search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்
    X
    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்

    பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடக்கம்

    பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில், குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ தங்க தொட்டில் வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பழனி முருகன் கோவிலில் தங்கத்தொட்டில் வழிபாடு, தங்கரத புறப்பாடு ஆகியவை நிறுத்தப்பட்டது.

    இதனிடையே பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
    Next Story
    ×