என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
உகாதி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் மூலவர் சன்னதி அருகில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 4 மணியளவில் பஞ்சாங்க சிரவணம், இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
முன்னதாக காலை 8.30 மணியளவில் பக்த கண்ணப்பருக்கு சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் கவிஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலி கட்டா போன்ற சுகந்த திரவியம் அடங்கிய புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை, ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
முன்னதாக கோவிலில் அதிகாலை சுப்ரபாதம், தோமாலா சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகியவை நடந்தது. அதன்பிறகு காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் என அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலி கட்டா போன்ற சுகந்த திரவியம் அடங்கிய புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள்.
நான் கள்ளங்கபடின்றி கற்றேன். கற்றதை முறையீடின்றி பிறரோடு பகிர்ந்து கொண்டேன். அதன் செல்வத்தை நான் மறப்பதில்லை(சாஞா 7:13)
ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில்சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். ஊக்கமுடமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மை உடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது. உங்களை நீங்கள் மதிக்கும் மன உணர்வை பயன்படுத்துங்கள். அது போன்று நண்பர்களையும், அதிகாரிகளையும் மதியுங்கள். மென்மையான செயல்களின் மூலம் நல்லதை பற்றி சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் வகுப்புக்கு சென்று வருவது நல்ல பழக்கம்.
காலம் குறித்த அர்ப்பண உணர்வு, அமைதி, நுண்மதி, சாந்தம், தன்னம்பிக்கை போன்றவை நம்மை வளர உதவி செய்யும். எனவே முடிந்த அளவுக்கு ஆற்றலோடு நல்லுறவை பேணி பள்ளிக்கூடத்தில் இருந்து எந்த அளவுக்கு பல நல்லதை கற்றுக்கொள்ள முடியுமோ, எவ்வளவு நெறிமுறைகளை உள்வாங்கி கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்றுக்கொள்ள முயற்சி எடுங்கள்.
வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக உங்கள் இடத்தில் எழுந்து நின்று காத்திருங்கள். முதலில் வெளியே செல்வதற்கு நெருங்கி பிடித்து போக வேண்டாம். பள்ளி அரங்கில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் போது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சியுடன் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் முழுமையாக படித்து தேவையானவற்றை மட்டுமே எழுதுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்றான ‘முட்டப்பதி’யில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்றவை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்றான ‘முட்டப்பதி’யில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதியில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்றவை நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி இன்று அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, தொடர்ந்து பால்தர்மம் ஆகியவை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஒற்றையால் விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை ஊர்வலமாக வந்து வடக்கு வாசலில் கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு அன்னதர்மம் போன்றவை நடக்கிறது.
4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதிவலம் வருதல் நடக்கிறது. இதற்காக ரூ.1 கோடி செலவில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறைவு நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி, 5 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டப்பதி தர்ம கர்த்தாக்கள் மனோகரன் மற்றும் கைலாஷ் மனோகரன் ஆகியோர் செய்துள்ளனர்.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 22-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ஆயிரம் பானை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது.நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும், தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்றது. இதையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அமாவாசையை முன்னிட்டு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளை பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வனத்துறையினர் பக்தர்களுக்கு இனிப்புகள் கொடுத்து அனுப்பினர். பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அமாவாசையை முன்னிட்டு மதியம் 12.30 மணியிலிருந்து 2 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அமாவாசை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
பரந்து விரிந்த கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக அமைந்திருப்பது ஈரோடு. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈரோடு நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. சிறப்பு பெற்ற ஈரோடு நகரில் எழுந்தருளி உலக மக்களுக்கு நன்மை அருள்புரியும் தாயாக வீற்றிருப்பவர் பெரிய மாரியம்மன்.
ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரப் ரோட்டில் (மாநகராட்சி அலுவலகத்தின் எதிரில்) பக்தர்களுக்கு அருளாசி புரியும் மாரியம்மனின் திருவிழா காலம் இது.
பங்குனி மாதத்தில் ஈரோட்டில் வெயில் கொளுத்தினாலும், காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையாது என்கிற வகையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுடன் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கிறது. நடுமாரியம்மன் கோவில் பெரியார் வீதியிலும், வாய்க்கால் மாரியம்மன் கோவில் காரைவாய்க்காலில் காலிங்கராயன் வாய்க்கால் கரையிலும் அமைந்து உள்ளன.
பெரிய மாரியம்மன் கோவிலின் குண்டம் வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடுமாரியம்மன் கோவிலிலும் நடைபெறும்.
ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து பெரிய மாரியம்மனை வழிபடுவார்கள். அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகம் இருக்கும். திருவிழா நாட்களில் போக்குவரத்து திணறும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதுபோல் திருவிழா காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய மாரியம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நகராக மாறும் காட்சி அன்று நடைபெறும்.3 கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக்கடனாக வீசும் உப்பு தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் என்றால் பக்தர்கள் மாரியம்மன் மீது கொண்ட நம்பிக்கைக்கு இதுவே சாட்சியாகும்.
பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் தேர் நடுமாரியம்மன் கோவிலில் உள்ளது. இந்த தேர் 30 அடி உயரம் கொண்டது. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. சிவபெருமான், முருக பெருமானின் திருவிளையாடல்கள் தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. வீணை, இரட்டைக்குழல், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் பற்றி சிற்பங்களும் இந்த தேரில் செதுக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்க தேரேறி வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். வெப்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க பெரிய மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக குணமாகும் என்பது நம்பிக்கை. அம்மை கொப்பளம் வராமல் இருக்க பெரிய மாரியம்மன் அருள் புரிகிறார். குழந்தை இல்லாத தம்பதியருக்கு அந்த குறை இல்லாமல் செய்யும் தாயாக விளங்கும் பெரிய மாரியம்மன் கொங்கு மண்ணுக்கே தாயாக உள்ளார். எனவேதான் நாள்தோறும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நீண்டுகொண்டே உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
* மார்கழி மாத பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். மார்கழி மாத மூல நட்சத்திரம் தினத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறும்.
* 10 நாட்கள் நடைபெறும் சித்திரை
தெப்பத்திருவிழா, ஆவணி திருவிழா
* சித்திரை விசு கனிகாணல் விழா.
* மாசி மாதம் மாசி திருக்கல்யாண திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.
* சிவன் கோவில் என்பதால் மாதத்திற்கு 2 நாட்கள் பிரதோஷ வழிபாடு நடைபெறும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
* மாசித்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 6-ம் திருவிழாவில் நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை மற்றும் 10-ம் திருவிழாவில் நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நாட்களில் கேரள பெண்கள் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்வர். இதனால், இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
* வலியப்படுக்கை பூஜை ஆண்டுக்கு 3 முறை நடைபெறும். அதாவது, கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, மாசித்திருவிழாவில் 6-ம் நாள், பரணி நட்சத்திரம் தினத்தன்றும் வலியப்படுக்கை பூஜை நடைபெறும்.
நாகர்கோவில் நாகராஜா கோவில்
* தைத்திருவிழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். தைதேரோட்டம் சிறப்பு வாய்ந்தது.
* ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள். இதுபோக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதி
* ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிறுக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடை நடைெபறும்.
* மாசி மாதம் 20-ந்தேதி அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழா நடைபெறும்.
* வருடத்தில் தை, ஆவணி, வைகாசி ஆகிய 3 மாதங்களில் 11 நாட்கள் திருவிழாவும், 12-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.
* கார்த்திகை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கி 17 நாட்கள் நடைபெறும்.
* பங்குனி மாதம் சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் முத்துக்குடை ஊர்வலம் நடைபெறும்.
கோட்டார் புனித சவேரியார் ஆலயம்
* சவேரியார் ஆண்டு திருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா தர்கா
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் ரஜப் மாதத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும்.
பள்ளியாடி பழையபள்ளி திருத்தலம்
இந்த திருத்தலம் நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்துக்கள் தீபம் ஏற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், முஸ்லிம்கள் தூபமிட்டும் வழிபடுகின்றனர். மார்ச் மாதம் சமபந்தி விருந்து இங்கு பிரமாண்டமாக நடைபெறும்.

கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது.
கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது. செய்து பயன் அடையுங்கள். இதை செவ்வாய், சனி தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம், திசை எதுவும் இல்லை.
(1) ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை (மாவு அல்ல), கையளவு கல் உப்பு, 2 செம்பு நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜையறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும். கட்டி தொங்க விட அவசியமில்லை. மாதம் ஒரு முறை மாற்றி விடலாம். இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும். குறிப்பிட்டு கணவன் மனைவி சண்டை எனில் மேற்கூறியதில் செம்பு நாணயத்திற்கு பதில் வெள்ளி நாணயம் வைத்து விடவும். பலன் மிகும்.
(2) ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும், அப்படிபட்டவர்கள், ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன் காய்ச்சாத பசும் பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி கப்பில் தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும். பின்பு காலையில் அதை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும். பாலை மூடாமல் கொண்டு செல்ல வேண்டும். மரம் அருகில் இல்லாதவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் பாலை மாற்றி கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது. இதை வாரா வாரம் செய்து வரலாம். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் மிகும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடக்கிறது.
மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். இதேபோல், ஸ்ரீ சூர்யநாராயண சுவாமி கோவிலில் உகாதியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக காலை 7 மணி முதல் 7.45 மணி வரை ஸ்ரீ சூர்யநாராயண சுவாமிக்கு அபிஷேகம், மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இந்த நேரத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1,127 தூக்கக்காரர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனர்.
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, நேர்ச்சை நிறைவேற்ற இந்த ஆண்டு 1098 பச்சிளம் குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் அனுஷ்டிப்பார்கள்.
கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1,127 தூக்கக்காரர்கள் நேற்று மாலை நீராடிவிட்டு கோவில்வளாகத்தை சுற்றி நீண்ட வரிசையாக நின்று நமஸ்காரம் செய்யும் நிகழ்வு நடந்தது.