search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பணிபுரியும் இடத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் பெண்களுக்கு
    X
    பணிபுரியும் இடத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் பெண்களுக்கு

    பணிபுரியும் இடத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் பெண்களுக்கு

    தலைமைத்துவப் பண்பை பெண்களும் வளர்த்து பல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கும் வரலாறு எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் அந்த வரலாற்றில் ஓர் அங்கமாகலாமே...
    பணியிடத்தில் பணி உயர்வு என்பது காலப்போக்கிலோ, திறன் மேம்பாட்டிலோ, தேர்வு மூலமோ நிகழ்வதுதான். ஆனால் ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்பவருக்கு அவர் துறை சார்ந்த அனுபவம் மட்டுமின்றி பிறதுறை சார்ந்த அறிவும், புரிதலும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உற்பத்தி, விற்பனை, சந்தை நிதி, செயல்பாடு, தொழில்நுட்பம் என எல்லாத்துறைவிபரங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை தொழில் குறித்து தெரியாவிட்டால் இக்கட்டான சூழலில் சரியான முடிவை எடுக்க முடியாமல் சிக்கலாகும்.

    ஒரு தலைமை அதிகாரியின் முக்கியமான பணி சிறந்தவர்களை நிறுவனத்தில் பணியமர்த்துவதுதான். ஒவ்வொரு துறை பற்றிய சரியான புரிதல் இல்லையெனில் அந்த பிரிவில் திறமையானவரை அடையாளம் காண்பது எளிதல்ல. மேலும் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு சிறந்த தகவல் தொடர்புத்திறன் இருக்க வேண்டும். நிறுவனத்தின் எதிர்கால குறிக்கோள் குறித்து தனது பணியாளர்களுக்கு தெளிவாக தெரிவித்து இலக்கை எட்டுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான கொள்கைகளை வகுப்பவரே சிறந்த தலைமை அதிகாரியாக இருக்க முடியும்.

    நிறுவன இலக்கை எட்டுவதில் அனைத்து பணியாளர்களும் ஒரே குழுவாக ஒத்த மனதுடன் செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதை எப்படி செயல்படுத்த போகிறோம்? என்பதை விரிவாக பேச வேண்டும். மணிக்கணக்கில் பேசுவதை காட்டிலும் அதை ஒரு சில மணிநேர செயல்பாடுகளில் உறுதி செய்யலாம். அதன் மூலம் எது சரி? எது தவறு? என்பதை உணர்த்த முடியும். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பவர்களை வெளியேற்ற தயக்கம் காட்டக்கூடாது. ஊழியர்களை வெளியேற்றுவது என்பது மிகவும் இக்கட்டான தருணம் தான். ஆனாலும்  இதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இப்படியாக அனைத்தையும் ஒருங்கே கவனிக்கும் ஒருவரே தலைமை அதிகாரியாகவோ, சிறந்த பணியாளராகவோ இருக்க முடியும்.

    இந்த தலைமைத்துவப் பண்பை பெண்களும் வளர்த்து பல நிறுவனங்களில் உயர் பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கும் வரலாறு எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது. நாமும் அந்த வரலாற்றில் ஓர் அங்கமாகலாமே...
    Next Story
    ×