
அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனச் சேைவயும் நடந்தது.
விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.