என் மலர்

    ஆன்மிகம்

    தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் கமலவல்லி நாச்சியார்)
    X
    தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் கமலவல்லி நாச்சியார்)

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 5 மணி முதல் இரவு 6.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதி உலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார்.
    Next Story
    ×