என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.
    இன்றைய காலத்தில் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது.

    இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது. ஆகவே எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் எக்காலத்திலும் தள்ளி வைக்கக்கூடாது.

    ஆனால் 35 வயதிற்கு மேல் கர்ப்பமாவது கஷ்டம் என்று கஷ்டம் என்று நினைக்க வேண்டாம். 35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு சில நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் கருத்தரிப்பதோடு, நல்ல ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.

    அதிலும் சரியான மருத்துவரின் ஆலோசனை மற்றும் உடல் ஆரோக்கிய பராமரிப்புக்களின் மூலம், வயதானாலும் பிரச்சனையின்றி குழந்தை பெற்றெடுக்க முடியும். இப்போது 35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை உள்ளன. இந்த முறைகளை பின்பற்றி வந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

    • எப்போதும் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன், குறைந்தது மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் அல்லது உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு, இது மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல், இந்த போலிக் ஆசிட் குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை அணுக வேண்டும்.

    • குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், அதற்கு முதலில் சரியான நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு ஓவுலேசன் கால்குலேட்டரைப் பயன்படுத்தினால், எப்போது உறவு கொண்டால், கர்ப்பமாகக்கூடும் என்பதை சொல்லும். அந்த காலத்தில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம்.

    • பொதுவாக 35 வயதிற்கு மேல், மன அழுத்தமானது அதிகம் இருக்கும். ஆகவே குழந்தை பெற ஆசைப்பட்டால், அத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் கூட ஒரு வகையில் கரு உருவாவதற்கு தடையாக இருக்கும்.

    • ஆண்களுக்கு வயதானால், விந்தணுவின் உற்பத்தியானது குறைந்துவிடும். எனவே ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். இதனால் விந்தணுவின் உற்பத்தியானது அதிகரித்து, எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.

    • 35 வயதிற்கு மேல் கருத்தரிக்க நினைக்கும் முன், முதலில் மருத்துவரைச் சென்று அவர்களிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்வதோடு, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
    வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத்தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘டவுன் பேமென்ட்’ என்று சொல்லுவார்கள்.

    உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும்.

    வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட ‘பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்’களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம்.

    இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

    ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும். குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது.

    இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு ஏதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட, நீங்கள் கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும். அதனால் கடனை முழுமையாக அடைத்த பிறகு, வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.

    அதேபோல இந்த டவுன்பேமென்ட் தொகையை திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தை திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டிவிட்டு, வீட்டுக்கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்கு போய்விடும். அதனால், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

    பொதுவாக ஒருவருடைய மாத வருமானத்தில் 40 சதவீததுக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம்.
    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப்பயிறு - 2 கப்
    இட்லி அரிசி - 2 கப்
    உளுந்து - 1 கப்
    வெந்தயம் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேறப

    செய்முறை

    பச்சைப்பயிறு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

    நன்றாக ஊறிய பின்பு உளுந்தை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

    இட்லி அரிசி மற்றும் பச்சைப்பயிறு, வெந்தயத்தை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் உளுந்து மற்றும் இட்லி அரிசி வெந்தயம் பச்சை பயறுடன் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து 8 மணிநேரம் நன்றாக புளிக்க விடவும்.

    மாவு நன்றாக பொங்கி வந்த பின்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

    சத்தான சுவையான பச்சைப்பயிறு இட்லி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இன்றைய காலக் கட்டத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் முடிஉதிர்வு மற்றும் வழுக்கை தலையினால் இளம் வயதிலேயே முதிர்வான தோற்றத்தை பெறுகிறார்கள்.
    இன்றைய காலக் கட்டத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் முடிஉதிர்வு மற்றும் வழுக்கை தலையினால் இளம் வயதிலேயே முதிர்வான தோற்றத்தை பெறுகிறார்கள். இதனால் பல இடங்களில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதையும், திருமணம் தடைபடுவதையும் நம்மால் காண முடிகிறது.

    குடும்ப பரம்பரை, சத்துக்குறைவு, குளிக்கும் நீர் மாற்றம், மனஅழுத்தம், புரோட்டின் குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் என முக்கிய காரணத்தினால் ஒருவருக்கு வழுக்கை ஏற்பட்டால் மீண்டும் இயற்கை முறையில் இளமையை பெற்று கொள்வது அரிதான காரியம். இந்த குறைபாட்டை போக்குவதற்காக பல ஆராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டு வழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்த வெளிநாட்டு தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு.

    இந்த முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை முடி தேர்வு செய்யப்பட்டு நீங்கள் விரும்பிய Style-ல் Replace பண்ணப்படுகிறது. மருந்து உபயோகிக்க தேவை இல்லை. அறுவை சிகிச்சை, வலி, பக்கவிளைவுகள், தழும்புகள் இல்லாமல் 2 மணி நேரத்தில் செய்யும் இந்த சிகிச்சைக்கு ஏற்படும் செலவோ மிகவும் குறைவு. இது விக் அல்ல. வாகனம் ஓட்டலாம், விளையாடலாம், தினமும் குளிக்கலாம், அன்றாட வேலைகள் செய்யலாம். விரும்பிய வடிவில் தலை வாரலாம். இயற்கை அழகு (Natural look) பெற்று கொள்ளலாம். 20 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்த நபரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

    நோயினால் முடியை இழந்த பெண்கள் முடியின் அடர்த்தி மற்றும் நீளம் அதிகரிக்க விரும்பும் பெண்களும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பயனடையலாம்.

    குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.

    யூ-டியூப் கிட்ஸ் (youtube Kids):

    யூ-டியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக யூ-டியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்கலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.

    நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் (Nasa Visualization Explorer):

    நாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்ளை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    கான் அகாடமி கிட்ஸ் (Khan Academy Kid):

    பிரபலமான கற்றல் செயலியான ‘கான் அகாடமி’யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம்பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.

    டைனி கார்ட்ஸ்(Tiny Cards):

    புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் (Duo lingo) குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஹவ் டு மேக் ஓரிகாமி (How to make Origami):

    பேப்பரில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். பேப்பரில் செய்யும் இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இந்தக் கலையின் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை நாமே பேப்பரில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்த செயலி, ‘ஹவ் டு மேக் ஓரிகாமி’.
    வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
    உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது.

    காலம்காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான மவுசு, இந்த நவீன காலத்திலும் குறையாமல்தான் இருக்கிறது. அதே நேரத்தில் வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், தேன் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், தேனீக்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

    இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் பாக்டீரியா கிருமிகளின் எதிர்ப்பு சக்தி பெருகிவருகிறது. இதனால், நோய்த்தொற்று ஏற்பட்டு நம் உடலில் புதிய கிருமிகள் பெருகும்போது, அதற்கான மருத்துவச் சிகிச்சையும் பலனற்றுப் போகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு வகை தேனுக்கு ஐரோப்பிய யூனியன் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்திருக்காவிட்டால், தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கும் பிரச்சினை உலகின் கவனத்துக்கு வந்திருக்காது. சர்வதேச அளவில் உணவுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்கும் கோடெக்ஸ் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை தேனை ‘இயற்கையான உற்பத்தி’ என்று வரையறுத்து, தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதை தடை செய்திருக்கின்றன.
    பெண்கள் கருத்தரித்தவுடன் சில அரிய உடல் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் முதல் பிரசவம் என்றால் எல்லா விடயமும் வித்தியாசமாகவும், சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும். அதே போல சில அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சுருக்கமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

    ஆலோசனை பெறுதல் : இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எப்போது கருத்தரிக்கும் என்பன போன்ற விவரங்களையும், பாதுகாப்பான முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாதவிலக்கு தள்ளிப்போதல் : கர்ப்பத்தின் அடையாளம் இது. மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாலும் இப்படி நேரிடலாம். அடுத்த விலக்குவரும் வரை பொறுத்திருந்து கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பிரசவ காலம் : கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப் படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு மாதவிலக்கு எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உணவு: தாய் போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்தான் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் உணவில் மீது வித்தியாசமான ஆசைகள் ஏற்படலாம். புளிப்பான சுவை கொண்ட உணவுகளை அதிகம் விரும்புவர். முதல் சில மாதங்கள் மசக்கை இருப்பதால் சாப்பிடப்பிடிக்காது. புளிப்பு சுவை கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பதை அறிந்து தவிர்த்து விட வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

    இரத்த சோகை : கருக் காலத்தில் குழந்தை ஒட்சிசன், ஊட்டம் போன்றவை தாயின் இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, பாலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
    கால்சியம் : குழந்தையின் எலும்பு, பல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து தேவை, பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    வலிகள் : கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.

    மார்பகங்கள் : கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும். மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இதெல்லாம் மார்பக மாற்றங்கள். இதை ஏதோ பிரச்சினை என நினைத்து பயப்படகூடாது.

    மூச்சு திணறல்: கரு வளர்ச்சியடையும் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்து வதால் நுரையீரல் முழுமையாக விரிவடைய இயலாது. இதனால் ஆழ்ந்து சுவாசிக்க இயலாமல் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் சாதாரணம்.

    மயக்கம் : இரத்த அழுத்தம் அவ்வப் போது குறைந்துவிடுவதால் களைப்பு, கிறுகிறுப்பு, திடீர் மயக்கம் போன்றவை ஏற்படக் கூடும். பட்டினியின்றி சாப்பிட வேண்டும்.

    மலச்சிக்கல், மூலநோய் : ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன் மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில் தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக் கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    கண்களில் மாற்றம் : திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு. ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும். பார்வை மங்கலாகும். இதற்குப் பயப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

    ஈறுகளில் அழற்சி : கர்ப்பத்தின்போது ஈறுகள் மென்மையடைவதால் ஈறுகளில் அழற்சி தோன்றுவது இயல்பு. கடினமான பொருட்களைக் கடிக்காதீர்கள். பல் பாதுகாப்பில் கவனம் செலுத்தங்கள்.

    தடையற்ற சிறுநீர் : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். பத்தாம் மாதவாக்கில் இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைக்கு ஆபத்து.

    உறக்கமின்மை : அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருப்பதால் உறக்க மின்மை ஏற்படும். எந்தப் பக்கம் படுத்தால் சரியாக இருக்கும் என்பது தெரியாததாலும் இவ்வாறு ஏற்படும்.

    நமைச்சல் : கர்ப்பக் காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரிக்கோடுகள் தோன்றுவதால் நமைச்சலெடுக்கும். உடல் முழுவதும் நமைச்சலெடுத்தால் கல்லீரல் பாதிப் பிருக்கலாம். இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.

    மூட்டுகள் : கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவதால் தசைநார்கள் தளர்ந்து மென்மையடைந்து விடும். இதனால் உடலிலுள்ள மூட்டுகளில் வலி ஏற்படும். ஓய்வு எடுப்பது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் தேவை.

    பாலுறவுசிந்தனைகள் : ஹார்மோனின் ஏற்ற இற்றங்களால் பாலுறவு அதிகரிப்பதும், குறைவதும் கர்ப்பக் காலத்தில் இயல்பு.

    மனநிலையில்மாற்றம் : தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில் அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.

    நீர்கோர்த்தல் : கர்ப்ப காலத்தில் உடலில் நீர்கோர்த்தல், பனிக் குடத்தில் நீர் சேருதல் இயல்பு. இதனால் கை, கால்களில் வீக்கம் வருவதும் இயல்பு. பயப்பட வேண்டாம். நடை பயிற்சி செய்யுங்கள்; ஓய்வெடுங்கள்.

    இதயத் துடிப்பு : கர்ப்ப காலத்தில் இதயம் மிக அதிகமாகத் தூண்டப்படுவதால் படபடப்பு அதிகமாகும். பயம் வேண்டாம். சருமம் : சருமத்தில் வரிக்கோடுகள் தோன்றும். இளமையான சருமம் இப்போது மாறத் தொடங்கும். இது இயல்பு. பெரும்பாலானவை மறைந்து விடும், சில கோடுகள் இறுதிவரை நீடித்திருக்கும்.
    எடை அதிகரிப்பு : கர்ப்ப காலத்தில் 12 கிலோவரை எடை அதிகரிக்கும். இதில் குழந்தையின் எடை, நஞ்சு, தொப்புள்கொடி போன்றவற்றின் எடை, கொழுப்பு போன்றவை அடங்கும்.

    கரு நெளிதல் : 18 20 வாரங்களில் முதன் முறையாக கரு நெளிதல் ஏற்படும். குழந்தையின் உதைப்பு வலித்தாலும், இன்பம் தரக்கூடியது. இந்த உதைப்பு குறைந்து விட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

    வேலை, ஓய்வு : கர்ப்பக் காலம் முதல் பிரசவத்திற்குத் தயாராவது என வேலை செய்வதில் தவறில்லை. ஆனால் போதுமான ஓய்வு தேவை, அலைச்சல் இருக்கக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டியிருந்தால் டாக்டரைக் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை உருவாகும் போதே குறைபாடுகள் தோன்றலாம்.

    பிரசவம் : பிரசவிக்கும் போது வலி இருக்கத்தான் செய்யும். இந்த வலி பத்து நிமிடங்கள் அல்லது அதிகமாகக் கூட இருக்கலாம். குழந்தை பிறப்பதற்கு வசதியாக அமைந்திருந்தால் சாதாரணமாகப் பிறந்துவிடும். இல்லாவிட்டால் சிசேரியன் நடக்கலாம்.
    பச்சைப்பயறு உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. இரும்புச்சத்து நிறைந்தது.
    தேவையான பொருட்கள்:

    முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
    வெல்லம் - ¾ கப் (பொடி செய்தது)
    தண்ணீர் - சிறிதளவு
    துருவிய தேங்காய் - ½ கப்
    ஏலக்காய் பொடி - சிறிதளவு
    நெய் - சிறிதளவு

    செய்முறை:

    முளைகட்டிய பச்சைப்பயறை வாணலியில் போட்டு அத்துடன் வெல்லப்பொடியும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

    பயறு நன்கு வெந்தவுடன் அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து சிறிதளவு நெய் விட்டு நன்கு வதக்கவும்.

    காரம் விரும்பாத குழந்தைகள் இதுபோல இனிப்புச் சுவையில் சுண்டலைச் செய்து கொடுக்கும்போது கேள்வியே கேட்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

    முளைக்கட்டிய பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது. இந்த பயறு குறைந்த நேரத்திலேயே வெந்துவிடும். எனவே, பயறு சுண்டல் செய்துபோது அதை குக்கரில் வேக வைக்க கூடாது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

    உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்யலாம்.

    வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளீனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல்பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.

    ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.

    துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம். துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.

    இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும். மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.

    குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.

    குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.
    பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.
    பவள நகைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிதான ஒன்றே. மற்ற விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் மற்றும்  நவரத்தினக் கற்கள் பதித்த நகைகளை எவ்வளவு கவனத்துடன் சுத்தம் செய்து பராமரிக்கின்றோமோ அதேபோல் பவள நகைகளுக்கும் சிறிது கவனத்துடன் சுத்தப்படுத்தி பராமரிப்பது அவசியமானதாகும்.

    பவளம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால் சிறிய உராய்வும் அதில் கீறலை ஏற்படுத்தி விடும். மேலும், சட்டென்று சேதமாகி உடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பவளத்தை கவனத்துடன் பாதுகாத்துப் பராமரித்தால் அவை பல காலம் நீண்டு உழைக்கும் தன்மை கொண்டவையாகும்.

    பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பினை துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம். மிகவும் கடினமான பிரஷ் மற்றும் துணி துவைக்கும் சோப்பைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. அவை, பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். அவற்றை நீரில் நன்கு அலசி மென்மையான துணியால் ஒற்றி எடுத்து நன்கு உலர்ந்த பிறகே உள்ளே எடுத்து வைக்கவேண்டும்.

    பவள நகைகளைச் சுத்தப்படுத்த அதீத ஒலிச்சுத்தி (அல்ட்ராசானிக் கிளீனர்ஸ்) போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.  ஆழமான அதிர்வுகள் பவளத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு பவளத்தை உடைத்து விடும் வாய்ப்பும் உள்ளது.

    நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப்படியான சூடினால் பவளமானது நிறம் மாறும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான சூடினால் அது முற்றிலுமாக நிறத்தை இழந்துவிடும். பல நாட்கள் சூரிய வெயிலில் படும் பொழுது சிறிது சிறிதாக நிறம் மங்கும் வாய்ப்பும் உள்ளது.

    நாம் நிகழ்ச்சிகளுக்கு பவள நகைகளை அணிந்து வந்த பிறகு அவற்றை துவைத்து நன்றாக ஆறவைத்து அதில் சிறிதளவும் ஈரத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனியான நகைப்பெட்டிகள் அல்லது மென்மையான துணியால் தைக்கப்பட்ட பைகளில் வைக்கவேண்டும். வேறு நகைகளுடன் பவள நகைகளை சேர்த்து வைத்தால் அவை பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும்.

    நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் வெளியில் நிகழ்ச்சிகளுக்குக் கிளம்பும் பொழுது மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு கடைசியாக பவள நகைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    அதேபோல் இந்த நகைகளை அணிந்த பின்னர் வாசனைத் திரவியங்களை ஆடைகளின் மேல் தெளிக்கக்கூடாது. மேலும் பவள வளையல்களை அணிந்து கொண்டே துணிகளைத் துவைப்பது, அலசுவது, பாத்திரங்களைக் கழுவுவது மற்றும் பவள நகைகளைப் போடுவதும் கழற்றுவதும் கடினமாக இருக்கும் பட்சத்தில் துணி துவைக்கும் சோப்பினைப் பயன்படுத்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    பவள நகைகளை அணிந்து கொண்டே நீச்சலடிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மற்றும் நடைப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

    இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள்  மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.

    பவளம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:-

    * பவளப் பாறைகள் என்பவை செடிகளால் உருவாக்கப்படுபவை அல்ல. கடல் விலங்குகளால் உருவாக்கப்படுபவையாகும்.

    * மூன்று வித்தியமாசமான பவளப்பாறை வகைகள் உள்ளன.

    * பவளங்கள் வளர்வதற்கு சூரியஒளி அவசியமான ஒன்றாகும்.

    * ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் போன்று அளவில் மிகப்பெரியதாக இருக்கும். பவளப்பாறைகள் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும்.

    * பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் கடல் நீரானது மிகவும் சுத்தமானதாக இருக்கும். அவை சுத்தமாக

    இருப்பதற்கும், கடல் புற்கள் மற்றும் பிற கடல் தாவரங்கள் வளர்ச்சிக்கும் பவளப் பாறைகள் உதவுகின்றன.

    * பவளப் பாறைகளில் இருக்கும் உயிரினங்கள் கேன்சர் மற்றும் ஒருசில நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.

    * சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிப்பதிலும் பெரும் பங்கை பவளப்பாறைகள் அளிக்கின்றன.

    * பச்சை பிரவுன், பிங்க், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் ஃப்ளோரசன்ட் நிறங்களிலும் பவளங்கள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
    ×