என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
2022-ல் ராசியை 2 முறை மாற்றும் சனி பகவானால் பணம் மூட்டை மூட்டையாக 4 ராசிக்காரர்களுக்கு மின்னல் வேகத்தில் சேர வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனிபகவான் அடுத்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வரை சஞ்சரிக்க வேண்டும். ஆனால், ஜூன் 5-ந் தேதி முதல் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு செல்கிறார். அவர் மகர ராசியில் 2023 ஜனவரி 17-ந் தேதி வரை இருந்து, பின் மீண்டும் கும்ப ராசிக்கு வருவார்.
சனி ஒரு ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றுவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அவற்றில் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்று ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். நல்ல மரியாதை கிடைக்கும்.
ரிஷபம்
ஏப்ரல் 29-ந் தேதிக்கு பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சனி பகவானால் நிறைய பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாகவும், சாதகமாகவும் இருக்கும்.
தனுசு
2022-ல் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். நிதி நிலைமை நன்கு வலுவாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு, இந்த காலம் மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமானதாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் இக்காலத்தில் நன்றாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறும் வாய்ப்பு நிறைய உள்ளது. பல பெரிய புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.

திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்கள் சந்தோஷி மாதாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்கும்.
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9.15 மணியில் இருந்து காலை 9.45 மணிக்குள் விருஷப லக்னத்தில் கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர் தலைமையில் பிரம்மோற்வ விழா கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக கருட உருவம் வரைப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலில் வைத்து கொடிக்கும், கொடி மரத்துக்கும் அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து கொடியை, நாணல் கயிற்றுடன் இணைத்து, வேத பண்டிதர்கள் வேதமந்திரங்களை முழங்க, பக்தர்கள் ராமா.. ராமா.. எனப் பக்தி கோஷம் எழுப்ப கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருடன் திருவீதி உற்சவம், காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஆஸ்தானம் நடந்தது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் பெரிய ஜீயர், சின்னஜீயர்சுவாமிகள், கோவில் துணை அதிகாரி பார்வதி, ஆகம ஆலோசகர் விஷ்ணு பட்டாச்சாரியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரிமளரெங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரெங்கம் என்று பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது அரங்கமாக இந்த பரிமள ரங்கநாதர் கோவில் திகழ்கிறது.
மேலும் இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன் வழிபட்டதாக கூறப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவிலில் இருந்து வாணவேடிக்கையுடன் பெருமாள், தாயாருடன் கோவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தெப்பக்குளத்தில் தெப்பம் 3 சுற்றுக்கள் சுற்றி வந்தன. பின்னர் நிலையை வந்தடைந்தது. இந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
இறைவன்: பரிமள ரங்கநாதர்
இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம்
கோவிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார்.
ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார். தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான்.
மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.
இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
போக்குவரத்து வசதி:
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30
கோவிலின் முகவரி:
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில், திருஇந்தளூர், மயிலாடுதுறை 609003.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு முன் பதிவும், அங்கப்பிரதட்சணமும் தொடங்கியது.
திருமலை :
கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் (குலுக்கல் முறை) மற்றும் அங்கப்பிரதட்சணை அனுமதி சீட்டு நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நடைமுறையை மீண்டும் தொடங்கி உள்ளது.
பக்தர்கள் பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு திருமலையில் உள்ள ஆர்ஜித சேவை கவுண்ட்டர்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம். அங்கு அவர்களுக்கு 2 ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படும். அதில் ஒரு சீட்டு பக்தருக்கும், மற்றொரு சீட்டு கவுண்ட்டர் பைல் காப்பியாக அதிகாரிகளின் பரிசீலனைக்கும் ஏற்கப்படும்.
பக்தருக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் சம்பந்தப்பட்ட பக்தரின் பதிவு எண், சேவை தேதி, தனிப்பட்ட பெயர், மொபைல் எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். பதிவு செய்த பக்தர்கள் முன்னிலையில் அகண்ட எல்.இ.டி. திரையில் முதல் குலுக்கலில் (டிப்) தானியங்கி தர வரிசை அடிப்படையில் மாலை 6 மணிக்கு நம்பர் ஒதுக்கப்படும். பக்தர்கள் எந்தெந்த சேவை டிக்கெட்டுகள் கேட்டுள்ளார்களோ அதற்கு தகுந்தாற்போல் நம்பர் ஒதுக்கப்படும்.
பொதுவாக, வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை பக்தர்கள், வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஆர்ஜித சேவை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். யாரேனும், அவ்வாறு செய்யவில்லை என்றால், இரண்டாவது முறையாக இரவு 8.30 மணிக்கு இயங்கும் குலுக்கல் முறைக்கான தற்போதைய முன்பதிவுக்கு டிக்கெட்டுகள் கரண்ட் புக்கிங் விடப்படும்.
குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள், அவற்றை வாங்குவதற்கு இரவு 11 மணிக்குள் அவர்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தெரிவிக்கப்படும். குலுக்கல் முறை செயல்பாட்டில் பக்தர்கள் ஒரு வாய்ப்பைப் பெறுவதற்காக தனியங்கி எலிமினேஷன் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால், ஆறு மாதங்கள் வரை எந்தவொரு சேவையையும் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு ஆர்ஜித சேவைக்கு மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஆர்ஜித சேவை பதிவுக்கு ஆதார் கட்டாயம். இருப்பினும் வெளிநாடு வாழ் பக்தர்கள் (என்.ஆர்.ஐ) தங்களின் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். பக்தர்கள் அசல் புகைப்படம், அசல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
புதிதாக திருமணம் செய்தவர்கள் கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யலாம். அதற்கு திருமண அழைப்பிதழ் மற்றும் அசல் புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பித்தால், புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கீட்டின்படி கல்யாண உற்சவ டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருமணம் முடிந்து 7 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.
இன்று (வியாழக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திருமலையில் உள்ள பி.ஏ.சி-1ல் உள்ள இரு கவுண்ட்டர்களில் தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடப்பதால் பக்தர்கள் தரிசனம் இன்றி அங்கப்பிரதட்சணத்துக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நாளை (வெள்ளிக்கிழமை) அபிஷேகம் நடப்பதால் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...பங்குனி மாத அமாவாசை விரதமும்...பலன்களும்...

புனித வெள்ளியையொட்டி சிலுவை பயணம் ஏப்ரல் 15-ந் தேதி நடக்கிறது. இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பயணம் திருசடங்குகள் நடைபெறும்.
கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளியன்று புனித கருணை மாதா மலையில் உள்ள தியான மையத்திற்கு சிலுவை பயணம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 42-வது சிலுவை பயணம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி புனித வெள்ளியன்று நடக்கிறது.
அன்று காலை 7 மணிக்கு ஆலய வளாகத்தில் பிலாத்து இயேசுவை தீர்ப்பிடும் நிகழ்ச்சியுடன் சிலுவை பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து இந்த பயணம் அருகில் உள்ள புனித சவேரியார் ஆலயம், கருங்கல் பஸ் நிலையம், நிர்மலா மருத்துவமனை ரோடு திருப்பு, நிர்மலா மருத்துவமனை, சிந்தன்விளை கருணை மாதா மலை குருசடி வழியாக சென்று கருணை மாதா மலை உச்சியில் அமைந்துள்ள தியான மையத்தை அடைகிறது. அங்கு சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசுவின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுடன் பயணம் நிறைவுபெறும்.
இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொள்வார்கள்.
இந்த சிலுவை பயணம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பங்கு பணியாளர் மரிய அற்புதம் தலைமையில் ஆலய வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் பங்கு உதவி அருட்பணியாளர் ஜஸ்டின் கிறிஸ்துராஜ், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் ஜான் ராஜேந்திரன், செயலாளர் பெட்ரோமல், பொருளாளர் பவுல் தாஸ், துணைச் செயலாளர் வெர்ஜின் ஜெனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் விளக்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய பொதுமக்களிடம் கோவில் நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது.
மதுரை :
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சுவாமிக்கு பிரார்த்தனை செய்து விளக்கு ஏற்றுவதற்காக வாளகத்தில் நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு, எள் விளக்கு ஆகியவை 5 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது
தற்போது எண்ணெய், நெய் விலை உயர்வால் விளக்குகளின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி கோவில் வளாகத்திற்குள் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் விளக்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய பொதுமக்களிடம் கோவில் நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது. பொது மக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதனை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் உயர்த்த உத்தேசித்துள்ள நெய், எள், எண்ணெய் விளக்குகளின் விலை உயர்வை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது நடத்தப்படும் கட்டண முறையை உடனடியாக நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கோவிலுக்கு ஆட்சேபனை மனுக்களை பெரிய அளவில் கொடுப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், பகதர்கள் சார்பில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தனித்தனியாக விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களின் ஆட்சேபனையை கடிதம் மூலம் அனுப்பி உள்ளதாக சுந்தரவடிவேல் தெரிவித்தார். இதன் மூலம் பக்தர்களும் விளக்கு கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி தொடர்ந்து இரவு குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை நடந்தது. அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இரவு 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி தொடர்ந்து இரவு குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா வருகிற 5-ந்தேதி அன்று நடக்கிறது. அன்றைய தினம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை படையல் செய்து வழிபாடு செய்வார்கள். மறுநாள் 6-ந்தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நடக்கிறது. 7-ந்தேதி பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா அன்று காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இன்று அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.
புரட்டாசி மாதம் எப்படி தெய்வீகமான மாதமாக கருதப்டுகிறதோ, அதற்கு இணையான உன்னதம் மிகுந்த ஒரு மாதம் பங்குனி மாதம் ஆகும். மற்ற எல்லா மாதங்களை போலவே பங்குனி மாதத்திலும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம் என்னென்ன செய்தால் நமக்கு மேலான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
பங்குனி மாத அமாவாசை தினமான இன்று அதிகாலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இன்று விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமை பொங்கும்.
சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.

பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபடுகிறார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தற்போது நடந்து வருகிறது.
விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபடுகிறார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுகின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விடிய, விடிய பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றுவதை காணலாம். விழாவையொட்டி பக்தர்கள் பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனும் செலுத்தி வருகின்றனர். இதில் பறவை காவடி, முதுகில் அலகு குத்தி வாகனம், தேங்காய்கள் போன்றவற்றை இழுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்களுக்கு தினமும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற பிரசாதமும் வழங்கப்படுகிறது. மேலும் வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்களும் அம்மனை வணங்கியபடி செல்வதை காணமுடிகிறது. புதிதாக மோட்டார்சைக்கிள் வாங்கியவர்கள் அம்மன் கோவில் அருகே வண்டியை நிறுத்தி பூஜை செய்து வழிபட்ட பிறகே வண்டியை எடுத்துச்செல்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மௌலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா …..
உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம். இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது.