என் மலர்
ஆரோக்கியம்
கருவில் உள்ள குழந்தைக்கு நம் உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.
கர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள், நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப்புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.
* தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.
* நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது கிடையாது. ஆகையால் சிரித்துக் கொண்டே இருங்கள்! நம் அகம் நிறைந்தால், கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சி தான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.
* தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப் படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்து விடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும் போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்து விட்டதால், அதற்கு வயிற்றில் இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்க மானால், இடம் மிகவும் குறைந்து விடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.
* குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகி விடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய் விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள். தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும்! அங்கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதே போலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்து விட்டு, இரவில் படுத்ததும் தூங்கி விடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்!
* குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது. அதே சமயம் மிகவும் பிடித்தமானது. அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும். அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ, கடுமையான குரலில் சண்டை யிட்டாலோ அது அச்சம் கொள்ளும். குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது. அதனால் இயன்ற வரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.
* தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கி விடும். இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை. ஆக, தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

20 ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது.
வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாதம் முன்பணம்“ என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. 20 ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது.
இரு தரப்பினரும் வயது, விலாசம், போன் எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் மாதச்சம்பள வேலையில் இருந்தால், நிறுவனம், பதவி இவற்றையும் குறிப்பது நலம். வாடகையை இணையம் வழியாகத்தான் அனுப்புகிறார்கள். அதற்குத் தேவையான விவரங்களைக் கொடுத்துவிடுங்கள். ஆனால் சில வீடுகளில், வாடகையை வயதான பெற்றோர் கணக்கில் வரவு வைக்க கோருவார்கள். இதுபோன்ற சமயத்தில், அக்ரிமென்டிலும் இதுதொடர்பான தெளிவான விளக்கங்கள் இருக்க வேண்டும்.
உங்களின் வீட்டில் என்னென்ன அறையில் என்னென்ன அறைக்கலன்கள் உள்ளன என்பது ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவை யாவும் இயங்கும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடகைக்கு வீட்டை விடும் முன், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை குறித்த காலத்தில் செலுத்துங்கள்.
11 மாதத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். வாடகை உயர்த்தப்படும் போன்ற வாசகங்கள் பொதுவாக ஒப்பந்தத்தில் இடம்பெறும். இவற்றைச் சில வாடகைதாரர்கள் மறுக்கலாம். விவாதித்து முடிவு எடுங்கள். வாடகைக்கு விட்ட பின்னர், ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டைப் போய்ப் பார்ப்பது பண்பல்ல. வாடகைக்கு இருப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் வாடகைக்கு விட்ட வீட்டைக் கண்காணிப்பது நல்லது.
வீடு, குடித்தனத்துக்காகத்தான், தொழில் நோக்கத்துக்காக இல்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள். தையல், டியூஷன் போன்றவை செய்தொழிலில் வரும். ஆனால் ஜெராக்ஸ் மெஷின் வைத்துக் கொள்வது, துணிகள் வாங்கி விற்பது போன்றவை வியாபாரமாகக் கருதப்படும் வாய்ப்புகள் உள்ளன. திருமணம் ஆகாத மூன்று, நான்கு பேர் வீட்டில் சேர்ந்து தங்குகிறார்கள் என்றால், ஒப்பந்தத்தை யார் பேரில் போட வேண்டும். யார் பொறுப்பு என்பதை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
வாடகைக்கான இடம் சற்று பெரியதாக இருந்தால், ஓர் அறையை மட்டும் உள் வாடகைக்கு விட வாய்ப்பு உண்டு. இதற்கான விதியும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். காலம் வேகமாக மாறிவருகிறது. அடுத்த வீட்டில் இருப்பவர்கள்கூட யாரென்று தெரியாத நிலைமை இருந்து வருகிறது. எனவே புது நபருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று குதிரைவாலி, தக்காளி சேர்தது தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 4 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணியலாம். அதற்காக மிகவும் தளர்வான ஆடைகள் அணிய கூடாது. மேலும் சரியான அளவில் ஆடை அணிந்து கொண்டு மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கமாக ஆடை அணிவதும் தவறு தான். கண்களை கூச செய்யும் வகையில் பளிச் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
பளிச் நிற ஆடைகள் தோற்றத்தை மேலும் பெரிதாக காட்டும். நிறம் குறைவாக உள்ள ஆடைகள், உங்களின் பருமனை குறைத்து உயரத்தை அதிகமாக காட்டும். பெண்கள் ஆடைக்கு ஏற்ற வகையில் நகைகளை அணிய வேண்டும். அப்போது தான் உடல் அழகாக தோற்றமளிக்கும். பெரிய அளவில் கொலுசு அணிவதையும், காதில் பெரிய அளவிலான வளையங்கள் அணிவதையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.
ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. எனவே பெற்றோர்கள் அந்தக் குழந்தை வளர்ப்பில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.
1. ஒரு குழந்தை உற்சாகத்துடன் ஊக்கமும் தந்து வளர்க்கப்பட்டால், அது தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.
2. ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமரிசக்கப்பட்டும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் பழிப்பதைக் கற்றுக் கொள்கிறது.
3. ஒரு குழந்தை சகிப்புத் தன்மையுடன் வளர்க்கப்பட்டால், அது பொறுமையை கற்றுக் கொள்கிறது.
4. ஒரு குழந்தை கேலி கிண்டல் செய்து வளர்க்கப்பட்டால், அது பிறரை கண்டு வெட்கப்பட்டு விலகி நிற்கக் கற்றுக் கொள்கிறது.
5. ஒரு குழந்தை பாராட்டி வளர்க்கப் பட்டால், அது பிறரை போற்ற, வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது.
6. ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.
7. ஒரு குழந்தை பாதுகாப்பு பயமின்மை யோடு வளர்க்கப்பட்டால், அது நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
8. ஒரு குழந்தை ஸ்திரமற்ற நிலையிலே வளர்க்கப்பட்டால், அது சந்தேகத்தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
9. ஒரு குழந்தை மரியாதை மதிப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது தன்னை மதித்து விரும்பி வாழக்கற்றுக் கொள்கிறது.
10. ஒரு குழந்தை பழிகள் சொல்லியே பழித்து வளர்க்கப்பட்டால், அது குற்ற உணர்வோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
11. ஒரு குழந்தை நடுநிலையோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் நேர்மையாக வாழக்கற்றுக் கொள்கிறது.
12. ஒரு குழந்தை ஏமாற்றத்தோடு வளர்க்கப்பட்டால், அது பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது.
13. ஒரு குழந்தை ஏற்பு உணர்வோடும் நட்பு உணர்வோடும் வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் இவ்வுலகை, இவ்வுலக மக்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்.
‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.
இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்தமிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.
ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கிறான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.
இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாக பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகிறது. இதன் காரணமாக பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும்போது அவை பாதங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதன் மூலம் பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்து காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளை தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.
தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காக சிறப்பு காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நீரிழிவு என்பது தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே, விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தை குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கால்களில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களை குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு.
எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும் என்பதை இனி பார்க்கலாம்.
* திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். மென்மையாகவும் இருக்கும்.
* சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை மினுமினுப்பாக்கும்.
* ரசாயன பொருட்கள் சேர்ந்து பிளீச்சை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படுபவர்கள் சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும். கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.
* சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை மட்பேக் குடன் சேர்த்து பயன்படுத்துங்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும்.
* ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.

பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
கேரட் - இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும்.

உடலுக்கு குளுர்ச்சியான சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!
தன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும். அப்படித்தான் தங்களைப் பற்றிய தெளிவே இல்லாமல் பலரின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகிறது.
தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு யாரும் தேவை இல்லை; தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள்.
தன்னடக்கம் என்பது வேறு; தாழ்வு மனப்பான்மை என்பது வேறு. தன்னடக்கம் தலைகுனியாது; தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும். ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும்.
குட்டக் குட்டக் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். ‘ஆகா, இதுவல்லவா சுகம்’ என்று நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது.
‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள். ‘அடங்கு அடங்கு’ என்று சொல்லியே அடக்கம் செய்துவிடுவார்கள்.
எனவே சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு!
‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் சொல்ல மாட்டார்கள். உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுங்கள்.
அத்தகைய துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும். நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாம் பெற முடியும். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கை. கோபுரம் என்றால் கோபுரம்; குடிசை என்றால் குடிசை.
நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். அதைச் சிந்தித்தால் நம்மை நாம் அறிந்து கொள்வோம். நம்மை நாம் அறிந்து கொண்டால் நம் உள்ளாற்றலைப் புரிந்து கொள்வோம். அப்படிப் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றி நிச்சயமாக நாம் பெருமிதம் கொள்வோம்.
உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்? தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். அவர்களே வெளிச்சமானார்கள். எனவே நல்லவற்றில் தற்பெருமை கொள்ளுங்கள். அதில் தவறில்லை. இருப்பவற்றை எண்ணிப் புளகாங்கிதம் கொள்வதில் என்ன குற்றம்! அது ஆரோக்கியமானதுதான். ஒருவன் தற்சிறுமை கொள்வதுதான் பெருந்தவறு. ஏனெனில், அதுதான் அவனை அழிக்கக்கூடிய அபாயகரமான நோய்.
தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். அத்தகைய மகான்களாக இல்லையென்றாலும், மனிதர்களாக நாம் வாழ வேண்டும்.
இதுவரை எப்படியோ! இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!

கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்ப தில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.
பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர் களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.
முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.
கணவன் மனைவி படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் கட்டாயம் செய்யக்கூடாது.
திருமணம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆனால், மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை. பொதுவாக, படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்ய வேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள். கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வாங்க பாக்கலாம்.
1. உடனே எழுந்திருப்பது கூடாது
உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது சில ஆண்களின் வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. இதற்க்காக மட்டும் தான் நான் இருகிறேன என்ற எண்ணம் மனைவி மனதில் தோன்ற வாய்ப்புண்டு. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.
2. குளிப்பது
உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும். உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் தலையை கோதி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.
3. வீட்டைவிட்டு வெளியேறுவது
உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.
4. உணவு மற்றும் மருந்து மாத்திரை
உறவுக்கு முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதே போல, உறவுக்கு முன்பும் வயிறு முட்டசாப்பிடக்கூடாது. பால் அளவாக குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை செய்வதைதவிர்த்து விட வேண்டும்.