என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
துர்க்கை அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வாழ்வில் மேன்மை பெறவும், துன்பம் நீங்கவும் துர்க்கா தேவியை வணங்க வேண்டும் என்றும், மங்கள ரூபிணியான அவள் தரிசனம் கண்டாலே சர்வ மங்களங்களும் உண்டாகும் என்றும் நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அந்த துர்க்கையம்மனை ஆலயங்களில் பெரும்பாலும் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில் சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில் தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு.
ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் வழி, பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர்.
பல வருடங்களுக்கு முன் செழியநல்லூர் பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும்,தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கே தன்னுடைய குல தெய்வமாகிய வன துர்க்கையையும் அமைத்து தினந்தோறும் குடும்பத்துடன் வழிபட்டு வந்தான்.
ஒருமுறை வனதுர்க்கை வழிபாட்டிற்கு வந்த தருணத்தில் அரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்திலேயே தங்கிவிட்டது. தனது பெற்றோரைக் காணாது தவித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் நகைகளை அபகரிக்க வந்தான் ஒரு திருடன். அச்சத்தில் அலறிய அந்தக் குழந்தை ஓடிவந்து வனதுர்க்கை அம்மனை கட்டிக்கொண்டது.
திருடன் குழந்தையைப் பிடித்து இழுக்க, குழந்தையுடன் அம்மனின் சிலையும் கீழே சாய்ந்தது. அப்போது துர்க்கை பிரசன்னமாகி திருடனை வதம் செய்ததுடன்,குழந்தையையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அரசனின் கனவிலும் அந்தத் தகவலைத் தெரிவித்தாள்.
இப்போதும் அந்த அன்னை சயனக் கோலத்திலே அந்தக் குழந்தையை கல் ரூபத்தில் தனது பக்கத்தில் வைத்து காத்தருள்கிறாள் என்கின்றனர். மேலும் துர்க்கையம்மன் நாகராஜபரிவார தேவதைகளுடன் தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.
இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. இவ்வாலயத்தில் விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், பாலசுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன.
இவ்வாலயத்தில் ஆனி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும், மாசி மாதத்தில் சிவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சயன துர்க்கையை வழிபடுவோருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோயும் தீரும்.

தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் விரதம் இருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம்.
தை அமாவாசையானது நாளை 11.2.2021 (வியாழக்கிழமை) அன்று வருகின்றது. தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம்.
‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்று சொல்வது வழக்கம். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.
அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்றுவதன் மூலம், அவள் உள்ளம் குளிச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள்.

ராகு பகவான் இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின் நோக்கி இடம்பெயர்வார். இதனை ஒட்டி லட்சார்ச்சனை மற்றும் சந்தன காப்பு ஆகியவை இங்கு நடைபெறும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் புராணகாலத்தில் செண்பக வனமாக விளங்கியது. கால வரையறை செய்யப்படாத புராண காலத்தில் சிவபெருமான் லிங்கத் திருமேனி கொண்டு செண்பக மரத்தின் கீழ் எழுந்தருளி தேவர், மானுடர், முனிவர், அரசர் முதலியோருக்கு அருள்பாலித்தார் என தலபுராணம் கூறுகிறது.
செண்பக வனத்தில் எழுந்தருளியிருந்த சிவபெருமானை ஐந்தலை அரவாகிய ராகு வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்று இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
இத்தலப் பெருமானை வழிபட்டதால் இப்பெருமான் நாகேஸ்வரர் என்னும் பெயர் பெற்று விளங்குகிறார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தொடங்கி 10 நாட்கள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் திருத்தேர் கடைசி ஞாயிறன்று சூரிய திருக்குளத்தில் புனித நீராடலும் நடைபெறும்.

அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் ஸ்ரீ மன் நாராயண சுவாமி கோவிலில் தைப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் ஸ்ரீ மன் நாராயண சுவாமி கோவிலில் தைப்பெருந் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், பல்லக்கு, தொட்டில், நாகம் போன்ற வாகனங்களில் எழுந்தருளினார். 8-ம் திருநாளன்று அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
10-ம் திருநாளன்று இந்திர வாகனத்தில் எழுந்தருளி முக்கிய நிகழ்வாக மதியம் முத்திரி கிணற்றில் இருந்து ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சந்தன குடம், பால்குடம் எடுத்து அங்கபிரதட்சணம் செய்தனர். 11-ம் திருநாளான நேற்று மாலையில் செண்டை மேளம் முழங்க அரகர கோஷத்துடன் சிறுவர், சிறுமிகளின் கோலாட்டத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சப்பர பவனியாக காளை வாகனத்தில் அமர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று செபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை அருட்பணி விக்டர் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெனடிக்ட் ஆனலின் மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு செபமாலை, நவநாள், திருக்கொடி பவனி, 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் கொடியை ஏற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றுகிறார்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. 12-ந்தேதி காலை 10 மணிக்கு அருட்பணி கில்பர்ட் லிங்சன் தலைமையில் திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.
திருவிழாவின் கடைசி நாளான 16-ந்தேதி காலை 8.30 மணிக்கு மலையாள திருப்பலி, 9.30 மணிக்கு தமிழில் திருப்பலி, 11 மணிக்கு மறைமாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணி அகஸ்டின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு செபமாலை, தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆன்டணிசாமி தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
திருவிழாவானது பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பொதுநலன் கருதி விழா நாட்களில் ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சப்பரபவனி, சமபந்தி ஆகிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற வழிபாட்டு நிகழ்வுகள் எந்தவித குறைவும் இல்லாமல் நடைபெறும் என்று திருத்தலபங்கின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாஏற்பாடுகளை வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு அதிபர் அந்தோணிமுத்து, பங்கு இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜோசப் கிரேசியஸ், செயலாளர் லில்லி பாய், துணை செயலாளர் பிரைட் சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அகஸ்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் இங்கு வந்து தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு.
இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 30 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
இதில் யாழ்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சன்னதி, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர். ஸ்ரீராகவேந்திரரை மனதால் நினைத்தாலே போதும்... நம்மையும் நம் சந்ததியும் செழிக்கச் செய்து அருளுவார்.
ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி
ஓம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத்
ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அருளிய பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய் என்று அர்த்தம்.
இந்த ஸ்ரீராகவேந்திரரின் ஸ்லோகத்தை, காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள். ராகவேந்திரரை நினைத்து, ஒருவருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலில் எழுந்தருளினார்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
நேற்று முன்தினம் வரை மூலஸ்தானத்தில் தாயாருக்கு திருவாதாரனம், திருமொழி சேவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவாய் மொழி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து வழிநடை உபயங்கள் கண்டருளி ஆழ்வார், ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.
அப்போது அங்கு திரளாக நின்று கொண்டிருந்த பக்தர்கள் தாயாரை வழிபட்டனர். இரவு 10 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று முதல் 10-ந்தேதி வரையும், ராப்பத்து உற்சவத்தின் நான்காம் திருநாளான 11-ந்தேதியும் பரமபதவாசல் மாலை 5.30 மணிக்கு திறக்கும். ஐந்தாம் திருநாளான 12-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு பரமபதவாசல் திறந்து இருக்கும். 13-ந்தேதி இயற்பா சாற்று முறையுடன் விழா நிறைவடைகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்பாடகம் என்ற ஊர். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் பாண்டவ தூதப் பெருமாள், 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் மிகப் பிரமாண்டமாக திருக்காட்சி தருகிறார். தாயார்களாக சத்யபாமா மற்றும் ருக்மணி தேவியர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு மிக்கதாக இருப்பது, கிருஷ்ண அவதாரம் என்றால் அது மிகையல்ல. இந்த அவதாரத்தின் போது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடக்கம் முதலே பிரச்சினையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாண்டவர்களை சூதாட அழைத்து, அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, 13 வருடம் வனவாசம் மேற்கொள்ளச் செய்தனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள், தாங்கள் ஆட்சி செய்ய 5 ஊர்களை வாங்கித் தரும்படி கிருஷ்ணரிடம் முறையிட்டனர். அப்படி 5 ஊர்களைத் தரவில்லை என்றால், 5 வீடுகளையாவது கேட்டுப் பெற்று வரும்படி கூறினர்.
பாண்டவர்கள் கேட்ட 5 வீடுகளைக் கூட கொடுக்கவில்லை என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையில் போர் மூண்டுவிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டு, பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ண பகவான், கவுரவர்கள் வீற்றிருக்கும் அஸ்தினாபுரம் சபைக்கு தூதனாகச் சென்றார். கிருஷ்ணர்தான், பாண்டவர்களின் மிகப்பெரிய பலம் என்பதை, துரியோதனன் அறிந்திருந்தான். எனவே அவர்களுக்காக தூது வரும் கிருஷ்ணரை அவமதிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டது. முன்பாக அந்த நாற்காலியின் கீழே ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப்போட்டு மறைத்தான், துரியோதனன்.
அவன் திட்டப்படியே அரண்மனைக்குள் வந்த கிருஷ்ணர், தனக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் போய் அமர்ந்தார். உடனே அந்த நாற்காலி பள்ளத்திற்குள் விழுந்தது. அந்த பள்ளத்திற்குள்ளேயே கிருஷ்ணரை கொன்றுவிட துரியோதனன், தன்னுடைய காவலர்களுக்கு உத்தரவிட்டான். அப்படி ஒரு ஆணை வந்ததும், சில மல்லர்கள், அந்த பள்ளத்திற்குள் குதித்து கிருஷ்ணரை தாக்க முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டி ஓங்கி உயர்ந்து நின்றார், கிருஷ்ண பகவான். அதைப் பார்த்து அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர்.
பாண்டவர்களுக்காக தூது போன கண்ணன், ‘பாண்டவ தூதப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் ‘தூதஹரி’ என்று கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கு கண்பார்வை கிடையாது. ஆனால் அவர் கிருஷ்ணனின் அந்த விஸ்வரூப காட்சியை பார்க்க விரும்பினார். அவருக்கு ஒரு கண நேரம் கண் பார்வை அளித்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை கிருஷ்ணர் காட்டி அருளிய தலம் இது என்று சொல்லப்படுகிறது.
குருசேத்திரப் போர் முடிந்து பல காலங்கள் கடந்த பின்னர், ஜனமேஜயன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவர் அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஆவான். ஜனமேஜயன், ஒரு முறை வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் மகாபாரதக் கதையைக் கேட்க வந்தான். அப்போது அவன், கிருஷ்ண பகவான் அஸ்தினாபுரத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை, நிலவறையில் அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்புவதாகவும், அதற்கான வழிமுறையை கூறும்படியும் ரிஷியிடம் கேட்டான். ரிஷி கூறிய அறிவுரையின்படி, இந்த தலத்திற்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்தான், ஜனமேஜயன். அவனுக்கு தன்னுடைய பாரத கால தூது கோலத்தை அமர்ந்தபடி காட்டியருளினார், பெருமாள்.
இந்த ஆலயத்திற்கு அருளாளப் பெருமாள் என்ற ஆச்சாரியார் வந்திருந்தார். அப்போது அவர் ராமானுஜருடன் 18 நாட்கள் வாதம் செய்தார். பின்னர் ராமானுஜரை சரணடைந்தார். இவர் நிறைய மகான்களுக்கு ஆச்சாரியராக இருந்திருக்கிறார். அதே போல் மணவாள மாமுனிகளும் இந்த ஆலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்.
27 நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக கிருஷ்ண பகவானை வழிபாடு செய்தாள். அதன்படி சந்திரனை மணம் முடித்தாள். ஆனாலும் அவளோடு மற்ற 26 நட்சத்திர தேவியரையும் மணம் முடிக்கும் சூழல் சந்திரனுக்கு ஏற்பட்டது. அப்போதும் கூட ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணியை முதலாவதாகவும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையை அடுத்ததாகவும் மணந்த பிறகே, ஏனைய நட்சத்திர தேவிகளை சந்திரன் மணந்தான். ரோகிணி இந்த ஆலயத்தில், தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனத்தையும் தந்தருளிய பெருமாளை சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ தங்க தொட்டில் வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பழனி முருகன் கோவிலில் தங்கத்தொட்டில் வழிபாடு, தங்கரத புறப்பாடு ஆகியவை நிறுத்தப்பட்டது.
இதனிடையே பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.

வெல்லம் கலந்த பாயசம், உளுந்துவடை, பால், தேன், பழம் வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.
நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை -பரணி, ஐப்பசி -பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விஷேச நாட்கள் ஆகும்.
ஏனெனில் பரணி நட்சத்திரம் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.

திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர், முருகன், பெருமான் வழிபாடும், 8 மணிக்கு ஆட்கொண்டார் பெருமானுக்கு வடமாலை சாத்தி அபிஷேகமும், 9 மணிக்கு மகாருத்ரஹோமம் , 10 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
11 மணிக்கு யாகசாலையிலிருந்து பூர்ணாஹீதி முடிந்து கடம் புறப்பட்டு 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை வேதபாராயணம், தேவார திருமுறை பாராயணம், கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது.