
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நந்திகேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நந்திகேஸ்வரருக்காக சிவபெருமானே நேரடியாக வசிஷ்டர் ஆசிரமத்துக்கு சென்று பெண் கேட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கயிலை சிவகணங்களின் தலைவரும், சிவாச்சாரியார்களுள் முதல் குருவுமான நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் இன்று (9-ந்தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு திருமண சீர்கொண்டு வருதல் நிகழ்ச்சி, மகா சங்கல்பம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருமண சடங்கு வைபவம் நடக்கிறது. திருநந்திதேவர் திருக்கூட்டத்தின் மீனாகுமாரி தலைமையிலான கயிலாயவாத்திய இசையுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.15 மணிக்கு மாங்கல்ய தாரணம், மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி நடனக் காட்சியும், மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.