என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளில் சூரிய பிரபை, பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10.30 மணியளவில் சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
உலகுக்கு ஒளி வழங்கும் தேவனாக, பகவானாக திகழ்பவர் சூரியன். சிவனின் அம்சமே சூரியன். சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரம்மனாகவும், சந்திர மண்டலத்தின் நடுவே திருமாலாகவும், அக்னி மண்டலத்தின் நடுவே உருத்திரனாகவும் வீற்றிருந்து முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்து வருகிறார் சிவன்.
மூன்று மண்டலங்களுக்கு மத்தியில் சிவன் எட்டுக்கரங்களுடன் பார்வதியை இடப்பாகம் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக சூலத்தைச் சுழற்றி ஆடுகிறார். சிவன் ஆதியில் சூரிய மண்டலத்தின் நடுவில் ஆதி பிரம்மனாக வீற்றிருந்து உலகத்தை படைத்ததையும், அதன் நடுவில் நடனம் ஆடி காட்சியளித்ததையும் உணர்த்தவே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் இரவு 9.30 மணியளவில் பூத வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துப் பூதங்களுக்கெல்லாம் தலைவனும், தலைவியுமாக சிவன், பார்வதி உள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான், தீயவையெல்லாம் தம் சக்திகளை அடக்கி கொண்டு இருக்கின்றன. சிவன், தாயாரை சரணடைந்தால் நமது மனதில் உள்ள தீய சக்திகளும், வெளியே உள்ள தீய சக்திகளும் அழிந்து நன்மை பயக்கும் என்பதை உணர்த்தேவ பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார்.
அதேபோல் கிளி வாகன வீதிஉலா நடந்தது. கிளி வாகனம் பெரும்பாலும் சிவன் கோவில்களில் அம்பாளுக்கு உரியதாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களோடு பழகி தோழமைக் கொள்ளும் இயல்புடையது. பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். நாம் வணங்கும் தெய்வங்களை நமக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் அடையாளமாக கிளி வாகனத்தில் அம்பாளை அமர்த்தி உலா வரச் செய்கிறார்கள். கிளியின் மீது அமர்ந்து பவனி வரும் தாயாரை தொழுவதால் மனதில் இன்பம் பொங்கும். இல்லற வாழ்வில் சுகம் கூடும். எனவே பக்தர்களுக்கும், மக்களுக்கும் சுகமான வாழ்வு அமைய உற்சவர் ஞானப்பிரசுனாம்பிைக தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

52 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பகோணம் மடத்தில் சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜையை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
கும்பகோணம் :
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சந்திரமவுலீஸ்வரருக்கு தினமும் பூஜை நடத்துவது வழக்கம். சங்கராச்சாரியார் சுவாமிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடன் அந்த சுவாமியையும் கொண்டுசென்று பூஜை நடத்துவார்.
கடந்த 1969-ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்த போது, சங்கர மடத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மகா சிவராத்திரி பூஜையை நடத்தினார்.
இந்தநிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 3-ந் தேதி முதல் கும்பகோணம் சங்கர மடத்தில் தங்கி பூஜைகளை நடத்தி வருகிறார். வருகிற 14-ந் தேதி வரை இந்த மடத்தில் சுவாமிகள் தங்கி பூஜைகள் செய்ய உள்ளார்.
வருகிற 11-ந் தேதி சிவராத்திரி என்பதால், அன்றைய தினம் சங்கராச்சாரியார் கும்பகோணத்தில் உள்ள மடத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜையை நடத்துகிறார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கும்பகோணம் மடத்தில் வேத பாராயணம், நாமசங்கீர்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஏகாதச ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு ரெட்டிராயர் குளம் கீழ்கரையில் உள்ள ராம மந்திர மடத்தில் ஆச்சார்ய சுவாமிகளுக்கு 108 தங்க காசுகளால் ஸ்வர்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மனின் புகழ் பாடும் இந்த 108 போற்றி திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி
ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி
ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது. 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை 17-ந் தேதி அடைக்கப்பட்டது.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூதபலி, உத்சவ பலியும், 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. இன்று செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிழமையில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். எனவே இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், மேஷம், விருச்சிக லக்னம் மற்றும் ராசியினருக்கும், செவ்வாய் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் அகலும்.
செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும். கடன் நிவர்த்தி ஆகும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்கங்களில் இருந்து மீள முடியும். இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களுக்கு, கண்டம் அகலும். விளையாட்டு வீரர்கள், ராணுவம், காவல் துறையினர் ஏற்றம் பெறுவர். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபிவிருத்தி ஏற்படும். பலனை அதிகரிக்க மாதுளைச் சாறு கொண்டு நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாள் முதல் 9-ம் நாள் வரை காலை 9.30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. 6-ம் நாள் இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடந்தது. இப்பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், மாசித் திருவிழாவின் ஆறாம் நாள் அன்றும், மீன பரணி கொடை விழா அன்றும் நடைபெறும்.
விழாவில் 9-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு சந்தனகாப்பும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவின் கடைசி நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதலும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தியோட்டமும், இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.
இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவுகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தா கோவில் பக்கமிருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது. பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணிகளால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும்.
பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்குபூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜையின் போது கோவிலின் வளாகத்திலும், ஒடுக்கு பவனியிலும் பக்தர்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 11-ந்தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 5-வது நாளான நேற்று இரவு சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் ஆறாவது நாளான இன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-வது நாளான நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி அன்று இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வைக்கப்பட்ட மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு மறுநாள் 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சிவராத்திரி மற்றும் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பொறுப்பு தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம், காசாளர் ராமநாதன் மற்றும்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 5 மணி முதல் இரவு 6.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதி உலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார்.

மார்ச் மாதம் 9-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
9-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
10-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* திருவோண விரதம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
11-ம் தேதி வியாழக்கிழமை :
* மகாசிவராத்திரி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
12-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* போதாயன அமாவாசை
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
13-ம் தேதி சனிக்கிழமை :
* சர்வ அமாவாசை
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
14-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சந்திர தரிசனம்
* கண்ணூறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று
* சந்திராஷ்டமம் - மகம்
15-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் - பூரம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி யானை மீது பூத்தட்டு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.
இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார். மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து காலை 6.40 மணிக்கு கொடிமரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது கோவில் குருக்கள் அமர்ந்து பூக்களை கொண்டு வந்தார். தேரோடும் வீதி வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.
அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பாக இணைஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் பூத்தட்டுகளை சுமந்து 7.10 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு 7.15 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் சாத்தப்பட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல்தான் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மருதூர், மாகாளிக்குடி, வீ.துறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
மேலும் நேற்று சிறுகனூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். மேலும் விழாவையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர் பாலமுருகன் உத்தரவின் பேரில் கொள்ளிடம் நம்பர் 1 கொள்ளிடம் டோல்கேட்டில் இருந்து சமயபுரம் வரை 50 நகரும் தற்காலிக கழிவறைகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதியும், ஆட்டுச்சந்தை, சக்திநகர், உள்ளிட்ட இடங்களில் 400 மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். மேலும் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 3 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களை ஒழுங்குபடுத்த பணியிலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் திருச்சி போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பாா்வையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்பட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மனிதர்களின் பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார்.
சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.
மனிதர்களின் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைப் பெருக்கவும், பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளவுமே, ‘திருக்காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார்.
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோயில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.
இந்த ஆற்றின் கரையில் குபேரவர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததா கவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர் களான ஸ்ரீகங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீசதாசிவ சுவாமி களுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ள தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததார்களாம்.
காசியில் ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர, அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.
மேலும், கோயிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீலட்சுமிவராகப் பெருமாள், ஸ்ரீஅகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோயிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம். பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங் களையும் புதிதாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
சிறப்பு வழிபாடுகள்...
இந்தக் கோயிலில் பௌர்ணமிதோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோயிலுக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.
பாண்டிச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு மாசித்திருவிழாவையொட்டி பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசித் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, அதைத்தொடர்ந்து பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை அதன்பிறகு மாவிளக்கு ஊர்வலம், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், மாபெரும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது.
பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துக்கு இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்குகிறார். மண்டைக்காடு பகவதி அம்மன் பெரிய சக்கர தீவட்டி முன்னேற்ற கமிட்டி தலைவர் முருகன், உதவி தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் நேசமணி, உதவி செயலாளர் கோபாலகிருஷ்ணன் அகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
முதல் விளக்கை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் ஏற்றி வைக்கிறார். இதில் கருமன் கூடல் தொழில் அதிபர்கள் கல்யாணசுந்தரம், மனோகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் கடைசி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு இன்னிசை விருந்து, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
இந்த பூஜையில் சிறப்பம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயார் செய்யப்படுகிறது.
பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தான் கோவில் பக்கமிருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது. பூஜைக்கு எடுத்து செல்லப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மன் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும் பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜை காண கோவில் வளாகத்திலும், ஒடுக்கு பவனி வரும் வளாகத்திலும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.