search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர் செயல்களில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்
    X
    பெற்றோர் செயல்களில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்

    பெற்றோர் செயல்களில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்

    ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.
    ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. எனவே பெற்றோர்கள் அந்தக் குழந்தை வளர்ப்பில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.

    1. ஒரு குழந்தை உற்சாகத்துடன் ஊக்கமும் தந்து வளர்க்கப்பட்டால், அது தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.

    2. ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமரிசக்கப்பட்டும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் பழிப்பதைக் கற்றுக் கொள்கிறது.

    3. ஒரு குழந்தை சகிப்புத் தன்மையுடன் வளர்க்கப்பட்டால், அது பொறுமையை கற்றுக் கொள்கிறது.

    4. ஒரு குழந்தை கேலி கிண்டல் செய்து வளர்க்கப்பட்டால், அது பிறரை கண்டு வெட்கப்பட்டு விலகி நிற்கக் கற்றுக் கொள்கிறது.

    5. ஒரு குழந்தை பாராட்டி வளர்க்கப் பட்டால், அது பிறரை போற்ற, வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது.

    6. ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.

    7. ஒரு குழந்தை பாதுகாப்பு பயமின்மை யோடு வளர்க்கப்பட்டால், அது நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    8. ஒரு குழந்தை ஸ்திரமற்ற நிலையிலே வளர்க்கப்பட்டால், அது சந்தேகத்தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    9. ஒரு குழந்தை மரியாதை மதிப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது தன்னை மதித்து விரும்பி வாழக்கற்றுக் கொள்கிறது.

     10. ஒரு குழந்தை பழிகள் சொல்லியே பழித்து வளர்க்கப்பட்டால், அது குற்ற உணர்வோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    11. ஒரு குழந்தை நடுநிலையோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் நேர்மையாக வாழக்கற்றுக் கொள்கிறது.

    12. ஒரு குழந்தை ஏமாற்றத்தோடு வளர்க்கப்பட்டால், அது பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது.

    13. ஒரு குழந்தை ஏற்பு உணர்வோடும் நட்பு உணர்வோடும் வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் இவ்வுலகை, இவ்வுலக மக்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

    Next Story
    ×