search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா
    X
    ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா

    ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா

    திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர், முருகன், பெருமான் வழிபாடும், 8 மணிக்கு ஆட்கொண்டார் பெருமானுக்கு வடமாலை சாத்தி அபிஷேகமும், 9 மணிக்கு மகாருத்ரஹோமம் , 10 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    11 மணிக்கு யாகசாலையிலிருந்து பூர்ணாஹீதி முடிந்து கடம் புறப்பட்டு 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை வேதபாராயணம், தேவார திருமுறை பாராயணம், கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது.
    Next Story
    ×