என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான்.

    பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக செரித்து ரத்தத்தில் கலக்கச்செய்ய உதவுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.

    இரண்டாவது வழி எச்சில். நாம் சாப்பிடும் உணவில் எச்சில் சேரவேண்டும். எச்சில் கலக்காத உணவு கெட்ட ரத்தம் போன்றதாகிறது. எச்சிலில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட உணவை மட்டுமே வயிற்றால் செரிக்க வைக்க முடியும். எனவே உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்போதுதான் உமிழ்நீர் நன்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் மென்று சாப்பிடுவதே ஜீரணத்திற்கு நல்லது.
    கர்ப்ப காலத்தில் குழந்தையின் எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் சத்து தேவைப்படுகின்றது. அது மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள், மற்றும் தசைகள் நல்ல கட்டமைப்பை பெற கால்சியம் உதவுகின்றது.
    கர்ப்ப காலத்தில் அவரவர் வயதிற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளும் கால்சியம் அளவும் மாறும். இதனால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கலாம்.

    19 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அளவை அவர்கள் குழந்தை பிறந்த பின்னரும் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கால்சியம் கிடைக்கும். ஆக இந்தக் காரணத்தால் கால்சியம் சத்து எடுத்துக் கொள்ளுதல் கட்டாயப்படுத்தப்படுகின்றது.

    நிறைய மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவை என்பதற்காக பல வகை வகையான மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார்கள். ஆனால் அவை நிச்சயம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் சில ஒவ்வாமையை காலப் போக்கில் ஏற்படுத்தி விடும். ஆனால், இயற்கையாகவே உங்கள் உணவில் ஒரு சில முக்கிய பொருட்களை சேர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலுக்குத் தேவையான கால்சியம் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த வகையில், உங்களுக்காக, கர்ப்ப காலத்தில் கால்சியம் அளவை அதிகரிக்க நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள், பின் வருமாறு.

    தினமும் சுமார் 400 மில்லி கிராம் தயிர்.
    சுமார் 400 மில்லி கிராம் அளவு பழ வகைகள்.
    300 மில்லி கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
    200 மில்லி கிராம் சாத்துக்குடி பழச்சாறு
    200 மில்லி கிராம் சால்மன் மீன் அல்லது கால்சியம் நிறைந்துள்ள மீன் வகைகள்
    100 கிராம் சர்க்கரை பூசணிக்காய்

    இவை மட்டுமல்லாது, உங்கள் உணவில் தினமும் கீரை, ப்ராக்கோலி, முளை கட்டிய பயிர் வகைகள் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை பசும் பாலை அருந்துவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், அதிகம் கொழுப்பு நிறைந்த பாலையும் தவிர்ப்பது நல்லது. பருப்பு கீரை, வெந்தயக் கீரை, சுறா மீன், போன்ற உணவு வகைகளை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை உங்களது உடலின் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதனால் உடலில்
    அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பை குறைகின்றது. கர்ப்ப காலத்தில் போதுமான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

    கர்ப்பிணி பெண்கள் தேவையான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் காத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவ காலத்தில் தங்களது எலும்புகள் வலுவோடு இருக்க உதவும். இதனால் பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியையும் தாங்கிக் கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடைகின்றது.

    கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது.
    இதனால், குழந்தையின் இருதயம் ஆரோக்கியமாக செயல்படுகின்றது. அதனால், கால்சியம் உங்கள் உணவில் கட்டாயம் தினசரி உணவில் இருக்க
    வேண்டும்.

    அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.
    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    தோல் சீவி நறுக்கிய காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட்) - அரை கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - பெரியது 1
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சோள மாவு, ரஸ்க் தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை அலசி 10 - 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவிடவும்.

    இத்துடன் ஊறிய அவல், மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி கொத்தமல்லித்தழை, சோள மாவு சேர்த்துக் கிளறி அடுப்பை நிறுத்தவும்.

    இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து ரஸ்க் தூளில் புரட்டி விருப்பமான வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் கட்லெட்டைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் வேகவைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நிறுவனங்கள் அறிவித்துள்ள ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தின் அடிப்படையில் புதியதாக வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு படிப்பு அறை அல்லது அலுவலக அறை இருக்கவேண்டும் என்று கட்டுனர்களிடம் கேட்கிறார்கள்.
    இன்றைய டிஜிட்டல் உலகில், மக்கள் மனை மற்றும் வீடுகள் குறித்த விவரங்களை இண்டர்நெட் மூலம் பார்த்து அறிகிறார்கள். நிறுவனங்கள் அறிவித்துள்ள ஒர்க் ஃப்ரம் ஹோம்  திட்டத்தின் அடிப்படையில் புதியதாக வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு படிப்பு அறை அல்லது அலுவலக அறை இருக்கவேண்டும் என்று கட்டுனர்களிடம் கேட்கிறார்கள். அரசு அளிக்கும் சலுகைகள், வங்கி கடனுக்கு குறைந்த வட்டி, பில்டர்கள் அளிக்கும் சலுகைகள் ஆகியவை வீடு வாங்கும் எண்ணத்தை பொதுமக்களிடையே உருவாக்கி வருகிறது. முதலீட்டு ரீதியாகவும் வீடு வாங்க இது நல்ல தருணம் என்ற நிதி முதலீட்டு கோணத்திலும் பலர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், 16 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்ட அளவாக இருப்பதால், வங்கி கடன் மூலம் வீடு வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், வங்கி கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    * வீடு கட்டுதல், தனி வீடு மற்றும் அடுக்கு மாடி வீடு வாங்க, வீட்டை விஸ்தரிக்க, புதுப்பிக்க, பழுதுபார்க்க ஆகியவற்றுக்கு வீட்டுக் கடன் பெறலாம். கடன் பெறுபவர்கள், நில உரிமை பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று, இருப்பிடச் சான்று, கடந்த ஆறு மாத வங்கிக் கணக்கு விவரம், சென்ற மூன்று வருடங்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவம், படிவம் 16, வீட்டு மதிப்பீட்டு அறிக்கை, லீகல் ஒப்பினியன் ஆகியவற்றை அளிக்கவேண்டும்.

    * வீட்டுக் கடன் என்பது, கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தும் தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். குடும்ப வருமானம், சொத்து மற்றும் வருமானத்தின் நிரந்தரத்தன்மை ஆகிய நிலைகளிலும் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.

    * வங்கிக் கடன் ஜாமீன் என்பது சொத்துப் பத்திரம் என்றாலும் கடன் தொகைக்கு ஈடான ஆயுள் காப்பீடு பாலிசி, ஜாமீன்தாரர், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவையும் இணை ஜாமீனாக இருக்கலாம்.

    * வீட்டுக் கடனுக்கான வட்டி மாற்றத்துக்கு உட்பட்டது என்பதால், வட்டி குறித்து வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். பல ஆண்டுகள் வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலையில் ஒரு சதவிகித வட்டி குறைப்பு கூட லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பாக மாற்றக்கூடும்.

    * சொத்து மதிப்பில் 80 அல்லது 90 சதவீதம் மட்டும் வங்கி கடனாக தரப்படும் என்பதால் மீதித் தொகையை ஏற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், நடைமுறை கட்டணம், நிர்வாகச் செலவு, ஆவணப்படுத்தும் கட்டணம், தாமதக்கட்டணம், கடன் தவணையை மாற்றி அமைக்கும் கட்டணம், புதிய கடன் திட்டத்துக்கு மாறுவ தற்கான கட்டணம், சீரமைப்புக் கட்டணம், நிலையான வட்டியிலிருந்து மாறும் வட்டிக்கு மாறுவதற்கான கட்டணம், சட்ட ஆலோ சனை கட்டணம், தொழில்நுட்ப ஆய்வுக் கட்டணம், வருடாந்தர சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் பேசி தள்ளுபடி செய்ய வங்கியை கேட்டுக்கொள்ளலாம்.

    * கடன் பெறும் வாடிக்கையாளருக்கு, வட்டி விகிதம், கட்டணங்கள், செலவுகள் மற்றும் வட்டியை பாதிக்கும் அம்சங்கள் ஆகியவற்றை கடன் தகவல் படிவத்தில் வங்கி அதன் செலவில் தருவதுடன், கடன் சம்பந்தமான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவண நகல்கள் அனைத்தையும் வாடிக்கையாளருக்கு தர வேண்டும்.

    * கடன் பத்திரத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக படித்து பார்த்து புரிந்து கொண்ட பின்னரே வாடிக்கையாளர் அதில் கையெழுத்து போடுவது நல்லது. கடன் பத்திரத்தில் உள்ள சரத்துக்களில் புரியாத வாசகம் இருந்தால் அதற்கான விளக்கத்தை வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
    முதல் முதலாக உங்களது உலகத்தில் பிறந்திருக்கிறது உங்கள் குழந்தை. எவ்வளவு வேகமாக வளர போகிறது எனக் கவனியுங்கள். முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும் என்று பார்க்கலாம்.
    பிறந்த முதல் மாதத்திலே குழந்தைகள் செய்வது இவைதான்.

    உற்றுப் பார்ப்பது
    சிரிப்பது
    கண் சிமிட்டுதல்
    தூங்குவது
    அழுவது
    பால் குடிப்பது
    உடலை முறுக்குவது
    வில் போல உடலை வளைப்பது

    எனப் பல நிலைகளில் குழந்தைகள் உங்களை ஈர்க்கும்.

    காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.

    ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும்.

    பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும்.

    அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும்.

    இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும். நம் கவனத்தை ஈர்க்கும்.

    தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும்.

    தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும்.

    குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.

    பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

    எதிர் பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும்.

    மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

    பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும்.

    கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும்.

    குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.

    கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும்.

    கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.

    பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும்.

    பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும்.

    இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.

    குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

    பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். ஹோட்டல், திரையரங்குகள், உயிர் நீத்தோர் இடத்துக்கு இப்படி எங்கும் செல்ல கூடாது. ஏனெனில் கிருமித்தொற்று ஏற்படலாம்.
    இசை, ஆன்மிக வழிபாடு சிறிய விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என்று பலவகையிலும் பெண்ணால் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். வீட்டை சுத்தம் செய்ய அரை மணி நேரம் போதும். ஆனால் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனிக்கலை.
    வீடு என்பது நமது அடைக்கலாம். நமது பாதுகாப்பு. நமது ஓய்வு. நமது ஆசுவாசம். நமது மகிழ்ச்சி. ஆனால் இத்தனையும் வழங்கக் கூடியவள் வீட்டை பராமரிக்கும் தலைவிதான். ஒரு வீட்டை அலங்கோலமாக வைக்கவும், அழகாக வைக்கவும் பெண்ணால்தான் முடியும். நாகரிக உலவில் ஆணும் பெண்ணும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வேண்டிய சூழலில் வீட்டை கவனிக்க எங்கே நேரமிருக்கு என்று பெண்கள் சலித்து கொள்வதை கேட்கிறோம். வீட்டை சுத்தம் செய்ய அரை மணி நேரம் போதும். ஆனால் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தனிக்கலை.

    வீட்டின் மகிழ்ச்சி என்பது அதன் கலகலப்பான சூழல், எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது முதல் படியாகும். வேலை முடிந்து நாம் வீட்டுக்குப்போனதும் நமது செல்போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றை சற்று காத்திருக்க வைக்கலாம். வீட்டிலுள்ள பெரியவர்கள், கணவர் மற்றும் பிள்ளைகளிடம் அன்றைய நாள் எப்படி இருந்தது என கேட்கலாம். நமது அனுபவங்களை விவரிக்கலாம். முக்கிய செய்திகள் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசலாம். முக்கியமானது பேசுவதுதான். எதைப்பேசுகிறோம் என்பது அன்றைய தேவைக்கு ஏற்றது.

    ஒருவருக்கொருவர் பேசாமல் மனதுக்குள் புகைந்து கொண்டிருப்பதால் தான் மாமியார்.,மருமகள் கணவன் மனைவி இடையே பிணக்குகள் ஏற்படுகின்றன. பேசித் தீர்க்க வேண்டிய சின்ன சின்ன பிரச்சனைகளை வன்மத்தாலும் அகம்பாவத்தாலும் வளர விடவே கூடாது. நாம் பேசுவது நமது குடும்பத்தினருடன் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொண்டால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

    அடுத்து உற்சாகம், சோர்வுடன் இருப்பவரை கண்டால் உற்சாகப்படுத்துங்கள். பிள்ளைகள் பாடச்சுமையாலும், பரீட்சை பயத்தாலும் சோர்ந்து இருப்பார்கள். கணவர் அலுவலக அரசியலால் கசந்து போய் வீட்டுக்கு வந்திருப்பார். மாமியார் உடல் ரீதியாக ஒருவலியால் எரிந்து விழுந்த கொண்டிருப்பார். இவற்றை ஒரு புன்னைகையுடன் எதிர் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் விரும்பத்தகாத சூழ்நிலையும் அடுத்தவரின் அன்பாலும், அரவணைப்பாலும் மாறத் தொடங்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். மிகச்சிறந்த நட்பையும், தோழமையையும் ஒரு பெண்ணால் தான் தனது குடும்பத்திற்கு வழங்க முடியும்.

    இசை, ஆன்மிக வழிபாடு சிறிய விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என்று பலவகையிலும் பெண்ணால் வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். குறிப்பாக ருசிமிக்க நொறுக்கு தீனிகள், சுடச்சுட தரும் ஒரு கப் காபி, நாவுக்கு அதிகம் பழகாத புதிய வகை டிபன் என கவனமாக செயல்பட்டால் இல்லம் ருசிகரமாகவும் மாறும்.

    சரி நாம் சோர்ந்து இருக்கும் போது என்ன செய்வது என்று கேள்வி வரும். சிறிது நேரம் கண்களை மூடுங்கள். தியானம் செய்யுங்கள். உங்கள் வீட்டையும், குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு விசை உங்களிடம் இருப்பதை உணருங்கள். அந்த விசை உங்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.
    பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். மேலும் பெண்கள் பிரசவத்திற்கு பின் ஓமம் நீர் குடித்தால் என்வென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உள்ளது. அது உடல் எடை அதிகரிப்பது தான். குழந்தை பிறந்த பிறகும் ஒரு பெண் தான் அழகாகவும் நல்ல உடல்வாகோடும் தோன்ற வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. எனினும் அதிக பெண்கள் தங்களது உடலின் அழகிய மற்றும் ஒல்லியான உடல் தோற்றத்தைப் பிரசவத்திற்குப் பின் இழந்து விடுகிறார்கள். இது இயல்பே என்றாலும், பலர் அத்தகைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஓமம் நீரைப் பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான முறையாகும். சத்தான உணவோடும், போதிய உடற்பயிற்சியோடும் நீங்கள் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை நிச்சயம் குறையும்.

    பிரசவத்திற்குப் பின் பெண்கள் ஓமம் நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடியும். ஓமம் இயற்கையான வழியில் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவுகிறது.

    ஓமம் நீர் உங்கள் உடல் வலியைக் குறைக்க உதவும். குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் அதிக பட்சமான உடல் வலியாலும், மூட்டு வலியாலும் அவதிப்பட  நேரிடும்.எத்தனையோ மருந்து மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலி கூட ஓமம் நீருக்கு அடங்குகிறது என்பது மிகையல்ல.ஆக இந்த ஓமம் நீரைப் பருகி வந்தால் உங்கள் உடல் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.

    ஓமம் நீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் விரைவில் முழுத் தெம்பைப் பெறும்.கூடுதலாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் சளி, சுரம் போன்ற எந்த உபாதைகளும் தாய் மற்றும் சேய்க்கு வராது தடுக்கப்படுகின்றன.நீங்கள் தொற்று வியாதிகளிலிருந்து தப்பிக்க ஓமம் நீர் அருந்துவது ஒரு எளிய மட்டும் சிறந்த வழி!

    பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. ஆக இந்த ஓமம் நீரைப் பருகும் போது அத்தகைய வாய்வுப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வழி வகை செய்யும். ஏன் பெண்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புத் தொல்லைகளும் இந்நீரால் நிவர்த்தி செய்யப்படுகிறது.

    பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் மலச் சிக்கல் அல்லது பேதி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.இத்தகைய உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க இந்த ஓமம் நீர் பெரிதும் உதவுகிறது.இவ்வகை  உடல்நிலை சீர்க் கேடுகளை நீங்கள் மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஓமம் நீரைத் தினமும் பருகியே சரி செய்து விடலாம். இதை விட ஒரு நல்ல வீட்டு வைத்தியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய் தொந்தரவு இருக்கிறது. குறிப்பாகப் பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஏற்படுவதில்லை.இதற்காக அவர்கள் பல மாத்திரைகளை உண்டு பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.அவர்கள் அனைவரும் இந்த ஓமம் நீரின் அருமை பெருமைகளைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.சீரான மாதவிடாய் ஏற்பட  இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. இந்த ஓமம் நீரைத் தொடர்ந்து பருகி வர அனைத்து மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

    சரியாகச் செரிமானம் ஆகாததால்,ஒரு சிலருக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் படாமல் போக வாய்ப்புள்ளது.அந்த சமயத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சீராகச் செயல் பட வழி வகை செய்ய, இந்த ஓமம் நீர்ப் பெரிதும் உதவுகிறது. ஆக நீங்கள் இந்த நீரைத் தினமும் பருகி வரும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் பூரணமாகக் குணமாகும்.
    நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி வரலையா? கவலைய விடுங்க. இன்று ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தேங்காய்  - 1 கப் (துருவியது)
    பச்சை மிளகாய்  - 1
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    சீரகம் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
    முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…

    புரோட்டீன் ரிச் ஹேர் பேக்

    தேவையானவை

    வாழைப்பழம் - 1 மீடியம் அளவு
    தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
    தேன் - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.

    பலன்கள்

    முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

    கோடைக்கால விடுமுறையில் உங்கள் சுட்டிக் குழந்தையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளச் சுவாரசியமான பல்வேறு வழிகள் உள்ளன.
    1.படம் வரைதல் (Drawing)

    உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.

    2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening)

    இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறிப் புரிய வையுங்கள். இதனால் அவன் இயற்கை மீது பற்று கொண்டவனாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகவும் பின்னாளில் விளங்குவான்.

    3.பறவைகளுக்கு உணவு தருதல் (Feed birds)

    இந்த விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கென்று ஒரு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பதை உங்கள் குழந்தையின் வாடிக்கையான பழக்கமாக மாற்றுங்கள். குறிப்பாக காகம், மைனா, புறா, சிட்டுக் குருவி போன்ற பல பறவைகள் சரியான உணவு கிடைக்காமல் பறந்து திரிந்து அலைகின்றன. ஆக ஓரிடத்திலேயே உணவு தினமும் கிடைக்கும் என்ற சூழலில்,அங்கு பறவைகள் வாடிக்கையாகத் தினமும் வரத் தொடங்கும். இதை உங்கள் குழந்தைக்குக் காட்டி உற்சாகப் படுத்துங்கள். பிற உயிர்களிடம் அவனுக்கு அன்பும், உதவும் நற்குணமும் இதனால் வளரும். மேலும் இது அனைவரது மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

    4.கைவினைப் பொருட்கள் செய்தல் (Do craftworks)

    உங்கள் குழந்தைக்குச் சிறு கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்களை வைத்து, குறிப்பாக அட்டைப் பெட்டி, பழைய டப்பாக்கள் என்பனவற்றை எப்படி உபயோகமான பொருட்களாக மாற்றுவது என்று கற்றுக் கொடுங்கள். இது அவனுக்குச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, சற்று சுவாரசியமான வேலையாகவும் அமையும்.

    5.சமையலில் ஆர்வம் ஏற்படுத்துதல் (Cooking)

    குழந்தைகள் விளையாடச் சிறு சொப்பு சாமான்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை மரம், கல், நிலை வெள்ளி,நெகிழி முதலிய பல்வேறு பொருட்களில் செய்யப் பட்டு சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, கற்கள் அல்லது மரத்தால் செய்த சொப்பு சாமான்கள் வைத்து உங்கள் குழந்தைக்குச் சமையல் செய்யும் விளையாட்டை கற்றுக் கொடுக்கலாம். உங்கள் குழந்தையை மேலும் ஊக்கப் படுத்த, சில காய், மற்றும் பழங்களைக் கொடுத்தோ அல்லது நீங்கள் சமைத்த உணவில் சிறிது கொடுத்தோ விளையாட ஊக்குவிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலேயே சமையற்கலையில் ஆர்வம் ஏற்படக்கூடும்.

    6.பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துதல் (Improve speaking skill)

    உங்கள் குழந்தை ஒரு நல்ல பேச்சாளனாக ஆகும் திறன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அவனுக்கு ஒரு சிறிய தலைப்பு கொடுத்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். மேலும் அவனை ஊக்கவிக்கும் வகையில் அவனுக்கு நீங்கள் சில பொது அறிவு தகவல்களையும் சொல்லிக் கொடுங்கள்.

    7.மூளைத் திறனை அதிகப்படுத்தும் வகையிலான கணக்குகள் (Doing sums)

    இன்று குழந்தைகளின் மூளைத் திறன் அதிகப்படும் வகையில் சிறு சிறு உபயோகமான கணக்குப் பாடங்கள் அல்லது நுணுக்கமான வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல செயல் திறன் பாடங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சுவாரசியம் குறையாமல் கற்றுக் கொடுக்கலாம்.

    8.நீச்சல் (Swimming)

    இது ஒரு அற்புதமான தற்காப்புக் கலையாகும்.உங்கள் வீட்டில் தொட்டி அமைத்தோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.வெயில் காலத்தில் தண்ணீரில் விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நீச்சல் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    இவை மட்டும் இல்லாமல், மேலும் பல கோடை விடுமுறைக்கால செயல் திறன்கள் உங்கள் குழந்தைக்காக உள்ளன. எனினும், அவனுக்கு நீங்கள் அதனைக் கற்றுக் கொடுக்கும் முன் அதைப் பற்றிய பல விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையை உறவினர்கள் வீடு, பூங்கா, கண்காட்சி, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது மேலும் அவனது நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்வதோடு, பல விசயங்களைக் கற்றுக் கொள்ள நல்ல சூழலையும் உருவாக்கும்.
    கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.
    கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாகவே உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.

    அதேபோல் சர்க்கரை நோயாளிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா? போட்டுக்கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

    சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது.

    blood thinners மருந்து எடுத்துக்கொள்வோரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். அவ்வாறு போட்டுக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    அதே போல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் வருமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு உறுதியாக சொல்ல முடியாது. பக்கவிளைவுகள் வரலாம். வராமலும் இருக்கலாம். எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சில பக்கவிளைவுகள்  இருக்கத்தான் செய்யும்.

    எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சிறிய அளவில் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது காய்ச்சல், உடல் வலி போன்ற சில அறிகுறிகள் ஒரு சிலருக்கு ஒரு நாள் இருக்கலாம். அதற்காக பயப்பட தேவையில்லை, இதற்கு பாராசிட்டமோல்(Paracetamol Tablets) மாத்திரையை போட்டுக்கொண்டு ஒருநாள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். எந்த பயமும் கிடையாது.

    உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருந்துவரை அணுகி அவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடையை அறிந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள். இது மட்டும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியில் வர ஓரே வழியாகும்.

    இவ்வாறு கூறினார்.
    நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

    பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

    ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

    இந்த 28 நாளில் முதல் 4  5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

    இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.

    இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

    சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.

    உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

    இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

    உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

    உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

    அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.

    அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.
    ×