என் மலர்
ஆரோக்கியம்
இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக...
இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. அடர்த்தி நிறைந்த தேனில் ஆன்டிஆன்ஸிடன்ட் இருக்கிறது. இளமையை மீட்டுத்தரும் தேன், முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறுசிறு சுருக்கங்கள், உஷ்ணகட்டிகள், தேமல் போன்றவற்றை சரிசெய்யும். தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக
கேரட்டை நன்றாக அரைத்து ஒருஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது வறண்ட சருமத்தை மிருதுவாக்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் திராட்சை அரைத்த விழுது அவகோடா அரைத்த விழுது தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடலாம். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.
தேனுடன் சம அளவு காபி பொடியையும் கலந்து நமது உடலில் வெயில் பட்ட இடங்களில் தடவ வேண்டும். உலர்ந்தவுடன் மிதமான நீரில் கழுவவும். இது சருமத்துக்கு பளபளப்பையும் புத்துணர்வையும் தரும்.
முகத்தில் கரும்புள்ளிகள் பருக்களால் வந்த பள்ளங்கள் தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேனை தினசரி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான அளவு தேனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை கண்களுக்கு கீழ் கருவளையம் வரக்கூடிய பகுதி, கன்னம் தாடை, மூக்கு நுனி, உதடு என முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவவும். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காக்கும். பருக்கள் வராமல் தழும்புகளை போக்கும்.
தேனுடன் சம அளவு கெட்டித்தயிரை கலந்து வெயில்படுவதால் சருமம் கருத்திருக்கும் இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவலாம். தினமும் இதை செய்து வந்தால் ஒரே மாதத்தில் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மறைந்து பழைய பொலிவு கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை வறட்சியிருந்து நீக்க உதவும்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
கோடை கால வெயிலுக்கு சின்னம்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உருவாகும். இதில் இருந்து தப்பிக்க தினசரி, 2½ முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான ஆடைகளை உடுத்தக் கூடாது.
தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்க முடியாது. வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வரும். இதனால் உடலில் தடிப்பு போன்று இருக்கும். அதை தவிர்க்க, தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம் ஆகும். உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்.
இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. அதிகளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை இருக்காது.
வெயில் காலத்தில் இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் உடலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.
அத்துடன் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ சாப்பிடலாம்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்து கொள்ளலாம். இதுபோன்று செயல்பட்டால் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்கும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
காம்பு நீக்கிய சுண்டைக்காய் - 1 கப்
பெரிய நெல்லிக்காய் ( விதை நீக்கி நறுக்கி கொள்ளவும் ) - 1
காய்ந்த மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
முழு உ.ளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து. மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் சுண்டைக்காய், நெல்லிக்காய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வதக்கிய பொருட்களை ஆறவிட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா? இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நீங்கள் பலவீனமாக கருதும் ஷாப்பிங் பிரச்சனையிலிருந்து மீண்டு விடுதலை பெறலாம்.
இனி ஆடை வாங்க பணத்தை செலவழிப்பதில் சிக்கனமாக இருக்கபோகிறேன் என்று முடிவெடுத்த பிறகும், ஓர் அழகான ஆடையை பார்த்தும் உங்கள் மனம் அலைபாய்கிறதா? அதுவும் அந்த ஆடை தள்ளுபடி விலையில் கிடைத்தால் மனம் பட்டாம்பூச்சி போல படபடக்கிறதா? நீங்கள் என்றோ வாங்கிய கம்மலுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும், என்று உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதா? கடைசியில் அந்த ஆடையை வாங்கிவிடுகிறீர்களா?
இப்படி வீணாக ஆடைகளை வாங்கி, மலை போல் குவித்து வைக்கும் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியாத உங்களின் வேதனையும் தவிப்பும் புரிகிறது. இதற்காக வருத்தப்படுவதை முதலில் நிறுத்துங்கள். பெண்களுக்கு ஆடைகள் மீதான ஆசையை கட்டுப்படுத்துவது எளிதல்ல.
நீங்கள் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறீர்களா? என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை..
* நீங்கள் மிகுந்த ஆசையுடன் வாங்கிய பொருட்களை உங்கள் மேல் அக்கறை கொண்டவர்களிடம் இருந்து மறைப்பது.
*உங்களுக்கு தேவைப்படாத வாங்கத் திட்டமிடாத பொருட்களை வாங்குவது
* தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காகவே தற்போதைக்கு தேவையில்லாத பொருட்களை வாங்குவது
* வீடு திரும்பியதும் எதற்காக இந்த பொருளை வாங்கினோம் என்கிற வருத்தமோ குற்றஉணர்ச்சியோ உங்களுக்குள் ஏற்படுவது.
* கோபம், சோகம் போன்ற உணர்ச்சி மிகும் சமயத்தில் பொருட்களை வாங்கி குவிப்பது.
இந்த அறிகுறியெல்லாம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
கவலை வேண்டாம் சில எளிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் இதிலிருந்து முழுமையாக மீளலாம்.
1. உங்கள் கைபேசியில் இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.
2, உங்கள் அலமாரியில் உள்ள ஆடைகளில் எது தேவை, எது தேவையில்லை என்பதை முடிவு செய்து உபயோகிக்க ஏற்ற வகையில் அடுக்கி வையுங்கள். இதன் மூலம் ஏற்கனவே ஆடை வாங்கியதை மறந்து மீண்டும் ஆடை வாங்கும் பழக்கத்தை இது குறைக்கும். அலமாரியில் உள்ள ஆடைகளை எல்லாம் நீங்கள் மீண்டும் உபயோகிக்க தொடங்குவீர்கள். உங்களுக்கான புதிய ஆடைகளின் தேவையை இது குறைக்கும்.
3. ஷாப்பிங் செல்லும் முன் உங்களுக்கான பட்ஜெட்டை தெளிவாக திட்டமிடுங்கள். இந்த பட்ஜெட்டிற்கு மேல் செலவு செய்யப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் ஷாப்பிங் சென்று அதற்குள் உங்கள் தேவைகளை வாங்குங்கள்.
4. தேவைப்படும் ஆடைகளை மட்டும் வாங்குங்கள். எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் பயன்படும் என்று முன்னதாகவே ஆடைகளை வாங்கி வைக்காதீர்கள்.
இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் நீங்கள் பலவீனமாக கருதும் ஷாப்பிங் பிரச்சனையிலிருந்து மீண்டு நீங்கள் விடுதலை பெறலாம்.

இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கலாம்.
இன்றைய குழந்தைகளுக்கு 'அட்வைஸ்' என்பதே ஆகாத விஷயமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையினர், அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கோள் அமைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டம் அமைகிறது. பிரச்னைகள் வந்தால், 'பார்த்துக்கொள்கிறேன்' என தைரியமாகச் சொல்ல முடிகிறது. புதிதாக வந்து இறங்கும் டெக்னாலஜி எல்லாம் ஓரிரு நாட்களில் அப்டேட் இல்லாததாகிவிடுகிறது. அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.
எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர். அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம்.
குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.
* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.
* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.
* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.
* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.
* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர குழந்தை-அம்மாஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.
* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.
* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.
* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது. கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது.
‘பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம்.
கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது.
குழந்தைப் பேறுக்கு உதவும். முக்கியமாக, பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும்.
எந்த வகையான பாரம்பரிய அரிசியாக இருந்தாலும், இரண்டு முறை கழுவிய பின், எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறிய தண்ணீரிலேயே வேக வைக்கலாம். இது இன்னும், சுவையைக் கூட்டிக் கொடுக்கும்.
பூங்கார் அரிசியை வேக வைத்து, சாதமாக சாப்பிடலாம் அல்லது அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக அரைத்து மாவாக்கி, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, புட்டு செய்யலாம். நைசாக மாவாக அரைத்து, இடியாப்பம், பால் கொழுக்கட்டை செய்யலாம்.ருசியான கஞ்சியாகவும் வைக்கலாம்.
பட்டை, சோம்பு, ஒரு ஆழாக்கு பூங்கார் அரிசிக்கு, ஏழு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, அதனுடன் சிறிதளவு பாசிப்பயிறு, தேவையான அளவு மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின், அதனுடன் சிறிதளவு வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்து சேர்த்து, குக்கரில் வேக வைக்க வேண்டும். சோம்பு, ஏலக்காயை தனியாக தாளித்து, வேக வைத்த கஞ்சியுடன் சேர்க்கலாம்.
இந்தக் கஞ்சியுடன், தேங்காய் பாலை சேர்த்து, கர்ப்பிணிகளும் பருகலாம். மூன்று ஆழாக்கு பூங்கார் அரிசி, ஒரு ஆழாக்கு கருப்பு உளுந்து, சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, மாவாக ஆட்ட வேண்டும்.
இதில் இட்லி, தோசை செய்து, தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம். இந்த அரிசியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக, நோயுற்றவர்களும் கூட, இந்த அரிசி உணவை எடுத்துக் கொள்ளலாம். காலையில், இட்லி, தோசை, இடியாப்பம், கஞ்சி, புட்டு உள்ளிட்ட வற்றையும்; சாதமாக மதிய வேளையிலும்;
இரவில், இட்லி, தோசை, இடியாப்பமாக செய்து சாப்பிடலாம். எந்த ஒரு பக்க விளைவையும் தராத அரிசி இது.
இன்றைய சூழலில் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவிட்டன. ஆனால் அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்த காலத்திலிருந்து பிரசவித்த காலம் வரை உடல் உறுதியுடன் இருக்க தினமும் உணவில் பூங்கார் அரிசியை உண்டு வந்தார்கள். அந்தளவுக்கு பெண் நலனை காக்கும் பொக்கிஷமாக இந்த அரிசி பயன்பட்டு வந்தது. எல்லா காலச்சூழ்நிலையிலும் வறண்ட நிலத்தில் விளையக்கூடிய நெல்லாக இருக்கும் பூங்கார் அரிசி பல வளமான சத்துக்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது.
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது. கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது. பிரசவித்த காலத்தில் ஆறு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தைக்கும் அத்தனை சத்துக்கள் கிடைக்கும்.

கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது.
அதிக அளவில் மோர் அருந்துவதும் வெயிலை சமாளிக்கும் திறன் தருகிறது. வெயிலால் உடலில் ஏற்படும் நீர்இழப்பை இவை அனைத்தும் ஈடுசெய்யும். உடலில் அதிக அளவில் ஏற்படும் நீர் இழப்பு சோர்வை மட்டுமின்றி சன் ஸ்ட்ரோக்கையும் ஏற்படுத்தும். எனவே அதிக அளவு நீர் பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் காய், கனி வகைகளை அதிகஅளவில் எடுத்துக் கொள்வது இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். அந்த வகையில் இன்று எலுமிச்சையின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். எலுமிச்சை உடலுக்கு தேவையான விட்டமின் சத்து உள்பட ஏராளமான சத்துக்களையும் உள்ளடக்கியது. சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு மட்டுமின்றி தோலும் சிறந்த மருந்தாகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை வெள்ளரி கலந்த சாறு பயன்தரும்.
இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி, வெள்ளரி சாறு இரண்டு தேக்கரண்டி, சிறிது சீரகப்பொடி, கால் தேக்கரண்டி தேன். செய்முறை: எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெள்ளரிச்சாறு சேர்க்கவும். அதில் சிறிது சீரகத்தூள் மற்றும் சமையல் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து பருகிவர வெப்பத்தாக்கத்தில் இருந்து மீண்டு உடல் குளுமையடையும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அடுத்து கடுமையான வெயில் மற்றும் கோடையில் அதிக வெப்பத்தால் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் எனப்படும் பாதிப்புகள் பெரும்பாலானவர்களை தாக்கும்.
இதற்கு எளிய தீர்வு தருகிறது எலுமிச்சை. இதற்கு தேவைப்படும் தேனீர் செய்முறை குறித்து பார்ப்போம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு சிறிதளவு, சீரகம், தேன் மற்றும் சுத்தமான நீர். செய்முறை: ஒரு வாணலியில் அரை ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுக்கவும். அதனுடன் அரை தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து சூடாக்கவும். அதில் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடித்து வர மேற்சொன்ன வெப்ப பாதிப்புகளான தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மற்றும் கழிச்சல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
மேலும் எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து கொண்டால் தோல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும். இந்த மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: எலுமிச்சை தோல் பொடி சிறிதளவு, பால் அல்லது வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு சாறு இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு தேக்கரண்டி. செய்முறை: எலுமிச்சை பொடி சிறிது எடுத்து அதனுடன் பால் அல்லது பழச்சாறுகளில் ஏதாவது ஒன்று சிறிது கலந்து அதனை மேல்பூச்சாக தோலில் தடவி சிறிது நேரம் ஊறி கழுவிவர வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை மற்றும் கட்டி பாதிப்புகள் நீங்கும்.

பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று.
பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று. எனிலும் சில வழிகள் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம்.
தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இது சருமத்தை ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சி தரும். தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவலாம். அல்லது துண்டு துண்டாக நறுக்கி அப்படியே முகத்தில் ஒட்டிவைத்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்,
2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 எலுமிச்சை பழங்களில் சாறு கலந்து சருமத்தின் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றும். மேலும் சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் சருமத்தில் உள்ள செல்களில் ஊடுருவி, புத்துணர்ச்சியை உண்டாக்கும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
தினமும் இரவு கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சருமத்தின் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். இது சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்துவதுடன் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
பப்பாளி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து சருமத்தில் தடவவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி செல்களுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
கடலை மாவு மிகவும் நடுநிலையான மூலப்பொருள். சிறந்த சுத்தப்படுத்தி வறட்சி, முகப்பரு, வெயிலால் ஏற்படும் கருமை, இறந்த செல்கள், சுருக்கம், கறைகள், எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றை குறைக்க கடலை மாவு உதவும். கடலை மாவை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கடலை மாவை தண்ணீரில் குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தாலம்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து கொள்வது நல்லது. இது சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். இன்று மாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முழு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
மாங்காய், தோல் நீக்கி துருவியது - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ப.மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் முழு உளுந்தை வறுத்து எடுத்துகொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல், மாங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆறவிட்டு தண்ணீர் தெளித்து அரைக்கவும். பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து விழுதுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்பு- முழு உளுந்துக்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தலைமைத்துவப் பண்பை பெண்களும் வளர்த்து பல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கும் வரலாறு எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் அந்த வரலாற்றில் ஓர் அங்கமாகலாமே...
பணியிடத்தில் பணி உயர்வு என்பது காலப்போக்கிலோ, திறன் மேம்பாட்டிலோ, தேர்வு மூலமோ நிகழ்வதுதான். ஆனால் ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்பவருக்கு அவர் துறை சார்ந்த அனுபவம் மட்டுமின்றி பிறதுறை சார்ந்த அறிவும், புரிதலும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உற்பத்தி, விற்பனை, சந்தை நிதி, செயல்பாடு, தொழில்நுட்பம் என எல்லாத்துறைவிபரங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை தொழில் குறித்து தெரியாவிட்டால் இக்கட்டான சூழலில் சரியான முடிவை எடுக்க முடியாமல் சிக்கலாகும்.
ஒரு தலைமை அதிகாரியின் முக்கியமான பணி சிறந்தவர்களை நிறுவனத்தில் பணியமர்த்துவதுதான். ஒவ்வொரு துறை பற்றிய சரியான புரிதல் இல்லையெனில் அந்த பிரிவில் திறமையானவரை அடையாளம் காண்பது எளிதல்ல. மேலும் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு சிறந்த தகவல் தொடர்புத்திறன் இருக்க வேண்டும். நிறுவனத்தின் எதிர்கால குறிக்கோள் குறித்து தனது பணியாளர்களுக்கு தெளிவாக தெரிவித்து இலக்கை எட்டுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான கொள்கைகளை வகுப்பவரே சிறந்த தலைமை அதிகாரியாக இருக்க முடியும்.
நிறுவன இலக்கை எட்டுவதில் அனைத்து பணியாளர்களும் ஒரே குழுவாக ஒத்த மனதுடன் செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதை எப்படி செயல்படுத்த போகிறோம்? என்பதை விரிவாக பேச வேண்டும். மணிக்கணக்கில் பேசுவதை காட்டிலும் அதை ஒரு சில மணிநேர செயல்பாடுகளில் உறுதி செய்யலாம். அதன் மூலம் எது சரி? எது தவறு? என்பதை உணர்த்த முடியும். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பவர்களை வெளியேற்ற தயக்கம் காட்டக்கூடாது. ஊழியர்களை வெளியேற்றுவது என்பது மிகவும் இக்கட்டான தருணம் தான். ஆனாலும் இதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இப்படியாக அனைத்தையும் ஒருங்கே கவனிக்கும் ஒருவரே தலைமை அதிகாரியாகவோ, சிறந்த பணியாளராகவோ இருக்க முடியும்.
இந்த தலைமைத்துவப் பண்பை பெண்களும் வளர்த்து பல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கும் வரலாறு எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் அந்த வரலாற்றில் ஓர் அங்கமாகலாமே...

வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
* நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
* குழந்தைகள் மீது ஆசிரியர்கள் அக்கறை கொண்டவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த அளவிற்கு குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்களோ அந்த அளவிற்கு குழந்தைகள் கல்வி கற்கும் திறனும் சிறப்பாக இருக்கும்.
* குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்த்து சில நாட்கள் கடந்ததும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியருடன் எந்த அளவிற்கு குழந்தை நட்பு கொண்டிருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பேச தயங்கினால், அந்த தயக்கத்தை போக்க வழிவகை செய்யுமாறு ஆசிரியரிடம் கூற வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடுவதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை பாராட்டி ஊக்குவிக்கவேண்டும். இத்தகைய நடைமுறைகள் பள்ளிக்கூடத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை கேட்டறிவது அவசியம்.
* மழலையர் பள்ளிகள் சமூகம் சார்ந்த விஷயங்களை போதிக்கும் இடமாகவும், குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் இடமாகவும் விளங்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் பொறுமையாக குழந்தைகளுக்கு போதிக்கிறார்களா? என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
* விளையாட்டுடன் தொடர்புபடுத்தி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் விரைவாக புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களும் நினைவில் இருக்கும். அதனால் மழலையர் பள்ளியை தேர்ந் தெடுக்கும்போது விளையாட்டு சார்ந்த பயிற்சி இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.
சைவ உணவுதான் உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்படுகிறது. அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.
அசைவ உணவு வகைகளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது. விலங்குகளில் உள்ள புரதங்களில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் இருக்கின்றன. அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் அவற்றின் அளவு குறைவாகவே இருக்கும். உடலில் புரதத்தின் அளவு குறையும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு புரத பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி தடைபடும். வளர்சிதை மாற்ற விகிதமும் பாதிப்புக்குள்ளாகும். ஆதலால் உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதற்கு அசைவ உணவு சாப்பிடுவது அவசியமானது.
ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் இரும்பு சத்து அதிகமிருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இரும்பு சத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அசைவ உணவு வகைகளில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எலும்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான கால்சியம் சைவ உணவை விட, அசைவ உணவு வகைகளில் அதிகம் கலந்திருக்கும்.
அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் கால்சியம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரும்பு, கால்சியம் தவிர அசைவ உணவுகளில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் பல்வேறு பாகங்களின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு கொண்டவர்கள் அசைவ உணவை தவிர்க்கக்கூடாது.
அதேவேளையில் அசைவ உணவை சாப்பிடுவதால் பக்கவிளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அதாவது இறைச்சி உணவு வகைகளை அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிவப்பு இறைச்சி போன்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொழுப்பு தமனிகளை அடைத்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அசைவ உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஏனெனில் அசைவ உணவு வகைகளில் கலந்திருக்கும் அதிகமான புரதத்தை ஜீரணிப்பது செரிமான அமைப்புக்கு கடினமான பணியாகும். தொடர்ச்சியான அசைவ உணவு பழக்கம் ஆயுட்காலத்தை குறைத்துவிடும். உடல் பருமன் பிரச்சினையையும் உருவாக்கும். அதனால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதற்கு அடிமையாகிவிடாமல் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.