என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அப்படி பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை.
    கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய அரக்கன் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இந்த நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது.

    அப்படி பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. நாம் அன்றாடம் வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், காடுகளிலும் வளரும் முருங்கை மரம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாமருந்து என்பது கொரோனாவுக்கு பின்னர் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

    முருங்கையில் வைட்டமின்-ஏ ஆனது கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் பி2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் பி3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் புரோட்டீன் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

    முருங்கையில் மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் எந்த மாதிரி கொடிய வைரசையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியில் முதலிடம் வகிக்கிறது இந்த முருங்கை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் நம்மை எந்த வைரஸும் ஒன்றும் செய்ய இயலாது.

    மார்க்கெட்டில் 10 ரூபாய்க்கு- கிடைக்கும் முருங்கைக்கீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு உயர்த்திக் கொள்ளலாம். முருங்கைக்கீரையை சூப் செய்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக கிடைக்கிறது. முருங்கைக்காய் உண்டால் கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.
    குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
    இப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். அந்த லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியோடு மட்டுமல்ல மறக்காமலும் எடுத்துச் செல்வார்கள்.

    இப்ப்போது பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான உணவை எடுத்துச் சென்றுகொண்டிருப்பீர்கள். அதுவும் கொரோனா அச்சத்தால் ஹோட்டல்களில் சாப்பிட நினைப்பவர்கள்கூட வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துசெல்லத் தொடங்கியிருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று

    கடையில் விதவிதமான லஞ்ச் பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவையாகத்தான் இருக்கும். குழந்தைகளும் வண்ணம் வண்ணமாக இருக்கும் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைத்தான் வாங்கச் சொல்வார்கள். மேலும், அவர்களுக்குப் பிடித்ததுபோல ஆப்பிள், மீன், படகு போன்ற வடிவங்களில் இருக்கும். ஆனால், நீங்கள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதைத் தவிர்க்கும்படி உணவியல் ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    குழந்தைகளோ பெரியவர்களோ காலையில் ஸ்கூல் அல்லது ஆபிஸ்க்கு நிதானமாகப் புறப்படுவது இல்லை. அவசரம் அவசரமாகத்தான் ஏதாவது மறந்துவிட்டு கிளம்பும் விதத்தில்தான் காலை பொழுது இருக்கும். அப்படியிருக்கையில், சமையல் ஒருபக்கம், புறப்படுவது ஒரு பக்கம் நடக்கும். எனவே, அந்தப் பரப்பரப்பான நேரத்தில் ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய முடியாது என்பது இயல்புதான். அதனால் சில விஷயங்களில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

    ‘சுடச் சுட இருக்கும் உணவை (சாதம், இட்லி, உப்புமா, சாம்பார், ரசம்… என எதுவாகினும்) அப்படியே லஞ்ச் பாக்ஸில் வைப்போம். அது பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எனில், உணவில் உள்ள வெப்பத்தில் பாக்ஸின் உள் லேயர் பிளாஸ்டிக்கும் வெப்பமாகி இலகும். அது உணவோடு கலந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அந்த உணவைச் சாப்பிடும் குழந்தை அல்லது பெரியவர்களுக்கு வயிற்று தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, ஃபுட் பாய்சன், செரிமாண கோளாறு, வ‌யிற்றுப் புண் உள்ளிட்டவை’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

    ஆனால், இது காலையில் கொடுத்து மாலையில் நடக்கும் ஒருநாள் விஷயம் அல்ல. நீண்ட நாள்கள் நடக்கும்போது நேரிடலாம். அதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

    ஒருவேளை குழந்தைகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்தான் வேண்டும் என அடம்பிடிக்கக்கூடும். பெரும்பாலான வீடுகளில் அம்மாதிரி நடக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தரும் குழந்தை வளர்ப்புக்கு பலரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி, குழந்தை அடம்பிடித்து பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் கேட்டால், வாங்கிக்கொடுங்கள். ஆனால், அதில் சூடான உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீர்கள். காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் செய்து கொடுப்பது, பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப அந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைப் பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள கேடுகளை அவர்களின் மொழிக்கு ஏற்ப சொல்லிக்கொடுங்கள். மாறாக, வலுக்கட்டாயமாக அதை மறுக்காதீர்கள். அப்படி மறுக்கும் விஷயங்கள் மீதுதான் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிமாகும். எனவே, கவனத்துடன் கையாளுங்கள்.
    துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
    தேவையான பொருட்கள்

    முழு நெல்லிக்காய் - 5
    பச்சை மிளகாய் - 3,
    துளசி - ஒரு கைப்பிடி அளவு
    தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
    கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

    ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, துவையலுடன் சேர்க்கவும்.

    சத்தான நெல்லிக்காய் துளசி துவையல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, பின் தொழில்துறையில் குதிக்கலாம். வாங்க நண்பர்களே
    தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் இதன் வெற்றியின் முதல்படி. இரண்டாவதாக கண்டறிந்த யுக்தியை தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல்படுத்த பாடுபடவேண்டும். பிறகென்ன தொட்ட தொழிலில் வெற்றி உங்களுக்கே.

    மிகக்குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொழில் திட்டமாக இருக்கும். அத்தகைய திட்டத்துடன் எஸ்எம்பி ஸ்டோரி வழிகாட்டும் இந்த மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, பின் தொழில்துறையில் குதிக்கலாம். வாங்க நண்பர்களே

    மெழுகுவர்த்தி தயாரிப்பு

    வீட்டில் இருந்தே எளிய முறையில் மெழுகுவர்த்தி தயாரிப்புத் தொழிலைத் தொடங்கலாம். பண்டிகைக் காலங்களில் மெழுகுவர்த்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்படும். இவைதவிர வீடுகள், ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்கள் போன்றவற்றில் அலங்காரப் பொருளாகவும் கலர்கலரான மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இது எப்போது டிமாண்ட் உள்ள தொழில். குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் 30 வரை முதலீடு செய்தாலே போதும். இதற்கென சில அத்தியாவசியமான மூலப் பொருள்களான மெழுகு, மெழுகுவார்ப்பு அச்சு, நூல், அரோமா எண்ணெய் போன்றவையும், மெழுகை உருக்கும் ஓவன், மெழுகை உருக்க பயன்படும் கலன், தெர்மாமீட்டர், எடை இயந்திரம், சுத்தியல் போன்ற சில எளிய கருவிகளும் இருந்தால் போதும் இத்தொழிலில் தடம் பதிக்க.

    ஊறுகாய் தயாரிப்பு

    இந்தியாவின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஊறுகாய்க்கு மிக முக்கிய இடமுண்டு. இந்தியாவில் உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஓர் ஊறுகாயாவது கட்டாயம் உணவில் பயன்படுத்துவார்கள். எனவே சிறுதொழிலாக ஊறுகாய் தயாரிப்பை தொடங்குபவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பாக தொழில் மட்டுமன்றி எளிமையான தொழிலும் கூட. மேலும், ஊறுகாய்க்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இருந்தாலே போது, ஊறுகாய் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம்.

    ஊதுபத்தி தயாரிப்பு

    அனைத்து மத வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஊதுபத்திகளாகும். இவை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதிக கிராக்கியுள்ள பொருளாகும். வீடுகள் மற்றும் கோயில்களில் தெய்வீக நறுமணத்தை பரப்புவதில் முக்கியப் பங்காற்றும் இந்த ஊதுபத்திகள், தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் தியான வகுப்புகளில் மனதை ஓர்நிலைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    மிக எளிய முறையில் வீட்டிலேயே குடிசைத் தொழில் போல இந்த ஊதுபத்தி தயாரிப்புத் தொழிலை மேற்கொள்ளலாம். இதற்குத் தேவையான அடிப்படை மூலப் பொருள்களாக மூங்கில் குச்சிகள், நறுமணத்துக்காக சில பொடிகள் மற்றும் சந்தன, மல்லிகை, ரோஜா போன்ற வாசனை திரவிய எண்ணெய்கள். இவை போதும் நறுமணம் மிகு ஊதுபத்திகளைத் தயாரிக்க. மொத்தமாக தயாரித்து விற்பனை செய்ய விரும்பினால் இதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் ஊதிபத்தி தயாரிப்பு இயந்திரங்கள் ரூ.50 ஆயிரம் முதல் சந்தைகளில் கிடைக்கின்றன.

    ஐஸ்கிரீம் கோன்

    கோன் ஐஸ் என பிரபலமாக அழைக்கப்படும் ஐஸ்கிரீம் வகையில் ஐஸ்கிரீமை நிரப்ப பயன்படுத்தும் பிஸ்கட் கோன் தயாரிப்பு நல்ல லாபம் அளிக்கும் தொழிலாகும். பெருகி வரும் ஐஸ்கிரீம் பார்லர்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் இந்த கோன் ஐஸ்களுக்கான கோன் தயாரிக்க மிகச் சிறிய அளவிலான இடம் இருந்தால்கூட போதும். இதைத் தயாரிப்பதற்கான இயந்திரத்தின் விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரைதான். இதையே முக்கியத் தொழிலாக மொத்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பினால் முதலீடு சற்று கூடும்.

    அப்பளம் தயாரிப்பு தொழில்

    நம் தினசரி உணவில் ஊறுகாயைப் போல முக்கிய இடம் பிடிப்பது அப்பளம். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு. திருமணம், விருந்துகள் போன்றவற்றில் உணவுடன் சுவையான அப்பளம் காலங்காலமாக பரிமாறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அப்பளம் தயாரித்தல் மிகவும் எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய குடிசைத் தொழிலாகும். இதிலும் உளுந்து அப்பளம், கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், கோதுமை அப்பளம் என பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக இது மிகவும் போட்டி நிறைந்த தொழிலாகும். ஆனால் சிறு தொழிலாக செய்பவர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பேக்கிங் செய்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

    காட்டன் பட்ஸ் தயாரிப்பு

    காதுகள் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் தயாரிப்பு மிகவும் சுலபமான தொழில். வீட்டில் இருந்தே அதற்குத் தேவையான பொருட்களை வரவழைத்து தயார் செய்யலாம். காட்டன் பஞ்சு, குச்சிகள் மற்றும் பேக்கிங் செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். இதை தயார் செய்ய சிறிய இயந்திரங்கள் உள்ளன. காட்டன் பட்ஸ் தயாரிக்கும் தொழில் தொடங்க குறைந்தது 20ஆயிரம் ரூபாய் முதல் 40ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. இதற்கானத் தேவை இருந்து கொண்டே இருக்கும் என்பதால் சப்ளை செய்து விற்பனை செய்து லாபம் காணலாம்.
    வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே அதனை சுத்தப்படுத்தலாம்.
    பண்டிகை காலம் வந்து விட்டாலே பூஜைப் பொருட்களை சுத்தம் செய்து வைப்பது பெண்களின் முதல் வேலையாகி விடுகிறது. அதில் முக்கியமாக வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே அதனை சுத்தப்படுத்தலாம்.

    வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் முதலில் வெள்ளியில் கொலுசு, அரைநாண் கயிறு போன்றவற்றை தான் அணிவிக்கிறோம். பின்புதான் தங்க நகைகள் வருகின்றன. பூஜைக்கு சற்று வசதிப்படைத்தவர்கள் வெள்ளி பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகையப் பொருட்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.

    வெள்ளித் தட்டுக்களில் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுப் பொருட்களில் உள்ள அமிலத்தன்மை வெள்ளித் தட்டை மங்கச் செய்யும். பாத்திரம் கழுவும் மெஷினில் வெள்ளிப் பொருட்களை போட கூடாது. முடிந்த வரையில் காற்று புகாத, வறண்ட குளிர்ச்சியான இடங்களில் குறிப்பாக பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். மரப்பெட்டிகளில் வைப்பது சிறந்தது. இரும்பு பீரோ போன்றவற்றில் வைப்பதனால் சுத்தமான வெள்ளை மற்றும் பிரெளன் தாளினால் ஆன உறைகளில் போட்டு வைக்கலாம். பாலித்தீன் பைகளிலும் கூட போட்டு மூடி வைக்கலாம்.

    வெள்ளிப் பொருட்களை ஒன்றாக வைப்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி வைத்தால் ஒன்றோடொன்று உராய்ந்து கீறல்கள் ஏற்பட்டு பளபளபை குறைத்துவிடும். இதை தவிர்க்க வெள்ளிப் பொருட்கள்களை தனித்தனியாக பிரித்து மூடி வைக்க வேண்டும். முக்கியமாக வெள்ளியின் மீது செய்திதாள், ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். இப்படி பலவாறு அதை பராமரிக்க வேண்டும். எப்படி வைத்தாலும் வெள்ளிப் பொருட்களின் மீது காற்று பட்டால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கருக்கச் செய்கின்றன. இப்படி கருத்த வெள்ளிப் பொருட்களை நாம் வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ள முடியும்.

    இயற்கையில் சுத்தம் செய்ய பூந்தி கொட்டையை பயன்படுத்தலாம். தேவையான அளவு பூந்தி கொட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பார்த்தால் நுரை வர ஊறி இருக்கும். இதனை எடுத்து ஒரு மிக்ஸியில் அரைத்து கொண்டு அதனை ஊற வைத்த தண்ணியோடு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் வெள்ளிப் பொருட்களை மூழ்கும்படி செய்து குறைந்தது ஒரு மணி நனைய வைக்கவும். பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பினை மெல்லிய, மிருதுவான சல்பாஞ்ச், பிரஸ் அல்லது துணியினால் தொட்டு வெள்ளியை தேய்த்து கழுவ வேண்டும். இவற்றை இளஞ்சூடான வெந்நீரில் அலசி துணியினால் ஈரத்தை துடைத்து விட வேண்டும். நன்கு உலர்ந்த வெள்ளிப் பொருட்களை திருநீறு கொண்டு துடைத்தால் அவை பளபளவென்று மின்னுகின்றன.

    உருளைக்கிழங்கை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு பெரிய பூவாக துறுவிக் கொள்ளவும் செய்யலாம். இதை ஒரு பாத்திரத்தில் சில மணி நேரம் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை வடிகட்டி எடுத்து விட வேண்டும். வடிகட்டிய நீரை ஊற்றி வெள்ளிப் பொருட்களை அதில் ஒரு மணி நேரம் வரை நனைத்து இருக்க செய்ய வேண்டும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.

    தயிர், எலுமிச்சை போன்றவற்றையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்பார்கள். ஆனால் அவை வெள்ளியை கரைக்கச் செய்யும். இது தவிர நல்ல பலன் தரக்கூடிய ஒரு வழி முறை உண்டு. ஒரு பாத்திரத்தில் வெள்ளிப் பொருட்களை முழுவதும் போடும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில், ஓரிரு அலுமினியம் ஃபாயில் பேப்பரை கிழித்துப் போடவும். அதனோடு ஒரு தேக்கரண்டி சோடா உப்பை சேர்த்து கலக்கி விடவும். இதில் வெள்ளிப் பொருட்களை போட்டு மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தை அடிக்கடி திருப்பி விடவும். வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து துணியால் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

    வீட்டில் கோல்கேட் பல்பொடி போன்றவை இருந்தால் அதை பயன்படுத்தியும் வெள்ளியை சுத்தம் செய்யலாம். நல்ல மிருதுவான தூரிகையை எடுத்து பல்பொடியை தொட்டு மெதுவாக தேய்த்து துணியால் துடைத்து எடுக்கலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் சுத்தமாகி பளபளவென்று மினுக்கும். பற்பசையையும் பயன்படுத்தலாம். இது தவிர வேறு சில ரசாயனப் பொருட்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும். ஆனால் அதற்கு சற்று எச்சரிக்கை தேவைப்படும். மேற்சொல்லப்பட்ட முறைகளால் நம் உடலுக்கு தீங்கு ஏதுமில்லை.
    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள அபெக்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிசங்கர், மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:-
    மாரடைப்பால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா? என்பது சில நேரங்களில் உங்களுக்கே தெரிவதில்லை. இது ஆபத்தானது. 5-ல் 1 மாரடைப்பு கவனிக்கப்படாமல் போகிறது. புறக்கணிக்கக் கூடாத 4 வகை மாரடைப்பு அறிகுறிகள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்...

    மார்பு வலி, அழுத்தம்

    மார்பில் அழுத்தம் அல்லது அழுத்துவது போல உணரக்கூடும். இதயத்துக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் போதுமான அளவு வழங்கப்படாததால் மார்பு வலி அல்லது மார்பு அசவுகரியம் ஏற்படுகிறது. மார்பின் மையத்தில் இந்த வலியை உணரலாம். இதுவும் பிற அறிகுறிகளும் தீவிரமாக இல்லாவிட்டாலும் டாக்டர்களிடம் தெரிவிக்க தயங்க கூடாது.

    கை, முதுகு வலி

    கை, முதுகு, கழுத்து, தாடை, வயிற்றில் ஏற்படும் வலி மாரடைப்பு தொடர்புடையதாக இருக்கலாம். லேசான தலைவலி, தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, கை அல்லது தோள்பட்டையில் வலி அல்லது அசவுகரியம், மூச்சுத்திணறல், குமட்டல் அல்லது வாந்தி போன்றவையும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

    குமட்டல்

    மாரடைப்பின்போது மார்பு வலியுடன் அல்லது அது இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படலாம். மாரடைப்புக்கு முன்னும், பின்னும் இது நிகழலாம்.

    வியர்த்து கொட்டுதல்

    வியர்த்து கொட்டுதல் என்பது பொதுவான மாரடைப்பு அறிகுறி. வியர்த்து கொட்டுவதற்கு காரணம் தமனிகள் அடைபட்டிருக்கும்போது இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்ய அதிக முயற்சி தேவைப்படுகிறது. இந்த கூடுதல் முயற்சி உடலின் வெப்பநிலை உயர்வை வியர்வை குறைக்கிறது.

    இந்த 4 அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் டாக்டரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
    ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து 34 பேரிடம் ஆய்வு நடத்தினர். அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு விஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப் படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில், ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.

    பெண்களின் முன் பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுய கட்டுப்பாடு ஆகிய வற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர். அதேபோன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
    பெண்கள் அணியும் தங்க நகைகளிலேயே வயது வித்தியாசமின்றி அவசியமாய் அணியும் ஆபரணங்களில் ஒன்று வளையல்கள். தினசரி அணிந்து கொள்ளும் வளையல்கள் பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
    பெண்கள் அணியும் தங்க நகைகளிலேயே வயது வித்தியாசமின்றி அவசியமாய் அணியும் ஆபரணங்களில் ஒன்று வளையல்கள். தினசரி அணிந்து கொள்ளும் வளையல்கள் பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே தான் வளையல்களில் அத்தனை அத்தனை டிசைன்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    இந்த பண்டிகைகாலங்களுக்காகவும் பல புதிய டிசைன்களில் வளையல்களை கடைகளில் காணமுடிகிறது. தங்கவளையல். கல்பதித்த வளையல்கள், முத்து பவளம் போன்றவை பதித்த வளையல்கள், வைரம் பதித்த வளையல்கள், எனாமல் வேலைப்பாடு செய்யப்பட்ட வளையல்கள் என்று பலப்பல புதிய வடிவங்களில் வளையல்களை காண முடிந்தது.

    வெறும் தங்கத்தினால் ஆன கெட்டி வளையல்கள் தினசரி அணிந்து கொள்வதற்கு ஏற்றவையாக இருக்கும். இந்த வகைகளில் தற்போதைய புதிய டிசைன்கள் மனதை கவரக்கூடியதாக வந்துள்ளது. கம்பிவேலைப்பாடுகள், மெல்லிய கட்டில் நுண்மையாக செதுக்கப்பட்டது போன்ற வடிவங்களில் டிசைன்கள் பார்க்க எளிமையாகவும் கவர்ச்சியாகவும் தினசரி அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக் கூடியவகையிலும் அழகாய் இருக்கின்றன. சிறுசிறு தங்கப்பூக்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கியது போன்ற தோற்றத்தில் வந்திருக்கும் வளையல்கள் வித்தியாசமாக இருக்கிறது. சிறுமணிகள் கோர்க்கப்பட்ட போன்ற வடிவத்தில் ஒரு விரற்கடை அளவு அகலம் கொண்டதாக உள்ள வளையல்கள் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    தங்க வளையல்களில் உள்ள டிசைன்களை போலவே கல் பதித்த நகைகளும் புது புது டிசைன்கள் அதிகளவில் இன்றைய நகைகடைகளில் பார்க்க முடிகிறது. வெறும் வெள்ளை நிற கற்களும் பலவண்ணகற்களும் பதிக்கப்பட்ட வளையல்கள் மிக அழகானவை. ஒரு வரிசையில் வெள்ளைகற்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்ட பூக்கள் நடுவில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளையல்கள் மிக நேர்த்தியாக காட்சியளிக்கின்றன.

    மிகவும் தடிமனாக காட்சியளிக்கும் ஆன்டிக் வகை வளையல்கள் அன்கட் மற்றும் அன்பாலிஸ்ட் கற்கள் பதிக்கப்பட்டு பார்க்க மிக பிரம்மாண்டமாகவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொண்டதாகவும் இருப்பதை காண முடிகிறது. பொதுவாக வைர வளையல்கள் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டவையாகவும் ஆங்காங்கே கற்கள் தனித்து தெரிய கூடியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக மிக பொடியான வைரக்கற்களை கொத்துக்கொத்தாக பதிக்கப்பட்டு வரும் இன்றைய வைரவளையல்கள் பார்க்க பிரமிப்பூட்டும் விதமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வளையல்களில் ஆங்காங்கே பச்சை மரகதம், சிவப்பு கெம்புகற்கள் பதிக்கப்படும் போது மிக அழகான தோற்றத்தை கொண்டவையாக இருக்கின்றன.

    நகாசு வேலை செய்யப்பட்ட வளையல்கள், கொல்கத்தா ஃபிலிகிரி டிசைன் வளையல்கள், ரோடியம்ஃபினிஷ் கொண்ட வளையல்கள், ஓரடுக்கு, ஈரடுக்கு மற்றும் பல அடுக்கு கொண்ட வளையல்கள் பல டிசைன்களில் கற்கள் பதித்தும் பதிக்காமலும் கிடைக்கின்றன. ஈரடுக்கு, மூன்றடுக்கு மற்றும் நான்கு அடுக்கு வளையல்களில் இரண்டு அடுக்குகளுக்கு இடையே அழகான சிறுபூக்கள், முத்துக்கள், நட்சத்திரங்கள் கொண்ட டிசைன்கள் பார்க்க அலங்காரமாய் தெரிகிறது.

    சில வளையல்கள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அகலமாகவும் அதிக வேலைப்பாடு கொண்டதாகவும் இருந்தாலும் மிகவும் எடை குறைவாக, லேசாக, அணிந்து கொள்ள வசதியாக இருப்பது ஆச்சரியமான வடிவமைப்பு ஆகும். மிக ல்லிய கம்பிகளை சுற்றி முறுக்கி கயிறு போல் பின்னி செய்யப்படும் வளையல்கள் நல்ல உறுதியான தோற்றத்தையும் நளினமான அழகையும் கொடுக்கக்கூடியதாக இருக்கின்றன. சில வளையல்களில் பாதி இடத்திற்கு நல்ல வழுவழுப்பான ஃபினிஷ் கொண்டதாகவும், மீதி இடத்திற்கு சொரசொரப்பான பினிஷ் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன. இப்படி ன்னும் எத்தனையோ அழகழகான வடிவமைப்புகளில் நகைக்கடைகளில் காட்சியளிக்கும் வளையல்களை பார்ப்பதே மிகவும் பூரிப்பு அளிப்பதாகவும் வாங்கி அணியும் போது மகிழ்ச்சியில் ஆழ்த்தகூடியதாகவும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே!!
    பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இன்று நாம் ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரண்டை இளசாக - 1 கப்
    புளி - 50 கிராம்,
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1,
    பூண்டு - 7 பல்,
    சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
    வெல்லம் - சிறிது,
    கடுகு - 1/2 தேக்கரண்டி,
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
    உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது,
    பெருங்காயத்தூள் - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.

    வறுத்துப்பொடி செய்ய

    நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
    மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி,
    தனியா - 2 தேக்கரண்டி,
    கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது,
    வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
    கசகசா - 1/4 தேக்கரண்டி

    செய்முறை

    பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும்.

    நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.

    தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்.

    தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

    புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

    பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:
    ஆன்லைன் வழியே பாடம் படிக்க தொடங்கியதில் இருந்து குழந்தைகளுக்கும், இணையதளத்திற்கும் இடையேயான நெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இணையதள வீடியோக்கள் வழியாக கல்வி சார்ந்த ஏராளமான விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதில் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:

    பல்வேறு ஆன்லைன் தளங்கள் குழந்தைகளை எளிதாக ஈர்த்துவிடுகின்றன. அதன் பின்னணியில் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங் களும் இருக்கின்றன. ஆன்லைனில் நல்ல விஷயங்களை பார்க்க அனுமதிப்பதுபோல தீய விஷயங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். எந்தெந்த ரூபத்தில் தீய விஷயங்கள் வெளிப்படும் என்பதையும், அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் பக்குவமாக புரியவைக்க வேண்டும்.

    பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் தங்கள் நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் அரட்டை அடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. ஆரம்பத்தில் நடக்கும் விவாதமும், இணையதள தேடல்களும் நாளடைவில் தவறான பாதைக்கு அழைத்து செல்ல வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களுடன் முரண்பாடான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இணையதளத்தை உபயோகிக்கக்கூடாது என்பதில் பிள்ளைகள் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக எப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்கள், பிரச்சினைகள் முளைக்கின்றன என்பதை பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

    குழந்தைகள் தங்களுடைய பாஸ்வேர்டை சமூக ஊடகங்களிலோ, நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களுக்கு நம்முடைய பாஸ்வேர்டு தெரிந்துவிட்டால் என்னென்ன பிரச்சினைகளெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை விளக்கி கூற வேண்டும். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது பற்றியும், அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் புரியவைக்க வேண்டும்.

    சமூக வலைத்தளங்கள் வழியே முன்பின் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் தங்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட அபிலாஷைகள், வசிப்பிடம் பற்றிய தகவல்களை பகிர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அதனால் என்னென்னெ பிரச்சினைகள் உருவாகும் என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

    குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. யாராவது அருகில் வந்தால் உடனே இணைய தள பக்கத்தை மூடுவது, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லாதது போன்றவை பிள்ளைகள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக அமையும். அதனால் இந்த விஷயத்தில் கவனத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.

    இணையதள சைபர் மிரட்டல் பற்றியும் பிள்ளைக்கு தெரியப்படுத்துங்கள். இது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். சைபர் மிரட்டல் என்பது கடுமையான குற்றமாகும். யாராவது மிரட்டினால் தயங்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர்- பிள்ளைகள் உறவு அமைய வேண்டும்.

    இணையதளம் எந்த அளவுக்கு நல்ல விஷயங் களை தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகிறதோ அதற்கு இணையான தீய பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் ஏராளம் நடக்கின்றன. எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.
    கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தரும்.
    கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தரும். வீடு பராமரிப்பு ஒரு கலையாகவே கருதப்படுகிறது. வீட்டை பராமரிப்பதற்கு அதனை தூய்மையாக வைத்திருப்பதே முதன்மையான விஷயமாக இருக்க முடியும். பொதுவாக வீட்டில் உள்ள அறைகளை அடிக்கடி பெருக்கி வந்தாலே குப்பைகள் சேருவது குறைந்து சுத்தமாக காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

    அதேபோல் வாரம் ஒரு முறையாவது வீட்டை கழுவி வருவதும் சிறப்பானதாக அமையும். சில பெண்கள் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், மாத பிறப்பையொட்டியும் வீட்டின் தரையை கழுவி சுத்தம் செய்வார்கள். வெள்ளை நிற வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் வீடு தூய்மையாக மாறுவதுடன் பளபளப்பாகவும் காட்சி தரும்.

    கதவுகளை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்து விட வேண்டும். ஜன்னல்களில் தூசி படிய வாய்ப்பு உள்ளதால் அதனை அடிக்கடி துடைத்து வருவது தூய்மையோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். அதுபோல திரைச்சீலைகள், குஷன் கவர், சோபா கவர், மெத்தை கவர் போன்றவற்றை மாதம் ஒரு முறையாவது சலவை செய்துவிட வேண்டும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

    குளியல் அறைகளை சுத்தம் செய்யும்போது கரப்பான் பூச்சிக்கொல்லி, எறும்புக் கொல்லிகளை பயன்படுத்தி சுத்தம் செய்தால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். அதே போல் வீட்டை அலங்கரிக்கும் அலங்கார பொருட்களையும் அடிக்கடி துடைத்து சுத்தப்படுத்தினால் அவைகள் கண்கவர் அழகில் எப்போதும் காட்சி அளிக்கும். எப்போதுமே பொருட்களை எடுத்து பயன்படுத்திய பின்னர் அவற்றை மீண்டும் அதற்குரிய இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கம் வரவேண்டும்.

    சிலர் பொருட்களை எடுத்து பயன்படுத்திய பின்னர் வேலை முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில் அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிடுவார்கள். அப்படி செய்தால் பொருட்கள் அங்கும், இங்குமாக ஒழுங்கற்று கிடக்கும். அது அறையை பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பது போல் தோன்ற வைக்கும். அதனால் எந்த பொருட்களையும் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். மேலும் அறையின் எந்த இடத்தில் வைத்தால் எடுப்பாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அலங்கரித்தால் அறை அற்புதமாக காட்சி அளிக்கும்.

    அதேபோல் அறை சுவற்றில் உள்ள சிலாப்புகளில் ஏராளமான பொருட்களை போட்டு வைத்துவிடுவார்கள். அதை அடிக்கடி எடுத்து உபயோகப்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அப்படியே நீண்ட நாட்கள் போட்டு விட்டால் பொருட்கள் தூசிபடிந்து பொலிவை இழக்க தொடங்கிவிடும். ஆகையால் வாரத்திலோ அல்லது மாதத்திலோ ஒரு முறையாவது எடுத்து சுத்தம்செய்துவிட வேண்டும்.

    அலமாரிகள், சமையல் அறையில் பொருட்கள் வைக்கும் இடங்கள் போன்ற வற்றையும் தூசு தட்டிவிட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டால் குப்பைகள் சேர்ந்து விடும். எப்படியும் நாம்தான் சுத்தம் செய்யப்போகிறோம் என்பதை மனதில்கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால் குப்பை சேராது. அதுபோல் சுவர்களில் வெடிப்பு, கீறல் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்து விடவேண்டும்.

    அது தவிர குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வீட்டுக்கு வர்ணம் பூசிவர வேண்டும். அது வீட்டுக்கு அழகை கூட்டுவதுடன், பராமரிப்பு பணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரித்து வந்தால் வீடு பொலிவை இழக்காமல் அழகாக தோற்றமளிக்கும்.

    எலும்புப்புரை எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க முடியும்.
    ஆரோக்கியமான உணவு முறை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவும் சிறந்த முறை ஆகும். சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.

    ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்புப்புரை எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க முடியும்.

    கால்சியம் மற்றும் விட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்தல், புகைப்பது போன்று தீங்கான காரியங்களை செய்யாமல் இருத்தல் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

    இவ்வாறு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு கொண்டவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    கீரை வகைகள்

    கீரை, பரட்டைக்கீரை, சீமை பரட்டைக்கீரை உள்ளிட்டவைகளில் குறைந்த கலோரிக்கள் உள்ளன. மேலும் இவற்றில் அதிகளவு விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்து இருக்கின்றன. இவை எலும்புகளை உறுதியாக்கும் தன்மை கொண்டுள்ளன.

    திராட்சை பழம்

    சிட்ரஸ் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தில் ஏராளமான விட்டமின் சி உள்ளது. இது எலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. விட்டமின் சி நிறைந்த பழம் மற்றும் காய்கறி வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

    சால்மன்

    சால்மன் ரக மீன்களில் ஒமேகா 3 ரக பேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மேலும் இதில் விட்டமின் டி நிறைந்துள்ளது. சால்மனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் எடை குறைதலை தவிர்ப்பது மற்றும் தைராய்டு பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

    முட்டை

    முட்டையில் அதிகளவு புரோட்டீன் மட்டுமின்றி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணமும் அதிகளவில் நிறைந்துள்ளது. இவற்றில் அதிகளவு விட்டமின் டி உள்ளது. இவை உறுதியான எலும்புகளுக்கு வழி வகுக்கும். முட்டையை உணவில் சேர்த்து கொள்வதால், குறைந்த செலவில் விட்டமின் டி பெற முடியும்.

    பால்

    பால் குடிப்பதால் எலும்பு வலுப்பெறும் என அனைவரும் அறிந்ததே. இதில் கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. தினசரி உணவில் பாலை சேர்த்து கொள்வதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். 
    ×