என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
    அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை தீர்த்தத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்குள்ள ராக்காயி அம்மன் கோவிலில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய தடைநீடித்தது.

    இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். இதைதொடர்ந்து 10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் தேங்காய், பழம், மாலைகள் வைத்து அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி இந்த கோவில்களில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேங்காய் பழங்கள் வைத்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
    விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ஜங்சன் பகுதியில் இருந்து சமயபுரம் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து 21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ஜங்சன் பகுதியில் இருந்து ஆண்டு தோறும் சமயபுரம் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து 21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பாதயாத்திரையை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி கரகம், மயில் காவடி எடுத்து விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாக ஜங்ஷன் குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலை அடைந்தனர்.

    அங்குள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
    ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவிலில் உள்ள சாமி சிலை மீது சூரியஒளி விழுந்தது. இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது.
    ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் 20-ந் தேதிக்கு பிறகு 3 நாட்கள் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கும்.

    அதன்படி நேற்று சாமி சிலைமீது சூரியஒளி விழுந்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை ஏற்று இன்று (திங்கட்கிழமை) முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு ஆகியவை நிறுத்தப்பட்டது. தங்க தொட்டில் வழிபாடு என்பது, குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலில் குழந்தைகள் வைத்து ஆட்டப்படுவர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள தங்க தொட்டில் வழிபாட்டு முறையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
    முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழா நேற்று முன்தினம் காலை விக்னே‌‌ஷ்வர பூஜையுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முதல் யாக பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-வது யாக பூஜையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து கலச புறப்பாடும் நடைபெற உள்ளது. விழாவில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலையில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலாளர் மகே‌‌ஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
    ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
    வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

    பொதுப் பொருள்:

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...
    திருச்சி காட்டூர் ஆர்.கே.புரத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் 9-ம் ஆண்டு தேர்பவனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி காட்டூர் ஆர்.கே.புரத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 9-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனையை பங்குதந்தை சூசைராஜ் நடத்தி வைத்தார். இந்த வருடம் கொரோனா காரணத்தினால் தேர்பவனியானது ஆலய வளாகத்திற்குள் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கத்தோலிக்க இளைஞர்கள், கத்தோலிக்க மகளிர் அணி மற்றும் கத்தோலிக்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் (கிழக்கு) மலர் முழுக்கு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் (கிழக்கு) மலர் முழுக்கு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம் நடக்கிறது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 7 மணிக்கு கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், 1 மணிக்கு உச்சிகால பூஜை, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணி முதல் 11 மணி வரை மலர் முழுக்கு போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் கோலப்பன் மற்றும் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
    கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    நிகழ்ச்சியில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ், கொடைக்கானல் நகரசபை முன்னாள் தலைவர் ஸ்ரீதர், பூம்பாறை மற்றும் மேல்மலைப்பகுதியின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் சாமி பூந்தேர் வாகனத்தில் உலா வந்தார். திருவிழாவின் இறுதி நாளான இன்று (திங்கட்கிழமை) சாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகிகள், பூம்பாறை கிராமத்தை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இங்கு அமைந்துள்ள ராகு பகவான் கோவில் நாகராஜன் பூஜித்த தலமாகும். அதனால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

    ராகு பகவானுக்கு தென்புறமாக ஜே‌‌ஷ்டா தேவியும், வலப்புறமாக கஜலட்சுமி நர்த்தன கணபதியும் உள்ளனர். உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் அவருக்கு எதிரில் சப்த மாதாக்கள் இருக்க இந்த கோவில் தல வரலாற்றை இங்கே காணலாம்.

    இந்த தலம், நள மகாராஜாவுக்கு ஏழரை நாட்கள் சனி நீக்கிய தலம் ஆகும். சனீஸ்வர பகவான், ஈஸ்வரனை நோக்கி தனி சன்னதி கொண்டுள்ள தலம். நவக்கிரக சன்னதியும் தனியாக அமைந்து இருக்கிறது. இத்தலத்தில் உள்ள அம்பாள் தவக்கோலத்தில் இருப்பதையும், சகல மூர்த்திகளும் அம்பாளை சுற்றி இருப்பதையும் காணலாம்.

    வடக்கு பிரகாரத்தை கடந்து அன்னை கிரிகுஜாம்பாள் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இங்கு எழுந்தருளியிருக்கும் தேவி சுயம்புமூர்த்தியாக திகழ்கின்றாள். மலைமகள், அலைமகள், கலைமகள் என மூவரும் ஒன்றாக எழுந்தருளிய சக்தி பீடம் இது. அம்பாளுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. புனுகு சட்டம் தான் சாத்தப்படுகிறது.

    கவுதம முனிவரின் மனைவி அகலிகையிடம், இந்திரன் தவறாக நடந்து கொள்ள அதை அறிந்த முனிவர் நீ துர்நாற்றம் உடைய ஒரு பூனையாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். அந்த சாபம் நீங்கிட இந்திரன், திருநாகேஸ்வரம் வந்து அன்னை கிரிகுஜாம்பிகையை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் தரிசனம் செய்ய சாபம் நீங்கி பழைய உருவம் பெற்று நிம்மதி அடைந்ததாக இக்கோவில் தலவரலாறு கூறுகிறது.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். நாகதோ‌‌ஷமும், ராகுதோ‌‌ஷமும் உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கினால் தோ‌‌ஷம் நிவர்த்தி கட்டாயம் கிடைக்கிறது என்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க திருத்தலங்களில் திருநாகேஸ்வரமும் ஒன்று.

    இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ராகுபகவான் அவரது இரு தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகுபகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு இத்தலத்தில் தன்னையும் வழிபடுவோருக்கு பல நன்மைகளை அருளும் வரமும் பெற்று திகழ்கிறார். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக திருநாகேஸ்வரம் திகழ்வதால் வடநாட்டில் இருந்தும் பக்தர்கள் இங்கே குடும்பத்தோடு வருகிறார்கள்.

    ஜோதிட முறையில் பார்க்கும்போது ராகு பெருமானின் பெருமை அளவிடற்கரியது ஆகும். பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது. தனது பாதையில் சந்திரன் பூமியை இரண்டு இடங்களில் சந்திக்கிறது. சந்திரன் மேல் நோக்கி செல்லும்போது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் ராகு எனவும், சந்திரன் கீழ்நோக்கி வருகிறபோது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர் பெறுகிறது.

    இவை இரண்டும் பூமிக்கு மேலும், கீழும் ஒரே நேர்கோட்டில் அதாவது 180 டிகிரி வித்தியாசத்தில் உள்ளதால் எதிரெதிராக அமைகின்றன. நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர்.

    சந்திர, சூரியனை பலம் இழக்கும்படியும். ஒளி குன்றும்படியும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு-கேதுவுக்கு உண்டு. ராகுவுக்கு எந்த வீடும் சொந்தமாக இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல ராகு இருந்து வருகிறார். ராகு யோகத்திற்கு அதிபதியாவார். ராகு நல்ல நிலையில் அமைந்திருந்தால் நல்ல பலன்கள் நிறைய கிடைக்கும்.

    மே‌‌ஷம், ரி‌‌ஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் என்ற ஐந்து இடங்களில் ராகு இருந்து அவருக்கு கேந்திரங்களில் கிரகம் இருந்தால் பருவத யோகம் எனப்படும். அதன்படி குறிப்பிட்ட ஜாதகர் சீமான் ஆகவும், அரசனுக்கு ஒப்பாகவும் வாழ்வார். ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்து விட்டால் நல்ல மனைவி. நல்ல குடும்பம், நல்ல வேலைக்காரர்கள் ஆட்சி மற்றும் செல்வாக்கு முதலியன அமையும். ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணம் ஆகிறார்.

    மருந்து, ரசாயனம், நூதன தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றிற்கும் அவ்வப்போது மாறிவரும் நாகரீகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கிரனே காரணமாகிறார். அரசியல், செல்வாக்கு, ஆட்சி உரிமை போன்றவற்றிற்கும் ராகுவின் அனுக்கிரகம் மிகவும் தேவை. அணுகூல ராகு, கீழான ஒருவனையும் சக்கரவர்த்தி ஆக்கி விடுவார் என்று பூர்வ பாராசாரியம் என்னும் ஜோதிட நூல் கூறுகிறது.

    மந்திர ஜாலம், இந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்ற வித்தைகளும் ராகுவின் அனுகிரகத்தால் கிட்டும். ராகு, ஒருவனை குபேரபுரிக்கும் அழைத்துச் சென்று விடுவார். ராகு தோ‌‌ஷமுடையவராய் இருந்து விட்டால் மிகவும் கொடூரமான பலன்கள் விளையும். ஐந்தாமிடம் ராகுவால் புத்திர தோ‌‌ஷம் ஏற்படுகிறது.

    சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே ராகு தனது இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு தன்னை வழிபடும் மக்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வருவதைக் காணலாம். ஏழையையும் குபேரனாக்கும் ராகு தலம் இது என்பதால் நீங்களும் ஒருமுறை இங்கு சென்று வாருங்களேன்.

    கொள்ளை அழகு தரும் கோவில் சிற்பங்கள்

    திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் உள்ள தூண்களில் சிற்ப அமைப்பு ஆச்சரியப்படத்தக்கதாகவே இருக்கிறது. இங்குள்ள தூண்களிலும், அந்த தூண்களில் காணப்படுகின்ற சிற்பங்களையும் அந்த காலத்தில் நமது சிற்பிகள் மிகவும் அருமையாக செதுக்கியுள்ளனர். சிம்மம், தூணைத் தாங்குவது போன்று வடிவமைத்துள்ளது சிறப்பான அம்சம். மற்ற கோவில்களில்,, தூண்களின் மேலே சிம்மம் இருக்கும். இங்கு சிம்மம் கீழே செதுக்கப்பட்டிருப்பது கொள்ளை அழகு.
    காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.
    காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.

    1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும்.
    2. குலம் தழைக்கும்.
    3. கிரக தோஷங்கள் தீரும்.
    4. செல்வம் செழிக்கும், வறுமை நீங்கும்.
    5. வழக்குகள் வெற்றி அடையும்.
    6. நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
    பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வருகிற 11-ந்தேதி தை அமாவாசையன்று நோன்பு சாட்டுதல் திருவிழா தொடங்குகிறது.
    பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குண்டம் திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நடத்துவதற்கு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன் படி வருகிற 11-ந்தேதி தை அமாவாசையன்று நோன்பு சாட்டுதல் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து வருகிற 24-ந்தேதி நள்ளிரவில் மயான பூஜை நடக்கிறது. 26-ந்தேதி இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 27-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். நேற்று முறைதாரர்கள் கூட்டம் கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் குண்டம் திருவிழாவை எவ்வாறு சிறப்பாக , பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கூறினர்.
    ×