search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம்
    X
    நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம்

    நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம்

    திருவையாறு அந்தணர்க்குறிச்சியில் நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருவையாறு அந்தணர்க்குறிச்சியில் நந்தியெம்பெருமான் ஜனன உற்சவம் நடந்தது. புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்த சிலாத முனிவருக்கு சிவபெருமானின் அசரீரி அருளாசிப்படியே யாகம் செய்த நிலத்தை உழுத போது பங்குனித் திருவாதிரை நட்சத்திரத்தில் கிடைத்த பெட்டகத்துக்குள் இருந்த
    எனும் குழந்தையே பின்னாளில் கயிலாய நந்தியானது.

    அந்தணர்க்குறிச்சி வினாயகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள குளத்தில் கொழுவினால் கீறி, மண்ணெடுத்து, ஒரு பெட்டகத்தில் உள்ள ஜெப்பேசர் விக்ரகத்திற்கு அபிஷேக, அலங்கார ஆராதனை செய்து, பின்னர் பல்லக்கில் எழுந்தருளச் செய்து ஐயாறப்பர் கோவில் வந்தடைந்தார்.

    நேற்று மாலை நந்தியெம்-பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் சுயசாம்பிகையுடன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அறம் வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் உடன் நந்தியெம்பெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனப் பல்லக்கில் எழுந்தருளி தில்லைஸ்தானம், கடுவெளி பனையூர் மற்றும் வைத்தியநாதன் பேட்டை வழியாக திருமழபாடி செல்கிறார்.

    ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×