
விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி இன்று அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, தொடர்ந்து பால்தர்மம் ஆகியவை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஒற்றையால் விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை ஊர்வலமாக வந்து வடக்கு வாசலில் கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு அன்னதர்மம் போன்றவை நடக்கிறது.
4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதிவலம் வருதல் நடக்கிறது. இதற்காக ரூ.1 கோடி செலவில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறைவு நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி, 5 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டப்பதி தர்ம கர்த்தாக்கள் மனோகரன் மற்றும் கைலாஷ் மனோகரன் ஆகியோர் செய்துள்ளனர்.