search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அழகை மெருகூட்டும் தேன்
    X
    அழகை மெருகூட்டும் தேன்

    சருமத்தின் அழகை மெருகூட்டும் தேன்

    இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக...
    இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக்குணங்களோடு அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. அடர்த்தி நிறைந்த தேனில் ஆன்டிஆன்ஸிடன்ட் இருக்கிறது. இளமையை மீட்டுத்தரும் தேன், முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறுசிறு சுருக்கங்கள், உஷ்ணகட்டிகள், தேமல் போன்றவற்றை சரிசெய்யும்.  தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக

    கேரட்டை நன்றாக அரைத்து ஒருஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது வறண்ட சருமத்தை மிருதுவாக்கும்.

    வறண்ட சருமம் இருப்பவர்கள் திராட்சை  அரைத்த விழுது அவகோடா அரைத்த விழுது தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடலாம். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.

    தேனுடன் சம அளவு காபி பொடியையும் கலந்து நமது உடலில் வெயில் பட்ட இடங்களில் தடவ வேண்டும். உலர்ந்தவுடன் மிதமான நீரில் கழுவவும். இது சருமத்துக்கு பளபளப்பையும் புத்துணர்வையும் தரும்.

    முகத்தில் கரும்புள்ளிகள் பருக்களால் வந்த பள்ளங்கள் தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேனை தினசரி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

    தேவையான அளவு தேனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
     
    இதை கண்களுக்கு கீழ் கருவளையம் வரக்கூடிய பகுதி, கன்னம் தாடை, மூக்கு நுனி, உதடு என முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவவும். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காக்கும். பருக்கள் வராமல் தழும்புகளை போக்கும்.

    தேனுடன் சம அளவு கெட்டித்தயிரை கலந்து வெயில்படுவதால் சருமம் கருத்திருக்கும் இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவலாம். தினமும் இதை செய்து வந்தால் ஒரே மாதத்தில் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மறைந்து பழைய பொலிவு கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை வறட்சியிருந்து நீக்க உதவும்.
    Next Story
    ×