என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம்.
    தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம். உழைப்பு இல்லாமல் அநியாயமான வழிகளில் வரும் செல்வங்களை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றது.

    “மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (லஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்” என்று திருக்குர்ஆன் (2:188) எச்சரிக்கை செய்கின்றது.

    கையூட்டுப் பெற்று தன் மீதுள்ள பொறுப்புகளைச் செய்வதற்கு இஸ்லாம் வன்மையாகக் கடிந்து கொள்கிறது. லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் இறைவனின் சாபத்தைக் கொண்டு வருமென்று மேற்கோள் காட்டுகிறது இஸ்லாம்.

    நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னுமாஜா).

    பதவி, பொறுப்புகளை வைத்து பணமாகவோ, பரிசுப்பொருளாகவோ பெற்றாலும் அதுவும் லஞ்சம் என்கிறது இஸ்லாம்.

    ‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே. என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி)

    நேர்மையான உழைப்பு இல்லையென்றால், இறைவனுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளும் ஏற்கப்படாது என்பதை பல நபிமொழிகள் சுட்டிக் காட்டுகிறன. இறைவனிடம் பிரார்த்தனைகள் அங்கீகாரம் பெறுவதற்கு உடை, உணவு, இருப்பிடம் நேர்மையான முறையில் சம்பாதித்ததிலிருந்து இருப்பதை விரும்புகிறது இஸ்லாம்.

    ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)

    கொலை, கொள்ளை, திருட்டு, பொய்கள் எப்படி மோசடியோ? அதபோல கடமையை செய்ய லஞ்சம் பெறுவதும் மோசடிதான். ‘மோசடி செய்வதை ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கான தண்டனைகளை பன்‌மடங்காக நாளை மறுமையில் கொடுப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.

    உழைப்பிற்கு ஊதியம் பெற்றும், லஞ்சமாக மற்றொரு ஊதியம் பெறுதல், மற்றவரின் உரிமையைக் கெடுத்தல், மனதைக் கஷ்டப்படுத்தி பணம் சம்பாதித்தல், தகுதி இல்லாதவர் கூட பதவி பெறுதல் போன்ற அனைத்தும் மோசடியாகும். இவைகள் அனைத்திற்கும் முதல் கதவு லஞ்சமாக இருக்கிறது என்பது யதார்த்த உண்மையை உணர்ந்து இஸ்லாம் லஞ்சத்தை வெறுக்கின்றது.

    ஏ. எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் அத்யயன உற்சவத்தையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
    கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறவில்லை. இதற்கு அத்யயன உற்சவம் செய்து சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது.

    அத்யயன உற்சவத்தையொட்டி முதல் நாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. 2-வது நாள் உற்சவர் பெருமாள் தாயார் லெக்ஷ்மிநாராயண மூர்த்தி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. பின்னர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுதல், சாற்றுமுறை, திவ்யபிரபந்தம் பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானமாமலை ஜீயர் சுவாமிகள் மட நிர்வாகி கிருஷ்ணன் சுவாமி, ஜெகன்நாத கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
    கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவிலில் தை மாதம் தை பச்சை பால்குட உற்சவம் நடைபெற்றது.
    கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தை பச்சை பால்குட உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பால்குட உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து விஸ்வநாதர் காலனி, பேட்டை வடக்கு தெரு, இ.பி. காலனி உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் 100-க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினார்.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடந்தது. 3-ம் நாள் காலை 7 மணிக்கு திருவிருந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா,

    5-ம் நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, இரவு 7 மணிக்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து முக்கிய நிகழ்ச்சியான காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி, 9-ம் நாள் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனை ஆகியவை நடந்தது.

    10-ம் நாள் விழாவான நேற்று காலை 6 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமையில் இளங்குரு மட அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் மறையுரை ஆற்றினார். 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிைறவேற்றி மறையுரையாற்றினார்.

    இதில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், தூய காணிக்கை அன்னை திருத்தல பங்குத்தந்தை மரிய செல்வன், இணை பங்குத்தந்தையர், அருள் பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பங்கு நிர்வாக குழுவினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருக்கொடி இறக்கம், புத்தக கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.
    பழனிக்கு வரும் முருக பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் ‘செல்பி ஸ்பாட்' என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
    பழனி :

    பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி கோவில் வெளிப்பிரகாரம், வையாபுரிகுளம் ஆகிய இடங்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    இந்தநிலையில் பழனிக்கு வரும் முருக பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் ‘செல்பி ஸ்பாட்' என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிவாரம் தண்டாயுதபானி நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் 'நம்ம பழனி' என்ற வாசகங்களுடன் பெயர் பலகை மின்விளக்குடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழும் வகையில் இந்த செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பகலில் மட்டுமின்றி இரவிலும் அந்த இடங்களில் நின்று பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர் என்றார்.
    பிப்ரவரி மாதம் 9-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    9-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * பிரதோஷம்
    * சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    10-ம் தேதி புதன் கிழமை :
     
    * திருவோண விரதம்
    * மாத சிவராத்திரி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
     
    11-ம் தேதி வியாழக்கிழமை :
     
    * தை அமாவாசை
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்

    12-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

    13-ம் தேதி சனிக்கிழமை :

    * சந்திர தரிசனம்
    * சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    14-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * அமிர்தயோகம்
    * சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

    15-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சதுர்த்தி விரதம்
    * சுபமுகூர்த்த நாள்
    * சந்திராஷ்டமம் - மகம், பூரம்
    திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவின் 26-வது ஆண்டு விழா வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவின் 26-வது ஆண்டு விழா வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் முன்பு எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேய பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் காலை 6.30 மணிக்கு ஆஞ்சநேய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேய பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவில் முன் மண்டபத்தில் ஆஞ்சநேய பெருமான் தோளில் ராமபிரான் காட்சி அளித்தல் அலங்காரம் நடக்கிறது. இதையொட்டி கண்ணைக் கவரும் வகையில் வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாகல் நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவினர் செய்துள்ளனர்.
    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரில் கல்யாண வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரில் கல்யாண வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    பின்னர் விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கல்யாணசுந்தரம் நகர் பகுதி மக்கள் செய்திருந்தனர். இதேபோல் தஞ்சை அருகே கோவிலூரில் உள்ள பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை தமிழ்ப்பல்கலைக்கழக குடியிருப்பு வளாகம் சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் செய்து இருந்தனர்.
    கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 51,796 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,165 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
    திருப்பதி :

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் முதலில் 3 ஆயிரம் பக்தர்களுடன் திருப்பதியில் தரிசனம் தொடங்கப்பட்டது. பின்னர் படிபடியாக தரிசனம் செய்ய பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    திருப்பதியில் தற்போது தினசரி ரூ.300 கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி. தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த நாட்களில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தான் தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

    நேற்று முன்தினம் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் 50,200 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,621 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். 3.11 கோடி உண்டியல் வசூலானது.

    நேற்று 51,796 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,165 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

    தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. திரளான பக்தர்கள் பூ தட்டுகளை ஏந்தி வந்தனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று காலை தொடங்கியது. காலை 9.10 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவில் முன்புறத்தில் இருந்து பூ தட்டுகளை ஏந்தி மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டு முழங்க ஆதிமாரியம்மன் கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் வந்தனர்.

    அதைத்தொடர்ந்து 9.43 மணிக்கு கோவில் குருக்கள் ஒவ்வொரு தட்டுகளாக வாங்கி ஆதி மாரியம்மனுக்கு பூக்களை சாற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் பூக்களை தட்டுகளில் ஏந்தி கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.

    நேற்று காலையில் இருந்து இரவு வரை திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
    திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோ‌‌ஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்கள் நிறைய பேர். அவர்களில் பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர் என்பது வரலாறு.
    திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோ‌‌ஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்களில் சிலர். சூரியன் இங்கு வழிபட்டு பேறு பெற்றான் வினாயகர் வழிபட்டு கணங்களுக்கு பதியானார். கவுதமர் வழிபட்டு அகலிகையை அடைந்தார். நளன் இங்கே முறைப்படி வழிபட்டு இழந்த மனைவியை பெற்றான். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர். வசி‌‌ஷ்ட முனிவரும், இந்திரனும், பிரம்மனும், பகீரதனும் இங்கே வழிபட்டுள்ளனர்.

    சித்திரசேனன் என்ற மன்னன் திருநாகேஸ்வரம் வந்து வழிபட்டு தனக்கு குழந்தை பாக்கியம் அருள விரதம் இருந்து நல்ல புத்திரனைப் பெற்றான். நற்குணன் என்ற முனிவர், இத்தலத்தை வந்து வழிபட்டு பாம்பு கடித்து உயிர் நீத்த தனது மகனை பிழைக்கச் செய்தார். நாக மன்னர்களான ஆதிசேடன், தக்சுகன், கார்கோடகன் ஆகியோரும் வழிபட்ட வரலாறு இங்கு உள்ளது.
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு வில்லிசை, கரகாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படப்பும், அதனைத் தொடர்ந்து 3 மணிக்கு அண்ண படப்பும் நடக்கிறது.

    மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மகுடம், மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூ படப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    ×