என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தை அமாவாசையையொட்டி, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் மும்மூர்த்திகள் குடிகொண்டு உள்ளனர். எனவே இந்த கோவிலில் விேசஷ நாட்கள், அமாவாசை நாட்கள் மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அதுமட்டுமின்றி முக்கிய பரிகார தலமாக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. இதனால் தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்து செல்வார்கள்.
குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் கொடுமுடி வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுக்கவும் மற்றும் பரிகாரம் செய்யவும் வருவது வழக்கம். இதனால் இந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து காணப்படும்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தை அமாவாசை நாள் வருகிறது. எனவே திதி, தர்ப்பணம் கொடுக்கவும் மற்றும் பரிகாரம் செய்யவும் அதிக அளவில் பக்தர்கள் கொடுமுடிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி கொடுமுடி கோவில் செயல் அலுவலர் பா.ரமேஷ், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா தொற்றின் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. கொடுமுடி கோவிலுக்கு எதிரே உள்ள படித்துறைகளில் மட்டுமே பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பரிகாரம் செய்யும் பக்தர்கள் கண்டிப்பாக கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பிறகே பரிகாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் மணல்மேடு பகுதிக்கு பக்தர்கள் யாரும் சென்று தர்ப்பணம் கொடுக்கவோ, பரிகாரங்கள் செய்யவோ மற்றும் குளிக்கவோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபகாலமாக மணல்மேடு பகுதியில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே அங்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.
திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.
இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை, உஷ பூஜை, உச்சிகால பூஜை போன்றவை முடிந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தை அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்தொடர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் இருந்து பலிகர்ம பொருட்களை பெற்று தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் கடலில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக சர்க்கார்பதியில் இருந்து 80 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் மாசாணியம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா தை அமாவாசை நாளில் கொடி யேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி தை அமாவாசை நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து 18 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
ஆனைமலை ஆழியாற்றங் கரையில் உள்ள மயானத்தில் வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. முன்னதாக இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மறுநாள் 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இந்த விழாவில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
28-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 1-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் அருண் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றுவதற்கு மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வருவதற்கு ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர், தலைமை முறைதாரர், அம்மன் அருளாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் நேற்று மாலை சர்க்கார்பதியில் உள்ள அடர்ந்த காட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சுமார் 80 அடி நீளமுள்ள மூங்கில் கம்பை வெட்டி எடுத்து வந்தனர்.
பின்னர் சர்க்கார்பதி மாரியம்மன் கோவில் வைத்து மூங்கில் கம்பத்துக்கு புடவை கட்டி, சந்தனம், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து செண்டை மேளம் முழங்க சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பக்தர்கள் தோளில் வைத்து மூங்கில் கம்பத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தில் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும்.
அதன்படி இந்தாண்டு நாளை(வியாழக்கிழமை) தை அமாவாசை தினத்தன்று காலை 7 மணி முதல்10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லல் அருகே சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தார்கள் சார்பில் ஒன்று கூடி கோவில் முன்பு பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். சுமார் 100 ஆண்டுகளாக செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த செவ்வாய் பொங்கல் விழாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார்களும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது.
இதையொட்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னரே பொங்கல் வைக்க புள்ளிகளின் அடிப்படையில் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். ஒரு புள்ளி என்பது ஒரு குடும்ப தலைவரை குறிக்கும்.அதில் தேர்வு செய்யப்படும் நபர் முதலில் மண் பானையில் பொங்கல் வைத்த பின்னர் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள்.
அதன்படி நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட முத்துராமன் செட்டியார் மகன் கருப்பையா செட்டியார் முதல் பொங்கல் வைக்க அதன் பின்னர் 319 பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் வரிசையாக நின்று பொங்கல் வைத்த காட்சி பார்க்க அற்புதமாக இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பொங்கல் பொங்கிய பின்னர் பெண்கள் குலவையிட்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் நகரத்தார்களும் திரளாக கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள் செய்திருந்தனர்.

தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பைரவரை வணங்குவோம். பயம் அனைத்தையும் நீக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருளுவார்; வழக்கில் வெற்றியைக் கொடுப்பார் காலபைரவர்!
கால பைரவாஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥
பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்கநிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாபநாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்ட்டிருந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையிலும் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை காலத்தில் முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், பின்னர் 3ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 5ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன் பதிவு, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதியில் தங்கு வதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப் பட்டன.
இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளைமறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மாதாந்திர பூஜை நடக்கிறது . மாசி மாத பூஜையில் தினமும் 15ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கடிதம் எழுதியது.
ஆனால் தினமும் 15ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நடந்த சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் சபரி மலையில் மாசி மாத பூஜைக்கு பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தினமும் 15ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற தேவசம்போர்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜை நாட்களைப்போன்றே, மாசி மாத பூஜையிலும் தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நடத்துகிறார்.
திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் தொடங்கி வைத்தார்.
இந்த தேர்பவனி எடத்தெருவில் இருந்து தொடங்கி கேம்ஸ் டவுன், பாலக்கரை ரவுண்டானா வழியாக மீண்டும் எடத்தெருவை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நடத்துகிறார். நாளை (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

நாளை(வியாழக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் புனித நீராடவும், திதி கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடுவதாலும் அப்பருக்கு சிவபெருமான் தனது பரிவாரங்களுடன் காட்சி அருளியதாலும் கயிலைக்கு ஒப்பான தென் கயிலாயம் என்று வணங்கப்படும் ஐயாறப்பர் கோவில் விளங்குவதால் பித்ரு கடன் செலுத்துவதற்கு "காசிக்கு வீசம் கூட " என்று காசியை விட மேலானதாக பக்தர்களால் சிறப்பித்து கருதப்படும் புனித சிவஸ்தலமாக திருவையாறு திகழ்கிறது.
இத்தகைய புனிதஸ் தலமான திருவையாற்றுக்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, கடைமுழுக்கு, தை அமாவாசை மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் திருவையாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து காவிரியில் புனித நீராடி, தமது முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி, ஐயாப்பரை வழிபடுவது தொன்றுதொட்டு வழக்கமாக உள்ளது.
இவ்வாண்டு கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, அரசின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவையாறு பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் போலீசார் அரசுத் துறைகளின் கூட்டுப் பொறுப்புடன் திருவையாறு காவிரி ஆற்றில் நாளை பொதுமக்கள் புனித நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்பதால் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கமாக தை மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருப்பது வழக்கம்.
இந்தநிலையில் இந்த ஆண்டின் தை அமாவாசை ஆனது நாளை (வியாழக்கிழமை) வருகின்றது. கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்த கடலில் புனித நீராடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களிலும் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை பக்தர்கள் வர முடியாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
நாளை தை அமாவாசை தினத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ராமேசுவரம் கோவிலில் நாளை பக்தர்களின் கூட்டம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்த பின்னர் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் கூட்டம் நாளை மிக அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ராமேசுவரம் கோவிலின் முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் மற்றும் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதேபோல் கோவிலின் கிழக்கு ரத வீதியிலிருந்து தீர்த்தங்களில் நீராட செல்லும் வடக்கு கோபுர ரதவீதி சாலையிலும், தரிசனம் செய்ய செல்லும் பாதையான கிழக்கு ரதவீதி சாலையிலிருந்து தெற்கு கோபுர ரதவீதி சாலை வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
அதேபோல் தை அமாவாசையான நாளை ராமேசுவரம் கோவிலில் காலை 7 மணியளவில் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், வாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
மேலும் வழக்கமாக காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பகல் ஒரு மணி அளவில் சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நாளை தை அமாவாசை ஆக இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனமும் தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறும் எனவும், நாளை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் முழுவதும் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னெஸ் அன்னை ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னெஸ் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னெஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை ஸ்டீபன் ராஜ் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், உள்பட பலர் செய்திருந்தனர்.