என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஈரோடு ஓங்காளியம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 5-ந் தேதி குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.
மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந் தேதி தேரோட்டமும், நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியார் சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக்கம்பம் அருகே எழுந்தருளச்செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை எற்றி வைத்தனர். பின்னர், சுவாமிக்கும், கொடிக்கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. மாலை சூரிய பிரபை வாகனத்தில் வேணுகோபாலராக பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
10-ந் தேதி(புதன்கிழமை) தேரோட்டமும், நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும் மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.
இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தின் பாவத்தை சிலுவையிலே சுமந்து தீர்த்தார் என்று நாம் பார்க்கிறோம்.
ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.
வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்று சொல்லப்படுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில் நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குபிழைத்திருக்கும் படிக்கு அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்க வில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
சகோ.கிங்ஸ்லி, கே.செட்டிபாளையம்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக விடையாற்றி விழா நடந்தது. விழாவில் சந்திரசேகரர் மற்றும் மனோன்மணி சமேதமாய் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 8-ந் தேதி மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 28 நாட்கள் நடைபெற்ற மாசி மக உற்சவத்தில் திருக்கதவு அடைக்க, திறக்கும் நிகழ்ச்சி, தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்ற முக்கிய விழாக்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் மாசி மக விடையாற்றி விழா நடந்தது.விழாவில் சந்திரசேகரர் மற்றும் மனோன்மணி சமேதமாய் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சாமி ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு பெண்கள் மற்றும் பக்தர்கள் நலுங்கு பாடல் பாடப்பட்டு மங்கல இசை முழங்க சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நகரி மண்டலம் கீழப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் 11-ந்தேதி மகாசிவராத்திரி விழா நடக்கிறது. அதையொட்டி 25 அடி உயரத்தில் தென்னங்கீற்றுகளால் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த கீழப்பட்டு கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டலட்சுமிகளால் பூஜிக்கப்பட்டதும், அஷ்ட நாகர்கள் மற்றும் பல முனிவர்களால் பூஜை செய்ததுமான திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரசித்திப் பெற்றதாகும்.
கோவிலின் தல விருட்சமாக வேம்பு, வில்வம் மற்றும் அரசமரம் உள்ளது. கோவில் அருகில் நாகதீர்த்தம் உள்ளது. ஐஸ்வர்ய தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் உள்ளது. இக்கோவில் சர்ப்ப தோஷ நிவாரணத் தலமாக திகழ்கிறது.
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சிவலிங்கம் வடிவம் அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டு தென்னங்கீற்றுகளால் 25 அடி உயரத்தில் பஞ்ச பூத லிங்கங்களுக்குள் பசுஞ்சாணத்தால் செய்த 1008 (சஹஸ்ர) லிங்கங்களும் மற்றும் 15 அடி உயரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேல் ருத்ராட்சங்களால் செய்த ருத்ர தாண்டவ சிவன் ருத்ராட்ச நந்தியும் உருவாக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவான 11-ந்தேதி கோவிலில் 6 கால பூஜையும், மாலை உமா மகேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினந்தோறும் நாம் சண்முக கவசம் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை தினமும் 3 முறை பாராயணம் செய்யும் பக்தர்களுக்கு முருகப் பெருமான் பல்வேறு நன்மைகளை அளிப்பார். இந்த உலகத்தில் பல்வேறு மாயைகளில் நாம் சிக்கி துன்பப்பட்டு வருகிறோம்.
வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினைகள் எல்லாம் விலகி போகும்.
அந்த வகையில் முருகனை தினந்தோறும் நாம் பூஜிக்க கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும்.
இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.

ராமேசுவரம் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழாவில் ராமர் பாதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தனர். வருகிற 12-ந்தேதி சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படி எழுந்தருளி அருள்பாலித்தனர்.
கோவிலில் இருந்து ராமர் பாதம் வரையிலும் சென்ற சுவாமி அம்பாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சாமியை தரிசனம் செய்தனர். ராமர் பாதம் மண்டகப்படியில் மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி இரவு 10 மணிக்குகோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடைசாத்தப்பட்டது.
ராமர் பாதம் மண்டகப்படி சுவாமி அம்பாள் எழுந்தருளியதையொட்டி நேற்று கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் அனுமதிக்கபடவில்லை. அதுபோல் திருவிழாவின் 8-வது நாளான வருகிற 11-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 9 மணி அளவில் வெள்ளித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 9-வது நாளான வருகிற 12-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில், சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நடந்த சிறப்பு பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது. இதையொட்டி சுவாமி காலபைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
பட்டிவீரன்பட்டி ஸ்ரீபகவதியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மேலும் ஸ்ரீகாலபைரவருக்கு பால், தேன் கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும் பூஜைகள் நடந்தன.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. வெள்ளி அம்பாரிகளில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி :
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் பக்த கண்ணப்பர் கொடியேற்றம் நடந்தது.
விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி அம்பாரி வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பஞ்சமூர்த்திகளோடு ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. கோவில் வளாகத்தில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள தங்கக்கொடி மரம் ஓரம் பஞ்சமூர்த்திகளை எழுந்தருள செய்து, வேதப் பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்புப்பூஜை நடத்தினர்.
வேத மந்திரங்கள் முழங்க சப்த ரிஷிகளையும், முனிவர்களையும், தேவர்களையும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தங்கக்கொடிமரத்தில் வேதப் பண்டிதர்களால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. அத்துடன் பெண் பக்தர்கள் வழங்கிய 3050 சேலைகளும் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலசங்களில் இருந்த புனித நீரால் தங்கக்கொடி மரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ெநய்வேத்தியம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொடியேற்றும் விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர், துணை நிர்வாக அதிகாரி தனபால், கோவில் ஆய்வாளர் ஹரியாதவ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும், புகழ் கிடைக்கும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்
ராம நாமம் சொல்ல துவங்குங்கள். உங்கள் வாழ்வில் அந்த கணத்திலிருந்து புது அத்தியாயம் துவங்க ஆரம்பித்துவிடும். இது சத்தியம்.உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும்
உண்டாம் வீ டியல் வழியதாக்கும் வேரியம்
கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை
நீறு பட்டழிய வாகை சூடிய சிலையிராமன்
தோள்வலி கூறுவார்க்கே.
பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.

வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை அதிகரிக்கும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், அதில் வைக்கப்பட வேண்டிய விளக்குகளும் நம் முன்னோர்களால் சொல்லிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் வைக்க வேண்டும். திண்ணைகளில் நான்கு விளக்குகள், மாடக்குழி, நிலைப்படி மற்றும் நடைகளில் இரண்டு விளக்குகள், பூஜை அறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.