என் மலர்
வழிபாடு

சிறியசேஷ, ஹம்ச வாகனங்களில் கோதண்டராமசாமி வீதிஉலா
பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சிறியசேஷ, ஹம்ச வாகனங்களில் கோதண்டராமசாமி வீதிஉலா
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகனத்தில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story