என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
திருச்சி நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்கள் அல்லாபக்ஸ் என்கிற முகமது கவுஸ், நூர்தீன், சையத்சலாவுதீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு வக்புவாரியத் தால் நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்களாக 3 ஆண்டுகளுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டள்ளோம். இந்தாண்டு தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்கா 1025-வது ஆண்டு சந்தனக் கூடு உரூஸ் விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 11-ந் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், 15-ந்தேதி துர்பத் என்னும் சுத்தம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது. அன்றைய தினம் காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர் வலம் தொடங்கி நத்தஹர்வலி தர்காவை வந்தடையும்.
17-ந்தேதி சந்தனம் பூசும் வைபமும், 18-ந்தேதி இரவு தர்காவில் மின்அலங்காரம் நடக்கிறது. இந்த விழாவுக்கு வெளிமாநிலங்களில் இருந் தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

மேலும் தர்காவுக்கு சொந்தமான குளத்தை தூர்வாரி தூய்மையாக பராமரிக்கவும், இங்கு வந்து தங்கும் பக்தர் களுக்காக தங்கும் விடுதியும் கட்டித்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலின் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், தளவாய் மாடசாமி, தூசி மாடன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வாக கோவிலின் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருவையாறு அந்தணர்க்குறிச்சியில் நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவையாறு அந்தணர்க்குறிச்சியில் நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம் நடந்தது. புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்த சிலாத முனிவருக்கு சிவபெருமானின் அசரீரி அருளாசிப்படியே யாகம் செய்த நிலத்தை உழுத போது பங்குனித் திருவாதிரை நட்சத்திரத்தில் கிடைத்த பெட்டகத்துக்குள் இருந்த
எனும் குழந்தையே பின்னாளில் கயிலாய நந்தியானது.
அந்தணர்க்குறிச்சி வினாயகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள குளத்தில் கொழுவினால் கீறி, மண்ணெடுத்து, ஒரு பெட்டகத்தில் உள்ள ஜெப்பேசர் விக்ரகத்திற்கு அபிஷேக, அலங்கார ஆராதனை செய்து, பின்னர் பல்லக்கில் எழுந்தருளச் செய்து ஐயாறப்பர் கோவில் வந்தடைந்தார்.
நேற்று மாலை நந்தியெம்-பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் சுயசாம்பிகையுடன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் உடன் நந்தியெம்பெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனப் பல்லக்கில் எழுந்தருளி தில்லைஸ்தானம், கடுவெளி பனையூர் மற்றும் வைத்தியநாதன் பேட்டை வழியாக திருமழபாடி செல்கிறார்.
ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுவாமி அன்னவாகனம், சிம்ம வாகனம், ஆஞசநேயர், கருடன், ஆதிஷேசன், கஜேந்திர வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலி-புத்தூரில் பழமை-யான கதலி நரசிங்க-பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திரு-விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடை-பெற்று உற்சவ மூர்த்தி-களுக்கு அபிசேகமும், தீபாராதனையும் காட்டப்-பட்டது.
இதனையடுத்து சக்கரத்-தாழ்வார் எதிர் சேவை செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து கொடி-மரத்திற்கு பூஜை செய்யப் பட்டு 18 பட்டி கிராமத்தார் முன்னி-லையில் கொடி ஏற்றப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமி அன்னவாகனம், சிம்ம வாகனம், ஆஞசநேயர், கருடன், ஆதிஷேசன், கஜேந்திர வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 14 ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலி நரசிங்க பெருமாளுக்கு திருக்-கல்யாணம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி உற்சவர்கள் தேரில் எழுந்தருளி தேர்-திருவிழா நடைபெறும். 17 மற்றும் 18 ஆம் தேதி 2 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் ஊர் சுற்றி வந்து நிலை நிறுத்தப்படும். 19 தேதி சப்தா வர்ணம் சாத்தப்பட்டு விழா நிறைவு பெறும்.
விழா ஏற்பாடுகளை தக்கார்வைரவன், செயல் அலுவலர் தங்க லதா தலைமையில் 18 கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள், இந்த ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடித்து வந்தால், அதற்கான பலன் விரைவிலேயே கிடைக்கப்பெறும்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் ஏகாதசி திதி வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள். சில வருடங்களில் 25 ஏகாதசியும் வருவதுண்டு. இந்த ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ ஏகாதசி என்று பெயர். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி இந்த ஏகாதசியை மேற்கொள்ளலாம். இந்த ஏகாதசியின் மகிமை பற்றி, யுதிஷ்டிரனுக்கு, கிருஷ்ண பகவானே எடுத்துரைத்திருப்பதாக ‘ஏகாதசி மகாத்மியம்’ கூறுகிறது.
துவாபர யுக காலத்தில், வாழ்ந்து வந்த மன்னன் மஹிஜித். அந்த மன்னன் மஹிஷமதிபூரி என்ற நாட்டை ஆட்சி செய்து வந்தான். செல்வ வளம் நிறைந்த அந்த நாட்டில் அனைத்து உயிர்களும், மன நிறைவுடன் வாழ்ந்து வந்தன. மனிதர்கள் எந்த குறையும் இன்றி தங்கள் வாழ்வை சிறப்பான முறையில் நடத்தி வந்தார்கள். ஆனால் மன்னனின் மனதில் மட்டும் பெரும் குறை ஒன்று இருந்தது. ஏனெனில் தனக்குப் பின் ஆட்சியை வழிநடத்திச் செல்ல அவனுக்கு ஒரு வாரிசு இல்லை.
தன் வாழ்வில் பல தான, தருமங்களை செய்தபோதிலும், தனக்கு எதற்காக இந்த நிலை வந்தது என்று, தன் நாட்டு அறிஞர்கள் பலரையும் அழைத்துக் கேட்டான், மன்னன். அவர்களால் அதற்கு பதில் கூற முடியவில்லை. ஆனால் ஒரு ஆலோசனையை மன்னனுக்கு வழங்கினர். அதாவது ‘நாட்டின் எல்லைக்குட்பட்ட வனத்தில் வசிக்கும் லோசமர் முனிவரை சந்தித்தால் இதற்கான விடை கிடைக்கும்’ என்றனர். மன்னனும், “உடனடியாக முனிவரை சந்தித்து என்ன செய்யலாம் என்று அறிந்து வாருங்கள்” என்று கூறி அமைச்சர்களை அனுப்பிவைத்தான்.
லோசமர் முனிவர் சாதாரணமானவர் அல்ல. அவர் பிரம்மதேவனுக்கு நிகரான ஞானமும், சக்தியும் படைத்தவர். அவரை சந்தித்த அமைச்சர்கள், தங்கள் மன்னனின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு நல்ல தீர்வு இருந்தால் சொல்லும்படி வேண்டினர்.
லோசம முனிவர் அவர்களுக்கு பதிலளித்தார். “உங்கள் மன்னன் இந்த பிறப்பில் நல்வினைகளை பலவாறு சேர்த்திருந்தாலும், கடந்த பிறவியில் செய்த தீவினையால் இந்த சாபம் ஏற்பட்டுள்ளது. அந்த தீவினை நீங்கிவிட்டால், அவன் வேண்டும் புத்திர பாக்கியம் கிடைத்து விடும். அதற்கு உங்கள் மன்னன் சரணடைய வேண்டியது பகவான் கிருஷ்ணரைத்தான். தை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் நாராயணரை நினைத்து விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல், மகாவிஷ்ணுவின் நாமங்களை மட்டும் உச்சரிக்க வேண்டும். இரவில் கண்விழித்து, கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளைப் பாடியும், வாசித்தும், ஹரி கதைகளைக் கேட்டும் பொழுதை கழிக்க வேண்டும். பின்னர் மறுநாள் துவாதசி அன்று விரதம் முடித்தால், முற்பிறவி தீவினைகள் அகன்று புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும்” என்றார்.
லோசமர் கூறிய அறிவுரையின்படியே தை மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்த மன்னன் மஹிஜித்துக்கு, விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சையில் உள்ள 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீதிகளில் தேர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக தார்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம். 19-ம் நூற்றாண்டுக்குப்பின் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.
இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது. இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது.
இதையடுத்து தேர் அலங்கரிப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றுகாலை தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர். அதனைத்தொடர்ந்து தேர்ருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. மேலும் தேர் சக்கங்களுக்கு கிரீஸ் வைக்கும் பணியும் நடைபெற்றது.

உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற புராதன சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதத்திலான ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ளது பிரசித்திபெற்ற திருஉத்தரகோசமங்கை. இந்த ஊரில் மங்களநாதர் மங்களநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற புராதன சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதத்திலான ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்தநாளான ஆருத்ரா தரிசனத்தன்று அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த கோவிலில் இதுநாள்வரை சிறிய அளவிலான தூக்கி செல்லும் வகையில் தேர்மட்டுமே இருந்து வந்தது.
இந்நிலையில் கோவிலின் அறங்காவலர் பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் முயற்சியின்பேரில் நன்கொடையாளர் மூலம் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இலுப்பை மரத்திலான 36 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்ட அழகிய தேர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான 4 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தின் சார்பில் தலா 750 கிலோ எடையுள்ள சக்கரங்கள் அமைத்து தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த தேரில் யாழி, குதிரை, சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட மரவேலைப்பாடுகளுடன் கூடிய 200 விதமான சாமி பொம்மைகள் அழகுற அமைக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் கடந்த 4 மாதங்களாக இந்த மர வேலைப்பாடுகள் நடைபெற்று தற்போது திருஉத்தரகோசமங்கைக்கு சக்கரங்கள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன.
200 அடி நீள வடகயிறு பொருத்தப்பட்டு தேர் இழுத்து செல்லும் வகையில் தயாராகி வருகிறது. திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி திருநாவுக்கரசு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த தேரை இரவு, பகலாக தீவிரமாக வடிவமைத்து வருகின்றனர். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தினமும் இந்த பணிகளை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
வருகிற 11-ந் தேதிக்குள் இந்த தேர் முழுமை பெற்று வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது சுவாமி- அம்பாள் ஆகியோர் புதிய தேரில் 4 ரத வீதிகளை வலம்வர உள்ளனர்.
புகழ்வாய்ந்த புராதன கோவிலாக இருந்தாலும் பெரிய தேர் இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்த நிலையில் தற்போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ராட்சத தேர் திருஉத்தரகோசமங்கையில் அமைக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
தாயார் : ஏலவார் குழலி
உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி
தல விருச்சம் : பூளை எனும் செடி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
இடம் : ஆலங்குடி, திருவாரூர்
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் "சுக்ரவார அம்பிகை" என்பதாகும்.
இந்த ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.' வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.
உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.
ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோவிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.
இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம்.
சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.

திண்டுக்கல் அருகே நடந்த கோவில் திருவிழாவில் மல்லிகைப்பூ தலைப்பாகையுடன் வேல் ஏந்தி பாரிவேட்டைக்கு சென்ற நிகழ்வை காண ஏராளமானோர் திரண்டனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டிபட்டியில் பழமையான முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாரிவேட்டை எனப்படும் புலி பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த நபர்கள் தலையில் மல்லிகைப்பூ தலைப்பாகை கட்டியபடியும், கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் கையில் வேல் ஏந்தி உடல் முழுவதும் சந்தனம் பூசி ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளம், உருமி முழங்க அவர்கள் செல்ல இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர் மந்தையில் ஒன்று கூடினர். அப்போது அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த புலி வேடமிட்டவரை பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலால் புலியை குத்தி பிடிப்பதுபோலவும் பின்னர் அதனை தூக்கி செல்வது போலவும் கிராம மக்கள் நடித்து காட்டினர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் புலி உள்ளிட்ட வன விலங்குகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. அவற்றை ஊர் திருவிழாவின்போது இளைஞர்கள் வேல் ஏந்தி சென்று அழித்து வரும் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.
அதனை மறக்காமல் இன்று வரை தொடர்ந்து முனியப்பசாமி கோவில் திருவிழாவில் நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றார். இத்திருவிழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் அதிக அளவில் வந்திருந்தனர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
தொடர்ந்து அதிகாலை 5.43 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலைமைப்பதியில் முன்பு இருந்து தொடங்கியது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமி தோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் அதி காலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியில் முன்பிருந்து முத்துக்குடை களும், மேளதாளங்களும் முன்செல்ல தொடர்ந்து காவிக்கொடி பிடித்த அய்யா வழி பக்தர்கள் அணிவகுத்து செல்ல முத்துக்குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், ஆகியோர் முன்னிலை வகிக்தனர். ஊர்வலம் சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு பெரிய ரத வீதியை சுற்றி வந்து கரும்பாட்டூர், ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் போகும் பகுதி களிலுள்ள நிழல்தாங்கல் களில் ஊர்வலத்திற்கு வர வேற்பும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்ற டைந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடை பெற்றது. ஊர்வலம் மீண்டும் மாலை 4- மணிக்கு முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொத்தையடி, அரசம்பதி வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை வந்தடை கிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 14 நாட்கள் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை(சனிக்கிழமை) அமிர்தகடேஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு எமசம்ஹாரமும், 14-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.