என் மலர்
ஆரோக்கியம்
உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது.
பரபரப்பான இன்றைய சூழலில், குளிப்பது என்பது பலருக்கு தினசரி சடங்காகவே உள்ளது. ஆனால் சிலருக்கு தான் குளிப்பதன் முக்கியத்துவம் தெரியும். குளிக்க வேண்டுமே, என்ற சலிப்புடன் பலர் தினமும் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கின்றனர். இத்தோடு குளியல் முடிந்தது என்று நினைக்கின்றனர்.
உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது. உடலில் குளிர்ந்த நீர் பட்டவுடன் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ரத்தம் வேகமாக ஓடுகிறது.
நம்முடைய தோலில், லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக தோல் சுவாசிக்கிறது. தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் மயக்கம் ஏற்படும். துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ரத்தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் உடலிலேயே தங்கி விடும்.
தோல் துளைகள் மூடப்படுவதால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளிக்கும் பட்சத்தில் உடல் சோர்வு அடையும். செரிமான சக்தியை குறைத்து விடும். வாரத்தில் 2 நாட்கள் வெந்நீரில் குளிப்பது போதுமானது. சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து 3 மணி நேரத்துக்கு பிறகோ குளிப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணி பெண்கள் உணவாக கொள்ளவேண்டும்.
கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிடுங்கள். அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன.
அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். கருப்பை, நஞ்சு, குழந்தை ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் தாயின் ரத்த ஓட்டத்துக்கும் புரத சத்து தேவையாகும். பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். பிரசவ தேதி நெருங்கும் போது, முதலில் பின் முதுகில் வலி ஏற்படும். தொடர்ந்து அந்த வலி, அடி வயிற்றுக்கு வந்து இரு தொடைகளுக்கும் அது பரவுமானால், அது உண்மையான பிரசவ வலியாகும்.
ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப பை திறப்பதன் அறிகுறியாக வாந்தி ஏற்படும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்,
நாட்டு சர்க்கரை - 125 கிராம்,
ஏலக்காய் - 5 எண்ணம்,
கேரட் - 150 கிராம்
செய்முறை
கேரட்டை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும்.
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூடான பாலில் கரண்டியால் கலக்கி கொண்டே கேரட் சாற்றை ஊற்ற வேண்டும். கேரட்டானது நறுமண பாலுக்கு அற்புதமான நிறத்தை கொடுப்பதுடன் வைட்டமின் ஏ சத்தையும் அளிக்கின்றது.
வாசனை மற்றும் சுவைக்காக ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.

பின்பு பாலை ஆற வைத்து சுத்தமாக வடிகட்டி பேக்கிங் செய்து குளிர் சாதன பெட்டியில் குளிர்ச்சியாக வைத்து பருகலாம். அல்லது சூடாகவும் பருகலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
மனிதனுக்கு என்று தனி அடையாளத்தை தருவது பேச்சுத் திறன்தான். அதை தெளிவாக உச்சரிக்க பற்கள் உதவுகிறது. பற்களின் அணிவகுப்பை வெள்ளைச் சிப்பாய்களின் அணிவகுப்பு என்று கூறலாம். சத்தான உணவை அரைத்து, சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவதுதான் இந்த வெண் சிப்பாய்களின் வேலை.
பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.
மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.
‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது.
காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது. கீழ்க்கண்டப்படி பின்பற்றினால் நேர மேலாண்மை செய்வது எளிதாகிவிடும்.
அர்ப்பணிப்புடன் எடுத்த காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை ஒதுக்க முடியாத காரியத்தில் ஈடுபடக் கூடாது. நிச்சயம் நம்மால் செய்யப்பட வேண்டிய, முடிய கூடிய செயலை செய்ய மட்டுமே நேரத்தை ஒதுக்க வேண்டும். முடியாத பல செயல்களை பட்டியலிட்டு முடியாமல் பிற்பாடு மனவருத்தம் கொள்வது தவறு.
தொடர்ந்து விருப்பம் உள்ள செயல்கள் பின்பற்றுதல் நம் மனம் மகிழக் கூடிய, புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் திருப்தி அளிக்க கூடிய செயல்களை செய்தல். அத்தகைய நிறுவனங்களில், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடுகளுக்கு இடையில் நம்முடைய படிப்பு சார்ந்தவற்றையும் கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
நேரத்திற்கு ஏற்ற செயலை செய்தல் அல்லது செய்யும் செயலுக்கு ஏற்றப்படி செயலை செய்தல். ஒரு செயல் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை கணிப்பது கடினமான ஒன்று. முடிந்தவரை குறிப்பிட்ட நேர இடைவெளி கொடுத்து பணிகளை செய்வதற்கு பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால நேரத்தில் உங்களுக்கு நீங்களே விளையாட்டிற்கோ அல்லது வேறு பணி செய்வதற்கோ தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்மானம் செய்த பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்ய பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நான்கு வேலையை ஒரே நேரத்தில் செய்ய முயன்றால் ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். வேலையை மாற்றி மாற்றி செய்வதால் கவன சிதறல் ஏற்பட்டு நாம் நினைத்த நேரத்தில் வேலையை செய்ய முடியாமல் போகும்.
மிகப்பெரிய கால அளவில் செய்யக்கூடிய வேலைகளை, படிப்பும் மற்றும் பயிற்சிக்கான தனிப்பட்ட நேரத்தை குறிப்பிட்ட கால அளவில் ஒதுக்கி கொள்ள வேண்டும். உதாரணமாக இசைப்பயிற்சி பயில செல்வதாக இருந்தால் வாரத்துக்கு இத்தனை நாள் அல்லது இந்த கிழமை மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வேறேந்த வேலையையும் செய்வதற்கு ஒப்பு கொள்ளக்கூடாது.
பணிகளை ஒரு நாளில் செய்வதற்கு அட்டவணைப்படுத்தும் போது அதில் முக்கியமான பணியை முதலில் செய்வதற்கு குறித்து கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுபோல் எந்த பணியை முதலாவதாக செய்ய முடியுமோ அதை முதலாவதாக குறித்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வேறு பணி செய்ய முடியாமல் போனது பற்றி வருத்தப்பட கூடாது.
வாடிக்கையாக சில செயல்களை செய்ய பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள், மாதத்திற்கு ஒருநாள் அல்லது குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை சில நல்ல பொழுதுப் போக்கு பகுதிகளுக்கு செல்லுதல், சுற்றுலா செல்லுதல், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி திட்டமிடலாம். இத்தகைய பணிகளை இடையில் ஓய்வு கிடைக்கும்போது அல்லது விடுமுறை கிடைக்கும் போது செய்யலாம்.
பணி அட்டவணைகளுக்கு இடையே சிறுசிறு மாற்றங்கள் செய்யலாம். அதாவது ஒரு நாளில் சில நேரம் ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த பணியை செய்ய முடியாவிட்டால் வேறு பணியை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அட்டவணையை அப்படியே கடைப்பிடிப்பதைவிட நேரத்திற்கு ஏற்றது போல் மாற்றி கொள்வது புத்திசாலித்தனம்.
ஒரு பணியை செய்ய முற்படும்போது மற்றொரு பணியை பற்றி கவலைப்பட வேண்டாம். அப்படி கவலைப்படுவற்கு பதில் நேரத்தை சற்று குறைந்து கூட அட்டவணையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி செல்லும்போது படிப்பில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று கவலை கொள்ள வேண்டாம். அதே சமயத்தில் உடற்பயிற்சியை முழுதாக நிறுத்தி விட்டு உடல்நலத்தை கெடுத்து கொள்ள கூடாது. மாறாக உடற்பயிற்சிக்கு ஒதுக்கிய நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை குறைத்து அந்த நேரத்தை படிப்பிற்கு ஒதுக்கலாம்.
நம் வேலை செய்யும் சூழ்நிலையை நமக்கு தகுந்தவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரையில் கவனச் சிதறல் ஏற்படுவதை குறைத்து கொள்ள வேண்டும். காலையில் நிகழ்ச்சிக்கு செல்ல ஆடையை அயன் செய்வது என்றால் அதை செல்போனில் குறிப்பெடுத்து கொள்வதற்கு பதில் ஆடையை முன்னரே எடுத்து வைத்து அயன் பாக்சையும் பக்கத்திலேயே எடுத்து ஒரு மேஜையில் வைத்து கொண்டால் காலையில் ஞாபகம் வரும். இப்படி செய்யாவிட்டால் காலையில் எழுந்தவுடன் வழக்கமான வேலைகளில் மனம் சென்றுவிடும். பிறகு நிகழ்ச்சிக்கு தாமதமாக போக வேண்டி வரும். ஒவ்வொரு பணிக்கு உரிய சக நண்பர்களை ஒரு குழுவாக வைத்து பணி செய்யலாம். பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவையில்லாமல் தொலைபேசி அழைப்புகள் வருவதை தடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தொலைபேசியில் அழைப்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் வீண் அரட்டையில் நேரம் போவதே தெரியாது. அத்தோடு செய்யும் வேலையும் அரைகுறையாக போய்விடும்.
இப்படியாக கால நேரத்தை பணிக்கு ஏற்றவாறு ஒதுக்கி நடைமுறை படுத்த வேண்டும். இதனால் சரியான நேரத்தில் பணிகள் முடிந்து நம்முடைய வேலைபளு மிச்சமாகும். அதோடு மனதுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

கொரோனாவுக்காக அல்ல கைகழுவும் பழக்கம் இயல்பாகவே உடல் நலத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கை கழுவும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்பதை உணரும் தருணம் இது.
கொரோனா பரவியதில் இருந்து தான் தவறாமல் சோப்பு போட்டு கை கழுவும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்காக அல்ல கைகழுவும் பழக்கம் இயல்பாகவே உடல் நலத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். கிராமங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் கை, கால் கழுவி விட்டு வீட்டுக்குள் வர வேண்டும் என குழந்தைகளை, பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நகரங்களில் பெரும்பாலான வீடுகளின் முன்பகுதியில் கைகழுவுதற்கு ஏற்ற வசதி இல்லை.
நெருக்கமான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த நிலை உள்ளது. அன்றாடம் காலை எழுந்ததும் பல் துலக்குவது, குளிப்பது போன்று தான் அடிக்கடி கைகழுவும் பழக்கம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, இருமல், வாந்தி, பேதி போன்ற பெரும்பாலான நோய்கள் கைகள் மூலமாகவே ஏற்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் கைகழுவ வேண்டும் என்பதை கற்றுத்தருவதுடன் தாங்களும் அந்த பழக்கத்தை கைவிடாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கை கழுவும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்பதை உணரும் தருணம் இது.
எப்போதெல்லாம் கை கழுவலாம்?
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ மறக்க கூடாது.
* வளர்ப்பு பிராணிகளை தொட்ட பின்னர் கை கழுவுவது முக்கியமான செயல்.
* பெரியவர்கள் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொட நேர்ந்தால் அதற்கு முன்பாக கட்டாயம் கைகழுவுங்கள்.
* கழிவறை சென்று வந்ததும் உடனடியாக கை கழுவுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
* சளி, இருமல் இருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன்பு கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது.
வலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. ஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.
எனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் `தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.
சுகப்பிரசவமா சிசேரியனா?
எல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற முடியும்.

குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
கோடை காலம் முடிந்தவுடன் ஏற்படும் பருவநிலை மாற்றம் உதடுகளை உலர்வடைய செய்துவிடும். எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும். குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உதடுகள் மற்ற உடல் பாகங்களில் இருந்து மாறுபட்டவை. அவை எளிதில் உணர்திறனையும், தூண்டுதல் உணர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடியவை. உலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
தேங்காய் எண்ணெய்: இது சருமத்தின் மென்மையை பராமரிக்க உதவும். முகப்பரு, வறண்ட சருமம், சரும துளைகள், வெயில் மற்றும் உதடு உலர்வது போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
கற்றாழை: வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது முதல், முகப்பருவை போக்குவது வரை பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை நிவாரணம் தருகிறது. உலர்ந்த உதடுகளை பாதுகாக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். தேனைப் போலவே, கற்றாழை நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உலர் வடைந்த, வெடிப்பு தன்மை கொண்ட உதடுகளுக்கு நல்ல பலனை தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி: தூங்க செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம். இது உதடுகளை ஈரப் பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். உதடு வெடிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
வெண்ணெய் : இது உதடுகளை பாதுகாக்கும் சிறந்த இயற்கை பொருளாகும். ஓரிரு நாட்கள் வெண்ணெய்யை பயன்படுத்தினால் உலர்வடைந்த உதடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
தேன்: இதற்கு காயத்தை குணப்படுத்தும் தன்மை உண்டு. சரும பராமரிப்புக்கும் ஏற்றது. வெடிப்புத் தன்மை கொண்ட உதடுகளை பாதுகாப்பதற்கு தேன் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக் கவும் துணைபுரியும்.
தண்ணீர்: குளிர்காலத்திலும், பருவநிலை மாறும்போதும் உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உதடுகளை கடிப்பது, உதட்டு அடுக்குகளில் இறந்திருக்கும் செல்களை நாக்கால் வருடுவது போன்றவை நல்ல பழக்கம் அல்ல. இது ரத்தக்கசிவு மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். அதனால் பற்கள், நாக்கால் உதட்டை வருடுவதை தவிர்க்க வேண்டும். உதட்டில் வறட்சி, வெடிப்பு உண்டானால் அலட்சியமாக இருக்கக்கூடாது. அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகி விடும்.
உதடுகள் உலர்ந்து கொண்டிருந்தால் நாக்கில் உள்ள உமிழ்நீரை உதட்டில் தடவி ஈரப்பதமாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் சில நிமிடங் கள்தான் ஈரப்பதம் நிலைத்திருக்கும். உமிழ்நீர் விரைவாக ஆவியாகி உதடுகளை மேலும் உலர்வடைய செய்துவிடும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதனால் அடிக்கடி தண்ணீர் பருகுங்கள்.

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 1 கட்டு
தேங்காய் துருவல் - விருப்பத்திற்கேற்ப
சின்ன வெங்காயம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் - 3
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்துபொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
அடுத்து அதில் உப்பு சேர்க்கவும்.
கீரை முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்க்கவும்
நன்றாக கிளறி வெந்ததும் அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.
சத்தான அகத்திக்கீரை பொரியல் ரெடி.

இந்த பொரியல் செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.
குழந்தைகள், மாணவர்கள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து அதிகம். காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது.
கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும். ஏனெனில் 18 வயதுக்குள் தான் எலும்புகள், பற்கள் நன்றாக வளர்ச்சி அடையும்.
நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதய தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம். பொதுவாக 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.
அதே போன்று 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், இளம் வயதினரான 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 மில்லிகிராமும், 19 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 மில்லிகிராமும், கர்ப்பிணி பெண்களுக்கு 1,300 மில்லிகிராமும் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.

வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடுபவர்களும் வேலை தேடி நிறைய நேர்காணலுக்கு செல்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் வழியாக என்னென்ன வகையான நேர்காணல்கள் உள்ளன?, அதை எப்படி அணுகுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா பரவல், பல தொழில்துறைகளை முடக்கிப்போட்டுவிட்டது. வேலை இழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், பல தொழில்துறைகள் எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது. அந்தசமயத்தில் வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடுபவர்களும் வேலை தேடி நிறைய நேர்காணலுக்கு செல்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரையாக இதை தயாரித்திருக்கிறோம். என்னென்ன வகையான நேர்காணல்கள் உள்ளன?, அதை எப்படி அணுகுவது என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
* இன்பர்மேஷனல் நேர்காணல்
தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட அந்தத் துறையை பற்றி என்ன தெரியும், அந்தத் துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது. இந்த நேர்காணலுக்கு செல்லும் போது துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே ஹோம் வொர்க் செய்துகொண்டு போவது நல்லது.
* டைரக்டிவ் ஸ்டைல் நேர்காணல்
இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை இது. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்கு கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். கொஞ்சம் கடின மாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
* ஸ்க்ரீனிங் நேர்காணல்
சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த ‘ஸ்க்ரீனிங் இன்டர்வியூ’வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிகிற சமயத்தில், உங்களின் ‘விண்ணப்பத்தை’ மிக ஆழமாக ஆராய்வார்கள். அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. ‘ஓவர் குவாலிபைட்’ ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த நேர்காணல்.
விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை ‘ஹைலைட்’ செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும். தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, கூடவே ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.
* நடத்தை நேர்காணல்
நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதைவிட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள். படிப்பின்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக் கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்தோகூட இருக்கலாம். உங்களின் அனுபவங்களை ‘வளவள’ என்று அளக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.
* மனவலிமை நேர்காணல்
உங்களின் பொறுமையை சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களை செய்ய சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ‘ராகிங்’ போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.
இந்த இன்டர்வியூவில் கையாளும் விஷயங்கள், ஒரு வகை பரிசோதனைதானே தவிர, பெர்சனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.
* உணவு இடைவேளை நேர்காணல்
நேர்காணல் செய்பவர் உங்களை சாப்பிட அழைத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசவும் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரை தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, நடத்தப்படும் மீல் டைம் இன்டர்வியூக்கள் கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்.
இந்த வகை நேர்காணலின்போது உங்களை ஒரு விருந்தினராக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், ‘லைட்’டாக ஆர்டர் செய்யவும். உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
சீத்தாப்பழம் சிறிய வகை மரமாக வளரக்கூடியது. தண்டுகள் மூலமும் விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது. அதன் 10 நன்மைகள் இதோ...
சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்:
1. இதய நோய் வராமல் தடுக்கும்.
2. நினைவாற்றலை அதிகரிக்கும்.
3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
4. உடல் எடையைக் குறைக்கும்.
5. கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
6. உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
8. சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
9. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.
10. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.