என் மலர்

  ஆன்மிகம்

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
  X
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  விழாவில் நேற்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க நிற மரபல்லக்கில் அம்மன் வீதிஉலா நடந்தது. மாலையில் அம்மன் பெண் பூதவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) காலை அம்மன் தங்நிற பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும் வீதி உலா வர உள்ளார்.

  தொடர்ந்து, 5-ம் திருவிழாவான தீ மிதி திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

  மாலை 4.30 மணிக்கு மேல் அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடைபெற உள்ளது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர் மற்றும் மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்தினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×