என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை விழாவானது இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
திருச்சி:
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்ற போதிலும் அதில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவானது இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை 6.30 மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி இன்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு வீதி உலா கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இரண்டாம் திருநாளான நாளை காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதேபோல் தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு வாகனமாக அதாவது பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேச வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி வீதிஉலா கண்டருளுகிறார்.
இப்படி 9 நாட்கள் முடிந்து 10 ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும்.
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வு இந்த ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறாக நினைவுகொள்ளப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன? என்பது குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம்.
வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும் பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். மேலும் இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர்.
இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததினால் தான் மக்கள் பிதாவை பார்த்து வேண்டிக்கொள்ளும் வார்த்தையாகவும், பிதாவே இயேசுவை இந்த சிலுவை பாடுகளில் இருந்து விடுவியும் என்றும் சொல்வதைத் தான் ஓசன்னா என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் இயேசுவானவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய வாரம் நடைபெறுகிறது.
அந்த நாட்களில் எருசலேம் மக்கள் ஒலிவமலை குருத்து இலைகளை கையில் ஏந்தி இயேசுவை வரவேற்றது போல, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பனையில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து அதை சிலுவையாக வடிவமைத்து கைகளில் ஏந்தியபடி, அவரை புகழ்ந்து பாடல்களை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று இயேசுவை நினைவுகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது. எனவே இந்த நாட்களில் இயேசுவின் பாடுகளில் எவ்வளவு பரிசுத்தம் நிறைந்துள்ளது என்பதை நினைவுகூர்ந்து, மீண்டுமாய் நமக்காக அவர் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூற ஆயத்தமாவோம் ஆமென்.
சகோதரி. கேத்ரின், திருப்பூர்.

இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோயில்.முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகள். கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும், கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள்.
கருவறை கோஷ்டத்தின் கிழக்குப்பகுதியில் ராஜகணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் நின்றிருக்கும் துர்க்கையும், தென்பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே மகாலட்சுமியும், பால முருகனும் அருட்பாலிக்கின்றனர்,நுழைவாயிலில் மகிஷாசுர மர்த்தினியும், கஜலட்சுமியும், சரஸ்வதியும், லட்சுமியும் அருள் பொங்க காட்சி தருகின்றனர்.அன்னையின் விமானத்தில் சமயபுரம் மாரியம்மன், காமாட்சியம்மன், விசாலாட்சி, சரஸ்வதி, கருமாரியம்மன், தனலட்சுமி, அயன மாரியம்மன், காயத்ரி, கோமாரி, லட்சுமி, தண்டு மாரியம்மன் ஆகியோர் திருமேனிகள் அழகுற கொலுவிருக்கின்றன,
அன்னையின் சந்நதிக்கு மேற்கு திசையில் அரசமரத்தின்கீழ் கற்பக விநாயகர் அருட்பாலிக்கிறார். கிழக்குப் பகுதியில் நவகிரக நாயகர்கள் தனி மண்டபத்தில் உள்ளனர். வடகிழக்குப் பகுதியில் கருப்பராயனையும், முனியப்பனையும் தரிசிக்கலாம்.‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும்கூடாரம் என்று பொருள். ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப்பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் அந்த வீரனின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
பொழுது விடிந்ததும், தனது நண்பர்களுடன் அந்த அடர்ந்த காட்டில் அன்னையைத் தேடி அலைந்தான். அந்த வீரன். அவனது அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். அங்கேயே ஆலயமும் அமைந்தது.அன்று முதல் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் களைந்து அருட்பாலித்து வருகிறாள் அன்னை. தினமும் நான்கு கால பூஜைகள் இக்கோயிலில் நடக்கின்றன. காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சம் தொரட்டி மரம்.
இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், ‘சக்தி கரகம்.’ அன்று காலை 6 மணிக்கு கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் திருக்கோயிலிலிருந்து `சக்தி கரகம்' புறப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களில் தீச்சட்டி ஏந்தி, சக்தி கரகத்துடன் பக்தி பரவசத்துடன் வருவார்கள். மனம் சிலிர்க்க வைக்கும் காட்சி இது. 11வது நாளன்று காலை 6 முதல் இரவு 8 மணி வரை தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கும். அன்று அன்னைக்கு பலவிதநறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பலவகை மலர்களால் அன்னைக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும். தன்னை நம்பும் பக்தர்களுக்கு நல்லருள் புரிந்து பக்தர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து காத்தருள் புரிகிறாள் தண்டு மாரியம்மன்.

வருகிற 14-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடப்பதையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர்.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.
குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும். மற்ற எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.
ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் முன்பு நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மாவிலை, மலர்கள் கட்டப்பட்டன. பின்னர் குழிக்குள் நவதானியங்கள் போடப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் செயல்அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 24-ந் தேதி லட்சார்ச்சனையும், 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கம்புகள், இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.
பங்குனி மாதத்தில் ஊர்தோறும் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களுக்கு அந்த நேரத்தில் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், வண்ண வண்ண பூக்களை கூடையில் ஏந்திச் சென்று, அம்பிகையின் மீது தூவி பக்தி செலுத்துவர்.
இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தேனை சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும்பொழுது, தேனான வாழ்க்கை அமையும். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும்.
மழைவளம் பெருகும். ‘மாரியல்லாமல் ஒரு காரியமில்லை’ என்ற வாக்குப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் மகத்தான பலனை அடையலாம்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள மண்டப வளாகத்தில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள மண்டப வளாகத்தில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் உலக நன்மை வேண்டியும், குடும்ப பிரச்சினை இன்றி அனைவரும் நலமாக வாழ வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது. முடிவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மங்கள பொருட்களும், திருவிளக்கு பூஜை புத்தகமும் தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் தரிசன டிக்கெட் பெற முடியாது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இலவச தரிசனம் பெற குவிந்தனர். இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள், ஆகிய 3 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்றே பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு முடிந்தது. இன்று செவ்வாய் கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அதுவும் தீர்ந்துவிட்டது.
இதையடுத்து டிக்கெட் கவுன்டர்கள் மூடப்படுகிறது. இதனால் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் தரிசன டிக்கெட் பெற முடியாது.
புதன்கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் 4 நாட்கள் தரிசனத்தை தவிர்த்து விட்டு பின்னர் வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 60,790 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35,106 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிக்கலாம்...நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு திரளான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என தண்டு மாரியம்மனை பக்தர்கள் அழைத்து வழிபட்டு வருகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 6-ந் தேதி காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அன்று இரவு 15 அடி உயரம் மற்றும் 4 அடி பருமன் கொண்ட மரம் வெட்டி எடுக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் மாலை அந்த மரம் கம்பமாக சீவி வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கம்பத்தை பக்தர்கள் பவானி ஆற்றுக்கு எடுத்து சென்றனர். அங்கு கம்பத்துக்கு ஆற்று நீர் ஊற்றப்பட்டதும், கம்பம் முழுவதும் மஞ்சள் பூசி, விபூதி வைக்கப்பட்டது.
பின்னர் கம்பத்துக்கு மலர் மாலை அணிவித்து பூஜை நடைபெற்றது. இதையடுத்து தாரை, தப்பட்டை முழங்க கம்பத்தை பக்தர்கள் தூக்கிகொண்டு தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலை சென்றடைந்ததும் கம்பத்துக்கு பூசாரிகள் சிறப்பு பூஜை செய்து கம்பத்தை நட்டு வைத்தனர். இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பத்தை சுற்றி அந்த பகுதியை இளைஞர்கள் ஆடி வந்தனர். வருகிற 19-ந் தேதி வரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் கம்பத்தை சுற்றி ஆடுவாா்கள். பின்னர் அன்று இரவு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 21-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. 28-ந் தேதி மறுபூஜையுடன் கோவில் விழா நிறைவடைகிறது

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் சிகர விழாவான தேரோட்டம் 16-ந்தேதி காலை 6.10 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் சாதாரணமாக நடைபெற்றது. தற்போது தொற்று குறைந்து இருப்பதால், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இதற்கான கொடியேற்று விழா 7-ம் தேதி நடைபெற்றது. பின்னர் உற்சவருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இரவில் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து தினசரி தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, உற்சவர் வெள்ளி, சிம்மம், யாளி, அனுமந்த வாகனம் என்று வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வர இருக்கிறார்.
விழாவில் 11-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
12-ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் 13-ந்தேதி மாலை மஞ்சள் நீர் வசந்த உற்சவமும், 14-ந்தேதி காலையில் வெண்ணைத்தாழி உற்சவமும், இரவில் தெருவடைச்சான் உற்சவமும் நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்டை உற்சவம், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.
தொடர்ந்து, சிகர திருவிழாவான தேரோட்டம் 16-ந்தேதி காலை 6.10 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. 17-ந்தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உலா உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும், 18-ந்தேதி காலை துவாதச ஆராதனமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
சகேரியா தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில் சமாதானத்தின் தேவனாக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார்.
யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றி வருவதோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வதும் வழக்கம்.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறவில்லை. இந்த வருடம் தொற்று முற்றிலும் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரிக்கிறார்கள்.
கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு சிறப்பாக நடைபெறும். காலை 6 மணிக்கே தேவாலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் பாடல் பாடி பவனியாக குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
இதே போல தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையின் கீழ் அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கதீட்ரல் பேராலயம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை, சூளை, பிராட்வே, வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.
குருத்தோலை ஞாயிறையொட்டி ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சிலுவைகளை சபை மக்களுக்கு ஆயர்கள் வழங்கி அருள் ஆசியும் கூறுவார்கள்.
குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் மிகவும் கஷ்ட தினங்களாக கருதி ஆலய வழிபாடுகளில் பயபக்தியோடு பங்கு பெறுவார்கள். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறிந்து சிறப்பு வழிபாடுகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும்.
14-ந் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதரின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 15-ந் தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமையாகும். அன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்படும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில் மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்கலாம்...புத்திர பாக்கியம் தரும் ‘புத்ரதா ஏகாதசி’

சுமார் 800 ஆண்டுகள் வரலாறு கொண்ட கரக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 11 நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா பெங்களூருவில் கரக திருவிழா குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
11 நாட்கள் நடைபெறும் புகழ்பெற்ற பெங்களூரு கரக திருவிழாவுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரக ஊர்வலம் செல்லும் பாதையில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை சீரமைக்கும் பணிகள், அந்த பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்தல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்துள்ளனர். எந்த நிலையிலும் அந்த நீர் வெளியே வராத வண்ணம் சரிசெய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வாகன நிறுத்தத்திற்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.
பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் கூறும்போது, ‘பெங்களூரு கரக திருவிழா இன்று (நேற்று) இரவு முதல் தொடங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் வரலாறு கொண்ட கரக திருவிழா இன்றும் தனது நிலையை இழக்கவில்லை’ என்றார்.
அதைத்தொடர்ந்து உதய் கருடாச்சார் எம்.எல்.ஏ., ‘பெங்களூரு கரக விழாவில் அனைத்து சாதி-மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த முறை சிலர் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது. மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று சிலரிடம் கூறியுள்ளேன்’ என்றார்.
இந்த கரக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று(சனிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள், 13-ந் தேதி ஆராதனை தீபங்கள், 14-ந் தேதி இரவு 10 மணிக்கு பச்சை கரக நிகழ்ச்சி நடக்கிறது. 15-ந் தேதி பொங்கல் வைத்தல் மற்றும் புராதன சேவைகள் நடக்கின்றன. 16-ந் தேதி கரக சக்தியோத்சவ ஊர்வலம், 17-ந் தேதி புராதன சேவை, 18-ந் தேதி வசந்தோத்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த பேட்டியின்போது, கரக விழா குழுவினர், தர்கா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கயிலை சிவகணங்களின் தலைவரும், சிவாச்சாரியார்களுள் முதல் குருவுமான நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் இன்று (9-ந்தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது.
சென்னை பள்ளிக்கரணையில் சாந்தநாயகி சமேத ஆதி புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராகு, கேது பரிகார தலமாக விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நந்திகேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நந்திகேஸ்வரருக்காக சிவபெருமானே நேரடியாக வசிஷ்டர் ஆசிரமத்துக்கு சென்று பெண் கேட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கயிலை சிவகணங்களின் தலைவரும், சிவாச்சாரியார்களுள் முதல் குருவுமான நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் இன்று (9-ந்தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு திருமண சீர்கொண்டு வருதல் நிகழ்ச்சி, மகா சங்கல்பம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருமண சடங்கு வைபவம் நடக்கிறது. திருநந்திதேவர் திருக்கூட்டத்தின் மீனாகுமாரி தலைமையிலான கயிலாயவாத்திய இசையுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.15 மணிக்கு மாங்கல்ய தாரணம், மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி நடனக் காட்சியும், மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.