
பின்னர் விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கல்யாணசுந்தரம் நகர் பகுதி மக்கள் செய்திருந்தனர். இதேபோல் தஞ்சை அருகே கோவிலூரில் உள்ள பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை தமிழ்ப்பல்கலைக்கழக குடியிருப்பு வளாகம் சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் செய்து இருந்தனர்.