என் மலர்
ஆன்மிகம்

நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ந் தேதி தேரோட்டமும், நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியார் சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக்கம்பம் அருகே எழுந்தருளச்செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை எற்றி வைத்தனர். பின்னர், சுவாமிக்கும், கொடிக்கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. மாலை சூரிய பிரபை வாகனத்தில் வேணுகோபாலராக பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
10-ந் தேதி(புதன்கிழமை) தேரோட்டமும், நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும் மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story