என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் வெள்ளீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார்.
அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி.
உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு.
இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

வால்பாறை மாகாளியம்மன் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வால்பாறை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் சிறப்பு யாக பூஜைகள், கலச பூஜைகள், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வால்பாறை அண்ணா நகர் மற்றும் வால்பாறை சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று சிம்ம வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனச் சேைவயும் நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
16-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* சதுர்த்தி விரதம்
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* கார்த்திகை விரதம்
* பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சஷ்டி விரதம்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* சப்தமி திதி
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* வளர்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* வளர்பிறை நவமி
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* சதுர்த்தி விரதம்
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* கார்த்திகை விரதம்
* பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சஷ்டி விரதம்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* சப்தமி திதி
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* வளர்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* வளர்பிறை நவமி
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா. இந்த திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதில் அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.
பின்னர் 7.30 மணிக்கு சன்னதிக்குள் செல்கிறார். தொடர்ந்து 26-ந் தேதியும், 27-ந் தேதியும் அதே மண்டபத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் அதே மண்டபத்தில் மிதுன லக்கினத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் ஏகாசனத்தில் அமர்ந்து கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு சுவாமி, 4 பிராட்டி மார்களுடன். சப்பரத்தில் புறப்பாடாகி சன்னதிக்குள் போய் எழுந்தருள்கிறார்.
29-ந் தேதி 5-ம் திருநாள் அன்று மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க நிற மரபல்லக்கில் அம்மன் வீதிஉலா நடந்தது. மாலையில் அம்மன் பெண் பூதவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) காலை அம்மன் தங்நிற பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வர உள்ளார்.
தொடர்ந்து, 5-ம் திருவிழாவான தீ மிதி திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
மாலை 4.30 மணிக்கு மேல் அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடைபெற உள்ளது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர் மற்றும் மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்தினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 8-ம் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. இதையடுத்து விழாவின் 8-ம் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணி முதல் பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, மாலை 6.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரண்டாம் வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல்விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த வாரம் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரமான நேற்று 21-ம் ஆண்டாக புதுத்தெரு மக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அங்குள்ள முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புதுத்தெருவில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் முத்துமாரி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டுக்களை சுமந்து கடைவீதிவழியாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வழிபட்டனர்.

திருமால் எடுத்த அவதாரங்களில் கூர்ம அவதாரத்தின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களை பார்க்கலாம். இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.
தியான ஸ்லோகம்
பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி, தேவஸ்தான முதன்மை என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, உதவி அதிகாரி துர்க்காராஜு, சூப்பிரண்டு ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடந்தது. அதைதொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கல்லக்குடி கோதண்டராமர் கோவில் ஏகதின பிரம்மோற்சவத்தையொட்டி 9 வாகனங்களில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலை குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் ஆண்டு தோறும் ஏகதின பிரமோற்சவத்தையொட்டி சாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் நேற்று ஏக தின பிரமோற்சவத்தையொட்டி ஒரே நாளில் காலை முதல் இரவு வரை சூரிய பிரபை வாகனம், சேஷ வாகனம், இந்திர விமானம், அனுமந்த வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், சந்திர பிரபை வாகனம், கருட வாகனம் ஆகிய 9 வாகனங்களில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

அவளிவநல்லூர் சாட்சிநாதர் கோவிலில் மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
இறைவர் திருப்பெயர்: சாட்சிநாதர், தம்பரிசுடையார்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.
தல மரம்: பாதிரி
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.
தல வரலாறு
பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.
சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு.
பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும் வழிபட்ட தலம் இது.
வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.
தல வரலாறு: பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.
தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.
இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802