search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார்
    X
    புனித அந்தோணியார்

    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா இன்று தொடங்குகிறது

    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று செபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை அருட்பணி விக்டர் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெனடிக்ட் ஆனலின் மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு செபமாலை, நவநாள், திருக்கொடி பவனி, 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் கொடியை ஏற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. 12-ந்தேதி காலை 10 மணிக்கு அருட்பணி கில்பர்ட் லிங்சன் தலைமையில் திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவின் கடைசி நாளான 16-ந்தேதி காலை 8.30 மணிக்கு மலையாள திருப்பலி, 9.30 மணிக்கு தமிழில் திருப்பலி, 11 மணிக்கு மறைமாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணி அகஸ்டின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு செபமாலை, தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆன்டணிசாமி தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவானது பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பொதுநலன் கருதி விழா நாட்களில் ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சப்பரபவனி, சமபந்தி ஆகிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற வழிபாட்டு நிகழ்வுகள் எந்தவித குறைவும் இல்லாமல் நடைபெறும் என்று திருத்தலபங்கின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழாஏற்பாடுகளை வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு அதிபர் அந்தோணிமுத்து, பங்கு இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜோசப் கிரேசியஸ், செயலாளர் லில்லி பாய், துணை செயலாளர் பிரைட் சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×