழிவு, இதய நோய் சார்ந்த பிரச்சினைகள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது நாள்பட்ட நோய்கள் மட்டுமின்றி பிற வியாதிகளுக்கும் சிகிச்சை பெறுவதற்கு பலரும் மருத்துவமனைக்கு செல்லத்தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா பற்றிய பயம் காரணமாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், சென்றுவந்த பின்பும் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

    மருத்துவமனைக்கு சென்று முன்பு போல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாவிட்டாலும் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். மருத்துவமனைக்குள் டாக்டரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும் மேற்கொள்வதற்கு கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையே செலவிடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கு ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கிவிடுவது நல்லது.

    மருத்துவமனைக்கு செல்வதற்கு முக கவசம் அணிவதோடு கையுறையும் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முக கவசத்தை உபயோகிப்பதும் நல்லது. கையுறைகளை அணிந்திருந்தாலும் மருத்துவமனையில் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொடக்கூடாது. மற்றவர்கள் பயன்படுத்திய பகுதிகள், பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

    மருத்துவரை சந்தித்துவிட்டு இதர பரிசோதனைகளை மேற்கொண்டு வீடு திரும்பியதும் அணிந்திருக்கும் முக கவசத்தை குப்பையில் போட்டுவிட வேண்டும். கைகளை சோப்பு கொண்டோ சானிடைசர் கொண்டோ கழுவிவிட வேண்டும். அதுபோல் அணிந்திருக்கும் கையுறை கள், உடைகளை வெந்நீரில் முக்கிவைத்து துவைப்பதும் நல்லது. வீட்டுக்குள் எந்தவொரு தொற்று கிருமியையும் கொண்டுவரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். காலணிகளையும் நன்றாக கழுவி சுத்தம் செய்துவிடுவது நல்லது. வீட்டின் உள் பகுதிக்குள் காலணிகளை கொண்டு வருவதையும் தவிர்த்துவிட வேண்டும்.

    செல்போன்கள், வாகனங்களின் சாவிகள், பணம் செலுத்திய கார்டுகள் என மருத்துவமனைக்கு சென்றபோது பயன்படுத்திய பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடுவது நல்லது. பருவகால மாற்றத்தின்போது நோய்த்தொற்றுக்கு ஆளாவது இயல்பானது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புக்குள்ளானால் பீதியடையாதீர்கள். தயங்காமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுவிடுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். எல்லா சமயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நடந்தால் பீதி அடையாதீர்கள். அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
    35 வயதை கடந்தும் சில பெண்களுக்கு சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.
    35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.

    அத்துடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது, கடந்தகால, எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும். இத்தகைய வாழ்வியல் முறையுடன் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதும் சரும அழகை நிலைத்திருக்க செய்யும்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனையும், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். சரும சுருக்கத்தையும் தடுக்கலாம். 200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்துக்கொள்ளவும். அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும். சுருக்கங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காது.

    முட்டையையும் பயன்படுத்தலாம். இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங் களை மங்க செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.

    தேன் மெழுகும் சரும சுருக்கத்தை தடுக்கும் தன்மை கொண்டது. 50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அது குளிர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். பின்பு அதனை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
    ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.
    ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும். இந்த தருணத்தில் குழந்தையிடம் தாய் பேசத்தொடங்கவேண்டும்.

    குழந்தையின் தலை கீழே இடுப்பு பகுதிக்கு இறங்கிவருவதால் வயிற்றில் பாரம் குறைந்ததுபோல் தோன்றும்.

    கர்ப்பப்பையில் அழுத்தம் தோன்றுவதால் அடிக்கடி முதுகுவலி ஏற்படும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் எண்ணமும் உருவாகும்.

    குழந்தையின் அசைவுகள் கடந்த மாதத்தைவிட குறைந்ததுபோல் தோன்றும்.

    காலில் வீக்கம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம்தேவை.

    பிரசவகாலம் நெருங்குவதால் தூக்கத்தில் கால்களில் தசை இழுத்துப் பிடித்து தொந் தரவு தரும்.

    34-வது வாரத்தை கடக்கும்போது குழந்தையின் சுவாச கட்டமைப்புகள் மேம்பட்டு, முழுவளர்ச்சி பெற்று செயல்படத் தொடங்கும்.

    குழந்தையை சுற்றியிருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதால், குழந்தை சிவப்பில் இருந்து ரோஸ் நிறத்திற்கு மாறும்.

    குழந்தை தூக்கத்தில் கண்களை மூடியபடியும், விழிப்பில் கண்களை திறந்தபடியும் காட்சிதரும்.

    குழந்தையின் நீளம் 47 செ.மீ. ஆகவும், எடை 2.7 கிலோவாகவும் இருக்கும்.

    ஒன்பதாம் மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு சுவாச தடை ஏற்படும். முகம் மற்றும் கை கால்களில் நீல நிறம் காணப்படும். சிசுக்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து இத்தகைய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டியதிருக்கும்.

    ஒன்பதாம் மாதத்தில் பிரசவத்தை பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவு தாய்மார்களுக்கு தேவை. பிரசவ வலி எப்படி இருக்கும்- பிரசவம் எப்படி நடக்கும்- குழந்தை வெளியேவரும்போது தாய்க்கு ஏற்படும் காயங்கள் பற்றி எல்லாம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். மகப்பேறு டாக்டரிடம் விளக்கம் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் விடை தேடிக்கொள்ளவேண்டும். இது பற்றி சில மருத்துவமனைகளில் வகுப்புகள் நடத்தி, கணவன்- மனைவிக்கு புரியவைப்பார்கள்.

    பிரசவத்தை பற்றி அச்சமூட்டக்கூடிய விஷயங்களை யாராவது சொன்னால் அதை காதுகொடுத்து கேட்கவேண்டாம். அனுபவம் கலந்த ஆலோசனை என்ற பெயரில் இந்த மாதிரி பேச வருபவர்களை தவிர்த்துவிடுங்கள். பயம், கவலை போன்ற எதுவும் இன்றி மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

    குழந்தையை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை இந்த மாதத்தில் இருந்தே செய்யத் தொடங்கவேண்டும்.

    பிரசவ நேரத்தில் கைகொடுக்கும் சுவாச பயிற்சிகளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வது நல்லது.

    இடுப்பு பகுதியில் அதிக வலி ஏற்படும். பிரசவத்திற்காக உடல் தயாராகுவதுதான் அந்த வலிக்கான காரணமாகும்.

    குழந்தைக்கு பால் புகட்ட மார்பகத்தை தயார்ப்படுத்தவேண்டும். ‘நிப்பிள் மசாஜ்’ செய்து மார்பக காம்புகளை வெளியே கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.

    தினமும் குழந்தையோடு சில நிமிடங்கள் பேசவேண்டும். குழந்தைக்காகவும், உங்களுக்காகவும் நல்ல பாடல்களையும் கேட்கவேண்டும்.

    பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை வகைப்படுத்தி ஒரு பெட்டியில் பாதுகாத்திடுங்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் அத்தியாவசியமானதாக இருக்கவேண்டும்.

    பிரவசத்திற்கு முந் தைய மாதம் என்பதால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ சுவாச தடை, நெஞ்சு வலி, தசைப்பிடித்தம், உறுப்பில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் உடனே செயல்பாட்டை நிறுத்திவிடவேண்டும். மருத்துவ உதவியும் பெறவேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும்- பின்பும் எளிதாக ஜீரணமாகும் உணவை சிறிதளவு உண்ணவேண்டும்.

    இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது டாக்டர் பரிந்துரைக்கும் நாட்களிலோ வழக்கமான பரிசோதனைக்காக செல்வது அவசியம். குழந்தையின் தலை எங்கே இருக்கிறது என்பதை டாக்டரால் தொட்டுப்பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ரத்த அழுத்தம், உடல் எடை போன்றவைகளையும் பரிசோதிப்பது அவசியம்.

    பிரசவத்திற்கு உடல் தயாராகும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு முழுமையான சத்துணவு அவசியம். தயாமின் நிறைந்த உணவுகள் உடலுக்கு அதிக சக்தியை தரும். வெள்ளை இறைச்சி, பிராக்கோலி, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் போன்றவைகள் உணவில் சேர்க்கப்படவேண்டும். இரும்புசத்தும் அவசியம்.
    ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வீட்டிலேயே விதவிதமாக தயாரித்து ருசிக்கலாம். இன்று அரிசி ரவையில் சத்தான கொத்தமல்லி உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
    தேவையான பொருட்கள் :

    அரிசி ரவா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    புளி - நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுதை கொட்டவும்.

    அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.

    ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான கொத்தமல்லி கார உருண்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடையை குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும். நாம் இந்த விஷயங்களை தெரிந்தே தவிர்க்க முடியாது.
    நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை என்பது உண்மை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும் மனத்தடைகள்தான். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் காப்பீடு எடுத்துள்ளவர்கள் வெறும் 35 கோடி பேர்தான் என்கிறது புள்ளிவிவரங்கள். ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுசு குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக்கப்படுகிறது என்கிற தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர்கள் நிலை என்னவாக இருக்கிறது, எத்தனை பேர் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்கிற விவரங்களை பார்க்கிறபோது அதுவும் நெகட்டிவாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பலரும் பாலிசியை தொடராமல் விட்டு விடுகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.

    பொதுவாக வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடையை குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும். நாம் இந்த விஷயங்களை தெரிந்தே தவிர்க்க முடியாது.

    இந்தியாவில் ஆண்டுக்காண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. என்னதான் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும், எதிரே வருபவர் உங்களைப்போல விதிமுறைப்படிதான் வாகனத்தை ஓட்டுவார் என்று சொல்ல முடியாது. இப்போதைய நமது வருமானத்தை போல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கை தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும். எனவே இந்த புரிதலோடு ஆயுள் காப்பீட்டை அணுக வேண்டும் என்கின்றனர் காப்பீடு ஆலோசகர்கள்.
    கொரோனாவால் சக நண்பர்களான மற்ற குழந்தைகளை பார்க்க முடியாததும், அவர்களோடு விளையாட முடியாததும் சிறுவர்-சிறுமியர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    சிறுவர்-சிறுமியர்கள் எப்போதுமே துறுதுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். பள்ளிகள் திறந்திருந்தால் அவர்களது துறுதுறுப்பிற்கு ஏற்ற சுறுசுறுப்பான பணிகள் இருந்துகொண்டிருக்கும். படிப்பார்கள்.. ஓடுவார்கள்.. விளையாடுவார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்திருந்த காலகட்டத்தில் அவர்களது சுதந்திர வாழ்க்கை இயல்பாக நடந்துகொண்டிருந்தது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு அவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடப்பது, அவர்களது இயல்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

    கொரோனாவால் சக நண்பர்களான மற்ற குழந்தைகளை பார்க்க முடியாததும், அவர்களோடு விளையாட முடியாததும் சிறுவர்-சிறுமியர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிற்குள்ளே அடைபட்டுக்கிடப்பதால் அவர்கள் அதிக கோபமும் கொள்கிறார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். குழுவாக அவர்கள் பிரிந்து வெளிவிளையாட்டுகளை விளையாடும்போது தோல்விகளை தாங்கும் பக்குவம் அவர்களிடம் ஏற்படும். இப்போது விளையாட முடியாமல் அவர்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் சிறிய தோல்வியைகூட தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

    குழந்தைகளுக்கு விளையாட்டு மிக அவசியம் என்பதால் அதை ஊக்குவிக்கும் விதத்தில் பெற்றோரே அவர்களுடன் சேர்ந்து தினமும் ஒரு மணிநேரமாவது விளையாடவேண்டும். தாத்தா, பாட்டிகளும் விளையாட்டைத் தொடரலாம். குழந்தைகளை பல நாட்கள் வீட்டிற்குள்ளே பூட்டிவைத்தால் அவர்களின் இயல்பான சுபாவத்தில் மாற்றம் உருவாகும். அளவுக்கு அதிகமாக அடம்பிடிப்பது, மூச்சுவாங்கும் அளவுக்கு தொடர்ந்து அழுவது போன்றவைகளில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, இயல்புக்கு கொண்டு வருவதுதான் இதற்கு தீர்வு.

    குழந்தைகள் கோபத்தில் கத்தும்போது பெற்றோரும் பதிலுக்கு கத்துவது அதற்கு தீர்வாகாது. ஒருவேளை அந்த நேரத்தில் பெற்றோரின் கத்தலுக்கு குழந்தை அடங்கிப்போவதுபோல் தோன்றினாலும், அடுத்து இருமடங்காக அடம்பிடிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

    குழந்தைகளை வீட்டிற்குள்ளே உட்காரவைப்பது அவர்களது உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறையை உருவாக்கும். உடலுக்கு தேவையான இந்த சத்து, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இது இன்றியமையாதது. காலை எட்டு மணிக்கு முன்போ, மாலையில் ஐந்து மணிக்கு பின்போ குழந்தைகளை சிறிது நேரம் வெயிலில் நிற்க அனுமதிக்கவேண்டும். அந்த நேரத்தில் பால்கனியில் விளையாட அனுமதிக்கலாம்.

    வழக்கமாகவே சிறுவர்-சிறுமியர்கள் உடல் பருத்து காணப்படுகிறார்கள். இப்போது கொரோனா அவர்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளுக்குள்ளே இருந்ததால் கூடுதல் எடைபோட்டிருக்கிறார்கள். வெளியே செல்லாததும், விளையாடாததும் அதற்கு காரணமாக இருந்தாலும், உணவிலும் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது கவனிக்கவேண்டிய அம்சம். குழந்தைகளின் உடல்எடை அதிகரிப்பது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். அதனால் குழந்தைகளுக்கு அளவோடு ஆரோக்கியமான உணவுகளை மட்டும் கொடுங்கள்.

    டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதும், சும்மாவே உட்கார்ந்திருக்கும் நேரங்களிலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது குழந்தைகளின் பழக்கமாக இருக்கிறது. வறுத்தது, பொரித்தது, இனிப்பு பலகார வகைகளை அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவைகளில் கலோரியும், கொழுப்பும் அதிகமிருக்கும். அவை உடலுக்கு ஏற்றதல்ல. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்துங்கள். கேரட், முட்டைக்கோஸ், கீரை வகைகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வழிகாட்டவேண்டும். இவை பசியை உடனே போக்கும். கலோரியும் மிக குறைவு. மலச்சிக்கல் போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.
    ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
    ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். சிலருக்கு வெளி உணவுகளை உட்கொள்ளும்போது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் தோன்றும். அவை உணவு கெட்டுப்போய் அதில் நச்சுத்தன்மை கலந்திருப்பதற்கான அறிகுறிகளாகும்.

    உணவில் நச்சுதன்மை இருந்தால் வயிற்று வலி, பசி இன்மை, காய்ச்சல் போன்று உடலில் வெப்பநிலை அதிகரிப்பது, தசை வலி போன்ற அறிகுறிகளும் தோன்றும். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்று கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதால் இந்த பிரச்சினை உண்டாகிறது. பழைய உணவுகள், சுத்தமாக தயாரிக்கப்படாத உணவுகள்தான் பெரும்பாலும் விஷமாக மாறுகின்றன. என்டமொபா, ஜியார்டியா, காம்பிலோபாக்டர், ஷிகெல்லா, சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் நோரோ வைரஸ் போன்ற பொதுவான நுண்ணுயிரிகள் உணவு நச்சுத்தன்மை அடைவதற்கு காரணமாக இருக்கின்றன.

    அடிக்கடி விஷத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டால் வயிற்றுப்போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். அதனால் உடலில் நீரிழப்பு பிரச்சினை உண்டாகும். உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றின் சமநிலை பாதிப்புக்குள்ளாகும். பிற அத்தியாவசியமான செயல்பாடுகளும் பாதிக்கப்படும். நீரிழப்பு பிரச்சினைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்புகள் நேரும். உணவு நச்சுத்தன்மை அடைவதை கவனமாக கையாளாவிட்டால் பேசுவதில் சிரமம், இரட்டை பார்வை, தசை பலவீனம், அதிகப்படியான வியர்வை, நடுக்கம், பிரமை, சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல், நாக்கு மற்றும் வாயில் வீக்கம், கை, கால்களில் நடுக்கம், இதயம் வேகமாக துடிப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உணவு விஷத்தன்மை அடைவதை தடுக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு உப்புநீரில் கழுவ வேண்டும். அதுபோல் பழங்களையும் கழுவி சாப்பிட வேண்டும். சமைப்பதற்கு முன்பு இறைச்சியையும் நன்கு சுத்தம் செய்வதும் முக்கியம்.

    * சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கத்திகள் மற்றும் காய்கறிகளை நறுக்கும் பலகைகளை தினமும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    * குளிர்சாதன பெட்டியை வாரம் ஒரு முறை சோப்பு நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் வைக்க வேண்டாம். பால் பொருட்களையும் சேமித்து வைக்கக்கூடாது.

    * சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். நன்கு காய்ச்சி குடிப்பது நல்லது.

    * எந்த வேலையாக இருந்தாலும் அதனை முடித்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது கையுறைகளை அணிவது நல்லது.

    * சாப்பிட்ட உணவு நச்சுத்தன்மை அடைந்திருந்து அவதிப்பட்டால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மென்று சாப்பிடும் உணவு வகைகளை தவிர்த்துவிடலாம்.

    * வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் நீர்ச்சத்துடன் பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட பிற தாதுக்களும் உடலில் குறைந்துபோய்விடும். அத்தகைய சூழலில் தண்ணீருடன் உப்பு அல்லது சர்க்கரையை கலந்து பருகுவது நன்மை பயக்கும்.

    * சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு இஞ்சி டீ பருகுவது நல்லது. ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். அது உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். ஒரு கப் சூடான நீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகி வரலாம்.

    * தேனுடன் லவங்கப்பட்டை தூள் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகளை களையலாம். வெந்தயமும் வயிற்றுக்கு இதமளிக்கும். அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
    வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரை பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
    வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

    வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச் சினைகளில் இருந்து விடுபடலாம்.

    * வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

    * வெண்டைக்காய் தண்ணீரை தவறா மல் பருகினால் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் எனர்ஜி பானங்கள் பருகத்தேவையில்லை. இந்த நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.

    * வெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைய உள்ளன. அவை முக்கிய உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கும். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகுவது நன்மை பயக்கும்.

    * வெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம். நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்கு கழுவி அவைகளை சிறு துண்டு களாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள். பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியதுதான்.
    எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்
    உலகிலேயே மிக கவர்ச்சிகரமான பாலினம் எது தெரியுமா? மனித இனத்தைச் சேர்ந்த பெண் இனம்தான். பெரும்பாலான பெண் பிராணிகள் ‘குறிப்பிட்ட ஒரு பருவத்தில்’ அதாவது கருவுற வேண்டிய காலத்தில் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ளும். இதற்கு மனித இனத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விதிவிலக்கு. ஆனாலும் ஒரு பெண் தனக்கு திருமணமாகிவிட்ட பின்பும்கூட தனது பாலியல் விருப்பத்தை கணவரிடம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. அவள் ‘வேண்டும்’ என்று விரும்பும் நிலையிலும், ‘வேண்டாம்’ என்று சொல்லவே பழகியிருக்கிறாள். அதையே தனது மாண்பு என்றும் அவள் கருதுகிறாள்.

    பெண்களை பெரும்பாலான ஆண்கள் அவள் உணர்வுரீதியாக பலவீனமானவள் என்றே கருதுகிறார்கள். ஆனால் பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை. அவள் அர்த்தத்தோடுதான் ஆசைப்படுவாள். ஒரு பெண், ஒரு ஆணைப் பார்த்து அனுதாபப்படுவது வேறு, ஆசைப்படுவது வேறு. அவள் ஆசைப்பட்டு வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள விரும்பும் ஆணுக்கு திறமையும், வெற்றியும் மிக தேவை என்று கருதுவாள்.

    தீரமும், திறமையும் மிகுந்தவர்களை பெண்கள் விரும்ப அவர்களது உணர்வில் ஊறிய பாரம்பரியப் பண்பு தான் காரணம். பழைய காலத்தில் வேட்டையாடி தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் உணவளிப்பதற்காகவும், பிறரிடம் இருந்து தன்னைக் காத்து, தான் வாழ உத்தரவாதம் தருவதற்கும் பலம் படைத்தவனையே பெண் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. முதலில் எதிர்பார்த்த உடல் பலம் பின்பு பொருளாதாரம் சார்ந்த பின்புலமாகவும் ஆகிவிட்டது. அவள் கடைசி வரை தன்னை பாதுகாத்து பராமரிக்கும் திறன்கொண்ட ஒருவரிடமே தன்னை முழுமையாக ஒப்படைக்க விரும்புகிறாள்.

    காலம் இப்போது பெண்களையும் வெகுவாக மாற்றியிருக்கிறது. பெண்கள் சுயமாகச் சம் பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்த போதும் இல்லாதவரை, இயலாதவரை பெண்கள் நாடுவதில்லை. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.

    பெண் யாரை விரும்புகிறாளோ அவர் முன்னால் தன்னை கவர்ச்சியாக காட்டிக்கொள்ள விரும்புவாள். தன்னை விரும்புகிறவர் பெரும்பாலும் தன்னிடம் உடல் கவர்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார் என்ற உளவியல் ரீதியான உண்மை தெரியவரும்போது, அவரைக் கவர்வதற்காக அலங்கரித்துக்கொள்கிறாள். இதற்காகப் பலமணி நேரங்களைக்கூட செலவு செய்கிறாள். அதே நேரத்தில் சமூகத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் தன்னை அலங்கரித்துக்கொள்கிறாள். அலங்காரமாக-கவர்ச்சிகரமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பெண்கள் பிறரைக் காட்டிலும் திறன் படைத்தவர்களாக, சுறுசுறுப்பானவர்களாகத் தெரிகிறார்கள். அழகு, பெண்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வெளிஉலகுக்கு காட்டுகிறது.

    சோகம், துக்கம், அன்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் பெண்கள் எளி தாக வெளிக்காட்டிவிடுவார்கள் என்பது பொது வான கருத்து. ஆனால் இந்த அத்தனை உணர்ச்சிகளையும் அடக்கிவைத்துக்கொண்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு.

    ஆரோக்கியம், ஆயுள் இரண்டிலும் ஆண்களைவிட பெண் களே முன்னணியில் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆண் பெரும்பாலும் தனது உடல் நலனிலோ, மனநலனிலோ அக்கறை காட்டுவது குறைவு. ஆனால், பெண் இதில் இருந்து மாறுபட்டவள். தனக்குப் பிரச்சினை தரக்கூடியது எதுவெனத் தெரிந்தால் உடனே அதை சரி செய்துகொள்ளக் கூடியவள். ஏனெனில், தனக்கு உடல்நலசீர்கேடு வந்துவிட்டால் தன்னைச் சார்ந்த மற்றவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற தவிப்பின் காரணமாக, அவள் நோயில் இருந்து விரைந்து நிவாரணம் பெற முயற்சிப்பாள். அது அவள் நோயை மட்டும் குணமாக்குவதோடு அல்லாமல் வாழ்நாளையும் கூட்டுகிறது.

    திருமணத்தின் மூலம் கணவனிடம் தன்னை பெண் ஒப்படைக்கிறாள். அவளது மனஉணர்வுகளையும், உடல் உணர்வுகளையும் கணவர் புரிந்துகொள்ளவேண்டும். அவளது உடல்- மன தேவைகள் அனைத்தையும் உணர்ந்து கணவர் நிறைவேற்றிவைக்கவேண்டும். மனைவி தனது ஆசைகளை வெளிப்படுத்தாதபோதும் அதனை குறிப்பால் உணர்ந்துகொண்டு கணவன் நிறைவேற்றிவைக்கவேண்டும். அப்படிப்பட்ட கணவரிடம் மனைவி உயிரோடும், உணர்வோடும் கலந்துவிடுகிறாள்.
    ×